ஞாயிறு, 29 ஜனவரி, 2023

 அதானி குழும பங்குகள் விலை சரிவு

---------------------------
பங்கு சந்தையில் எல் ஐ சி இந்த பங்குகளில் முதலீடு செய்து உள்ளது அத்தனை பணமும் சுவாகா என்று முகநூல் பொருளாதார மேதைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உதாரணமாக அதானி என்டர்ப்ரைஸ் பங்குகளை எடுத்து கொள்வோம். ஒரு பங்கின் நேற்றைய வர்த்தக முடிவின் விலை 2762. வியாழன் அன்று 3389 ஆக இருந்தது. கணக்கு படி பார்த்தால் வியாழன் அன்று பங்கு வாங்கியவர்களுக்கு கிட்ட தட்ட ரூபாய் 600 ரூபாய் நஷ்டம்.
கிட்ட தட்ட 400000 பங்குகள் வாங்க பட்டு உள்ளது. வாங்கிவர்களுக்கு 24 கோடி அளவுக்கு நஷ்டம். ஆனால் எல் ஐஸ் என்றைக்கு இந்த பங்குகளை வாங்கியது ? என்ற விவரம் இல்லாமல் எல் ஐ சிக்கு நஷ்டம் என்று எப்படி முடிவுக்கு வந்தார்கள் ? உதாரணமாக இந்த பங்கின் இந்த வருடத்திற்கான குறைந்த விலை 1540. கிட்ட தட்ட 1600 என்ற நிலையில் இரண்டு மூன்று இருந்து இருக்கும் . அந்த நேரத்தில் எல் ஐ சி முதலீடு செய்து இருந்தால் அதற்கு எப்படி நஷ்டம் என்று கூற முஐடியும் ??

சனி, 28 ஜனவரி, 2023

 அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை 

ஆதரிக்காதவர்கள் அறிவியலுக்கு எதிரிகளே!

---------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------


நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதிய 

தொழில்நுட்பக் கட்டுரைகள் 

-------------------------------------------

1) Remote EVM குறித்த கட்டுரை 

2) இந்தியாவின் சுதேசித் தயாரிப்பான BharOS

எனப்படும் OS குறித்த கட்டுரை.

3) Chat GPT எனப்படும் கூகுளுக்குப் போட்டியாக 

வந்துள்ள மென்பொருள் கருவி குறித்த கட்டுரை.


25 நாட்களுக்குள் 3 தொழில்நுட்பக் கட்டுரைகளை 

எழுதியுள்ளேன்.


இவற்றோடு 

அறிவியல் கட்டுரைகள்.

காப்ரேகர் கான்ஸ்டன்ட் குறித்தும் 

காப்ரேகர் நம்பர் குறித்தும் 

கட்டுரைகள்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கணிதமேதை சுஜாதா ராமதுரை

பற்றிய கட்டுரை.

மற்றும் 

நிறைய அறிவியல் குறிப்புகள்!


இக்கட்டுரைகளை வாசகர்கள் பயன்படுத்திக் 

கொள்ள வேண்டும். படிக்க வேண்டும்.

பரப்ப வேண்டும்.


Chat GPT என்றால் என்ன? கூகுளுக்குப் போட்டியா?
பொருளுற்பத்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்!
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------
கூகுள் நிறுவனம் உலக அளவில் பெரும் வெற்றியை 
ஈட்டியுள்ள நிறுவனம். Google searchக்கு இன்று வரை 
ஈடு இணை இல்லை.

என்றாலும் முதலாளித்துவம் என்பது போட்டியை 
உள்ளடக்கமாகக் கொண்டது. எனவே கூகுளுக்குப் 
போட்டியாக ஒரு நல்ல போட்டியாளரை உருவாக்க 
முதலாளித்துவம் உழைத்து வருகிறது.

கூகுளுக்குப் போட்டி என்றதுமே மைக்ரோசாப்ட் 
நிறுவனம்தான் போட்டியாக வரக்கூடும் என்ற 
கணிப்பு உங்களிடம் இருக்கக் கூடும். அல்லது 
எலான் மாஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் போட்டி 
போடக் கூடும் என்று நீங்கள் கருதலாம். அப்படியானால்  
நீங்கள் ஓரளவு விஷயம் தெரிந்தவர் என்று ஆகிவிடுகிறது.

மைக்ரோசாப்ட் என்பது யாருடைய நிறுவனம்?
இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாதவர்களும் 
இருக்கிறார்கள். யார் அவர்கள்? இடதுசாரி 
முகாமில் இருந்து கொண்டு முகாமையே 
அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கும் போலி 
இடதுசாரிகள, போலி நக்சல்பாரிகள், போலி 
மாவோயிஸ்டுகள் மற்றும் போலி முற்போக்குகளே 
அவர்கள். 
 
இன்றைக்கு 47 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1975ல் 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ்
உருவாக்கினார். கணினி மென்பொருள் (computer software)  
துறையில் இன்றளவும் உலக அளவில் முதல் இடத்தில் 
இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம்தான்.

பில் கேட்ஸ் தமது 13ஆம் வயதில் மென்பொருள் 
புரோகிராமை எழுதியவர். தாம் படித்த பள்ளியின் 
ஊழியர்களின் சம்பளப் பட்டியலைத் தயாரிக்க 
அவர் புரோகிராம் எழுதினார்.

நம்மில் எத்தனைபேருக்கு கம்ப்யூட்டர் புரோகிராம்
எழுதத் தெரியும்? தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 
இந்தக் கேள்வி உண்மையில் ஒரு அபத்தமான  
கேள்வி ஆகும். கணினித்துறை, academic துறைக்கு 
வெளியே, பொதுவெளியில் இங்கு ஒருவருக்கும் 
புரோகிராம் எழுதத் தெரியாது.

புரோகிராமை விடுங்கள். plain laguageல் (Englishல்)
ஒரு அல்காரிதம் கூட எழுதத் தெரியாதவன்தானே 
தமிழன். படம் வரைந்து பாகங்களைக் குறித்து 
படங்களின் வழி விளக்கும் Flow Chart என்றால் என்ன 
என்று தெரியாதவன்தானே தமிழன்!       
  
இக்கட்டுரையை எழுதுகிற நான் மிகவும் 
தாமதமாகத்தான், 20 ஆண்டுகளுக்கு முன்பு,
ஒரு programming languageஐப் படித்தேன். அதை 
முழுமையாகப் படிக்க வேண்டிய தேவை 
எனக்கு இருக்கவில்லை.

என்னுடைய academic தேவைக்கு ஏற்ற அளவு 
எவ்வளவோ அந்த அளவு வரை மட்டுமே 
படித்தேன். அது மிகப்பெரிதும் அன்றாட 
வாழ்க்கையில் உபயோகம் உடையதல்ல.
Quadratic equationsஐ சால்வ் பண்ணுவது, Matrix 
multiplication கணக்குகளுக்குத் தீர்வு காண்பது 
போன்றவற்றுக்கான programmeஐ எழுதுவது  
மட்டுமே என்னுடைய தேவை. அதற்காக 
C languageஐப் படித்தேன்.

Chat GPT என்றால் என்ன என்பதுதான் கட்டுரையின் 
தலைப்பு. ஆனாலும் அதை சமூகத்தின்
பொருளுற்பத்தியோடு இணைத்துப் புரிய வைக்க 
வேண்டி இருப்பதால் இவ்வளவு பீடிகை 
தேவைப்படுகிறது.       

சற்று முன்பு, கூகுள் தேடலில் (Google search) சர் ஐசக்
நியூட்டன் என்று அடித்தேன். உடனே, 0.63 நொடிகளில் 
ஒன்றேகால் கோடி ரிசல்ட்டுகள் வந்து கொட்டின.
நீங்களும் இதைச் செய்து பாருங்கள். நியூட்டன்,
ஐன்ஸ்டைன், மகாத்மா காந்தி, நரேந்திர மோடி 
என்று டைப் அடித்துப் பார்த்து ஒரு நொடிக்கும் 
குறைவான நேரத்தில் எவ்வளவு ரிசல்ட்டுகள் 
கிடைக்கின்றன என்று பாருங்கள்.

நரேந்திர மோடி என்று டைப் அடித்த உடனேயே,
0.48 நொடிக்குள் ஏழேகால் கோடி ரிசல்ட்டுகள் 
கிடைக்கின்றன. மைக்ரோசாப்டால் இந்த 
வேகத்தை வெல்ல முடியுமா?

வெல்ல முடியும் என்று நம்புகிறார் போலும்
பில் கேட்ஸ். எனவே அவர் செயற்கை நுண்ணறிவு 
(Artificial Intelligence) மூலம் புதிய தேடல் இயந்திரங்களை 
உருவாக்க முயன்று வருகிறார்.

அதுதான் தற்போது செய்தியில் அடிபடும் Chat GPT.
Chat GPT = Chat Generative Preemptive Transformer).
இது launch ஆகி விட்டது. சென்ற ஆண்டில் 
நவம்பர் 30ல் launch ஆனது. இரண்டு மாதங்கள் 
ஆகி விட்டன.

இந்த மென்பொருளை உருவாக்கியது Open AI
என்னும் நிறுவனம். இந்த நிறுவனத்தை 
உருவாக்கியவர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் 
ஒன்று. மேலும் எலான் மஸ்க் உள்ளிட்ட சிலரும் 
இதில் முன்னரே முதலீடு செய்துள்ளனர்.

ஆக மென்பொருள் ஜாம்பவான்களான
பில் கேட்சும் எலான் மஸ்க்கும் இன்னும் சிலரும் 
ஒன்றிணைந்து முதலீடு செய்து உருவாக்கிய 
Open AI என்னும் நிறுவனத்தால் launch  செய்யப்பட்ட
தேடல் மென்பொருள் இயந்திரங்களே Chat GPT
ஆகும். இது பற்றி மேலும் அறிந்திட விரும்புவோர் 
உரிய நூல்களை, ஆவணங்களைப் படித்திடுக.

உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, இன்டெர்நேஷல் பார் கோடு 
(International Bar Code) வந்தது. அது வணிகர்களுக்கான 
ஓர் வரப்பிரசாதம்.

இன்று QR code வந்து விட்டது. QR என்றால் Quick Response
என்று பொருள். இதில் Bar codeஐ விட எளிமையும் 
கூடுதலான featuresம் உள்ளன. Bar codeஐ read செய்வதற்கு
ஒரு இயந்திரம் வேண்டும். QR codeக்கு தனித்த 
இயந்திரம் எதுவும் தேவையில்லை. SMART phone 
போதுமானது.

Launch ஆகி இரண்டு மாதம் ஆகி விட்டது. Chat GPT 
எப்படி வேலை செய்கிறது என்று உபயோகித்துப் 
பார்த்தவர்கள் கருத்துக் கூறலாம். இது விஷயத்தில் 
கணினி வல்லுநர்களின் கருத்து முக்கியத்துவம் 
உடையது.
-----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
Chat GPT குறித்தும் Open AI குறித்தும் தமிழில் எழுதப்பட்ட 
முதல் கட்டுரை இதுதான். ஆங்கிலத்தில்தான் 
ஆதிக்க கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. ஏனெனில் 
ஆங்கிலம் உற்பத்தி மொழியாக இருக்கிறது.
Launch ஆன இரண்டு மாதங்களுக்குள் தமிழில் 
இவ்வளவு உச்சமான தொழில்நுட்பம் குறித்து 
எழுதி உள்ளேன். வாசகர்களை ஆதரவு இருந்தால் 
தொடர்ந்து எழுதப்படும்; இல்லையேல் நிறுத்தப்படும்.
ஏனெனில் casting pearls before swine தவிர்க்கப்பட வேண்டும்.
*************************************************        
       
               

 

 
  

      

வியாழன், 26 ஜனவரி, 2023

பெண் கணித மேதைக்கு பத்மஸ்ரீ விருது!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
இந்திய நாட்டில் பிறந்து கனடாவில் வாழ்ந்து 
வரும் பெண் கணித மேதை சுஜாதா ராமதுரை!
இவர் ஒரு Algebraic number theorist.     

தமிழ்ப் பெண்ணான இவர் அண்ணாமலை 
பல்கலையில் MSc கணிதம் பயின்றவர்.
இவருக்கு இந்திய அரசு இன்று (26.01.2023)
பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

2004ல் இவருக்கு பட்நாகர் விருது வழங்கப் பட்டது.
தற்போது இந்தியப் பிரதமரின் அறிவியல் 
ஆலோசனைக் குழுவில் இவர் உறுப்பினராக 
இருந்து வருகிறார்.  

தகுதி வாய்ந்த பெண் கணித மேதை 
சரோஜா ராமதுரை அவர்களை 
நியூட்டன் அறிவியல் மன்றம் வாழ்த்துகிறது. 
--------------------------------------------------------------------


போலியாகப் பெண்ணுரிமை பேசிக் 
கொண்டு திரியும் இழிந்த ஜென்மங்களே,
போற்றுதலுக்குரிய பெண்மணி 
சுஜாதா ராமதுரை பற்றி அறிந்து 
கொண்டீர்கள் அல்லவா!

அவரைப் பெண்களிடம் அறிமுகம் 
செய்யுங்கள். எவளாவது கூத்தாடிச்சி 
கிடைத்தால் அந்த வேசியைப் புகழ்ந்து 
கட்டுரை எழுதிக் கொண்டு
பொழுதைப் பாழடிக்காதீர்கள் மூதேவிகளே!

வாசகர்களே,
ஏற்கனவே பட்நாகர் விருது பெற்றுள்ள 
ஒரு பெண் கணித மேதை குறித்து 
பல கட்டுரைகள் எழுதி இருந்தேன்.
அவர் யார் என்று உங்களுக்கு நினைவு வருகிறதா?
சொல்லுங்கள். அவர் யார்?


  

திங்கள், 23 ஜனவரி, 2023

எல்லா விஷயங்களிலும் எல்லாரும் 
கருத்துக்கூற முடியாது!  
------------------------------------------------------
தமிழ்நாட்டின் சாபக்கேடு எது என்றால்,
மகா கேவலமான தற்குறிகள் எல்லா விஷயங்களிலும் 
புகுந்து கொண்டு தங்களின் முழு முட்டாள்தனத்தை 
கருத்து என்ற பெயரில் சொல்லிக் கொண்டு 
திரிவதுதான்.

பேசப்படுகிற விஷயத்தில் நமக்குத் தெளிவான 
நல்லறிவு இருந்தால் மட்டுமே அந்த விஷயத்தில் 
நாம் கருத்துச் சொல்ல முடியும்.

எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கருத்துக் கூற 
முடியாது. 

உதாரணமாக, மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் 
எனப்படும் EVM என்பது ஒரு அறிவியல் சப்ஜெக்ட்.
அது PHYSICS மற்றும் ELECTRONICS சப்ஜெக்ட்.
எனவே எலக்ட்ரானிக்ஸ் அல்லது பிசிக்ஸ் 
படித்திருந்தால் மட்டுமே EVM பற்றிப் புரிந்து 
கொள்வது சுலபமாக இருக்கும்.  
---------------------------------------------------------------



 திவால் ஆகிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான்!
----------------------------------------------------------------------
இன்னும் 15 நாள் அல்லது அதிகபட்சம் 21 நாள் மட்டுமே 
பாகிஸ்தான் தாக்குப் பிடிக்கும். அதன் பின்னர் அது 
முற்றிலுமாக collapse ஆகி விடும் என்று அறிவித்து 
உள்ளது IMF. அதன் கணக்குப்படி, பெப்ரவரி 15க்குள் 
பாகிஸ்தான் திவாலாகி விடும் என்பது உறுதியாகி 
விட்டது.

பாகிஸ்தானில் தற்போது மின்சாரம் இல்லை.
தெரு விளக்குகள் எரிவதில்லை. கடுமையான 
எரிபொருள் தட்டுப்பாடு. பெட்ரோல் டீசல் 
கிடைப்பதில்லை. நாடு முழுவதும் உள்ள 
பெட்ரோல் பங்குகளில் முக்கால்வாசி பங்குகள்  
மூடப்பட்டுக் கிடக்கின்றன.

இந்தியாவின் கருணையை யாசித்து நிற்கிறது 
பாகிஸ்தான். இந்தியா கோதுமை வழங்கினால் 
பாகிஸ்தானில் பட்டினிச்சாவுகள் தடுக்கப் படும்.
இல்லையேல் பட்டினி கிடந்தே செத்துப்போகும் 
பாகிஸ்தான்.
*********************************************
   

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

 ஒரு OS உருவாக்கப் பட்டுள்ளது!

இணைய உலகில் ஒரு புதிய OSன் வருகை!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------

இந்தியாவுக்கென்று பிரத்தியேகமாக ஒரு OS 

(OS = Operating System) உருவாக்கப் பட்டுள்ளது.

இதை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது.

இதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். இதன் 

பெயர் BharOS ஆகும். Bharath OS என்பதன் 

சுருக்கமே BharOS. 


OS என்றால் என்ன? ஒரு கணினியை 

இயக்குவது அதன் OS எனப்படும் 

ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும்.


உங்களில் பலரிடம் அல்லது சிலரிடம் கணினி 

இருக்கிறது அல்லவா? மேசைக் கணினி 

அல்லது மடிக்கணினி ( Desktop or laptop) 

வைத்திருக்கிறீர்கள் அல்லவா?

அதில் உள்ள OS என்ன? தெரியுமா?

தெரியாதெனில் தெரிந்து கொள்ளுங்கள்.


யாரிடம் சென்று தெரிந்து கொள்வது?

கணினி நிபுணரையெல்லாம் இதற்காக 

நாட வேண்டியது இல்லை. உங்கள் 

தெருவில் ப்ளஸ் டூவில்  MATHS, COMPUTER

க்ரூப் படிக்கும் பையன் இருக்கிறானா?

அவனிடம் சென்று கேளுங்கள்.

OS என்றால் என்ன என்று அவன் உங்களுக்குச் 

சொல்லித் தருவான்.


மொசில்லா பயர்பாக்ஸ் என்கிறார்களே,

அது என்ன? இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 

என்கிறார்களே, அது என்ன? Web browser என்றால் 

என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.


Android OS என்கிறார்களே! அதன் LATEST VERSION

என்ன? iOS என்கிறார்களே, அது என்ன? 

தெரிந்து கொள்ளுங்கள்?


ஆகுபெயருக்கும் அன்மொழித்தொகைக்கும் உள்ள 

வேறுபாடு என்ன? இந்தக் கேள்விக்கு 99.999999 சதவீதம் 

மாணவர்களுக்குப் பதில் தெரியாது. என்றாலும் 

குடி முழுகாது.


ஆனால் BROWSERக்கும் OSக்கும் உள்ள வேறுபாடு 

என்ன என்று தெரிய வேண்டும். இதையெல்லாம் 

தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை 

உங்களைத் தூண்டும். இதுதான் இக்கட்டுரையின் 

பயன்!   

தற்போது ANDROID OSல் version 13 வரை வந்துள்ளது.

பலருடைய கணினியிலும் குறைந்தது 

Android OSன் version 10 இருக்கக் கூடும்.

இந்த Android OSஐ அகற்றி விட்டு 

அதன் இடத்தில் இந்தியத் தயாரிப்பான 

BharOSஐ நிறுவ வேண்டும். இதற்கு 

எத்தனை பேர் முன்வருவர் என்று 

எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.


கணினி நிபுணர்களின் கருத்து தேவை.

    

*************************************************


நெகட்டிவ் நம்பர்களை முதன் முதலில் 

உருவாக்கியவர் என்று அறியப்படும் 

கார்டானோ ஒரு இத்தாலியக் 

கணித மேதை. 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

 தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா?
முடிவு செய்ய இஸ்ரோ தலைவர் கே சிவன் 
தலைமையில் ஒரு கமிட்டி அமை!
---------------------------------------------------------------
அக்கமிட்டி முழுவதும் விஞ்ஞானிகளைக் கொண்டதாக 
இருக்க வேண்டும்.

அக்கமிட்டியில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை 
நியமிக்க வேண்டும்.

சென்னை வானிலை ஆய்வக முன்னாள் இயக்குனர் 
டாக்டர் ரமணன் MSc, PhD அவர்களை அக்கமிட்டியில் 
நியமிக்க வேண்டும்.

அண்ணா பல்கலை, ஐஐடி பேராசிரியர்களை 
அக்கமிட்டியில் நியமிக்க வேண்டும்.

கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்திரி அவர்களை 
இக்கமிட்டியில் சேர்க்கவும். அவர் சென்னை 
ஐஐடியில் B.Tech படித்தவர்.

கமிட்டியில் மறந்தும்கூட எந்த ஒரு தற்குறித்
தமிழ்ப் பண்டிட்டையும் சேர்க்கக் கூடாது.

தமிழ முதல்வர் அவர்கள் இக்கமிட்டியை 
நியமித்து விட்டு, ஒரு மாத காலத்திற்குள் 
கமிட்டியின் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு 
கோரா வேண்டும்.

அறிஞர்களின் முடிவு எதுவாயினும் அது அறிவியல் வழியில் 
நிரூபிக்கப் பட்டிருக்கும். எனவே அதை 
அனைவரும் ஏற்க வேண்டும்.
*********************************************   க கோர 


இது விஞ்ஞானிகள் குழு. திரு அண்ணாமலை 
கற்றறிந்தவர். ஆயினும் அவர் விஞ்சானி 

இது விஞ்ஞானிகள் குழு. விஞ்ஞானிகளாகப் 
பணியாற்றி ஒய்வு பெற்றவர்களே 
கமிட்டியில் நியமிக்கப் படுவார்கள்.





 
   

செவ்வாய், 3 ஜனவரி, 2023

அன்று நாங்கள் விதைத்தோம்! 
இன்று தமிழ்ச் சமூகம் அறுவடை செய்கிறது!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
எங்களது செட்டில் பலர் 20 ஆண்டுகளுக்கு முன்பு 
அறிவியலைப் பரப்பும் பணியில் ஈடுபட்டோம்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நோக்குடன் 
அறிவியலைப் பரப்பி வந்தோம். மிகுதியும் 
நம் தாய்மொழியான தமிழில் அறிவியலைச் 
சொல்லி வந்தோம்.

மதிப்புக்குரிய சிதம்பரம் சார் இக் காலக் 
கட்டத்தில்தான் அறிவியல் ஒளி ஏட்டைக் 
கொண்டு வந்தார். அன்று அளவில் சிறியதாக
இருந்தது. இன்றைய அறிவியல் ஒளி அளவில் 
அதிகபட்சம் பெரியது; பக்கங்களும் அதிகம்.  
அறிவியல் ஒளியின் 17 ஆம் ஆண்டு தற்போது 
தொடங்குகிறது.

நண்பர் கு வை பாலசுப்பிரமணியன் சிறந்த 
அறிவியல் எழுத்தாளர். இவர் சென்னை 
நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையத்தில் 
உதவி வானிலை விஞ்ஞானியாக (Asst Metrologist)  
பணியாற்றியவர். நண்பரை KVB என்று நாங்கள் 
அழைப்போம்.

நண்பர் KVB நுங்கம்பாக்கத்தில் பணியாற்றியபோது,
நானும் அங்கு பணியாற்றினேன்; ஆனால் நான் 
IMD staff அல்ல. நான் 1985ல் Govt Telecom staff ஆகவும் 
2005-2010ல் BSNL staff ஆகவும் அங்கு பணியாற்றினேன்.
அப்போது ரமணன் அவர்கள் இயக்குனராக இருந்தார்.

நண்பர் KVB அறிவியலை நிறையவே எழுதி வருபவர்.
He is a prolific writer.
1) அறிவியல் ஒளி 
2) அறிவியல் பூங்கா 
3) அறிவுக்கண் 
4) அறிவியல் பலகை 
5) அறிக அறிவியல் 
6) மஞ்சரி 
ஆகிய அறிவியல் பத்திரிகைகள் அனைத்திலும் 
எழுதி வருகிறார். சில மின்னிதழ்களிலும் 
எழுதி வருகிறார்.

இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  பொதிகை 
தொலைக்காட்சிக்காக பிரதமர் மோடியின் 
பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்த்தவர் 
நண்பர் KVB.   

ஆக, இன்றைக்கு தமிழில் அறிவியல் என்றவுடனே 
ஓரிருவர் அல்ல குறைந்தது பத்துப்பேர் நினைவுக்கு 
வருகிறார்கள். அதில் KVBயம் ஒருவர்.

அறிவியல் ஒளி ஏட்டை சந்தா செலுத்தி வாங்கிப் 
படியுங்கள். வரும் இதழ் முதல் வண்ணப் படங்களுடன் 
வருகிறது அறிவியல் ஒளி.
தனி இதழ் விலை; ரூ 30.
ஆண்டுச் சந்தா = ரூ 360
ஆயுள் சந்தா = ரூ 5000.

20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒவ்வொருவரும் 
அவரவரின் சொந்த முயற்சியில் அறிவியலை 
விதைத்தோம். இன்று தமிழ்ச் சமூகம் அதை 
அறுவடை செய்கிறது.

தமிழில் அறிவியல் வேண்டுமா?
-------------------------------------------------
நண்பர் KVBயின் அறிவியல் கட்டுரைகளைப் 
படியுங்கள்.


அறிவியல் ஒளி ஏட்டை வாங்கிப் படியுங்கள்.
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் அறிவியல் 
எழுத்துக்களை, கட்டுரைகளைப் படியுங்கள்.

தமிழ் வாசகச் சூழலில், இன்று இந்த அளவுக்கு 
தமிழில் அறிவியலானது வளர்ந்திருக்கிறது 
என்றால் அதற்குப் பங்களித்தவர்கள் என்ற 
முறையில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.
***************************************************   தங்களின் பிறழ்புரிதலை வெளிப்படுத்தினர்.
   




   

AD என்ற முறையை மாற்றி, அதனிடத்தில் 

CE வந்திருக்கிறது. AD என்றால் Anno Domini 

ஆகும். லத்தீனில் இதன் பொருள் கர்த்தரின் 

ஆண்டு அல்லது கடவுளின் ஆண்டு 

என்பதாகும். இந்தப் பதத்தை ஏற்க மறுத்து 

யூத, இஸ்லாமிய, பௌத்த மதத்தினர் 

ஆட்சேபங்கள் எழுப்பினர். எனவே இது கடவுளின் 

ஆண்டு அல்ல; மாறாக பொதுவான ஆண்டு;

அனைவருக்கும் பொதுவானது என்ற அர்த்தத்தில் 

CE என்று மாற்றப்பட்டது. CE = பொது யுகம்.


மற்றப்படி, ஆண்டைக் கணக்கிடும் முறை

(NUMBERING AN YEAR) மாறவில்லை. 

Reference point மாறவில்லை. கிறிஸ்துவின் 

பிறப்புத்தான் தொடக்கம் என்னும் 

reference point மாற்றப்படவில்லை.


Reference pointஐ மாற்றி விட்டு வேறு எதை 

reference point வைப்பது என்பதில் உலக 

நாடுகள் ஒத்த கருத்தை அடையவில்லை.

புத்தரின் பிறப்பை reference pointஆகக் 

கொண்டு ஒரு ஆண்டுக்கணக்கை 

உருவாக்கலாம்தான்! ஆனால் அதில் ஒத்த 

கருத்து எட்டப் படவில்லை.


எனவே தற்போது நடைமுறையில் இருக்கும் 

method of numbering an year, reference point

ஆகியவற்றை மாற்ற இயலாத நிலையில், 

மதம் சார்ந்த பெயரான கடவுளின் ஆண்டு 

அல்லது கர்த்தரின் ஆண்டு என்ற, 

பலராலும் ஆட்சேபிக்கப்பட்ட பதத்தை 

விஞ்ஞானிகள் ரத்து செய்துள்ளனர்.


மிக நல்ல விஷயம் என்னவெனில், இனி 

காலண்டரில் எந்த ஒரு மதத் தலைவரும் 

எந்த ஒரு திருத்தத்தையும் செய்ய இயலாது.

விஞ்ஞானிகள் மட்டுமே திருத்தம் செய்யலாம்.

இது ஒரு மாபெரும் முன்னேற்றம்.  

          


  

திங்கள், 2 ஜனவரி, 2023

அறிவியலையும் தமிழையும் ஒருங்கே வளர்க்கும் 
முயற்சிகளின் நிலைமை என்ன?
பெ மணியரசனுக்கு உயிர் வாழும் தகுதி உள்ளதா?
 ---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
என்னுடைய முதல் அறிவியல் கட்டுரையை 1978ல் 
எழுதினேன். ஒரு மூக்குத்தி ஜொலிக்கிறது  என்ற 
தலைப்பிலான அக்கட்டுரை Total internal reflection
பற்றியது. அக்கட்டுரையை நாங்கள் அப்போது 
நடத்தி வந்த மின்னல் என்னும் கையெழுத்துப் 
பத்திரிகையில் முதன் முதலில் வெளியிட்டோம்.
அக்கட்டுரையுடன் நிறையப் படங்களை வரைந்து 
காட்டியிருந்தேன்.

நாங்கள் நடத்தி வந்த கையெழுத்துப் பத்திரிகையை 
யுகமின்னல் என்ற பெயரில் அச்சுப்பத்திரிகை 
ஆக்கினோம். அதில் க்கட்டுரையை வெளியிட்டோம்.
இரண்டே இரண்டு இதழை மட்டுமே எங்களால் 
கொண்டு வர முடிந்தது. அதன் பின் யுகமின்னல் 
நின்று போனது.

என்னுடைய அறிவியல் கட்டுரைக்கு எந்த 
வரவேற்பும் இல்லை. அறிவியலை எழுதும்
எங்களின் முயற்சிக்கு மக்கள் கொள்ளி 
வைத்தார்கள்.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அறிவியலை 
எழுதும் முயற்சியை மேற்கொண்டேன்; எந்த 
மூதேவியும் ஆதரிக்காததால் மீண்டும் 
கைவிட்டேன். இந்த நாட்டில் அறிவியலை 
ஒருபோதும் மக்களிடையே கொண்டு செல்ல 
முடியாது என்ற கசப்பு நிலவிய காலம் அது.

இந்த மில்லேனியத்தின் பின் நிலைமைகள் சிறிது 
மாறின. தொழில்நுட்ப ரீதியாக தகவல் தொடர்பில், 
வயர் (wire) என்பது வயர்லெஸ்சாக மாறிக் 
கொண்டிருந்தது. இதன் மூலம் அறிவியலின் 
தாக்கம் பரவலாக உணரப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக டாக்டர்  அப்துல் கலாம் 
இந்தியாவின் ஜனாதிபதியாகி இருந்தார். 2002 ஜூனில் 
நாட்டின் உயர்ந்தவொரு அரசியல் பதவியில் ஒரு விஞ்ஞானி 
அமர்ந்து இருந்தார். இந்திய நாட்டின் கோடிக்கணக்கான 
இளைஞர்களால் அப்துல் கலாமின் பெயர் ஒரு 
யுகபுருஷனின் பெயராக சுவீகரிக்கப் பட்டது.
கலாம் என்ற சொல் ஒரு மந்திரச்சொல்லாகவே 
உச்சரிக்கப் பட்டது.

நாடு முழுவதும் அறிவியலின் மீதான ஆர்வம் கொழுந்து 
விட்டு எரித்தது. பொதுவெளியில் அறிவியலைக்  
கண்டு கொள்ளவும் ஆதரிக்கவும் தொடங்கி 
இருந்தனர் மக்கள். அறிவியலை நேசிக்கும் ஒவ்வொரு 
இளைஞனுக்கும் கலாம் என்ற பெயர் பெரும் ஆதர்சமாக 
இருந்தது. எல்லாப் புகழும் கலாமுக்கே!

அப்போது என்னுடைய அரசியல் ஆசான் மகத்தான 
மா லெ புரட்சியாளர் தோழர் ஏ எம் கே அவர்களிடம்
நான் தொடங்க இருக்கும் நியூட்டன் அறிவியல் 
மன்றம் குறித்து ஆலோசித்தேன். பெரும் உற்சாகத்துடன் 
அம்முயற்சியை ஆதரித்தார் தோழர் ஏ எம் கே அவர்கள்.

அதே நேரத்தில் பொதுவான அறிவியலை மக்களிடம் 
கொண்டு செல்வதை விட, இலக்கு நோக்கிய
அறிவியலை மக்களிடம் கொண்டு செல்வதே இன்றைய 
தேவை என்று அறிவுறுத்தினார் தோழர் ஏ எம் கே. 
சமூகத் தாக்கம் உடைய விஷயங்களில் பொதிந்து 
கிடைக்கும் அறிவியலை மக்கள் அறியச் செய்தல் 
வேண்டும்; அதன் மூலமே மக்களின் முடிவெடுக்கும் 
திறனை பண்புரீதியாக உயர்த்த இயலும் என்றார்
தோழர்.

ஆக, தோழரின் அறிவுரையை ஏற்று,
பொதுவான அறிவியலுக்குப் பதிலாக 
சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியலை 
மக்களுக்குப் புரிய வைப்பது என்றும் நியூட்டன் 
அறிவியல் மன்றத்தை அதற்காகவே நடத்துவது 
என்றும் முடிவு செய்தோம்.

உதாரணமாக, குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி 
எழுதினால் அது பொதுவான அறிவியல். 
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றிப் 
பேசினால், அது சமூகத் தாக்கம் உடைய அறிவியல்.

கடந்த 20 ஆண்டு காலமாக, நியூட்டன் அறிவியல் 
மன்றம் தனது இலக்கு நோக்கிய பயணத்தில் 
கறாராகவும் துல்லியமாகவும் முன்னே சென்று 
கொண்டிருக்கிறது. Print media, Electronic media, Social 
media மற்றும் சமூகத்தின் பொதுவெளியில் 
முன்பை விட அதிகமாக அறிவியல் பரப்புதலை  
வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.

எமது அறிவியல் பணிகளால் ஊக்கமும் உற்சாகமும் 
பெற்ற பலர் இருக்கின்றனர். பலரும் தங்களின் 
சொந்த முயற்சியில் பல்வேறு வழிகளில் தமிழில் 
அறிவியலைப் பரப்பி வருகின்றனர்.

சான்றாக எனது நண்பர் வாசு ராமதுரை கணினி 
புரோகிராம் ஆகிய பைத்தான் மொழியை 
தமிழில் கற்றுத் தருகிறார். அவரிடம் நீங்கள்
பைத்தானை தமிழில் கற்கலாம். எந்த ஆரவாரமோ 
தமிழ்க்கூச்சலோ போடாமல் மிகவும் அமைதியாகவும் 
அடக்கமாகவும் தமிழில் கணினி நிரல் மொழியைக் 
கற்றுத் தருகிறார்.

செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர் 
செயற்கரிய செய்கலா தார்.

உலக சதுரங்க சாம்பியன் போட்டி நடைபெற்றபோது 
(கார்ல்சன் vs நெப்போ 2022) அதைத் தமிழில் 
வர்ணனை செய்ய வேண்டும் என்று முயன்றேன்.
அதற்கான கட்டணம் என்னுடைய பொருளாதார 
வரம்பைத் தாண்டி நின்றபடியால் என்னால் 
போட்டியை ஒளிபரப்ப மற்றும் தமிழில் வர்ணிக்க 
இயலவில்லை.

இன்று நிலைமை மாறி விட்டது. தமிழில் சதுரங்க 
வர்ணனை சாத்தியமாகி விட்டது. பொருளாதார 
வசதி படைத்த சென்னையைச் சேர்ந்த E வெங்கடேஷ் 
என்னும் இளைஞர் TAMIL CHESS என்னும் யூடியூப் 
சானலை தமது சொந்த முயற்சியில் நடத்தி வருகிறார். 
ஆயிரக் கணக்கான ஆட்டங்களை தமிழில் வர்ணனை 
செய்துள்ளார்.

இந்தியில் சதுரங்க வர்ணனை பல ஆண்டுகளாகவே 
இருந்து வருகிறது; அரசின் முயற்சியால் அல்ல.
தனிப்பட்ட இந்தி மொழி ஆர்வலர்களின் முயற்சியால்.

தமிழில் சதுரங்கம் இல்லையே என்று ஏங்கிக் 
கிடந்தேன். இன்று வந்து விட்டது. இளைஞர் வெங்கடேஷ் 
கொண்டு வந்து விட்டார். அரசின் ஆதரவோ, அரசின் 
அங்கீகாரமோ எதுவும் இல்லாமல், தமது சொந்தப் 
பணத்தில், சொந்த முயற்சியில், சொந்த அறிவில்
தமிழில் சதுரங்க சானலை நடத்தி வருகிறார் 
இளைஞர் வெங்கடேஷ். அவரை ஆதரியுங்கள்.

நியூட்டன் அறிவியல் மன்றம்,
தமிழில் பைத்தான் (வாசு ராமதுரை)
தமிழில் சதுரங்கம் (வெங்கடேஷ்)
என்று தொடரும் இந்தப் பட்டியலில்,
இந்தப் புத்தாண்டின் முதல்நாளில்
இணைகிறார்  டி ஆர் ராம்குமார் 
(தமிழில் அறிவியலுக்கான யூடியூப் சானல்).

ஆக இன்று திக்கெங்கும் தமிழ் உரத்து ஒலிக்கிறது.
அறிவியல் வரைபடத்தில் தமிழை இனி எவனும் 
விலக்கி வைக்க முடியாது.

பெ மணியரசன் என்னும் போலித் தமிழ்ப்பற்று
பேசும் கபோதிகள் இம்முயற்சிகளை ஆதரிக்க 
வேண்டும்.
**********************************************
பின்குறிப்பு:
புதுகை FM வானொலியில் பிரபஞ்சமும் காலமும் 
எப்படிப் பிறந்தன என்ற பொருளில் அரைமணி நேர 
அளவுக்கு நேர்காணல் அளித்துள்ளேன். அதன் 
ஒலிபரப்பு லிங்க்கை வெளியிடுகிறேன்.
---------------------------------------------------------------------  
விசுவநாதன் கரிகாலன் 
ன் தமிழ் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்!

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தமிழில் அறிவியலைச் சொல்வதற்காக 
யூடியூப் சானல் ஆரம்பித்துள்ள என் அன்புத் தம்பி 
பேராசிரியர் டாக்டர் டி ஆர் ராம்குமாரை
வாழ்த்துவோம்! 2023ன் புத்தாண்டுப் பரிசு!
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்.
-------------------------------------------------------------------- 
STEM TALKIES (ஸ்டெம் டாக்கீஸ்)  என்ற பெயரில் 
ஒரு யூடியூப் சானலை அன்புத்தம்பி ராம்குமார் 
ஆரம்பித்துள்ளார். இது அறிவியலுக்கு மட்டுமேயான 
யூடியூப் சானல். இந்த சானலில் தமிழில் 
அறிவியல் விளக்கங்கள் அளிக்கும் வீடியோக்கள் 
வெளியிடப்படும்.

கன்னி முயற்சியாக தற்போது ஸ்டெம் டாக்கீஸ் 
சானலில் இரண்டு தமிழ் வீடியோக்கள் வெளியிடப் 
பட்டுள்ளன.
1) மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் 
2) தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல். 
வாசகர்கள் இவற்றைப் படித்து பலரிடமும் 
பரப்ப வேண்டும். தொடர்ந்து அறிவியல் 
வீடியோக்களை தம்பி ராம்குமார் வெளியிடுவார்.

தம்பி டி ஆர் ராம்குமார் மிக்க இளைஞர். வயது 
மிகவும் குறைவு. தாவரவியலில் MSc, PhD ஆகிய 
பட்டங்களைப் பெற்றவர். டாக்டர் பட்டம் (முனைவர்) 
பெற்றவர். பேராசிரியராக தொழில் செய்து வருகிறார்.

சரியான நேரத்தில் தக்க முடிவு எடுத்து தமிழில் 
அறிவியலைச் சொல்ல யூடியூப் சானலைத்
தொடங்கிய அன்புத்தம்பி ராம்குமாரை 
ஒவ்வொரு தமிழனும் பாராட்ட வேண்டும்.
இது தமிழுக்கும் அறிவியலுக்குமான சேவை!

கடந்த 50 ஆண்டு காலமாக நிகழ்ந்து வரும் எனது 
அறிவியல் இயக்கம் மிகுதியும் PRINT MEDIA
சார்ந்தது. இன்றைய இளைஞர்கள் VISUAL MEDIAஐக் 
கைப்பற்றி ஆளுகை செய்கிறார்கள். வரவேற்போம்.

அடுத்த ஆண்டு தம்பி ராம்குமாருக்கு பத்மஸ்ரீ 
வழங்கப்பட்டு இருக்க வேண்டும். தமிழக அரசு 
கலைமாமணி அல்லது உரிய அறிவியல் விருதை 
ராம்குமாருக்கு வழங்கி இருக்க வேண்டும்.
வழங்காவிட்டால் வழங்க வைப்பேன்.

ஒவ்வொருவரும் தம்பி ராம்குமாரின் சானலை 
பாருங்கள்; பரப்புங்கள். பிற்படுத்தப்பட்ட 
சமூகத்தைச் சார்ந்த ராம்குமாரை ஆதரிப்பது 
மானமுள்ள தமிழர்களின் கடமை.
**************************************************   
பின்குறிப்பு:
பெ மணியரசன் சீமான் இன்ன பிற தமிழ் தேசியம் 
பேசும் தலைவர்கள் ராம்குமாரை ஆதரிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------