அதானி குழும பங்குகள் விலை சரிவு
---------------------------
பங்கு சந்தையில் எல் ஐ சி இந்த பங்குகளில் முதலீடு செய்து உள்ளது அத்தனை பணமும் சுவாகா என்று முகநூல் பொருளாதார மேதைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உதாரணமாக அதானி என்டர்ப்ரைஸ் பங்குகளை எடுத்து கொள்வோம். ஒரு பங்கின் நேற்றைய வர்த்தக முடிவின் விலை 2762. வியாழன் அன்று 3389 ஆக இருந்தது. கணக்கு படி பார்த்தால் வியாழன் அன்று பங்கு வாங்கியவர்களுக்கு கிட்ட தட்ட ரூபாய் 600 ரூபாய் நஷ்டம்.
கிட்ட தட்ட 400000 பங்குகள் வாங்க பட்டு உள்ளது. வாங்கிவர்களுக்கு 24 கோடி அளவுக்கு நஷ்டம். ஆனால் எல் ஐஸ் என்றைக்கு இந்த பங்குகளை வாங்கியது ? என்ற விவரம் இல்லாமல் எல் ஐ சிக்கு நஷ்டம் என்று எப்படி முடிவுக்கு வந்தார்கள் ? உதாரணமாக இந்த பங்கின் இந்த வருடத்திற்கான குறைந்த விலை 1540. கிட்ட தட்ட 1600 என்ற நிலையில் இரண்டு மூன்று இருந்து இருக்கும் . அந்த நேரத்தில் எல் ஐ சி முதலீடு செய்து இருந்தால் அதற்கு எப்படி நஷ்டம் என்று கூற முஐடியும் ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக