புதன், 8 அக்டோபர், 2014

பெரியார் திடலில் அறிவியல் கூட்டம்!
பொருள்: இயற்பியல் நோபெல் பரிசு 2014
------------------------------------------------------------------------ 

பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும் 
அறிவியல் கூட்டத்தில்

தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன் 
  ( இயக்குனர், நியூட்டன் அறிவியல் மன்றம்) 
பேசுகிறார். அனைவரும் வருக!

இடம்: அன்னை மணியம்மை அரங்கம், 
               பெரியார் திடல், சென்னை.
நாள்: 09.10.2014 வியாழன் மாலை 6.30 மணி 

பொருள்: இயற்பியல் நோபெல் பரிசு 2014.

கூட்ட ஏற்பாடு: பெரியார் நூலக வாசகர் வட்டம் 
அனைவரும் வருக!
அன்புடன் அழைக்கும்,
நியூட்டன் அறிவியல் மன்றம்

***************************************

செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு 
இரட்டைத் தாழ்ப்பாள்!
------------------------------------- 
ராம் ஜெத்மலானி வாதாடியும் 
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் 
கிடைக்கவில்லை.
ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு 
இரட்டைத் தாழ்ப்பாள்
என்பது இதுதான்!

***************************
ஊழல் என்பது மனித உரிமை மீறல் ஆகும்!
------------------------------------------------------------ 
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்ட 
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த 
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் 
மேதகு சந்திரசேகரா அவர்கள் ஜெ.வுக்கு ஜாமீனை 
மறுத்துத் தீர்ப்பளித்தார். தமது தீர்ப்புரையில் அவர் 
கூறிய முக்கியத்துவம் மிகுந்த கருத்து 
வரவேற்கத்தக்கது.

ஊழல் என்பதே மோசமான மனித உரிமை மீறல்
என்ற அவரின் கருத்து போற்றத்தக்கது.
ஜாமீன் கொடுக்காவிட்டால், அது மனித 
உரிமை மீறல் என்ற ஜெ. தரப்பின் கருத்தின்
மீது சூட்டுக்கோலால் சூடு போடும் கருத்து 
நீதியரசரின் கருத்து.

***********************************************
அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின்
தலைகீழ் மாற்றம் நியாயமே!
----------------------------------------------- 
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று (07.10.2014)
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனு 
விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய 
அரசு வழக்கறிஞர் பவானிசிங்  ஜெ .வுக்கு ஜாமீன் 
வழங்கக் கூடாது என்றும் அப்படி வழங்கினால் 
ஜெ . நாட்டை விட்டே ஓடி விடுவார் என்றும்    
தெரிவித்தார். இது நடந்தது காலை 12 மணி அளவில்.

உணவு இடைவேளைக்குப்பின் பிற்பகலில் 
நீதிமன்றம் மீண்டும் கூடியது. அப்போது தமது முறை 
வந்தபோது வாதாடிய பவானிசிங் தலைகீழ் மாற்றத்தை 
வெளிப்படுத்தினார். பாமர மக்கள் மொழியில் 
சொல்வதானால், அந்தர் பல்டி அடித்தார். 

இது சரியா, நியாயமா என்ற கேள்வி அனைவரின் 
உள்ளத்திலும் அலை மோதுகிறது. இதைப் பரிசீலிப்போம்.

அரசு வழக்கறிஞர் என்பவர் அரசின் கருத்தைப் பிரதிபலிப்பவர்.
பிரதிபலிக்கக் கடமைப் பட்டவர். கர்நாடக அரசைப் 
பொருத்தமட்டில், ஜெ .வின் வழக்கில் தலையிட 
விரும்பவில்லை.  ஜெ. வின் ஜாமீனை எதிர்க்க விரும்பவில்லை.
இந்தப் பிரச்சினையால் தமிழர்களுக்கும் கன்னடியர்களுக்கும் 
இனமோதல் ஏற்படுவதை விரும்பவில்லை. சித்தராமையா 
தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, ஜெ.வின் ஜாமீனை 
எதிர்க்க விரும்பவில்லை, எதிர்க்கவில்லை என்கிற வலுவான 
செய்தியை (strong message ) நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் 
பவானிசிங் பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார்.  

இதன் மூலம் கன்னட-தமிழர் இனமோதலைத் தூண்டிவிட்டு
குளிர்காய நினைத்த தீய சக்திகளின் திட்டத்தை முறியடித்தார் 
கர்நாடக முதல்வர் சித்தராமையா.

