ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தமிழில் அறிவியலைச் சொல்வதற்காக 
யூடியூப் சானல் ஆரம்பித்துள்ள என் அன்புத் தம்பி 
பேராசிரியர் டாக்டர் டி ஆர் ராம்குமாரை
வாழ்த்துவோம்! 2023ன் புத்தாண்டுப் பரிசு!
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்.
-------------------------------------------------------------------- 
STEM TALKIES (ஸ்டெம் டாக்கீஸ்)  என்ற பெயரில் 
ஒரு யூடியூப் சானலை அன்புத்தம்பி ராம்குமார் 
ஆரம்பித்துள்ளார். இது அறிவியலுக்கு மட்டுமேயான 
யூடியூப் சானல். இந்த சானலில் தமிழில் 
அறிவியல் விளக்கங்கள் அளிக்கும் வீடியோக்கள் 
வெளியிடப்படும்.

கன்னி முயற்சியாக தற்போது ஸ்டெம் டாக்கீஸ் 
சானலில் இரண்டு தமிழ் வீடியோக்கள் வெளியிடப் 
பட்டுள்ளன.
1) மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் 
2) தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல். 
வாசகர்கள் இவற்றைப் படித்து பலரிடமும் 
பரப்ப வேண்டும். தொடர்ந்து அறிவியல் 
வீடியோக்களை தம்பி ராம்குமார் வெளியிடுவார்.

தம்பி டி ஆர் ராம்குமார் மிக்க இளைஞர். வயது 
மிகவும் குறைவு. தாவரவியலில் MSc, PhD ஆகிய 
பட்டங்களைப் பெற்றவர். டாக்டர் பட்டம் (முனைவர்) 
பெற்றவர். பேராசிரியராக தொழில் செய்து வருகிறார்.

சரியான நேரத்தில் தக்க முடிவு எடுத்து தமிழில் 
அறிவியலைச் சொல்ல யூடியூப் சானலைத்
தொடங்கிய அன்புத்தம்பி ராம்குமாரை 
ஒவ்வொரு தமிழனும் பாராட்ட வேண்டும்.
இது தமிழுக்கும் அறிவியலுக்குமான சேவை!

கடந்த 50 ஆண்டு காலமாக நிகழ்ந்து வரும் எனது 
அறிவியல் இயக்கம் மிகுதியும் PRINT MEDIA
சார்ந்தது. இன்றைய இளைஞர்கள் VISUAL MEDIAஐக் 
கைப்பற்றி ஆளுகை செய்கிறார்கள். வரவேற்போம்.

அடுத்த ஆண்டு தம்பி ராம்குமாருக்கு பத்மஸ்ரீ 
வழங்கப்பட்டு இருக்க வேண்டும். தமிழக அரசு 
கலைமாமணி அல்லது உரிய அறிவியல் விருதை 
ராம்குமாருக்கு வழங்கி இருக்க வேண்டும்.
வழங்காவிட்டால் வழங்க வைப்பேன்.

ஒவ்வொருவரும் தம்பி ராம்குமாரின் சானலை 
பாருங்கள்; பரப்புங்கள். பிற்படுத்தப்பட்ட 
சமூகத்தைச் சார்ந்த ராம்குமாரை ஆதரிப்பது 
மானமுள்ள தமிழர்களின் கடமை.
**************************************************   
பின்குறிப்பு:
பெ மணியரசன் சீமான் இன்ன பிற தமிழ் தேசியம் 
பேசும் தலைவர்கள் ராம்குமாரை ஆதரிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------

       
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக