வியாழன், 18 ஜனவரி, 2024
ஞாயிறு, 7 ஜனவரி, 2024
வெள்ளி, 5 ஜனவரி, 2024
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பண்டைத் தமிழ்ச் சமூகம்
மேய்ச்சல் சமூகமாக இருந்தது.
பின்னர் படிப்படியாக வேளாண் சமூகமாக
பரிணாம வளர்ச்சி அடைந்தது. ஆண்டாளின்
திருப்பாவை முதிர்ந்த மேய்ச்சல் சமூகத்து
வாழ்க்கையை, வேளாண்மையைப்
புதிதாகக் கற்றுக் கொண்டுள்ள ஒரு
சமூகத்தின் வாழ்க்கையைப் படம்
பிடித்துக் காட்டுகிறது.
"ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த நகில்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
(ஆண்டாள் திருப்பாவை)
ஒரு வேளாண்மைச் சமூகத்துக்கு
வானியல் அறிவு நிரம்பவும் தேவை. சூரியனின்
இயக்கம் குறித்தும் பூமியின் மீதான
அதன் விளைவுகள் குறித்தும் தெளிவான
வானியல் அறிவு தேவை. இந்த வானியல்
அறிவைப் பெறாமல் வேளாண்மை
செய்ய இயலாது.
விதைப்பதையும் நடுவதையும் அறுப்பதையும் பிற வேளாண்
செயற்பாடுகளையும் எந்தெந்தக் காலத்தில்
மேற்கொள்ளுவது என்பதைச் சரியாகத்
தீர்மானிப்பதே அன்றைக்கு குழந்தைப்
பருவத்தில் இருந்த வேளாண் சமூகங்களின்
முன்னிருந்த சவாலாக இருந்தது..
சூரியனின் இயக்கத்தைப் பொறுத்து
ஓராண்டில் நான்கு நாட்கள் முக்கியமானவை.
பூமி-சூரியன் சார்ந்த, திரும்பத் திரும்ப
ஏற்படும் வானியல் நிகழ்வுகள் (recurring events) இவை.
மானுட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்
கூடியவை இவை. இந்நிகழ்வுகளில் நான்கு நாட்கள் பெரும்
வானியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்நான்கு
நாட்கள் பின்வருமாறு:-
1) சம இரவு நாட்கள் இரண்டு (2 equinoxes)
2) கதிர்த் திருப்ப நாட்கள் இரண்டு (2 solstices).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
தொலைநோக்கி கூட கண்டுபிடிக்கப்
பட்டிராத அக்காலத்தில், வானியல்
நிகழ்வுகளை அறிந்து கொள்வதும் அவை
எந்தெந்த நாட்களில் ஏற்படும் என்று
முன்கணிப்பதும் எளிதல்ல.
இவை எப்போது நிகழும் என்று
முன்கூட்டியே அறிந்திட இன்றுள்ள
பஞ்சாங்கம் போல ஒரு தயார்நிலை
அட்டவணை (Ready reckoner) அன்று
உண்டாக்கப் பட்டிருக்கவில்லை.
ஓராண்டில் இந்த நான்கு நாட்களும்
என்றென்று நிகழ்ந்துள்ளன என்று இன்று அறிந்து வைத்துள்ளோம்.
அவற்றை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை இன்றைய
சமூகம் பெற்றுள்ளது. அண்மைக் காலமாக மேற்கூறிய
நான்கு நாட்களும் பின்வருமாறு நிகழ்ந்துள்ளன.
1) மார்ச் 20 சம நாள் (vernal equinox)
2) ஜூன் 21 கோடைகாலக் கதிர்த்திருப்பம்
(summer solstice)
3) செப்டம்பர் 22 சமநாள் (autumnal equinox)
4) டிசம்பர் 21 குளிர்காலக் கதிர்த்திருப்பம்
(winter solstice)
ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
அன்றைய சமூகம் மேற்கூறிய நான்கு நாட்களையும், அவை
எப்போது நிகழும் என்பதையும் கண்டறிந்தது எப்படி?
பண்டைத் தமிழரின் புத்தாண்டு உருவாக்கம் சித்திரையை
தொடக்கமாகக் கொண்டதா அல்லது தையைத் தொடக்கமாகக்
கொண்டதா என்ற கேள்விக்கு விடையளிக்க முயல்வோம்.
மேற்கூறிய நான்கு நிகழ்வுகள் எந்தெந்தத் தேதிகளில் நடைபெறும்
என்று பண்டைச் சமூகம் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருந்தது
என்பதைப் பொறுத்தே இக்கேள்வியின் விடை அமையும்.
பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி (மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்)
ஆகிய நான்கு மாதங்களில் மேற்கூறிய நான்கு
நாட்களும் முன்பு வந்துள்ளன.
உலகெங்கும் உள்ள நாகரிகங்களில் கதிர்த்திருப்பம்
(solstice) மிகப்பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோடைகால கதிர்த்திருப்பம் (summer solstice) என்றும்
குளிர்கால கதிர்த்திருப்பம் (winter solstice) என்றும் ஆண்டுக்கு
இருமுறை இந்நிகழ்வு நடைபெறும். இவ்விரண்டில் கோடைகால
கதிர்த்திருப்பமே மக்களால் எளிதாக அறிந்து கொள்ளத்
தக்கதாகும். மழை பெய்து விடுவதால் குளிர்கால
கதிர்த்திருப்பத்தை அது நிகழும் நாளின்போது
கண்டறிவது கடினம்.
பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. என்றாலும் சூரியன்
பூமியைச் சுற்றி வருவது போல ஒரு தோற்றம் நமது
கண்களுக்குத் தெரிகிறது. இவ்வாறு தோற்றமளிக்கிற
சூரியனின் பாதையில் (apparent path), வடக்கு அரைக்கோளத்தில்
அல்லது தெற்கு அரைக்கோளத்தில் ஓர் எல்லை வரை
சென்றுவிட்ட சூரியன், அதற்கு மேல் செல்ல இயலாத
நிலையில், திரும்பி எதிர்த்திசை நோக்கி வருவதையே,
(அதாவது வருவதாக நாம் கருதுவதையே) கதிர்த்திருப்பம்
(solstice) என்கிறோம்.
கதிர்த் திருப்பங்களின்போது, கடக ரேகை
(Tropic of cancer), மகர ரேகை (Tropic of Capricorn) ஆகியவற்றின்
மீது அவற்றின் தலைக்கு நேர் மேலே, வானுச்சியில் (zenith)
சூரியன் பிரகாசிக்கும்.
இந்நாட்களில், பூமியின் சில குறிப்பிட்ட இடங்களில்,
தரையில் ஒரு குச்சியை நட்டு வைத்தால், உச்சி வேளையில்
தலைக்கு நேராக சூரியன் பிரகாசிக்கும்போது, அதன் நிழல்
தரையில் விழாது. இது பூஜ்ய நிழல் நாள் (zero shadow day) எனப்படும். இதைக் கொண்டே கதிர்த்திருப்பம் சார்ந்த நாட்களை
பண்டைக்கால மக்கள் கண்டறிந்தனர்.
கடக ரேகை (Tropic of cancer) , மகர ரேகை (Tropic of capricorn) பற்றி
நாம் அறிவோம். வட அரைக்கோளத்தில், அட்சரேகையின்
அளவு +23.5 டிகிரியாக இருந்தால் (latitude: +23.5) அது கடக ரேகை
ஆகும். தென் அரைக்கோளத்தில், அட்சரேகையின் அளவு
மைனஸ் 23.5 டிகிரியாக இருந்தால் (latitude -23.5) அது மகர ரேகை
ஆகும். கடக மகர ரேகைகளுக்கு இடைப்பட்ட இடங்களில்,
தலைக்கு நேரே வானுச்சியில் (zenith) சூரியன் பிரகாசிக்கும்போது,
வெட்ட வெளியில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட ஒரு குச்சியின்
நிழல் தரையில் விழுவதில்லை. நிழல் விழாத இந்த
பூஜ்ய நிழல் நாட்கள் (Zero Shadow Days) மனிதனால் செயற்கையாக உண்டாக்கப்பட இயலாதவை.
கதிர்த்திருப்பம் ஏன் நிகழ்கிறது? சூரியனைப் பொறுத்து, பூமி
தனது அச்சில் நேராக இல்லாமல் 23.44 டிகிரி சாய்ந்திருக்கிறது.
கதிர்த் திருப்பங்களும் பருவ காலங்களும் இந்த அச்சுச்
சாய்வினாலேயே (axial tilt) நிகழ்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தொலைநோக்கியோ
பஞ்சாங்கம் போன்ற வானியல் தரவுகளின் தயார்நிலை அட்டவணையோ
இல்லாதிருந்த காலத்தில், ஓர் ஆண்டின் 365 நாட்களில்
ஒரே ஒரு நாளை எல்லோராலும் சுலபமாக அடையாளம் காண இயலும்.
அந்நாள் கோடைகால கதிர்த்திருப்ப நாளே ஆகும்.
கோடை காலக் கதிர்த்திருப்ப நாள் என்பது பொருட்களின்
நிழல் நீளமாக விழும் நாளே ஆகும் (longest shadow day)
பங்குனி-சித்திரை மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும்
பூஜ்ய நிழல் நாட்கள் (zero shadow days) ஏற்படும். சித்திரை மாத வெயிலில்
பூஜ்ய நிழல் நாட்களில் ஒன்றை, அதாவது சித்திரை முதல் நாளைத்
தொடக்கமாகக் கொண்டு பண்டைத் தமிழன் தனது புத்தாண்டை
உருவாக்கினான். காலப்போக்கில் சித்திரைப் புத்தாண்டு
நிலைபேறு உடையதாக ஆகியது.
இந்தியாவில் உள்ள பெரும் அறிவியல் அமைப்புகளில்
செவ்வாய், 2 ஜனவரி, 2024
தமிழ்ப்புத்தாண்டு எது?
john rubert
புத்தாண்டு என்றால் என்ன? அதன் தேவை என்ன?
கதிரவனைச் சுற்றி நிலக்கோள்(புவி) நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. இது ஒருமுறை சுற்றி முடித்துவிட்டது அடுத்தசுற்று தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கும் நாளே புத்தாண்டு. நீள்வட்டப் பாதையில் நிலக்கோளின்(புவி) இடத்தைப் போன்றே பருவகாலங்களும் மாறிமாறி வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொராண்டிலும் இப்பருவகாலங்கள் சுழற்சியாக வந்துகொண்டிருக்கும். விவசாயத்தை நம்பி வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும். பருவகாலத்தின் மறுசுழற்சி தொடங்கிவிட்டது என்பதை அறியும் தேவை இருந்திருக்கலாம்.
நாட்காட்டியில்லாமல் புத்தாண்டை எப்படி அறிவது?
நமது முன்னோர்கள் வீட்டில் நாட்காட்டியைத் தொங்கவிட்டிருக்கவில்லை. இயற்கையையொட்டிய வாழ்க்கைச்சூழலை அமைத்துக்கொண்டமக்கள் ஆண்டுநிறைவை மிகஎளியமுறையைக்கொண்டே யறிந்திருக்கவேண்டும். நிலக்கோள்(புவி) தன்னைத்தானே சாய்ந்த அச்சில் சுற்றுகிறது. இந்த அச்சு தனதுசாய்வுமாறாமல் கதிரவனைச்சுற்றும்போது ஒருநேரம் அச்சின் கீழ்முனை கதிரவனுக்கருகிலும் மற்றொருநேரம் மேல்முனை கதிரவனுக்கருகிலும் வரும். கீழ்முனையை தென்துருவம் என்றும் மேல்முனையை வடதுருவம் என்றும் அழைக்கிறோம். நிலக்கோளின் தென்முனை கதிரவனுக்கருகில் வரும்போது கதிரவன் தெற்கில் இருப்பது போலும் நிலக்கோளின் வடமுனை கதிரவனுக்கருகில் வரும்போது கதிரவன் வடமுனையில் இருப்பதுபோலும் தோன்றும். ஒவ்வொருமுறை நிலக்கோள்(புவி) கதிரவனைச் சுற்றும்போதும் கதிரவன் வடக்கிலிருந்து தெற்கும் தெற்கிலிருந்தும் வடக்குமென மாற்றிமாற்றி நகர்ந்துகொண்டேயிருக்கும். இப்படித்தெற்காக நகரும் கதிரவன் ஒருநாள் வடக்காக நகரத் தொடங்குகிறது. இந்நாளிலேற்படும்நிழல் மற்றயெல்லாநாளிலுமேற்படும்நிழலைவிட நீளமாக இருக்குமென்பதால் இந்நாளுக்கு நெடுநிழல்நாள் என்று பெயர்வைத்துக் வைத்துக் கொள்வோம். இதேபோல் வடக்காகநகரும்கதிரவன் மீண்டும் தெற்காகநகரத்தொடங்கும் நாளும் ஒரு நெடுநிழல்நாள்தான். இந்த நெடுநிழல்நாளை ஆங்கிலத்தில் Solstice என்றழைப்பர். இப்படி தென்வடல் நகர்வின்போது ஒருநாளும் வடதென் நகர்வின்போது ஒருநாளும் கதிரவன் தலையுச்சிக்கு நேராகவந்து நட்டுவைத்தகுச்சியின்நிழல் தரையில்விழாதநிலையை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். நிழல் அமைந்து காணப்படும் இந்தநாளுக்கு அமைநிழல்நாள் என்று பெயரிட்டுக்கொள்வோம்.
ஒவ்வொராண்டும் வடசெலவின் போது ஒர் அமைநிழல்நாளும் நெடுநிழல்நாளும் தென்செலவின் போது ஓர் அமைநிழல்நாளும் நெடுநிழல்நாளும் இருக்கும் இந்தநான்கு நாட்களைக் கண்டுபிடிக்க எந்த பெருங்கருவியும் தேவையில்லை. அன்றாடவேலையின்போதும் அறிந்துவிடலாம். இயற்கையோடு நெருக்கமாக வாழும் மனிதனுடையக் கண்டுபிடிப்பும் மிகஎளிமையான ஒன்றாகவேயிருக்கும்.
இந்த நெடுநிழல்நாள் நிலத்தில் வாழும் அனைவருக்கும் பொது ஆனால் கருவிகள் ஏதுமற்றநிலையில் நேற்றையநாள் நெடுநிழல்நாளாக இருந்திருக்கிறது என்பதை அடுத்தநாளில்தான் உணரமுடியும். அமைநிழல்நாளோ அப்படியல்ல கதிரவன் உதயத்தின்போதோ தவறினால் நண்பகலின்போதோ அறிந்துவிடலாம். மிக எளிதாக அறியப் படமுடிந்த ஓருநாள்.
அறிந்து கொள்ளவேண்டிய நாள்கள். (கதிரவன் வடக்குநோக்கி நகர்வது வடசெலவு, தெற்குநோக்கி நகர்வது தென்செலவு.)
வடசெலவில் நெடுநிழல்நாள் ஜூன் 21
தென்செலவில் நெடுநிழல் நாள் டிசம்பர் 21
வடசெலவில் அமைநிழல்நாள் ஏப்ரல் 14 (மானாமதுரையில்)
தென்செலவில் அமைநிழல்நாள் ஆகஸ்ட் 28 (மானாமதுரையில்)
எது தமிழ்ப்புத்தாண்டு?
எளிமையாக இரண்டு நாள் நமக்குக் கிடைக்கிறது அவை அமைநிழல் நாளான ஏப்ரல் 14ம் ஆகஸ்ட் 28ம். இந்த இரு நாளிலும் தமிழ்நாட்டின் பெருவாரியான இடங்களில் கதிரவன் தலை உச்சிக்குமேல் இருக்கும். குறிப்பாக மானாமதுரை எனும் இடத்தில் தலைக்குமேல் இருக்கும். இதில நம்மவர்கள் தெரிந்து கொண்டதோ ஏப்ரல் 14 அதாவது சித்திரை 1(ஆகஸ்ட் 28 ஐ தெரிந்து கொள்ளாமல் விட்டிருப்பதற்கு ஆகஸ்ட் இறுதியில் மழை தொடங்குவது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது ஆடிப்பட்டத்தில் தேடி விதைப்பதில் மும்முரமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.) . சித்திரை 1ஆம் நாள் சூரியன் தலைக்கு மேல் தான் இருக்குமென்பதை http://www.suncalc.net/#/9.6718,78.4674,8/2014.04.14/22:02 இந்த தொடுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் சித்திரியிலும் ஆகஸ்ட் இறுதியிலும் கதிரவன். தலைக்கு நேராகவும் நிலத்துக்குச் செங்குத்தாகவும் இருக்கும். ஆக புத்தாண்டு தை 1ஆம் நாள் அல்ல. சித்திரை 1ஆம் நாளே.
இலக்கியத்தில் தை 1.
தை முதல்நாள்பற்றி இலக்கியமேற்கோள் பலவற்றைக் காட்டுவர். அவை அனைத்தும் தைத்திருநாளுக்கான சான்றுகளேயன்றி எவையும் தை முதல்நாள் புத்தாண்டெனக் கூறும் ஆதாரங்களல்ல. அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடிய நாள் அது. மற்றபடி தை ஒன்றாம் நாளை அறிவதே மிகவும் சிக்கலானது.
குறிப்பு: சித்திரை 1 புத்தாண்டு எனச் சொல்வது தமிழர் புத்தாண்டென எதையோ ஒருநாளைக் குறிப்பிடவில்லை. இயல்பான நிகழ்வைக் கொண்டே அமைத்தனர் என்பதற்கு ஓர் ஆதாரம்.
எனது தீர்மானம்:
சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு.
திங்கள், 1 ஜனவரி, 2024
It is used for big applications. | It is used to execute a single task within an application. |
Microprocessor is the heart of computer system. | It is the heart of the embedded system. |
It is just a processor. Memory and I/O components have to be having to be connected externally. | Microcontroller contains external processor along with internal memory and I/O components. |
Since I/O and memory connected externally, the circuit becomes large. | Since I/O and memory present internally, the circuit is small. |
Can't be used in compact systems and hence inefficient. | Can be used in compact systems and microcontroller is an efficient technique. |
Cost of entire system increases. | Cost of entire system is low. |
Power consumption is high. | Power consumption is low. |
Most of the microprocessors do not have power saving modes. | Most of the microcontrollers have power saving mode. |
Difficult to replace. | Easy to replace. |
Mainly used in personal computers. | Used mainly in washing machine, MP3 players. |