ஜெ.வுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், அதற்குக் 
காரணம் நீதிமன்றமே தவிர, கர்நாடக அரசு அல்ல என்ற 
விஷயத்தை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தி உள்ளார் 
சித்தராமையா.ஜெ.வின் வழக்கில் எந்த விதத்திலும் 
அரசியல் தலையீடோ பழிவாங்கலோ இல்லை என்பதை 
ஜெ.வின் ஜாமீன் மனுவை எதிர்க்காமல் இருந்ததன் மூலம் 
நிரூபித்துள்ளது கர்நாடகா அரசு.

இது (பவானிசிங்  ஜெ.வின் ஜாமீன் மனுவை எதிர்க்காமல் விட்டது) ஜெயலலிதா தரப்புக்கு ஒரு மாபெரும் பின்னடைவாகவே 
சட்ட நிபுணர்களால் கருதப் படுகிறது. இதன் மூலம் தமிழர்-கன்னடர் இனமோதல் தவிர்க்கப் படுகிறது.


எனவே, பவானிசிங்கின் தலைகீழ் மாற்றம் நியாயமே.   

********************************************************

திங்கள், 6 அக்டோபர், 2014

இயற்பியல் நோபெல் பரிசு 2014:
-------------------------------------------------- 
அக்டோபர் 7ஆம் தேதியன்று 
 07.10. 2014 செவ்வாய்க் கிழமை 
இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணி 
அளவில் அறிவிக்கப் படும்.
 ஆங்கில, தமிழ் தொலைக்காட்சிகளில் 
பிற்பகல் 3.00 மணி க்கு காணத் 
தவறாதீர்!

...நியூட்டன் அறிவியல் மன்றம்.............

***********************************

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஜெயாவுக்கு தண்டனை கிடைக்க 
ஏ.ஆர். ரகுமான், கங்கை அமரன் 
சாட்சியங்களே காரணம்!
---------------------------------------------------- 
 சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு 
நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை 
விதிக்கப் பட்டு உள்ளது. அசைக்க முடியாத 
சாட்சியங்கள் மற்றும் சான்றாதாரங்களின்  
அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப் 
பட்டு உள்ளது.

கங்கை அமரனின் சாட்சியம்,
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சாட்சியம்,
மறைந்த இசை மேதை மாண்டலின்  
சீனிவாசனின்  சாட்சியம் ஆகியவை 
தண்டனை வழங்குவதில் முக்கியப் பங்கு 
வகித்துள்ளன. நீதியரசர் குன் ஹா தமது 
தீர்ப்பில் இதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டி 
உள்ளார். 
கங்கை அமரனின் பைய்யனூர் பங்களாவை  
மிரட்டி எழுதி வாங்கியது, வளர்ப்பு மகன் 
திருமணத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 
மாண்டலின் சீனிவாசன் ஆகியோரின் 
இசைக் கச்சேரியை காசு கொடுக்காமல் 
ஏற்பாடு செய்தது ஆகிய உண்மைகளைத் 
தங்களின் வாக்கு மூலத்தில் நீதிமன்றத்தில் 
தெளிவாகக் கூறி உள்ளனர் மேற்கூறிய மூவரும்.

ஜெய மீதான குற்றம் நிரூபிக்கப்பட 
இவர்களின் சாட்சியம் உதவியாக இருந்தது 
என்பது உண்மையே! மிரட்டல் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு 
அஞ்சாமல் சாட்சியம் அளித்த கங்கை அமரன், ஏ.ஆர். ரகுமான் 
ஆகியோரை மக்கள் பாராட்டுகிறார்கள். 

தகவல் ஆதாரம்:
-------------------------------- 
TIMES OF INDIA ஆங்கில நாளேடு, 04.10.2014

**************************************************************   

சனி, 4 அக்டோபர், 2014

களி  தின்னும் காலம் 
----------------------------- 

1991-1996...... கொள்ளை அடிக்கும் காலம் 

2014-2018....... கேப்பைக்  களி தின்னும் காலம் ;
                             கம்பி  எண் ணும் காலம்  
தமிழக அரசு அலுவலகங்களில் பள்ளிகளில்
முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின்
படத்தை வைக்க வேண்டும்.
பிற்பட்டோர் நலச் சங்கங்களின் கோரிக்கை!
--------------------------------------------------------------------------

முதலமைச்சரின் படத்தை அரசு அலுவலகங்களில்
வைப்பது என்பது தமிழகத்தில் தொன்றுதொட்டு
இருந்து வரும் மரபாகும். காமராசர், பக்தவத்சலம்,
அறிஞர் அண்ணா முதல் தற்போது ஜெயலலிதா
வரை அனைவரின் படங்களும் அரசு அலுவலகங்களிலும்
பள்ளிக்கூடங்களிலும் வைக்கப் பட்டு இருந்தன என்பது
கண்கூடு.

இந்த வரிசையில், இந்த மரபின் தொடர்ச்சியாக
தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர் மாண்புமிகு
ஓ பன்னீர் செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை
அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், அரசுசார்
நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகிய இடங்களில்
உடனடியாக வைக்க வேண்டும் என்பது
தமிழ்நாட்டில் இருக்கும் 85 சதவீத பிற்படுத்தப்பட்ட
சமூக மக்களின் கோரிக்கை ஆகும்.

ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் இதில் அலட்சியம்
காட்டி வருகின்றனர். பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
என்பதற்காக மாண்புமிகு முதல்வர் பன்னீர் அவர்களின்
திருவுருவப் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்காமல்
புறக்கணிப்பது  கோடிக்கணக்கான பிற்பட்ட சமுதாய
மக்களின் இதயங்களில் சூட்டுக்கோலால் சூடு
பொறிப்பதற்குச் சமம்.   

பிற்படுத்தப் பட்ட சமூகம் இந்த அநியாயத்தைப்
பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எனவே
நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்ட முன்னாள்
முதலமிச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை
அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மாண்புமிகு
முதல்வர் பன்னீர் அவர்களின் திருவுருவப் படத்தை
தாமதமின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் உரிய
இடங்களில் வைக்குமாறு அகில இந்தியப் பிற்படுத்தப்
பட்டோர் முன்னேற்றக் கழகம் கோருகிறது.

************************************************************************   

வெள்ளி, 3 அக்டோபர், 2014

வெட்டுப்பட்ட பல்லியின் வால்   
எவ்வளவு நேரம் துடிக்கும்?
------------------------------------------------------- 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 
தண்டிக்கப் பட்டதை எதிர்த்து தமிழ்நாடு 
முழுவதும் நடைபெற்று வந்த காலித்தனங்களும்
ரவுடித்தனங்களும் முடிவுக்கு வந்து கொண்டு 
இருக்கின்றன. தொடர்ந்து காலித்தனம் 
செய்தால், ஜெ.வுக்கு ஜாமீன் கிடைக்காமல் 
போய்விடும் என்ற ஞானோதயம் ஏற்பட்டு 
இருக்கக்கூடும்.

வெட்டுப்பட்ட  பல்லியின் வால்,
பல்லி  செத்துப் போன பிறகும் சிறிது 
நேரம் துடிக்கும். அதன் பிறகு அடங்கி விடும்.
வெள்ளம் வடிந்தது போல் காலித்தனமும் 
வடிந்து கொண்டு இருக்கிறது.

என்றாலும் அபாயம் முற்றிலுமாக நீங்கி 
விடவில்லை. அக்டோபர் 7ஆம் தேதியும் 
ஜாமீன் மறுக்கப் படும்போது மீண்டும் 
தலை காட்டும். அப்போது அந்தக் 
காலித்தனத்தின் தலையை  அறுக்க 
தமிழ் மக்கள் தயார் ஆகட்டும்.

****************************************************          
வருமான வரி ஏய்ப்பு வழக்கிலும் தண்டனை உறுதி !
சட்ட நிபுணர்கள் கருத்து!!
------------------------------------------------------------------------------------- 
ஜெயலலிதா மீது வருமானவரி ஏய்ப்பு மற்றும் மோசடி 
வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 
நடந்து வருகிறது. இந்த வழக்கு தீர்ப்புச் சொல்லும் 
கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜெயலலிதா நேரில் 
ஆஜராக வேண்டிய கட்டாயம் இந்த வழக்கில் உள்ளது.
அவ்வாறு ஆஜராகிய பின்னர் ஓரிரு மாதங்களில் 
தீர்ப்பு வழங்கப் பட்டு விடும்.

இந்த வழக்கில் ஜெ.வுக்கு தண்டனை கிடைப்பது உறுதி 
என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். எப்படி என்பதைப் 
பார்ப்போம். 

சில மாதங்களுக்கு முன்பு ,  இந்த வழக்கில் 
வருமானவரித் துறையுடன் சமரசம் செய்து கொள்ளத் 
தயார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஜெ .
நன்கு கவனிக்கவும். சமரசம் என்பதில்  
" குற்றத்தை ஒப்புக் கொள்ளுவது" என்பது 
உள்ளடங்கி உள்ளது. (THE ADMISSION OF GUILT 
IS AUTOMOTICALLY INCLUDED  IN A COMPROMISE).

குற்றத்தை ஒப்புக் கொள்வதும், அவ்வாறு 
ஒப்புக் கொண்டதன் பேரில், அபராதத்தையும் 
தண்டனையையும் குறைக்கக் கோருவதுமே 
ஒரு சமரச மனுவின் சாரம்.

எனவே, இந்த வருமானவரி ஏய்ப்பு மற்றும் மோசடி 
வழக்கில், குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் 
 (BY ADMISSION OF GUILT ) ஜெ.வுக்கு தண்டனை உறுதி 
என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். மூன்று  ஆண்டுகள் முதல்
ஆறு  ஆண்டுகள் வரை தண்டனை வழங்க  சட்டத்தில் 
இடம் இருக்கிறது என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

*************************************************************

வியாழன், 2 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் 
பெரிய முட்டுக் கட்டை!
அபராதம் செலுத்தாமல் ஜாமீன் கிடைக்காது!
சட்ட நிபுணர்களின் கருத்து!
---------------------------------------------------------------------- 
100 கோடி ரூபாய் ஜெ .வுக்கு  அபராதம் 
விதிக்கப் பட்டுள்ளது. ஜாமீன் பெறுவதற்கான 
முன் நிபந்தனை அபராதத்தைச் செலுத்துவதாகும்.

ஆனால், அபராதம் செலுத்தாமலேயே 
ஜாமீன் பெறுவதற்கு ஜெ முயற்சி செய்வதால் 
ஜாமீன் கிடைக்க வழியே இல்லை என்று 
சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

********************************************************** 
வைத்தியநாதனுக்கு  ஜெத்மலானி ஆஜர்!
---------------------------------------------------------------------
ஆவின் பாலில் கலப்படம் செய்து
ஆயிரம் கோடி கொள்ளை அடித்த
கயவன் வைத்தியநாதன் தற்போது
கடலூர் சிறையில் கம்பி எண்ணிக்
கொண்டு இருக்கிறான்.

இவனுடைய  ஜாமீன் மனு விழுப்புரம் குற்றவியல்
நீதிமன்றத்தில் எட்டாம் தேதி (08.10.2014)
விசாரணைக்கு வருகிறது.

ஜெத்மலானி எனக்காக வாதாடுவார் என்று
பெருமையுடன் கூறுகிறான் கயவன்
வைத்தியநாதன். ஒரு சிட்டிங்குக்கு
சில கோடிகள் வாங்கும் ஜெத்மலானிக்கு
இவனால் பீஸ்( fees )கொடுக்க முடியுமா
என்று நான் லேசாக சந்தேகம் அடைந்தேன்.

ஆனால், ஆவின் பால் கலப்பட ஊ ழலில்
கொள்ளை அடித்த தொகை பல ஆயிரம் கோடிகள்
என்று தமிழக அரசின் புலனாய்வு கூறுகிறது.
எனவே ஜெத்மலானிக்கு இவனால் பீஸ் கொடுக்க
முடியும் என்று தெளிவு அடைந்தேன்.

கயவன் வைத்தியநாதனுக்கும்
ஜெத்மலானி ஆஜர் ஆகிறார்.

கோடிக்கணக்கில் கொள்ளை அடி.
சில கோடிகளை ஜெத்மலாநிக்குக் கொடு.
வெளியே வா.
மீண்டும் கொள்ளை அடி.
இதுதான் வெற்றியின் தத்துவம்.

அடுத்த  முதல்வர் கனவு
வைத்தியநாதனுக்கும் இருக்கக் கூடும்.
ஆகவும் கூடும்!

********************************************************
பாலு  ஜுவல்லரியை  நினைவு இருக்கிறதா?
-------------------------------------------------------------------------- 
பாலு ஜுவல்லரி என்பது 1990களில் 
சென்னையில் பிரபலமாக விளங்கிய நகைக்கடை.
1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக 
முதல்வராக இருந்த காலம் அது.

வளர்ப்பு மகன் திருமணத்திற்காக 
பாலு ஜுவல்லரியில் இருந்து 
40 கோடி ரூபாய்க்கு தங்கம் 
வாங்கப்  பட்டது. பணம் தரப்படவில்லை.

அன்றைக்கு 40 கோடி என்பது இன்றைய 
மதிப்பில் எவ்வளவு என்று பார்க்க இரண்டு 
விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
1) தங்கத்தின் அதீத விலை ஏற்றம் 
2) இன்றைய பண வீக்கம் இதன்படி பார்த்தால், 
அன்று 40 கோடி ரூபாய் தங்கம் என்பது இன்று 
4000 கோடிக்குச் சமம்.

பணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி 
உரிமையாளர் கடுமையாக மிரட்டப் பட்டார். 
பணம் சிறிதும் கிடைக்க வழி இல்லாத நிலையில் 
தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார்.
(Driven to suicide).

பாலு ஜுவல்லரிக்காக தினசரிகளில் 
அன்று வந்த விளம்பரம் (1991-96)
கவித்துவமாக இருந்தது. கவிஞர் வைரமுத்து 
விளம்பர வாசகங்களை எழுதி இருந்தார்.

"பொன்னில் நால்வகை என்பார்கள்.
ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாந்தரூபம் 
ஆகிய நால்வகை. ஐந்தாவதாக ஒரு பொன் 
இருந்தால், அதற்கு பாலு என்று பெயர் 
வைக்கலாம்."

ஆனால், பாலு போய்ச் சேர்ந்து விட்டார். 
இயற்கையாக அல்ல; அநியாயமாக.
கொன்றது யார்? அந்தக் குற்றவாளிகள் 
தப்பிக்கலாமா ? 

***********************************************************

புதன், 1 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும்?
சோதிடர்கள் கணிப்பு!!
---------------------------------------------------------------------------- 
என் நண்பர் ஒருவர் BSNL இல் உதவிப்  பொறியாளராய் 
இருக்கிறார். அவர் சோதிடப் பித்தர். ஜெயலலிதா பக்தர்.

ஜெயலலிதாவுக்கு இதுவரை  ஜாமீன் கிடைக்காதலால் 
சோர்ந்து போன அவர் ஒரு சோதிடரிடம் போனார்.
ஜோதிட பூஷணம் , ஜோதிட கலா ரத்னம் ஆகிய 
பட்டங்களைச் சூட்டிக் கொண்டிருக்கும் அந்த 
சோதிடர் கடலங்குடி சரஸ்வதி வகையறா ஆவார்.

அந்த சோதிடர், "ஜாமீன் கிடைக்க இன்னும் 
ஒரு மண்டலம் ஆகும்" என்றார். ஒரு மண்டலம் 
என்பது 40 நாட்கள் என்றும் அவர் கூறினார்.

இன்னொரு நண்பர் இன்னொரு சோதிடரிடம் போனார்.
ஜெயலலிதா அடைக்கப் பட்டிருக்கும் சிறையின் 
நம்பர் 7402 என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை 
அலசி ஆராய்ந்து , "வேறு சிறைக்குப் போனால்தான் 
ஜாமீன் கிடைக்கும் என்றும் இந்த 7402 என்ற நம்பர்
மிகவும் மோசமானது என்றும், தன்னிடம் வந்தவர்களை 
சுலபத்தில் விடாது என்றும் கூறினார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் குறித்த சோதிடர்களின் 
கணிப்பு இவ்வாறாக இருக்கிறது என்று 
சோதிடம் பார்த்த அன்பர்கள் நம்மிடம் 
தெரிவித்தனர்.

நாம் சோதிடத்தை நம்பவில்லை; ஏற்றுக் 
கொள்ளவில்லை.

ஆனால் ஜெயலலிதாவும் சரி, அவரது பக்தர்களான 
BSNL உதவிப் பொறியாளரான அன்பர்களும் சரி 
சோதிடப் பித்தர்கள் ஆயிற்றே. அவர்கள் நம்பத்தானே
வேண்டும்.

**********************************************************           
ராம் ஜெத்மலானியின் படுதோல்விகள்!
------------------------------------------------------------------
ராம் ஜெத்மலானி அவர்கள் உலகம் போற்றும் சட்ட நிபுணர் 
என்பதும், இந்தியாவின் முதல் இடத்தில் இருக்கும் சட்ட நிபுணர் 
என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

அதனாலேயே அவர் வாதாடும் எல்லா வழக்குகளிலும் 
வெற்றி பெறுவார் என்பது உண்மை அல்ல.
இதோ, ராம் ஜெத்மலானியின் படுதோல்விகளின் பட்டியல்:

கொலை, கற்பழிப்பு, பணம் பறித்தல், பிளாக் மெயில் 
என்று பலவிதமான கொடிய குற்றங்களைச் செய்த 
கயவன் பிரேமானந்தா சாமியாரை அன்றைய அதிமுக 
அரசு சிறையில் அடைத்தது. ( கயவன் பிரேமானந்தா 
சாமியார் அண்மையில் இறந்து விட்டான். )

புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
திருமதி பானுமதி அவர்கள் நீதியரசராக இருந்தார்.
கயவன் பிரேமானந்தா சாமியாரின்  ஜாமீன் மனு மீது 
விசாரணை நடந்தது. இந்தக் கயவனுக்கு ஜாமீன் 
வழங்க வேண்டும் என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.
ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.நீதியரசர் பானுமதி 
அவர்கள் ஜாமீன் வழங்க மறுத்து விட்டார். ( திருமதி 
பானுமதி அவர்கள் தற்போது உச்ச நீதிமன்ற நீதியரசராக 
உள்ளார்).

இங்கு ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது. ஜாமீன் கேட்டபோது 
கயவன் பிரேமானந்தா விசாரணைக் கைதியாகத்தான் 
( under trial prisoner) இருந்தான். தண்டிக்கப் பட்ட கைதி அல்ல.
( NOT A CONVICTED PRISONER ). அதாவது அவன் மீதான 
வழக்கில் தீர்ப்பு வரவில்லை. ஒரு வழக்கு விசாரணையில் 
இருக்கும்போது,  தீர்ப்பு சொல்லப் படாதபோது, கைதியாக 
இருப்பவனுக்கு ஜாமீன் அளிப்பதற்கான வாய்ப்பு  அதிகம்.
ஏனெனில், அவன் மீதான தீர்ப்பு இன்னும் 
சொல்லப் படவில்லை. குற்றம் நிரூபிக்கப் படாதவரை   
எல்லோரும்   நிரபராதியே என்ற தத்துவப் படி, விசாரணைக் 
கைதியாக இருப்பவனுக்கு ஜாமீன் வழங்குவதற்கான 
வாய்ப்பு அதிகம். இருப்பினும், கயவன் பிரேமானந்தாவுக்கு 
ஜெத்மலானியே வந்து வாதாடியும் ஜாமீன் கிடைக்கவில்லை.

ஜாமீன் ( BAIL ) என்பது வேறு; முக்கிய வழக்கு (MAIN CASE )
என்பது வேறு. ஜாமீன் வழங்குவதில் நீதிபதியின் 
விருப்புரிமை (DISCRETION ) என்பது வேறு எதையும் விட 
முக்கியமானது.ஜெத்மலாநியைப் பொருத்தமட்டில்,
ஜாமீன் மனுக்களில் அவரின் வெற்றி விகிதம் 
(SUCCESS RATE ) 50%தான்.வெற்றி வாய்ப்பு 50க்கு 50 தான்.
100 சதம் என்று இருந்தது இல்லை.

இன்னும் பல உதாரணங்களை எடுத்துச் சொல்ல முடியும்.
இடமில்லை நேரமில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் 
கொள்கிறேன்.

ஜெயலலிதா வெறும் விசாரணைக் கைதி அல்ல.
அவர் ஒரு தண்டனைக் கைதி.( CONVICTED PRISONER )
குற்றம் நிரூபிக்கப் படாதவரை எல்லோரும் நிரபராதியே 
என்ற தத்துவம் அவருக்குப் பொருந்தாது.அவர் மீதான 
குற்றங்கள் நிரூபிக்கப் பட்ட பிறகு, தண்டனை வழங்கப் 
பட்ட பிறகு, அவர் ஜாமீன் கேட்கிறார்.

ஒரு விசாரணைக் கைதியின் ஜாமீன் பெறும் 
உரிமையை விட,   ஒரு தண்டனைக் கைதியின் 
ஜாமீன் பெறும் உரிமை சற்றுக் கீழானதுதான். 
எனவே இதில் அவசரப் படுவதன் மூலம் 
ஜாமீன் பெற்று விட முடியாது.

********************************************************8