செவ்வாய், 3 ஜனவரி, 2023

அன்று நாங்கள் விதைத்தோம்! 
இன்று தமிழ்ச் சமூகம் அறுவடை செய்கிறது!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
எங்களது செட்டில் பலர் 20 ஆண்டுகளுக்கு முன்பு 
அறிவியலைப் பரப்பும் பணியில் ஈடுபட்டோம்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நோக்குடன் 
அறிவியலைப் பரப்பி வந்தோம். மிகுதியும் 
நம் தாய்மொழியான தமிழில் அறிவியலைச் 
சொல்லி வந்தோம்.

மதிப்புக்குரிய சிதம்பரம் சார் இக் காலக் 
கட்டத்தில்தான் அறிவியல் ஒளி ஏட்டைக் 
கொண்டு வந்தார். அன்று அளவில் சிறியதாக
இருந்தது. இன்றைய அறிவியல் ஒளி அளவில் 
அதிகபட்சம் பெரியது; பக்கங்களும் அதிகம்.  
அறிவியல் ஒளியின் 17 ஆம் ஆண்டு தற்போது 
தொடங்குகிறது.

நண்பர் கு வை பாலசுப்பிரமணியன் சிறந்த 
அறிவியல் எழுத்தாளர். இவர் சென்னை 
நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையத்தில் 
உதவி வானிலை விஞ்ஞானியாக (Asst Metrologist)  
பணியாற்றியவர். நண்பரை KVB என்று நாங்கள் 
அழைப்போம்.

நண்பர் KVB நுங்கம்பாக்கத்தில் பணியாற்றியபோது,
நானும் அங்கு பணியாற்றினேன்; ஆனால் நான் 
IMD staff அல்ல. நான் 1985ல் Govt Telecom staff ஆகவும் 
2005-2010ல் BSNL staff ஆகவும் அங்கு பணியாற்றினேன்.
அப்போது ரமணன் அவர்கள் இயக்குனராக இருந்தார்.

நண்பர் KVB அறிவியலை நிறையவே எழுதி வருபவர்.
He is a prolific writer.
1) அறிவியல் ஒளி 
2) அறிவியல் பூங்கா 
3) அறிவுக்கண் 
4) அறிவியல் பலகை 
5) அறிக அறிவியல் 
6) மஞ்சரி 
ஆகிய அறிவியல் பத்திரிகைகள் அனைத்திலும் 
எழுதி வருகிறார். சில மின்னிதழ்களிலும் 
எழுதி வருகிறார்.

இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  பொதிகை 
தொலைக்காட்சிக்காக பிரதமர் மோடியின் 
பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்த்தவர் 
நண்பர் KVB.   

ஆக, இன்றைக்கு தமிழில் அறிவியல் என்றவுடனே 
ஓரிருவர் அல்ல குறைந்தது பத்துப்பேர் நினைவுக்கு 
வருகிறார்கள். அதில் KVBயம் ஒருவர்.

அறிவியல் ஒளி ஏட்டை சந்தா செலுத்தி வாங்கிப் 
படியுங்கள். வரும் இதழ் முதல் வண்ணப் படங்களுடன் 
வருகிறது அறிவியல் ஒளி.
தனி இதழ் விலை; ரூ 30.
ஆண்டுச் சந்தா = ரூ 360
ஆயுள் சந்தா = ரூ 5000.

20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒவ்வொருவரும் 
அவரவரின் சொந்த முயற்சியில் அறிவியலை 
விதைத்தோம். இன்று தமிழ்ச் சமூகம் அதை 
அறுவடை செய்கிறது.

தமிழில் அறிவியல் வேண்டுமா?
-------------------------------------------------
நண்பர் KVBயின் அறிவியல் கட்டுரைகளைப் 
படியுங்கள்.


அறிவியல் ஒளி ஏட்டை வாங்கிப் படியுங்கள்.
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் அறிவியல் 
எழுத்துக்களை, கட்டுரைகளைப் படியுங்கள்.

தமிழ் வாசகச் சூழலில், இன்று இந்த அளவுக்கு 
தமிழில் அறிவியலானது வளர்ந்திருக்கிறது 
என்றால் அதற்குப் பங்களித்தவர்கள் என்ற 
முறையில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.
***************************************************   தங்களின் பிறழ்புரிதலை வெளிப்படுத்தினர்.
   




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக