பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பண்டைத் தமிழ்ச் சமூகம்
மேய்ச்சல் சமூகமாக இருந்தது.
பின்னர் படிப்படியாக வேளாண் சமூகமாக
பரிணாம வளர்ச்சி அடைந்தது. ஆண்டாளின்
திருப்பாவை முதிர்ந்த மேய்ச்சல் சமூகத்து
வாழ்க்கையை, வேளாண்மையைப்
புதிதாகக் கற்றுக் கொண்டுள்ள ஒரு
சமூகத்தின் வாழ்க்கையைப் படம்
பிடித்துக் காட்டுகிறது.
"ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த நகில்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"
(ஆண்டாள் திருப்பாவை)
ஒரு வேளாண்மைச் சமூகத்துக்கு
வானியல் அறிவு நிரம்பவும் தேவை. சூரியனின்
இயக்கம் குறித்தும் பூமியின் மீதான
அதன் விளைவுகள் குறித்தும் தெளிவான
வானியல் அறிவு தேவை. இந்த வானியல்
அறிவைப் பெறாமல் வேளாண்மை
செய்ய இயலாது.
விதைப்பதையும் நடுவதையும் அறுப்பதையும் பிற வேளாண்
செயற்பாடுகளையும் எந்தெந்தக் காலத்தில்
மேற்கொள்ளுவது என்பதைச் சரியாகத்
தீர்மானிப்பதே அன்றைக்கு குழந்தைப்
பருவத்தில் இருந்த வேளாண் சமூகங்களின்
முன்னிருந்த சவாலாக இருந்தது..
சூரியனின் இயக்கத்தைப் பொறுத்து
ஓராண்டில் நான்கு நாட்கள் முக்கியமானவை.
பூமி-சூரியன் சார்ந்த, திரும்பத் திரும்ப
ஏற்படும் வானியல் நிகழ்வுகள் (recurring events) இவை.
மானுட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்
கூடியவை இவை. இந்நிகழ்வுகளில் நான்கு நாட்கள் பெரும்
வானியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்நான்கு
நாட்கள் பின்வருமாறு:-
1) சம இரவு நாட்கள் இரண்டு (2 equinoxes)
2) கதிர்த் திருப்ப நாட்கள் இரண்டு (2 solstices).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
தொலைநோக்கி கூட கண்டுபிடிக்கப்
பட்டிராத அக்காலத்தில், வானியல்
நிகழ்வுகளை அறிந்து கொள்வதும் அவை
எந்தெந்த நாட்களில் ஏற்படும் என்று
முன்கணிப்பதும் எளிதல்ல.
இவை எப்போது நிகழும் என்று
முன்கூட்டியே அறிந்திட இன்றுள்ள
பஞ்சாங்கம் போல ஒரு தயார்நிலை
அட்டவணை (Ready reckoner) அன்று
உண்டாக்கப் பட்டிருக்கவில்லை.
ஓராண்டில் இந்த நான்கு நாட்களும்
என்றென்று நிகழ்ந்துள்ளன என்று இன்று அறிந்து வைத்துள்ளோம்.
அவற்றை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை இன்றைய
சமூகம் பெற்றுள்ளது. அண்மைக் காலமாக மேற்கூறிய
நான்கு நாட்களும் பின்வருமாறு நிகழ்ந்துள்ளன.
1) மார்ச் 20 சம நாள் (vernal equinox)
2) ஜூன் 21 கோடைகாலக் கதிர்த்திருப்பம்
(summer solstice)
3) செப்டம்பர் 22 சமநாள் (autumnal equinox)
4) டிசம்பர் 21 குளிர்காலக் கதிர்த்திருப்பம்
(winter solstice)
ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
அன்றைய சமூகம் மேற்கூறிய நான்கு நாட்களையும், அவை
எப்போது நிகழும் என்பதையும் கண்டறிந்தது எப்படி?
பண்டைத் தமிழரின் புத்தாண்டு உருவாக்கம் சித்திரையை
தொடக்கமாகக் கொண்டதா அல்லது தையைத் தொடக்கமாகக்
கொண்டதா என்ற கேள்விக்கு விடையளிக்க முயல்வோம்.
மேற்கூறிய நான்கு நிகழ்வுகள் எந்தெந்தத் தேதிகளில் நடைபெறும்
என்று பண்டைச் சமூகம் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருந்தது
என்பதைப் பொறுத்தே இக்கேள்வியின் விடை அமையும்.
பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி (மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்)
ஆகிய நான்கு மாதங்களில் மேற்கூறிய நான்கு
நாட்களும் முன்பு வந்துள்ளன.
உலகெங்கும் உள்ள நாகரிகங்களில் கதிர்த்திருப்பம்
(solstice) மிகப்பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோடைகால கதிர்த்திருப்பம் (summer solstice) என்றும்
குளிர்கால கதிர்த்திருப்பம் (winter solstice) என்றும் ஆண்டுக்கு
இருமுறை இந்நிகழ்வு நடைபெறும். இவ்விரண்டில் கோடைகால
கதிர்த்திருப்பமே மக்களால் எளிதாக அறிந்து கொள்ளத்
தக்கதாகும். மழை பெய்து விடுவதால் குளிர்கால
கதிர்த்திருப்பத்தை அது நிகழும் நாளின்போது
கண்டறிவது கடினம்.
பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. என்றாலும் சூரியன்
பூமியைச் சுற்றி வருவது போல ஒரு தோற்றம் நமது
கண்களுக்குத் தெரிகிறது. இவ்வாறு தோற்றமளிக்கிற
சூரியனின் பாதையில் (apparent path), வடக்கு அரைக்கோளத்தில்
அல்லது தெற்கு அரைக்கோளத்தில் ஓர் எல்லை வரை
சென்றுவிட்ட சூரியன், அதற்கு மேல் செல்ல இயலாத
நிலையில், திரும்பி எதிர்த்திசை நோக்கி வருவதையே,
(அதாவது வருவதாக நாம் கருதுவதையே) கதிர்த்திருப்பம்
(solstice) என்கிறோம்.
கதிர்த் திருப்பங்களின்போது, கடக ரேகை
(Tropic of cancer), மகர ரேகை (Tropic of Capricorn) ஆகியவற்றின்
மீது அவற்றின் தலைக்கு நேர் மேலே, வானுச்சியில் (zenith)
சூரியன் பிரகாசிக்கும்.
இந்நாட்களில், பூமியின் சில குறிப்பிட்ட இடங்களில்,
தரையில் ஒரு குச்சியை நட்டு வைத்தால், உச்சி வேளையில்
தலைக்கு நேராக சூரியன் பிரகாசிக்கும்போது, அதன் நிழல்
தரையில் விழாது. இது பூஜ்ய நிழல் நாள் (zero shadow day) எனப்படும். இதைக் கொண்டே கதிர்த்திருப்பம் சார்ந்த நாட்களை
பண்டைக்கால மக்கள் கண்டறிந்தனர்.
கடக ரேகை (Tropic of cancer) , மகர ரேகை (Tropic of capricorn) பற்றி
நாம் அறிவோம். வட அரைக்கோளத்தில், அட்சரேகையின்
அளவு +23.5 டிகிரியாக இருந்தால் (latitude: +23.5) அது கடக ரேகை
ஆகும். தென் அரைக்கோளத்தில், அட்சரேகையின் அளவு
மைனஸ் 23.5 டிகிரியாக இருந்தால் (latitude -23.5) அது மகர ரேகை
ஆகும். கடக மகர ரேகைகளுக்கு இடைப்பட்ட இடங்களில்,
தலைக்கு நேரே வானுச்சியில் (zenith) சூரியன் பிரகாசிக்கும்போது,
வெட்ட வெளியில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட ஒரு குச்சியின்
நிழல் தரையில் விழுவதில்லை. நிழல் விழாத இந்த
பூஜ்ய நிழல் நாட்கள் (Zero Shadow Days) மனிதனால் செயற்கையாக உண்டாக்கப்பட இயலாதவை.
கதிர்த்திருப்பம் ஏன் நிகழ்கிறது? சூரியனைப் பொறுத்து, பூமி
தனது அச்சில் நேராக இல்லாமல் 23.44 டிகிரி சாய்ந்திருக்கிறது.
கதிர்த் திருப்பங்களும் பருவ காலங்களும் இந்த அச்சுச்
சாய்வினாலேயே (axial tilt) நிகழ்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தொலைநோக்கியோ
பஞ்சாங்கம் போன்ற வானியல் தரவுகளின் தயார்நிலை அட்டவணையோ
இல்லாதிருந்த காலத்தில், ஓர் ஆண்டின் 365 நாட்களில்
ஒரே ஒரு நாளை எல்லோராலும் சுலபமாக அடையாளம் காண இயலும்.
அந்நாள் கோடைகால கதிர்த்திருப்ப நாளே ஆகும்.
கோடை காலக் கதிர்த்திருப்ப நாள் என்பது பொருட்களின்
நிழல் நீளமாக விழும் நாளே ஆகும் (longest shadow day)
பங்குனி-சித்திரை மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும்
பூஜ்ய நிழல் நாட்கள் (zero shadow days) ஏற்படும். சித்திரை மாத வெயிலில்
பூஜ்ய நிழல் நாட்களில் ஒன்றை, அதாவது சித்திரை முதல் நாளைத்
தொடக்கமாகக் கொண்டு பண்டைத் தமிழன் தனது புத்தாண்டை
உருவாக்கினான். காலப்போக்கில் சித்திரைப் புத்தாண்டு
நிலைபேறு உடையதாக ஆகியது.
இந்தியாவில் உள்ள பெரும் அறிவியல் அமைப்புகளில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக