அறிவியலையும் தமிழையும் ஒருங்கே வளர்க்கும்
முயற்சிகளின் நிலைமை என்ன?
பெ மணியரசனுக்கு உயிர் வாழும் தகுதி உள்ளதா?
---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
என்னுடைய முதல் அறிவியல் கட்டுரையை 1978ல்
எழுதினேன். ஒரு மூக்குத்தி ஜொலிக்கிறது என்ற
தலைப்பிலான அக்கட்டுரை Total internal reflection
பற்றியது. அக்கட்டுரையை நாங்கள் அப்போது
நடத்தி வந்த மின்னல் என்னும் கையெழுத்துப்
பத்திரிகையில் முதன் முதலில் வெளியிட்டோம்.
அக்கட்டுரையுடன் நிறையப் படங்களை வரைந்து
காட்டியிருந்தேன்.
நாங்கள் நடத்தி வந்த கையெழுத்துப் பத்திரிகையை
யுகமின்னல் என்ற பெயரில் அச்சுப்பத்திரிகை
ஆக்கினோம். அதில் க்கட்டுரையை வெளியிட்டோம்.
இரண்டே இரண்டு இதழை மட்டுமே எங்களால்
கொண்டு வர முடிந்தது. அதன் பின் யுகமின்னல்
நின்று போனது.
என்னுடைய அறிவியல் கட்டுரைக்கு எந்த
வரவேற்பும் இல்லை. அறிவியலை எழுதும்
எங்களின் முயற்சிக்கு மக்கள் கொள்ளி
வைத்தார்கள்.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அறிவியலை
எழுதும் முயற்சியை மேற்கொண்டேன்; எந்த
மூதேவியும் ஆதரிக்காததால் மீண்டும்
கைவிட்டேன். இந்த நாட்டில் அறிவியலை
ஒருபோதும் மக்களிடையே கொண்டு செல்ல
முடியாது என்ற கசப்பு நிலவிய காலம் அது.
இந்த மில்லேனியத்தின் பின் நிலைமைகள் சிறிது
மாறின. தொழில்நுட்ப ரீதியாக தகவல் தொடர்பில்,
வயர் (wire) என்பது வயர்லெஸ்சாக மாறிக்
கொண்டிருந்தது. இதன் மூலம் அறிவியலின்
தாக்கம் பரவலாக உணரப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக டாக்டர் அப்துல் கலாம்
இந்தியாவின் ஜனாதிபதியாகி இருந்தார். 2002 ஜூனில்
நாட்டின் உயர்ந்தவொரு அரசியல் பதவியில் ஒரு விஞ்ஞானி
அமர்ந்து இருந்தார். இந்திய நாட்டின் கோடிக்கணக்கான
இளைஞர்களால் அப்துல் கலாமின் பெயர் ஒரு
யுகபுருஷனின் பெயராக சுவீகரிக்கப் பட்டது.
கலாம் என்ற சொல் ஒரு மந்திரச்சொல்லாகவே
உச்சரிக்கப் பட்டது.
நாடு முழுவதும் அறிவியலின் மீதான ஆர்வம் கொழுந்து
விட்டு எரித்தது. பொதுவெளியில் அறிவியலைக்
கண்டு கொள்ளவும் ஆதரிக்கவும் தொடங்கி
இருந்தனர் மக்கள். அறிவியலை நேசிக்கும் ஒவ்வொரு
இளைஞனுக்கும் கலாம் என்ற பெயர் பெரும் ஆதர்சமாக
இருந்தது. எல்லாப் புகழும் கலாமுக்கே!
அப்போது என்னுடைய அரசியல் ஆசான் மகத்தான
மா லெ புரட்சியாளர் தோழர் ஏ எம் கே அவர்களிடம்
நான் தொடங்க இருக்கும் நியூட்டன் அறிவியல்
மன்றம் குறித்து ஆலோசித்தேன். பெரும் உற்சாகத்துடன்
அம்முயற்சியை ஆதரித்தார் தோழர் ஏ எம் கே அவர்கள்.
அதே நேரத்தில் பொதுவான அறிவியலை மக்களிடம்
கொண்டு செல்வதை விட, இலக்கு நோக்கிய
அறிவியலை மக்களிடம் கொண்டு செல்வதே இன்றைய
தேவை என்று அறிவுறுத்தினார் தோழர் ஏ எம் கே.
சமூகத் தாக்கம் உடைய விஷயங்களில் பொதிந்து
கிடைக்கும் அறிவியலை மக்கள் அறியச் செய்தல்
வேண்டும்; அதன் மூலமே மக்களின் முடிவெடுக்கும்
திறனை பண்புரீதியாக உயர்த்த இயலும் என்றார்
தோழர்.
ஆக, தோழரின் அறிவுரையை ஏற்று,
பொதுவான அறிவியலுக்குப் பதிலாக
சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியலை
மக்களுக்குப் புரிய வைப்பது என்றும் நியூட்டன்
அறிவியல் மன்றத்தை அதற்காகவே நடத்துவது
என்றும் முடிவு செய்தோம்.
உதாரணமாக, குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி
எழுதினால் அது பொதுவான அறிவியல்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றிப்
பேசினால், அது சமூகத் தாக்கம் உடைய அறிவியல்.
கடந்த 20 ஆண்டு காலமாக, நியூட்டன் அறிவியல்
மன்றம் தனது இலக்கு நோக்கிய பயணத்தில்
கறாராகவும் துல்லியமாகவும் முன்னே சென்று
கொண்டிருக்கிறது. Print media, Electronic media, Social
media மற்றும் சமூகத்தின் பொதுவெளியில்
முன்பை விட அதிகமாக அறிவியல் பரப்புதலை
வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
எமது அறிவியல் பணிகளால் ஊக்கமும் உற்சாகமும்
பெற்ற பலர் இருக்கின்றனர். பலரும் தங்களின்
சொந்த முயற்சியில் பல்வேறு வழிகளில் தமிழில்
அறிவியலைப் பரப்பி வருகின்றனர்.
சான்றாக எனது நண்பர் வாசு ராமதுரை கணினி
புரோகிராம் ஆகிய பைத்தான் மொழியை
தமிழில் கற்றுத் தருகிறார். அவரிடம் நீங்கள்
பைத்தானை தமிழில் கற்கலாம். எந்த ஆரவாரமோ
தமிழ்க்கூச்சலோ போடாமல் மிகவும் அமைதியாகவும்
அடக்கமாகவும் தமிழில் கணினி நிரல் மொழியைக்
கற்றுத் தருகிறார்.
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
உலக சதுரங்க சாம்பியன் போட்டி நடைபெற்றபோது
(கார்ல்சன் vs நெப்போ 2022) அதைத் தமிழில்
வர்ணனை செய்ய வேண்டும் என்று முயன்றேன்.
அதற்கான கட்டணம் என்னுடைய பொருளாதார
வரம்பைத் தாண்டி நின்றபடியால் என்னால்
போட்டியை ஒளிபரப்ப மற்றும் தமிழில் வர்ணிக்க
இயலவில்லை.
இன்று நிலைமை மாறி விட்டது. தமிழில் சதுரங்க
வர்ணனை சாத்தியமாகி விட்டது. பொருளாதார
வசதி படைத்த சென்னையைச் சேர்ந்த E வெங்கடேஷ்
என்னும் இளைஞர் TAMIL CHESS என்னும் யூடியூப்
சானலை தமது சொந்த முயற்சியில் நடத்தி வருகிறார்.
ஆயிரக் கணக்கான ஆட்டங்களை தமிழில் வர்ணனை
செய்துள்ளார்.
இந்தியில் சதுரங்க வர்ணனை பல ஆண்டுகளாகவே
இருந்து வருகிறது; அரசின் முயற்சியால் அல்ல.
தனிப்பட்ட இந்தி மொழி ஆர்வலர்களின் முயற்சியால்.
தமிழில் சதுரங்கம் இல்லையே என்று ஏங்கிக்
கிடந்தேன். இன்று வந்து விட்டது. இளைஞர் வெங்கடேஷ்
கொண்டு வந்து விட்டார். அரசின் ஆதரவோ, அரசின்
அங்கீகாரமோ எதுவும் இல்லாமல், தமது சொந்தப்
பணத்தில், சொந்த முயற்சியில், சொந்த அறிவில்
தமிழில் சதுரங்க சானலை நடத்தி வருகிறார்
இளைஞர் வெங்கடேஷ். அவரை ஆதரியுங்கள்.
நியூட்டன் அறிவியல் மன்றம்,
தமிழில் பைத்தான் (வாசு ராமதுரை)
தமிழில் சதுரங்கம் (வெங்கடேஷ்)
என்று தொடரும் இந்தப் பட்டியலில்,
இந்தப் புத்தாண்டின் முதல்நாளில்
இணைகிறார் டி ஆர் ராம்குமார்
(தமிழில் அறிவியலுக்கான யூடியூப் சானல்).
ஆக இன்று திக்கெங்கும் தமிழ் உரத்து ஒலிக்கிறது.
அறிவியல் வரைபடத்தில் தமிழை இனி எவனும்
விலக்கி வைக்க முடியாது.
பெ மணியரசன் என்னும் போலித் தமிழ்ப்பற்று
பேசும் கபோதிகள் இம்முயற்சிகளை ஆதரிக்க
வேண்டும்.
**********************************************
பின்குறிப்பு:
புதுகை FM வானொலியில் பிரபஞ்சமும் காலமும்
எப்படிப் பிறந்தன என்ற பொருளில் அரைமணி நேர
அளவுக்கு நேர்காணல் அளித்துள்ளேன். அதன்
ஒலிபரப்பு லிங்க்கை வெளியிடுகிறேன்.
---------------------------------------------------------------------
விசுவநாதன் கரிகாலன்
ன் தமிழ் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக