புதன், 7 டிசம்பர், 2022

உடன்கட்டை ஏறுதல்!
-----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------   
ராஜாராம் மோகன்ராய் வங்கத்தைச் சேர்ந்த 
ஒரு சீர்திருத்தவாதி. வைதீக பிராமணரான 
இவர் பிரிட்டிஷ் இந்தியக் காலத்தின் 
முதல் சீர்திருத்தவாதி ஆவார்.

அப்போது கணவன் இறந்ததும் மனைவி 
உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
எல்லாப் பெண்களும் இப்படி உடன்கட்டை 
ஏறவில்லை. போர்த்தொழிலில் நேரடியாக 
ஈடுபட்டு வந்த சத்திரிய வம்சத்துப் பெண்கள்
மட்டுமே கணவன் இறந்ததும் உடன்கட்டை 
ஏறினர். குறிப்பாக ராஜபுதனப் பெண்களிடம் 
மட்டுமே இப்பழக்கம் மிகுதியும் இருந்து வந்தது.

தமிழகத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் 
இருக்கவில்லை. சேர சோழ பாண்டிய பல்லவ 
மன்னர்கள் நடத்திய போர்களில் பங்கேற்று 
உயிர் துறந்த தமிழ்நாட்டு வீரர்களின் 
மனைவிமார்கள் எவரும் உடன்கட்டை ஏறவில்லை.

அன்றைய வர்ணங்களில் பார்ப்பன, வைசிய, சூத்திர, 
பஞ்சம வர்ணத்தாரிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் 
இருக்கவில்லை. சத்திரிய வம்சம் மட்டுமே 
இப்பழக்கத்தைக் கொண்டிருந்தது.

இதை எதிர்த்துப் போரிட்டார் ராஜாராம் மோகன்ராய்.
நீண்ட போராட்டத்தின் விளைவாக, அன்றைய 
பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த 
வில்லியம் பெண்டிங் பிரபு 1829 டிசம்பரில் 
உடன்கட்டை ஏறுவது சட்ட விரோதம் என்றும் அது 
தண்டனைக்குரிய குற்றம் என்றும் சட்டம் 
இயற்றினார். ஆக 1829 டிசம்பரோடு உடன்கட்டை 
ஏறும் வழக்கம் முடிவுக்கு வந்தது.

இந்தச் சட்டம் நிறைவேறிய திருப்தியுடன் ராஜாராம் 
மோகன்ராய்,  நான்காண்டுகள் கழித்து, 1833ல் உயிர்
நீத்தார்.

ஆனால் தமிழ்நாட்டில் திராவிடக் கசடுகளும் 
தற்குறிகளும் ஈ வெ ராமசாமிதான் உடன்கட்டை 
ஏறுதலை ஒழித்தார் என்று சொல்வார்கள். மனித
குல வரலாற்றின் இழிந்த பொய்களின் ஊற்றுக் 
கண்ணாக திராவிடத் தற்குறிகள் இருந்து 
வருகிறார்கள்.

பெண்டிங் பிரபு உடன்கட்டையைத் தடை செய்து 
சட்டம் இயற்றியது எப்போது? 1829ல்.
ஈ வெ ராமசாமி பிறந்தது எப்போது? 1879ல்.

உடன்கட்டை ஏறுதல் தடை செய்யப்பட்டு 50 ஆண்டு
கழித்துப் பிறந்த ஈ வெ ராமசாமி எப்படி 1829ல் 
ஒழிக்கப்பட்ட உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க 
முடியும்? மானங்கெட்ட கசடுகள் (scum).
*********************************************        
thamizhakaththil udankattai aerum vazhakkam 

தமிழகத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் 
இருக்கவில்லை. இந்தியாவில் உடன்கட்டை ஏறும் 
வழக்கம் ஆதிமுதலே இருக்கவில்லை. அது 
இடையில் வந்த ஒரு திடீர் வழக்கம்.

இஸ்லாமிய அரசர்கள் இந்தியா மீது போர் 
தொடுத்து, வெற்றி அடைந்தபோது, அவர்கள் 
இங்குள்ள பெண்களை அடிமைப்படுத்தி 
பாலியல் அடிமைகளாக ஆக்கிக் கொண்டனர்.
இதில் இருந்து தப்பிக்கும் பொருட்டே 
ஊடகத்தை ஏறும் வழக்கம் நடைமுறைக்கு 
வந்தது.

தமிழ்நாட்டில் இஸ்லாமியப் போர் வெற்றிகளும்
இஸ்லாமியக் கொடுங்கோன்மையும் ஒப்பீட்டளவில் 
வடஇந்தியாவை விட மிக மிகக் குறைவு. எனவே 
இங்கு உடன்கட்டை ஏறும் வழக்கம் தோன்றுவதற்கான 
தேவை இருந்திருக்கவில்லை.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் மனைவி 
பெருங்கோப்பெண்டு பற்றிய செய்தி உடன்கட்டை 
ஏறிய செய்தி அல்ல. சங்க இலக்கியங்கள் 
இனக்குழுச் சமூக காலத்து இலக்கியங்கள்.
அப்போது உடன்கட்டை ஏறுவதற்கான எந்தவொரு 
அணுவளவு சூழலும் இருக்கவில்லை.

நான் இங்கே எழுதி இருப்பது அறிவியல் வழிப்பட்ட
வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பரிவை.
அதாவது வரலாற்றை பொருள்முதல்வாதக் 
கண்ணோட்டத்தில் ஆராய்வது. தமிழ்நாட்டில் 
உடன்கட்டை இருத்தே இல்லை. இதுதான் உண்மை.

தமிழகத்தில் எக்காலத்திலும் உடன்கட்டை 
இருந்ததே இல்லை. இதைப் புரிந்து கொள்ளவும், 
உணர்ந்து ஏற்கவும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் 
(historical materialism) குறித்த புலமையைப் 
பெற்றிருத்தல் முன்நிபந்தனை ஆகிறது.
 -------------------------------------------------------
நீங்கள் படித்துள்ள தகவல்கள் 
கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில்
எழுதப்பட்ட சமூக யதார்த்தத்தைப் 
பிரதிபலிக்காத வரலாறுகள்.

ஒரு சமூகத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் 
இருந்தது என்றால், அதற்கான தேவை என்ன 
என்பதையும் சேர்த்து எழுத்துவதே 
பொருள்முதல்வாத வரலாறு.

சமூகத்தின் பொருள் உற்பத்தியில் 
இருந்துதான் ஒரு பண்பாடு தோன்றும்.
உடன்கட்டை ஏறுதல் ஒரு பண்பாடு 
என்றால், அதன் தோற்றுவாய் என்ன?
பொருளுற்பத்திமுறையின் எந்தக் 
கட்டத்தில் எந்தச் சூழலில், எந்தத் 
தேவையின் பொருட்டு உடன்கட்டை ஏறும் 
வழக்கம் உருவானது? இக்கேள்விகளுக்கான  
திருப்திகரமான பதில்கள் இல்லாமல் 
உடன்கட்டை இருந்ததாக நிரூபிக்க 
முடியாது.  

அரசர்களைப்புகழ்ந்து வரலாற்றை எழுதும்
பரிசில் பெறும் புலவர்கள், அரசனின் 
மனைவியர் உடன்கட்டை ஏறியதாக 
வீண் பெருமைக்காக எழுதுவர். அவை 
உண்மை அல்ல. எங்கேனும் ஓரிருவர் 
உண்மையிலேயே கணவனின் இறப்பைத்
தொடர்ந்து தாங்களும் இறந்திருருக்கலாம்.
அது உடன்கட்டை ஏறும் வழக்கம் 
இருந்ததாகப் பொருள் படாது.

தமிழகத்தில் நிலவுடைமைச் சமூக
அமைப்பே மிகவும் தாமதமாகத்தான் 
ஏற்பட்டது. காரணம் இங்கு உபரி 
உற்பத்தி கிடையாது.

சிந்து கங்கைச் சமவெளிகள் போல 
இங்கு பேரளவிலான உபரியை உற்பத்தி 
செய்ய வல்ல வேளாண்மை வளம் கிடையாது.
வடக்கே பெரும்பகுதிகள் மருத நிலம்தான்.
தமிழ்நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே 
மருத நிலம். இங்கு ஏது உபரி?

உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததென்றால் 
எந்தெந்தச் சமூகத்தினர் இங்கு உடன்கட்டை 
ஏறினர்?

கள்ளர் சமூகப் பெண்கள் உடன்கட்டை 
ஏறினரா? நாடார் சமூகப் பெண்கள்,
பள்ளர்-பறையர் சமூகப் பெண்கள் 
உடன்கட்டை ஏறினரா? இடைச்சியர்
மகளிர் ஏறினரா? முதலியார், பிள்ளைமார்,
கோனார் சமூகப் பெண்கள் உடன்கட்டை 
ஏறினரா? நாட்டுக்கோட்டை செட்டிநாட்டு 
அரசர் குலப்பெண்கள் ஏறினரா? இல்லை.
இதற்கெல்லாம் ஏதேனும் ஆதாரம் உண்டா?

இது ஒரு பாராட்டுக் கவிதை;
புகழ்ச்சிக் கவிதை. இதில் துளி 
அளவேனும் வரலாற்று அம்சம் இல்லை.
சுரதா ஒரு திராவிடக் கவிஞர்.
அவருக்கு பொருளும்தல்வாதம் 
என்றால் என்ன என்றே தெரியாது.
எனவே அவருடைய கவிதையில் இருந்து 
எதையும் தெரிந்து கொள்ள இயலாது.

ராஜ தர்மம் வேறு! உடன்கட்டை வேறு!
--------------------------------------------------------
கோவலனை அநீதியாகக் கொன்ற 
பாண்டியன் நெடுஞ்செழியன்
கண்ணகி வந்து உண்மையை 
நிலைநாட்டியதுமே, தன் தவற்றை 
உணர்ந்து உயிரை மாய்த்துக் கொண்டான்.
(மன்பதை காக்கும் தென்புலங் காவல் 
என்முதல் பிழைத்தது கெடுக்க என் ஆயுள்).

தொடர்ந்து பாண்டிய அரசியும் தன் 
உயிரை மாய்த்துக் கொண்டாள்.
இதெல்லாம் உடன்கட்டையில் வராது.  
இது ராஜ தர்மத்தில் வரும்.

சில அரசியர் தங்கள் கணவர்களான 
மன்னர்கள் இறந்ததும், தாங்களே 
விரும்பி, தங்களின் உயிரை மாய்த்துக் 
கொண்டுள்ளனர். வரலாற்றில் அங்கொன்றும் 
இங்கொன்றுமாக இத்தகு உயிர் துறத்தல்கள்  
காணப்படுகின்றன.

இவற்றை வைத்துக்கொண்டு உடன்கட்டை 
ஏறும் வழக்கம் இருந்ததாக முடிவுக்கு 
வருவது தவறு. மேற்கூறிய உயிர் 
துறப்புகள் ராஜ தர்மத்தின்கீழ் வருமே 
தவிர உடன்கட்டையில் வராது.

உடன்கட்டை ஒரு வழக்கமாக 
இருந்திருக்குமெனில், கணவனைப் 
பறிகொடுத்த பெண்களை கட்டாயமாகப் 
பிடித்து நெருப்பில் தள்ளி இருப்பார்கள்.
ஆனால் மேலே கூறிய அரசியர் தங்களின்
சுய விருப்பின் பேரில்தான் உயிர் 
துறக்கின்றனர். எனவே சர்வ நிச்சயமாக 
இதெல்லாம் உடன்கட்டையில் வராது.

வடஇந்தியாவில் கணவன் இறந்ததும்,
மனைவியை ஆட்டமேட்டிக்காக 
சிதையில் தள்ளி விடுவார்கள். எரிக்கப் 
படுவது கட்டாயம். தமிழ்நாட்டில் 
அந்த வழக்கமே கிடையாது. 

அவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் 
உயிர் துறந்தனர். அது உடன்கட்டை ஏறும் 
வழக்கத்தின் அடிப்படையில் அல்ல.
அவர்கள் நம்புகிற ராஜதர்மத்தின்பேரில் 
அவர்கள் உயிர் துறந்துள்ளனர். அதைக் 
கொண்டு சமூகத்தின் சட்டமாக 
உடன்கட்டை இருந்தது என்று  
கொள்ள முடியாது.      

உடன்கட்டை ஏறுதல் என்பது ஒரு சமூக 
வழக்கமாக என்றுமே தமிழ்நாட்டில் 
இருந்ததில்லை. தேர்வில் தோல்வியுற்ற
ஒரு மாணவன் அல்லது சில மாணவர்கள் 
தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதை வைத்துக் கொண்டு தேர்வில் 
தோற்ற மாணவர்கள் அனைவரும் தற்கொலை 
செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது என்று 
முடிவுக்கு வர இயலாது. ஒரு சிலர் 
தீப்புகுந்ததெல்லாம் உடன்கட்டை 
ஏறுதல் ஆகி விடாது.

முந்திய பதில்களில் தெளிவாகக் கூறி 
இருக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் 
பொருளுற்பத்தியின் எந்தக் கூறு
உடன்கட்டை ஏறும் பண்பாட்டைத் 
தோற்றுவித்தது? உடன்கட்டை 
ஏறுவதற்கான சமூகத் தேவை என்ன?
கணவன் இறந்ததுமே எந்தெந்த சாதிப் 
பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்?    

சமூக வழக்கம் என்றால் என்ன?
உடன்கட்டை ஏறுதல் ஒரு சமூக 
வழக்கமென்றால், அதன் தோற்றுவாய் 
என்ன? வரலாறு நெடுகிலும் அந்த 
வழக்கம் இருந்து வந்ததா?

மணிமேகலை எழுதப்பட்ட காலத்தில் 
உடன்கட்டை இருந்ததெனில், பிற்காலங்களில் 
அது தொடர்ந்து இருந்ததற்கு என்ன சான்று?
பன்னிரு திருமுறைகளிலும் சரி, நாலாயிரம் 
திவ்விய பிரபந்தத்திலும் சரி, உடன்கட்டை 
பற்றிய குறிப்பு ஏன் இல்லை?

மஞ்சள் கிழங்கைக் கண்டெடுத்த சிட்டுக் 
குருவி மளிகைக் கடை வைக்க 
நினைத்ததாம் என்பதைப்போல, யாரோ 
தீப்புகுந்ததைக் கொண்டு 
உடன்கட்டை ஏறும் சமூக வழக்கம் 
இருந்ததாக முடிவுக்கு வர இயலாது.
 
           



வெண்பா 


பத்துப்பாட்டு நூல்களை நினைவில் கொள்ள 
ஒரு வெண்பாவை இயற்றி உள்ளேன். அதை 
மனனம் செய்யுங்கள். சுவையுங்கள். பரப்புங்கள்.






மார்க்கோபோலோ வந்த காலம் 
13ஆம் நூற்றாண்டு. அதற்கு முந்திய 
நூற்றாண்டுகளிலோ அல்லது பிந்திய 
நூற்றாண்டுகளிலோ மலபாரில் உடன்கட்டை 
ஏறிய பெண்கள் குறித்து சான்றுகள் உண்டா?

சமூக வழக்கம் என்றால் என்ன என்று 
தெரிந்து கொள்ளுங்கள். சமூக வழக்கம் 
என்பதற்கு மார்க்சியம் கறாரான 
வரையறையை வைத்துள்ளது.


இவற்றுக்கு எவ்வித ஆதாரமும் 
இல்லை. இவற்றில் உண்மையும் இல்லை.
புத்தர் உடன்கட்டை ஏறுவதைப் 
பரிந்துரைக்கவில்லை.
புத்தருக்குப் பின் வந்த அவரின் 
வழித்தோன்றல்கள் யாரும் உடன்கட்டையை 
பரிந்துரைக்கவில்லை. 
செட்டிப் பெண்களுக்கு (வைசியர்கள்)
எந்த மதமும் சனாதன தர்மம் உட்பட 
(இந்து மதம்) உடன்கட்டையை 
விதிக்கவில்லை.


வரலாற்றுப் பொருள்முதல்வாதம் 
என்றாலென்ன என்றும் தெரிந்து 
கொள்ளுங்கள்.

காதல் தோல்வி அடைந்த 
எவனோ ஒரு இளைஞன் 
தற்கொலை செய்து கொண்டான் என்ற 
செய்தியை வைத்துக் கொண்டு,
காதல் தோல்வி அடைந்த இளைஞர்கள் 
தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் 
இருந்ததாக ஒரு முடிவுக்கு வந்தால் 
அது சரியா?   

       

  

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக