AD என்ற முறையை மாற்றி, அதனிடத்தில்
CE வந்திருக்கிறது. AD என்றால் Anno Domini
ஆகும். லத்தீனில் இதன் பொருள் கர்த்தரின்
ஆண்டு அல்லது கடவுளின் ஆண்டு
என்பதாகும். இந்தப் பதத்தை ஏற்க மறுத்து
யூத, இஸ்லாமிய, பௌத்த மதத்தினர்
ஆட்சேபங்கள் எழுப்பினர். எனவே இது கடவுளின்
ஆண்டு அல்ல; மாறாக பொதுவான ஆண்டு;
அனைவருக்கும் பொதுவானது என்ற அர்த்தத்தில்
CE என்று மாற்றப்பட்டது. CE = பொது யுகம்.
மற்றப்படி, ஆண்டைக் கணக்கிடும் முறை
(NUMBERING AN YEAR) மாறவில்லை.
Reference point மாறவில்லை. கிறிஸ்துவின்
பிறப்புத்தான் தொடக்கம் என்னும்
reference point மாற்றப்படவில்லை.
Reference pointஐ மாற்றி விட்டு வேறு எதை
reference point வைப்பது என்பதில் உலக
நாடுகள் ஒத்த கருத்தை அடையவில்லை.
புத்தரின் பிறப்பை reference pointஆகக்
கொண்டு ஒரு ஆண்டுக்கணக்கை
உருவாக்கலாம்தான்! ஆனால் அதில் ஒத்த
கருத்து எட்டப் படவில்லை.
எனவே தற்போது நடைமுறையில் இருக்கும்
method of numbering an year, reference point
ஆகியவற்றை மாற்ற இயலாத நிலையில்,
மதம் சார்ந்த பெயரான கடவுளின் ஆண்டு
அல்லது கர்த்தரின் ஆண்டு என்ற,
பலராலும் ஆட்சேபிக்கப்பட்ட பதத்தை
விஞ்ஞானிகள் ரத்து செய்துள்ளனர்.
மிக நல்ல விஷயம் என்னவெனில், இனி
காலண்டரில் எந்த ஒரு மதத் தலைவரும்
எந்த ஒரு திருத்தத்தையும் செய்ய இயலாது.
விஞ்ஞானிகள் மட்டுமே திருத்தம் செய்யலாம்.
இது ஒரு மாபெரும் முன்னேற்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக