BA, MA படிப்பதுதான் உயர்கல்வி என்று
கருதுவது ஒரு கன்சர்வேட்டிவ் பார்வை.
M.Sc படித்தது மட்டுமின்றி, நான் சாமுவேல்
மார்ஸின் (Samuel Morse) தந்தி சிக்னலிங்கும்
படித்தேன் இது 4 மாத காலப் பயிற்சி.
படித்தது மட்டுமின்றி அந்த சிக்கனலிங்கில் (
(both wired and wiresless) சில ஆண்டு காலம்
வேலை பார்த்தேன். ஆங்கிலத்தில் மட்டுமின்றி
இந்தியிலும் மார்ஸ் கோட் (code) பயிற்சி
பெற்றவன் நான்.
ஹாம் ஆபரேட்டர்கள் பற்றி அறிந்தவர்களுக்கு
சாமுவேல் மார்ஸின் சிக்னலிங் கற்றவர்கள்
மட்டிலுமே ஹாம் ஆப்பரேட்டராக தகுதி பெற
முடியும் என்ற உண்மை தெரியும். ராஜிவ்
காந்தி ஒரு ஹாம் ஆப்பரேட்டர். இந்த உண்மை
எத்தனை பேருக்குத் தெரியும்? சோனியா காந்தியும்
ஹாம் ஆப்பரேட்டர்! என்னைப் போன்று
மார்ஸ் சிக்னலிங் கற்றுத் தகுதி படைத்த
ஒருவர்தான் ராஜிவ் காந்திக்கு கற்றுக் கொடுத்தார்
என்ற உண்மையை அறியுங்கள்.
கற்பது அனைத்தும் கல்வியே! நான் கற்ற
மார்ஸ் சிக்கனலிங்கும் சரி, திரு அண்ணாமலை கற்கும் சர்வதேச
அரசியலும் சரி கல்வியே! உயர் கல்வியே!
திரு அண்ணாமலை ஏற்கனவே B.Tech படித்தவர்.
பிறகு MBA முடித்து அதன்பிறகு IPS தேறியவர.
ஏற்கனவே உயர்கல்வி கற்றுள்ள அவர் இனி கற்பது
அனைத்தும் உயர்கல்வியே! அவர் என்ன LKG
படிப்பதற்கா லண்டன் சென்றுள்ளார்?
அவர் சென்ற இடம் ஜிம்கானா கிளப் அல்ல!
அது பல்கலைக் கழகம். ஆக்ஸ்போர்டு! அந்தக்
காலத்து பரூக் இன்ஜீனியரைப் போல
(Indian opening batsman) கவுண்டி கிரிக்கெட் ஆட
லண்டன் செல்லவில்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக