ஆப்பிள் ஐபோன் மீது சீதாராம் யெச்சூரியின் காதல்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர்
கிரஹாம்பெல் (1847-1922) ஸ்காட்லாந்து விஞ்ஞானி.
1876ல் இவர் தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.
2023ல், இந்த 147 ஆண்டுகளில், கிரஹாம்பெல்லின்
தொலைபேசி அளவிலும் பண்பிலும் பாரதூரமான
மாற்றங்களை அடைந்து விட்டது. இன்றைய உலகம்
ஸ்மார்ட் ஃபோன்களின் உலகம். 2020ல் உலகில் இருந்த
மொபைல் பேசிகளில் 75 சதவீதம் ஸ்மார்ட் ஃபோன்களே
என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இங்கு SMART என்ற
சொல் அட்ஜெக்ட்டிவ் அல்ல; அது ஒரு அக்ரோனிம்
என்பதை அறிக!
(SMART = Self Monitoring, Analysis and Reporting Technologies)
சமகால உலகின் மக்கள்தொகை 800 கோடி என்பதை
நாம் அறிவோம். 2022 என்னும் ஒரு ஆண்டில் மட்டும்
1.43 பில்லியன் (143 கோடி) ஸ்மார்ட் ஃபோன்கள்
ஏற்றுமதி ஆகியிருக்கின்றன என்னும் ஒரு செய்தி
உலகின் தொலைபேசி அடர்த்தி மிகப் பெரிதும்
செறிவு நிறைந்தது என்று நமக்கு உணர்த்துகிறது.
தொடுதிரை (Touch screen) தொழில்நுட்பமும்,
கணினியில் உள்ளது போன்று மொபைல் ஃபோனை
இயக்க ஒரு OSம் (OS = Operating System) வந்த பிறகு
மொபைல் ஃபோன்கள் புரட்சிகரமாகி விட்டன.
இன்று உலகெங்கும் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களை
அவை பயன்படுத்தும் OSன் அடிப்படையில் இரண்டு
பிரிவாகப் பிரிக்கலாம்.
1) ஆண்ட்ராய்ட் (Android) OSஐ பயன்படுத்துபவை
2) ஆப்பிள் OSஐ (Apple iOS) பயன்படுத்துபவை.
ஆண்ட்ராய்ட் OS கூகிள் நிறுவனத்தைச் சேர்ந்தது.
ஆப்பிள் iOS சடீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தைச்
சேர்ந்தது.
இவ்விரண்டில் எது உயர்ந்தது? ஆண்ட்ராய்டா?
ஆப்பிளா? ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்த்து
விடலாமா? சன் டிவியிடம் சொன்னால், அவர்கள்
சாலமன் பாப்பையா தலைமையில் வரும்
தீபாவளியன்று ஒரு பட்டிமன்றம் நடத்தி விட
மாட்டார்களா?
நடத்தி விடுவார்கள்தான்! ஆனால் சாலமன்
பாப்பையா இது போன்ற அறிவியல்
பட்டிமன்றங்களுக்குப் பயன்பட மாட்டார்.
இதற்கு நீங்கள் மயில்சாமி அண்ணாதுரையை
நாட வேண்டும்.
சீதாராம் யெச்சூரியிடம் கேட்டால், அவர் ஆப்பிள்
ஐஃபோன்தான் உயர்ந்தது என்று சொல்லி நம்மை
அதிர்ச்சி அடையச் செய்கிறார். அவரின்
ஸ்மார்ட் ஃபோன் ஆப்பிள் iOSஐக் கொண்டது.
பின்நவீனத்துவ ஆதரவாளர்களான சசி தரூரும்
திரிணமூல் பெண் எம்பி மொகுவா மொய்த்ராவும்
ஆப்பிள் ஐஃபோன் பிரியர்களாக இருப்பதில்
வியப்பில்லை. ஆனால் யெச்சூரி எப்படி இவர்களுடன்
சேர்ந்து பின்நவீனத்துவ அழுகலை உண்கிறார்?
ஆண்ட்ராய்ட் OS, ஆப்பிள் iOS ஆகிய இரண்டில்,
நான் ஆண்ட்ராய்ட் OSஐ ஆதரிக்கிறேன்.
தொலைதொடர்புத்துறையில் 35 ஆண்டு காலம்
பணிபுரிந்தவன் என்ற முறையிலும், ஸ்மார்ட் ஃபோன்
தொழில்நுட்பம் குறித்த எளிய அடிப்படைகளை
ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும் நான்
தயக்கமே இன்றி ஆண்ட்ராய்ட் OSக்கு வாக்களிக்கிறேன்.
என்னுடைய முடிவில் அணுவளவுகூட அரசியல்
செல்வாக்கு செயல்படவில்லை. தொலைதொடர்புப்
பேரரசின் ஒரு எளிய குடிமகன் என்ற முறையில்
என்னுடைய கருத்து அது.
ஆப்பிள் iOS மிகவும் செக்டேரியன் தன்மை (sectarian)
உடையது. இதற்கு மாறாக ஆண்ட்ராய்ட் OSக்கு
universality அதிகம் உண்டு. தேவையான appகளை
கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து தருவித்துப்
பயன்படுத்தலாம். பேட்டரியின் வாழ்நாள் அதிகம்.
விரைவாக சார்ஜ் செய்து கொள்ள இயலும். எல்லா
நிறுவனங்களின் ஃபோன்களும் ஆண்ட்ராய்டு
OSல் செயல்படும். ஆனால் ஆப்பிள் அப்படியல்ல.
அது செக்டேரியன் உலகம்.
என்றாலும் வாத்ஸாயனரை முழுவதுமாக தமது
ஆப்பிள் மொபைலில் டவுன்லோடு செய்து
வைத்திருக்கிறார் சசி தரூர். அதை தமது
கணக்கற்ற பெண் சிநேகிதிகளுக்கும்
அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.
பினராயி விஜய்னுக்கு தலைவலி வந்தால் அவர்
சிகிச்சை மேற்கொள்வது அமெரிக்காவில்தான்.
யெச்சூரியின் மகள் படித்ததும் இங்கிலாந்துதான்;
இன்று வேலை பார்ப்பதும் இங்கிலாந்துதான்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம்
என்று யெச்சூரியும் விஜயனும் வீராவேசம்
பேசுவதெல்லாம் சோத்துக்கு லாட்டரி அடிக்கும்
குப்பனையும் சுப்பனையும் ஏய்த்துப் பிழைப்பதற்குத்தானே
தவிர, புரட்சி நடத்துவதற்கு அல்ல. அதே போல யெச்சூரி
ஆப்பிள் ஐபோனைப் பயன்படுத்துவது தொழில்நுட்பக்
காரணங்களால் அல்ல; அரசியல் ஆதாயம் கருதியே!
மோடி அரசு ஆப்பிள் iOSஐ உடைய போன்களை
மட்டும் ஒட்டுக் கேட்கிறது; ஆண்ட்ராய்ட் போன்களை
ஒட்டுக் கேட்கவில்லை என்று சொல்வதைக் கேட்டு
இந்தியாவில் 140 கோடி ஆசனத் துவாரங்களும்
சிரிக்கின்றன.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
சென்னை ஐஐடி மாணவர்கள் இந்தியாவுக்கென்று
பிரத்தியேகமாக Bharath OS என்ற ஒரு OSஐ தயாரித்து
உள்ளார்கள் என்று ஒரு கட்டுரையை சில
நாட்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். அதற்கு
வரவேற்பு இல்லை. இப்போது அந்தக் கட்டுரையை
எடுத்துப் படித்துப் பாருங்கள். OS என்றால் என்ன,
அதன் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் ஓரளவேனும்
தெரிய வரும்.
****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக