ஞாயிறு, 7 ஜனவரி, 2024

லாக்ரேஞ்சு புள்ளியில் (L-1) 
பிரம்மாண்ட நிறை கொண்ட சூரியனின் ஈர்ப்பை  
இத்தனூண்டு நிறை கொண்ட பூமியின் ஈர்ப்பு 
சமன் செய்து விடுகிறதே, எப்படி?   
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
1) ஜோசப் லூயி லாக்ரேஞ்சு (Joseph Louis Lagrange)  
என்பவர் 18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கணித 
நிபுணர். லாக்ரேஞ்சு புள்ளிகள் அனைத்தும் 
இவர் பெயரில் அமைந்தவையே!

2) சூரியன்- பூமி தொடர்பில் அமைந்த ஐந்து 
லாக்ரேஞ்சு புள்ளிகளை (L-1, L-2, L-3, L-4, L-5)
இக்கட்டுரை குறிப்பிடுகிறது. இணைக்கப்பட்ட 
படங்களைப் பார்க்கவும்)

3) சூரியனின் நிறை (mass) = 2x10^30 kilogram.
( 10 raised to the power of 30 என்பதை வாசகர்கள் சரியாகவும் 
துல்லியமாகவும் புரிந்து கொள்ள வேண்டும்) .

4) பூமியின் நிறை = 6x10^24 kilogram.

5) சூரியனின் நிறையையும் பூமியின் நிறையையும்
ஒப்பிட்டுப் பார்ப்போம். சூரியனின் நிறை அசுரத் 
தனமானது; ராட்சஸத் தனமானது; பேய்த்தனமானது.
பூமியின் நிறையைப் போல்  மூன்று லட்சம் மடங்கு 
அதிகமானது சூரியனின் நிறை.  பூமியின் நிரையைப் 
போல 333,000 மடங்கு அதிகமான நிறையை சூரியன் 
கொண்டிருக்கிறது.

6) பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவு = 15 கோடி கிமீ.
A என்ற புள்ளியில் சூரியனும், B என்ற புள்ளியில் 
பூமியும் இருப்பதாகக் கருதுங்கள். இவ்விரு 
புள்ளிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைக்கவும்.
அப்போது AB = 15 கோடி கிமீ.
(இந்தக் கணக்கில் நான் யூக்ளிட்டின் வடிவியலை 
மட்டுமே பயன்படுத்துகிறேன். எனவே வாசக 
அநபர்கள் Geodesic போன்றவற்றை இங்கு கொண்டு வர 
வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்).

7) நியூட்டனின் ஈர்ப்பு விதி பின்வருமாறு அமைகிறது.
The gravitational attraction force between two point masses is directly 
proportional to the product of their masses and inversely proportional 
to the square of their separation distance. The force is always attractive 
and acts along the line joining them.

Force of attraction = (m1 x m2)/d^2 unit.
(where m1, m2 = mass of the objects.
d = distance between the objects)        

8) பூமிக்கும் L-1 புள்ளிக்கும் இடையிலான தூரம்= 15 லட்சம் கிமீ.

9) கணக்கிற்குத் தேவையான தரவுகள், விளக்கம், ஃபார்முலா 
ஆகிய அனைத்தையும் கொடுத்தாயிற்று. இப்போது 
கணக்கைச் செய்யவும். கேள்விக்கான விடை என்ன?

10) சூரியனின் நிறையை விட மூன்று லட்சம் மடங்கு 
குறைவான நிறையை உடைய பூமியானது, 
பிரம்மாண்ட சூரியனின் ஈர்ப்பு விசையை 
L -1 புள்ளியில் சமன் செய்து விடுகிறதே, எப்படி?

விடைகள் வரவேற்கப்படுகின்றன.
***********************************************************    

 
       

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக