சனி, 31 டிசம்பர், 2022

 புத்தாண்டும் புதிய காலக் கணக்கும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------
1970களில், 1980களில் படிப்பு வேலைவாய்ப்புக்கான 
விண்ணப்பப் படிவங்களில், "Date of birth: According to 
Christian era" என்று காலம் இருக்கும். அதை நிரப்ப 
வேண்டும்.

இன்று கிறிஸ்து சகாப்தம் (Christian era) என்ற பதம் 
முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. போப்பாண்டவர் 
13ஆம் கிரெகொரியால் திருத்தம் செய்யப்பட்டு 
அவர் பெயராலேயே கிரெகோரி காலண்டர் 
(Gregory calendar) என்று வழக்கப்பட்டு வந்த 
காலண்டர் இன்று நடைமுறையில் இல்லை.
இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள 
வேண்டும்.

ஆக, ஏசு கிறிஸ்துவின் பெயரால் அமைந்த 
காலக் கணித முறை (calendar) முடிவுக்கு வந்து 
விட்டது. இன்று அது காலாவதி ஆகிவிட்டது. 
அரேபியர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் என்று 
பல தரப்பினரும் இயேசுவின் பெயரால் அமைந்த 
காலக் கணித முறைக்கு (calendar) கடுமையான 
ஆட்சேபம் தெரிவித்ததை ஒட்டி, மதத்தின் பெயரால் 
அமைந்த அக்கணித முறை உலக அறிவியலாளர்களால் 
முற்றிலுமாகக் கைவிடப்பட்டு விட்டது.

இன்று நடைமுறையிலுள்ள புதிய காலக்கணக்கு முறை!
------------------------------------------------------------------------------------
கிறிஸ்து சகாப்தம் (Christian era) போய்விட்டது!
பொது சகாப்தம் (Common era) வந்து விட்டது.
கிமு, கிபி என்ற பதங்கள் செத்தொழிந்து விட்டன.
அவற்றுக்குப் பதிலாக,
பொசமு, பொச ஆகிய பதங்கள் வழக்கிற்கு வந்து விட்டன.

பொசமு = பொது சகாப்தத்துக்கு முன் 
பொச = பொது சகாப்தம்
ஆகிய பதங்கள் வழக்கில் வந்து விட்டன. உலகெங்கும் 
பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் புதிய 
மாற்றங்களை உள்ளடக்கிய புதிய காலக்கணித முறை
இடம் பெற்று விட்டது. உலகெங்கும் உள்ள அரசு 
ஆவணங்களில், புதிய சகாப்த முறையிலான 
காலக்கணித முறையே கடைப்பிடிக்கப் பட்டு 
வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆங்கிலத்தில் மாற்றங்கள் வருமாறு:-
-------------------------------------
BCE = Before Common Era 
(BC = Before Christ என்பது கைவிடப் படுகிறது). 
CE = Common Era. 
(AD = Anna Domine என்பது கைவிடப் படுகிறது)

எனவே வாசக நண்பர்களே, 
தற்போதைய காலண்டர் (ஜனவரி 1ஐ ஆண்டின் 
முதல் நாளாகக் கொண்டு டிசம்பர் 31 வரை உள்ள)
காலண்டர் மதச்சார்பற்ற காலண்டர் ஆகும்.
இதைப் புத்தாக்கம் செய்ததும், பர்மாரிப்பதும் 
அறிவியலாளர்கள். எந்த ஒரு மதத்தின் தலைவருக்கும் 
இந்தப் புத்தாண்ட்டில், இந்தக் காலண்டரில்  எந்தவொரு 
பங்கும் கிடையாது.காலண்டரில் திருத்தம் செய்யும் 
உரிமை அறிவியலாளர்களும் மட்டுமே உண்டு.

இந்தக் காலண்டர் அறிவியல் காலண்டர் ஆகும்.
இந்தக் காலண்டர் மதச்சாற்பற்ற காலண்டர் ஆகும்.
இது ஆங்கில காலண்டரோ ஐரோப்பிய காலண்டரோ 
அல்ல. இது உலகம் முழுமைக்கும் பொதுவான 
காலண்டர் ஆகும். இதைப் போற்றுவோம்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல் ஒளி இதழில் முன்பு நான் எழுதிய 
காலண்டரின் கதை என்ற நீண்ட கட்டுரையைப் 
படிக்கவும்.
***********************************************        
பிற்போக்குச் சிந்தனைகளை முறியடிப்போம்!
    

பின்வரும் ஆண்டுகளில் எவையெல்லாம் 
லீப் ஆண்டுகள்?
1956, 2024, 2100, 2200. விடை தருக. 


நம்மூர் போலி முற்போக்கு வகையறாக்கள்
இனிமேலாவது திருந்துவார்களா?


சரியான விடையும் விளக்கமும்!
-------------------------------------------------
மேற்கூறிய நான்கும் லீப் ஆண்டுகள் அல்ல.
2100, 2200 ஆகிய இரண்டும் லீப் ஆண்டுகள் அல்ல.
Centuries are not leap years unless divisible by 4 என்று 
கிளார்க் டேபிளில் எழுதி இருக்கும். கிளார்க் 
டேபிள் என்றால் குமாஸ்தா அல்லது எழுத்தர் 
பயன்படுத்தும் அட்டவணை என்று பொருள் இல்லை.
அது அறிவியல் விவர புத்தகம்.
கிளார்க் என்பவர் அதன் தொகுப்பாசிரியர்.

போப்பாண்டவர் கிரெகோரி மேற்கொண்ட 
திருத்தம் இதுதான்; அதாவது ஒரு centuryயானது 
லீப் ஆண்டாக இருக்க வேண்டுமெனில்,
அது 400ஆல் மீதியின்றி வகுபட வேண்டும்.

என்னுடைய கட்டுரையை (காலண்டரின் கதை)
படியுங்கள் நண்பர்களே. நான் ஒருவன் மட்டும்தான் 
காலண்டரில் ஏற்பட்டுள்ள அத்தனை மாற்றங்களையும் 
விடாமல் தொகுத்து எழுதி வருகிறேன்.
அதைப் படிக்கவோ பரப்பவோ நாதியில்லை.



இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!
பரப்புங்கள்! விவாதியுங்கள்!
பலருக்கும் ஷேர் செய்யுங்கள்.


ஆங்கில, கிரெகோரி, கிறிஸ்துவப்  புத்தாண்டுகள்  
செத்து விட்டன. அறிவியல் புத்தாண்டு, 
மதச்சார்பற்ற புத்தாண்டு என்று பேசுங்கள். 

1+1/2+


சென்னை நகரத்தின் அட்ச ரேகை தீர்க்க ரேகை 
குத்துயரம் ஆகியவை என்னென்ன?
தெரிந்து கொள்ள வேண்டாமா?
 

என்னென்ன 

நல்ல கணக்கு! நான் படித்த காலத்தில் 
மாகாணி வரை வாய்ப்பாடு சொல்ல வேண்டும்.
1/4, 1/2, 3/4, 1/8, 1/16 வரை வாய்ப்பாடு எங்களுக்கு 
மனப்படமாகத் தெரியும். தொடர்ந்து கணக்கைப் 
போட்டு விடையை வாங்குங்கள் சார்.

நான் சிறிது காலம் நுங்கை வானியல் ஆய்வு 
மையத்தில் பணியாற்றியபோது (IMD ஊழியராக அல்ல)
மேற்கூறிய பில்லரைப் பார்த்துள்ளேன்.


சார், மிகவும் நன்றி. ஜீனோ முரண்பாட்டை 
நான் நன்கறிவேன். உங்கள் கணக்கை ஒட்டி 
நல்லதொரு விவாதம் நடைபெற வேண்டும் என்று 
விரும்புகிறேன்.




 

 
 


   

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக