ராம் ஜெத்மலானியின் படுதோல்விகள்!
------------------------------------------------------------------
ராம் ஜெத்மலானி அவர்கள் உலகம் போற்றும் சட்ட நிபுணர்
என்பதும், இந்தியாவின் முதல் இடத்தில் இருக்கும் சட்ட நிபுணர்
என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
அதனாலேயே அவர் வாதாடும் எல்லா வழக்குகளிலும்
வெற்றி பெறுவார் என்பது உண்மை அல்ல.
இதோ, ராம் ஜெத்மலானியின் படுதோல்விகளின் பட்டியல்:
கொலை, கற்பழிப்பு, பணம் பறித்தல், பிளாக் மெயில்
என்று பலவிதமான கொடிய குற்றங்களைச் செய்த
கயவன் பிரேமானந்தா சாமியாரை அன்றைய அதிமுக
அரசு சிறையில் அடைத்தது. ( கயவன் பிரேமானந்தா
சாமியார் அண்மையில் இறந்து விட்டான். )
புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
திருமதி பானுமதி அவர்கள் நீதியரசராக இருந்தார்.
கயவன் பிரேமானந்தா சாமியாரின் ஜாமீன் மனு மீது
விசாரணை நடந்தது. இந்தக் கயவனுக்கு ஜாமீன்
வழங்க வேண்டும் என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.
ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.நீதியரசர் பானுமதி
அவர்கள் ஜாமீன் வழங்க மறுத்து விட்டார். ( திருமதி
பானுமதி அவர்கள் தற்போது உச்ச நீதிமன்ற நீதியரசராக
உள்ளார்).
இங்கு ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது. ஜாமீன் கேட்டபோது
கயவன் பிரேமானந்தா விசாரணைக் கைதியாகத்தான்
( under trial prisoner) இருந்தான். தண்டிக்கப் பட்ட கைதி அல்ல.
( NOT A CONVICTED PRISONER ). அதாவது அவன் மீதான
வழக்கில் தீர்ப்பு வரவில்லை. ஒரு வழக்கு விசாரணையில்
இருக்கும்போது, தீர்ப்பு சொல்லப் படாதபோது, கைதியாக
இருப்பவனுக்கு ஜாமீன் அளிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஏனெனில், அவன் மீதான தீர்ப்பு இன்னும்
சொல்லப் படவில்லை. குற்றம் நிரூபிக்கப் படாதவரை
எல்லோரும் நிரபராதியே என்ற தத்துவப் படி, விசாரணைக்
கைதியாக இருப்பவனுக்கு ஜாமீன் வழங்குவதற்கான
வாய்ப்பு அதிகம். இருப்பினும், கயவன் பிரேமானந்தாவுக்கு
ஜெத்மலானியே வந்து வாதாடியும் ஜாமீன் கிடைக்கவில்லை.
ஜாமீன் ( BAIL ) என்பது வேறு; முக்கிய வழக்கு (MAIN CASE )
என்பது வேறு. ஜாமீன் வழங்குவதில் நீதிபதியின்
விருப்புரிமை (DISCRETION ) என்பது வேறு எதையும் விட
முக்கியமானது.ஜெத்மலாநியைப் பொருத்தமட்டில்,
ஜாமீன் மனுக்களில் அவரின் வெற்றி விகிதம்
(SUCCESS RATE ) 50%தான்.வெற்றி வாய்ப்பு 50க்கு 50 தான்.
100 சதம் என்று இருந்தது இல்லை.
இன்னும் பல உதாரணங்களை எடுத்துச் சொல்ல முடியும்.
இடமில்லை நேரமில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்
கொள்கிறேன்.
ஜெயலலிதா வெறும் விசாரணைக் கைதி அல்ல.
அவர் ஒரு தண்டனைக் கைதி.( CONVICTED PRISONER )
குற்றம் நிரூபிக்கப் படாதவரை எல்லோரும் நிரபராதியே
என்ற தத்துவம் அவருக்குப் பொருந்தாது.அவர் மீதான
குற்றங்கள் நிரூபிக்கப் பட்ட பிறகு, தண்டனை வழங்கப்
பட்ட பிறகு, அவர் ஜாமீன் கேட்கிறார்.
ஒரு விசாரணைக் கைதியின் ஜாமீன் பெறும்
உரிமையை விட, ஒரு தண்டனைக் கைதியின்
ஜாமீன் பெறும் உரிமை சற்றுக் கீழானதுதான்.
எனவே இதில் அவசரப் படுவதன் மூலம்
ஜாமீன் பெற்று விட முடியாது.
********************************************************8

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக