வெள்ளி, 30 டிசம்பர், 2022

 கிபி 3022ல் நடைபெறும் தேர்தலிலும்

குஜராத்தில் பாஜகதான் வெற்றி பெறும்!
IQ > 110 உள்ளவர்கள் மட்டும் இக்கட்டுரையைப் படிக்கலாம்.
மற்றவர்கள் படிக்க வேண்டாம் என வேண்டுகிறேன்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
இந்த 2022ஆம் ஆண்டில் மொத்தம் ஏழு மாநிலங்களில்
சட்டப் பேரவைப் பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
இவ்வாண்டு மார்ச்சில் 5 மாநில முடிவுகள் வந்தன.
உபி, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப்
ஆகிய 5 மாநிலகங்களின் தேர்தல் முடிவுகளின்படி,
பாஜக 4 மாநிலங்களைக் கைப்பற்றியது. பஞ்சாப்
மாநிலத்தை காங்கிரஸிடம் இருந்து ஆம் ஆத்மி
கைப்பற்றியது.
டிசம்பர் 2022ல் வெளிவந்த இரு மாநில முடிவுகளின்படி,
குஜராத்தை பாஜக ஏழாவது முறையாகத் தக்க
வைத்துக் கொண்டது. மொத்தமுள்ள 182 இடங்களில்
பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி வரலாறு
படைத்தது. காங்கிரஸ் 17 இடங்களுட்ஸ்ன்
சுருங்கியது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட
எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ்
பெறவில்லை. 19 இடங்களில் வென்றால்தான்
அந்த அந்தஸ்த்தைப் பெற இயலும்.
2017 தேர்தலில் குஜராத்தில் பாஜக 99 இடங்களைப்
பெற்று ஆட்சி அமைத்தது. இப்போது இந்த
2022 தேர்தலில் 156 இடங்களைப் பெற்று
மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
2017ல் காங்கிரஸ் 77 இடங்களை (எழுபத்தியேழு இடங்கள்)
வென்றது. தற்போது 17 மட்டும்!! 60 இடங்களை
காங்கிரஸ் இழந்தது. ஏன் இழந்தது?
சிந்திக்க வேண்டும்.
2017ல் 99 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக,
2022ல் 57 இடங்களை அதிகமாகப் பெற்று
156 இடங்களை வென்றுள்ளது.
காங்கிரஸ் இழந்தது 60 இடங்கள்!
பாஜக முன்பை விட அதிகமாக வென்றது 57 இடங்கள்!
காங்கிரஸ் தனது 60 இடங்களையும் பாஜகவிடம்
இழந்துள்ளது என்பது புலப்படுகிறது.
வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தாலும்
பாஜக உச்சாணிக் கொம்பில் ஏறி விடுகிறது.
2022ல் 52.5 சதவீத வாக்குகளை பாஜக
பெற்றுள்ளது (1 கோடியே 67 லட்சம்).
2017ல் பாஜக 49.1 சதவீத வாக்குகளைப்
பெற்றிருந்தது. தற்போது இத்தேர்தலில்
3.4 சதவீத வாக்குகளை பாஜக அதிகம் பெற்றுள்ளது.
50 சதவீதத்திற்கு மேல் ஒரு கட்சி வாக்குகளைப்
பெற்று விட்டபின்பு, அங்கு விமர்சனத்துக்கு
இடமில்லாமல் போய்விடுகிறது.
2017ல் 41.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த
காங்கிரஸ் 2022ல் 27.28 சதவீதமாகச் சுருங்கி விட்டது.
14.16 சதவீத வாக்குகளை காங்கிரஸ் இழந்துள்ளது.
2017ல் பாஜக = 99 இடங்கள்; வாக்கு 49.1%
2017ல் காங் = 77 இடங்கள்; வாக்கு 41.4%
2022ல் பாஜக = 156 இடம்; வாக்கு 52.5%
2022ல் காங் = 17 இடம்: வாக்கு 27.28%
ஒரு பக்கம் பிரம்மாண்டமான ராட்சசத் தனமான
மிருக வெறித் தனமான வெற்றியை பாஜக
பெற்றுள்ளது. monstrous victory என்று சொல்லலாமா?
நான் பயன்படுத்திய adjective சரிதானா?
adjective சரியில்லை என்றால் அது என்னுடைய
ஆங்கிலத்தின் பிழை அல்ல. இத்தகு superlative
தன்மையை வர்ணிக்கத் தகுதியான சொல்
ஆங்கிலத்தில் இல்லை என்பதுதான் பொருள்.
ஆங்கிலத்திலேயே இல்லை என்றால் வேறெந்த
உலக மொழியிலும் இல்லை என்பதை நுண்மாண்
நுழைபுலம் மிக்கோர் அறிவர்.
எனினும் adjectives மூலமாக ஒரு superlative
பண்பை வர்ணிப்பது துல்லியமானதல்ல
என்று என் கணிதமூளை சொல்கிறது.
துல்லியத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க
முடியாத என்னால், adjective மூலமான
வர்ணனை முழுமையானது என்று ஏற்க
இயலவில்லை. மேலும் adjective மூலமான
வர்ணனைக்கு canonical status வழங்கவும்
என்னால் இயலாது.
எனவே அதிதுல்லியமானதும் canonical status
உடையதுமான ஒரு மொழியில் பாஜகவின்
இந்த வெற்றியை வர்ணிக்கிறேன். ஆம்,
கால்குலஸ் மொழியில் வர்ணிக்கிறேன்.
அது இப்படி அமைகிறது.
பாஜகவை x என்றும், காங்கிரசை q என்றும்
எடுத்துக் கொண்டால்,
x tends to infinity
while
q tends to zero.
மேலே எழுதியது புரியவில்லையா?
இதோ கோனார் உரை!
அதாவது, பாஜக infinityஐ நோக்கிச் செல்கிறது.
காங்கிரஸோ பூஜ்யத்தை நோக்கிச் செல்கிறது.
-------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) பாஜகவின் இந்த ராட்சச வெற்றிக்குக் காரணம் என்ன?
அடுத்த கட்டுரையில் காண்போம்.
2) canonical status என்ற தொடர் அதன்
கணித அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்தப்
பட்டுள்ளது. கிறிஸ்துவ பைபிள் அர்த்தங்களில் அல்ல.
3) ஒரு சாதாரண அரசியல் கட்டுரையில்
வாசகர்களுக்கு கால்குலஸ் சொல்லித்
தருகிறேன்; லிமிட் பற்றி சொல்லித்
தருகிறேன். Adjective qualifies the noun
என்று ஆங்கில இலக்கணம் சொல்லித்
தருகிறேன்.
என்னுடைய ஒரு கட்டுரையை நீங்கள்
படிப்பதும் சரி, ஒரு subjectல்
certificate course பெறுவதும் சரி.
இதெல்லாம் உங்களுக்குத் புரிகிறதா?
Or am I casting pearls before swine?
***************************************************
Gurumoorthy Swaminathan, Siva Shankara Nainar and 50 others
3 shares
Like
Comment
Share

0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக