தமிழும் சமஸ்கிருதமும்!
--------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
சமஸ்கிருதம் தமிழுக்குப் பிந்தியது. தமிழரின்
வானியல் அறிவு மூலச்சிறப்பு (originality)
உடையது. பரந்துபட்ட மக்களால் ஒருபோதும்
சமஸ்கிருதம் பேசப்பட்ட்தில்லை.
காளிதாசனின் நாடகங்களைப் படித்திருந்தால்
ஓர் உண்மை புரியும். காளிதாசனின் நாடகங்களில்
அரசனும் ராஜகுருவும் மட்டுமே சமஸ்கிருதத்தில்
பேசுவார்கள். மற்றப் பாத்திரங்கள் எவையும்
சமஸ்கிருதத்தில் பேச மாட்டார்கள் அவர்களுக்கு
சமஸ்கிருதம் தெரியாது. அரசிகளில் மிகப்
பலருக்கும் சமஸ்கிருதம் தெரியாது.
சித்திரை வைகாசி என்பனவெல்லாம் தமிழ்
மரபில் மூலச்சிறப்புடன் உள்ள விஷயமே.
தமிழக் குழந்தைகள் தங்களில் தாய் தகப்பனை
மம்மி டாட் என்று அழைப்பதால் தமிழ் மரபில்
தாய் தகப்பனே கிடையாது என்று முடிவுக்கு
வருவது எப்பேர்ப்பட்ட அபத்தம். அதுபோன்ற
அபத்தம் சமஸ்கிருதத்திடம் இருந்து சித்திரையை
தமிழ் பெற்றுக் கொண்டது என்பதும்.
ஒரு நிலப்பரப்பில் உள்ள மொழிகளுக்கு இடையே
சொற்களின் கொடுக்கல் வாங்கல் நிகழவே
செய்யும். அதை வைத்துக்கொண்டு ஒரு மொழி
உயர்ந்தது என்றும் இன்னொரு மொழி தாழ்ந்தது
என்றும் முடிவுக்கு வருவது சரியல்ல. தங்களின்
prejudicesஐ மொழியில் காட்ட வேண்டாம்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அவர்களின்
விசுவாசிகளும் சம்ஸ்கிருத எதிர்ப்பை ஓர்
இயக்கமாகவே நடத்தினர். இல்லாத மேன்மைகளை
சமஸ்கிருதத்திற்கு இருப்பதாகக் கற்பிப்பது
சம்ஸ்கிருத எதிர்ப்புக்கு தூபம் போடும்.
------------------------------------------------------------
பெற்ற தாயை மம்மி என்றுதான் குழந்தைகள்
அழைக்கிறார்கள். மம்மி என்பது
தமிழ்ச்சொல் அல்ல. இதை வைத்துக்கொண்டு
தமிழகக் குழந்தைகளுக்கு தாயே கிடையாது
என்ற முடிவுக்கு வருகிறீர்கள்.
சமஸ்கிருதம் அன்று இந்தியா முழுவதும் பரவி
இருந்தது. எனவே சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக
இருந்தது. இன்று ஆங்கிலம் இந்தியா முழுமைக்குமான
உற்பத்தி மொழியாக இருப்பது போல்.
எது உற்பத்தி மொழியாக இருக்கிறதோ இருந்ததோ
அம்மொழியின் சொற்கள் பிற மொழிகளிலும்
வழங்குவது இயல்பே. அப்படித்தான் சமஸ்கிருதச்
சொற்கள் தமிழில் வழங்கின. இது தமிழில் சொற்கள்
இல்லை என்றோ கருத்தாக்கம் இல்லை என்றோ
பொருள்படாது.
-----------------------------------------------------------------------
siththirai maathaththil powrnami enru
சித்திரை மாதத்தில் என்றைக்கு பெளர்ணமி வரும்?
சித்திரை நட்சத்திரத்தன்று பெளர்ணமி வரும்.
இதன் காரணமாக சித்திரை என்ற மாதம்
உருவானது. நட்சத்திரங்களின் பெயர்கள்
சமஸ்கிருதத்தில் உள்ளன. நட்சத்திரங்களின்
பெயர்களைக் கொண்டே மாதங்கள் பெயர்
பெற்றமையால் மாதங்கள் அவற்றின் சமஸ்கிருதப்
பெயர்களோடு நீடிக்கின்றன.
அன்று தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பகைமை
இல்லை. சமஸ்கிருதம் வேறு, தமிழ் வேறு
என்று பேதம் பார்க்கும் சிந்தனை இல்லை.
எனவே தமிழில் உள்ள தமிழ் மாதங்களின்
பெயர்கள் மக்களிடம் சென்று சேரவில்லை.
தை என்பது தமிழ்ப்பெயரே.
தைஇத் திங்கள் தண்கயம் போல (புறம்)
தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை)
சில நாட்களில் தனிக்கட்டுரை வெளியிடுகிறேன்.
அதுவரை பொறுத்திருக்கவும்.
வையாபுரிப பிள்ளை அனைவரும் அட்டியின்றி
ஏற்றுக் கொண்ட தமிழறிஞர் அல்லர். அவர்
முரண்பாடுகளின் மூட்டை. நேற்று ஒன்று
சொல்லியிருப்பார்; இன்று அதை மறுப்பார்.
திருக்குறள் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு என்று
உளறி அடிபட்டவர் வையாபுரிப பிள்ளை.
இரண்டாவது வையாபுரிப பிள்ளை தமிழ்
கற்றவர். அவர் அறிவியல் கற்றவரோ
வானியல் அறிந்தவரே இல்லை. எனவே
வானியல் சார்ந்த விஷயங்கள் அவர் கூறும்
கருத்துக்கள் ஏற்காத தக்கவை அல்ல.
சம்ஸ்கிருத வெறுப்பை அணைக்க நான்
முயல்கிறேன்.நீங்கள் சமஸ்கிருதம்
தமிழை விட உயர்ந்தது என்ற prejudiceஉடன்
பேசுகிறீர்கள்.
நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு முகநூலில்
பேசி விட்டுப் போய் விடுவீர்கள். ஆனால் ரோட்டில்
போகிற சம்ஸ்கிருத அபிமானி அடி வாங்குவான்.
என்னுடைய இறுதித் தீர்ப்பு:
--------------------------------------------
சமஸ்கிருதத்தை வெறுக்க வேண்டியது இல்லை.
வெறுப்பது தவறு மட்டுமல்ல தற்குறித் தனமும்
ஆகும்.
தமிழ் முந்தியது; சமஸ்கிருதம் பிந்தியது.
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும்
தமிழ் பேசப் படுகிறது; தமிழ் பேச்சு மொழியாக
இன்றும் உள்ளது.
சமஸ்கிருதம் இறந்துபோன மொழி. உயிரோடு
இருக்கும்போது கூட சமஸ்கிருதம் மக்களால்
பேசப்பட்ட மொழி அல்ல.
மக்களால் பேசப்படும் மொழிகளில்தான் அறிவுச்
செல்வங்கள் திரளும். மக்களால் பேசப்படாத மொழி
தேங்கும். அதில் அறிவுச் செல்வங்கள் திரளாது
மற்ற மொழிகளில் திரண்ட அறிவுச் செல்வங்கள்
சமஸ்கிருதத்தில் எழுதி வைக்கப் பட்டன.
இதுதான் உண்மை!
நியூட்டன் தனது தாயமொழியான ஆங்கிலத்தில்தான்
சிந்தித்தார். அனால் தனது Principia Mathematica
நூலை லத்தீனில்தான் எழுதினர். ஆங்கிலத்தில்
எழுத அன்றைய சமூகம் அன்றைய அரசதிகாரம்
அவரை அனுமதிக்கவில்லை.
மேற்கே லத்தீன் போன்று இந்தியாவில் சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் ஒருபோதும் தமிழை விட மேம்பட்டதில்லை.
மொழியின் பிரதான பண்பு communicationக்குப்
பயன்படுவது. இந்தப் பண்பே சமஸ்கிருதத்தில்
கிடையாது. அது ஒருபோதும் தகவல் தொடர்புக்குப்
பயன்பட்டதில்லை. அதை எப்படி மொழி என்று
சொல்ல முடியும்?
.
/