குவான்டம் ஒன்றிப்பு என்றால் என்ன?
------------------------------------------------------------
Quantum superposition என்பது ஒன்றுக்கு மேற்பட்ட
குவான்டம் நிலைகள் ஒருசேர இருப்பது என்று
பொருள்படும். Various configurations are held together
as one. எனவே quantum superposition என்பது
குவான்டம் ஒன்றிப்பு என்று மிகப்
பொருத்தமாகவே தமிழில் வழங்கப் படுகிறது.
Superposition என்பதை "மேலமைவு" என்று
தமிழாக்குவது பிழை; மிகவும் ஆபத்தான
பிழை. பல்வேறு நிலைகளின் ஒன்றிப்பு
என்பது ஒன்று கீழாகவும் ஒன்று மேலாகவும்
அமைவதல்ல. அப்படி அமைந்திருக்குமேயானால்
bottommostல் எது இருக்கிறது, topmostல் எது இருக்கிறது
என்ற கேள்விகள் எழுந்திருக்கும்.
நிலைகளின் ஒன்றிப்பு என்பது தெளிவாக
வேறுபட்டுள்ள நிலைகளைக் குறிக்கும்.
(distinct positions). பதிவில் கொடுக்கப்பட்டுள்ள
உதாரணத்தில், x = 1 என்ற மதிப்பில் அமைந்த
4 சமன்பாடுகள் காட்டப்பட்டு அவை நான்கு
வேறுபட்ட நிலைகளைக் குறிப்பதாகக் கூறப்பட்டு
உள்ளது.
அந்நான்கு சமன்பாடுகளும் ஒரே ஒரு நிலையை
மட்டுமே குறிக்கும். நான்கு வெவ்வேறு நிலைகளைக்
குறிக்காது.
ஒளி என்பது துகள், அலை ஆகிய இரண்டு
வேறுபட்ட நிலைகளின் ஒன்றிப்பு (superposition)
ஆகும். துகளும் அலையும் முற்றிலும்
மாறுபட்டவை (distinct).
குவான்டம் கணினியில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட
நிலைகளின் ஒன்றிப்பு (superposition) இன்னும்
துலக்கமாக வெளிப்படும்.
அ) உண்டு என்பது ஒரு நிலை
ஆ) இல்லை என்பது ