எலி வளை சுரங்கம்
41 தொழிலாளர்ளை மீட்க பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.
அதில் ஒன்று.
பின்பு அடுத்த கட்ட முயற்சியாக ராட்சத எந்திரங்களை கொண்டு துளையிடும் வேலையை தொடர்ந்தனர்.
அது நல்லதொரு முன்னேற்றத்தை தந்தது.
ஆனால் 43 மீட்டர்கள் துளையிட்ட நிலையில் அமெரிக்க ராட்சத எந்திரமான ஆகர் எந்திரமும் பழுதானது.
அடுத்த கட்டமாக
மிக ஆபத்தான மேலிருந்து துளையிடும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் பக்கவாட்டு துளையிடும் எந்திரங்கள் துளையிட்ட 43 மீட்டர்கள் இருந்து மீதமுள்ள 13 மீட்டர்கள் மண் குவியலை மனிதர்கள் கையாளும் பழமையான முறையை கையாள முடிவு செய்யப்பட்டு அதில் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டனர்.
கடைசி முயற்சியாக எலிவளை சுரங்கம் தோண்டும் வழிமுறை
பின்பற்ற திட்டமிட்டு
திங்கள் இரவு களமிறங்கிய எலிவளை சுரங்க தொழிலாளிகள் அசுர வேகத்தில் இயங்கி வெறும் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டி சிக்குண்டவர்களை மீட்க இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர்.
இந்த இரும்பு குழாய் மூலமாக, சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும்
நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த எலிவளை சுரங்கம் தோண்டுதல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று.
மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இவ்வாறான எலிவளை சுரங்கம் தோண்டுதல் மூலமாக நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள்.
அதாவது மூன்று தொழிலாளிகள் இந்த வேலையில் ஈடுபடுவார்களாம்.
ஒருவர் சுரங்க வழியை வெட்டிக் கொண்டு செல்வார். இன்னொருவர் வெட்டப்பட்ட கழிவுகளை அள்ளுவார்.
மூன்றாவது நபர் அக்கழிவுகளை அதற்குண்டான டிராலியில் போடுவார்.
அந்த டிராலியில் ஏற்கனவே தோண்டிய வழியில் வெளியே அனுப்பி விடுவார்களாம்.
இது எலிகள் தங்களது வளையை தோண்டும் வழிமுறை என்பதால் இதற்கு எலிவளை சுரங்கம் தோண்டுதல் என்று பெயர் பெற்றதாம்.
2018ல் மேகாலயாவில் நடந்த எலிவளை சுரங்க விபத்தில் சிக்கி எலிவளை ஊழியர்கள் உயிரிழந்ததையொட்டி பசுமை தீர்ப்பாயம் இந்த முறைக்கு தடை விதித்திருந்தது.
கடைசியில் மாபெரும் அமெரிக்க தொழில்நுட்பம் கூட தடுமாறிய நிலையில் இந்த பழமையான எலிவளை தோண்டுதல் வழிமுறைதான் கைகொடுத்தது. சிக்குண்ட தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக