செவ்வாய், 27 டிசம்பர், 2022

கைவண்ணம் அங்குக் கண்டேன்!
கால்வண்ணம் இங்குக் கண்டேன்!
--------------------------------------------------
கலையியல் நிறைஞர் 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------
சூடக அரவுறழ் சூலக் கையினள் 
காடுறை வாழ்க்கையள் கண்ணில் காண்பரேல் 
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
தாடகை என்பதச் சழக்கி நாமமே.

(கம்ப, பால, தாடகைவதை)

விருத்தத்தின் முதல்சீர் சூடகம் என வருகிறது.
சூடகம் என்றால் என்ன பொருள் என்று தெரிந்து 
கொள்ள, ஆண்டாளைப் படித்திருக்க வேண்டும்.
திருப்பாவை தெரிந்திருக்க வேண்டும்.

"................... சூடகமே 
தோள்வளையே தோடே செவிப்பூவே"
என்ற திருப்பாவை தெரியுமா? தெரியாது.
"கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்தன்னைப்"        
என்று தொடங்கும் 27ஆம் பாசுரம் அது. சூடகம் என்பது 
வளையல் போன்ற ஓர் அணிகலன் ஆகும்.

பாம்பை வளைத்து கையிலே வளையல் போன்று 
அணிந்திருப்பாள். அக்கொடியவள் பெயர் தாடகை
என்று ராமனுக்கு எடுத்துக் கூறுகிறார் விசுவாமித்திர 
முனிவர்.

சூடக அரவுறழ் என்னும் இவ்விருத்தம் விசுவாமித்திரரின் 
கூற்றாக அமைந்திருக்கிறது. தமது தவத்தைக் கெடுக்கும் 
அரக்கி தாடகையை அழிக்க வேண்டி தசரதனிடம் 
சென்று கோரி ராம இலக்குவரை அழைத்து வருகிறார் 
விசுவாமித்திரர். தாடகையை ஏன் அழிக்க 
வேண்டும் என்று ராமனுக்கு உணர்த்துகிறார் முனிவர்.

அப்போது ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
என்கிறார் முனிவர். ஆண்களுக்கெல்லாம் திடீரென ஓர் 
ஆசை வந்து விடுகிறதாம்! பெண்ணாக மாற வேண்டும் 
என்ற ஆசை வருகிறதாம்! ஏன்? பெண்ணாக 
மாறினால்தான், ராமனின் தோள்களைப் புல்லி 
இன்பம் துய்க்க முடியுமாம். எனவே ஒவ்வொரு ஆணும் 
பெண்ணாக மாறும் பெரு விருப்புக் கொண்டுள்ளனர் 
என்பதாக முனிவர் நயம்பட உரைக்கிறார்.

இறுதியில் அவதார நோக்கம் நிறைவேறுகிறது. ராமன் 
தாடகையை அழித்து விசுவாமித்திரரின் வேள்வியைக் 
காக்கிறான். அழிந்து போகிறாள் தாடகை!

சொல்லொக்கும் கடிய வேகச் 
   சுடுசரம் கரிய செம்மல் 
அல்லொக்கும் நிறத்தினாள்மேல் 
   விடுதலும் வயிரக் குன்றக் 
கல்லொக்கும் நெஞ்சில் தங்காது
   அப்புறம் கழன்று கல்லாப் 
புல்லோர்க்கு நல்லோர் சொன்ன 
   பொருளெனப் போயிற் றன்றே.

(கம்ப, பால, தாடகை வதை) 

இந்தப்பாடலுக்கு நாவலர் நெடுஞ்செழியன் அளித்த 
காலத்தை வென்று நிற்கும் விளக்கவுரையைக் 
கேட்டேன். அப்போது என்னுடைய வயது 18.
நாவலர் நெடுஞ்செழியன் முற்பட்ட வகுப்பைச் 
சேர்ந்த உயர்ந்த சாதி முதலியார் ஆவார்.

இதே 18 வயதில் பியூசி சேர்ந்தவுடனேயே  எங்கள் 
கல்லூரி நூலகத்தில் இரண்டு புத்தகங்களை 
எடுத்துப் படித்தேன். ஒன்று: ராகுல சாங்கிருத்தியாயனின்
பொதுவுடைமைதான் என்ன? இன்னொன்று 
அண்ணாத்துரையின் கம்பரசம்! பொட்டுக் கட்டித்
தெலுங்கர் அண்ணாத்துரையால் ஆபாசரசத்தை  
மட்டுமே எழுத முடியும். ஆனால் நடமாடும் 
பல்கலையாகத் திகழ்ந்த நாவலரால் மட்டுமே 
கம்பனை மாண்புறுத்தும் விளக்கம் தர இயலும்.
சொல்லின் செல்வர் ரா பி சேதுப்பிள்ளை அவர்கள் 
ஆபாச அண்ணாத்துரையை கர்வ பங்கம் செய்தார்.

விசுவாமித்திரர் காலத்தோடு சழக்கர்கள் உயிர்க்கிறுதி 
அடைந்து விட்டனர் என்று கருத இயலாது. இன்று இந்த 
2000த்திலும் சழக்கியர் உள்ளனர். இந்திய நாடாளுமன்ற 
மேலவையில் ஒரு சழக்கி இழிநடனம் புரிந்ததை 
உங்களில் சிலரேனும் அறிந்திருக்கக் கூடும்.

2019 ஜனவரியில் இந்திய நாடாளுமன்றத்தின் 
இரு அவைகளிலும் 103ஆம் அரசமைப்புச் சட்டத் 
திருத்தம் நிறைவேறியது. ஜனவரி 14, 2019 முதல் 
குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டதை 
அடுத்து, முற்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளுக்கு
அதிகபட்சமாக 10 சதம் இடஒதுக்கீடு கல்வியிலும் 
வேலைவாய்ப்பிலும் வழங்கும் மேற்கூறிய EWS சட்டம் 
நிறைவேறியது.

இச்சட்டத்தை ஆதரித்து மாநிலங்களவையில்
மார்க்சிஸ்ட் உறுப்பினர் தோழர் டி கே ரங்கராஜன் 
பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு 
வந்து தோழரின் பேச்சில் குறுக்கிட்ட சழக்கி 
தோழரைப் பேச விடாமல் தடுத்தாள்.

விசுவாத்திரரின் வேள்வியில் சிறுநீர் பெய்த சழக்கி
போலும் தோழரின் கருத்தாழம் நிறைந்த பேச்சைச்  
சீர்குலைக்க முயன்றாள் திகாரில் களி தின்ற சழக்கி.

தாடகை வதத்தோடு கூடவே அகலிகைக்கு சாப 
விமோசனமும் பால காண்டத்திலேயே கிடைத்து 
விடுகிறது. அகலிகை தவறிழைத்தாளா அல்லது 
மாசுமருவற்றவளா? கம்பனின் விடை என்ன?
அது மட்டுமே சரியான விடையன்றோ!

"தக்கது அன்று என்ன ஒராள் தாழ்ந்தனள்" என்கிறான் 
கம்பன். எனக்கு இதுவே வேதம்! புதுமைப்பித்தனை 
யாரினும் கூடுதலாக மதிப்பவன் யான்! மதித்தாக 
வேண்டும். எனினும் கம்பனே அனைத்தும்!

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் 
   இனி இந்த உலகுக்கெல்லாம் 
உய்வண்ணம் அன்றி மற்றோர் 
   துயர்வண்ணம் உறுவதுண்டோ 
மைவண்ணத் தரக்கி போரில்
   மழைவண்ணத் தண்ணலே உன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன் 
   கால்வண்ணம் இங்குக் கண்டேன்.
(கம்ப, பால, அகலிகை)

கைவண்ணம் அங்குக் கண்டேன்! எங்கு?
தாடகையை வதம் புரிந்தபோது.
கால்வண்ணம் இங்குக் கண்டேன்! எங்கு?
அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தபோது!
ராமனின் காலடி பட்டதும் யுக யுகங்களாக 
கல்லாய்ச் சமைந்து கிடந்த அகலிகை 
உயிர் பெறுகிறாள்! ராமன் ஓர் அவதாரம்
என்பதை பால  காண்டத்திலேயே கம்பர் 
உணர்த்தி விடுகிறார்.

கல்வியில் பெரியவன் கம்பன்!
கம்பனைப் படியுங்கள்!
கம்பனை அறியா வாழ்க்கை வாழத்தகுதியற்ற 
வாழ்க்கை! 
------------------------------------------------------------------------      

   

    

        

    
 

  

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக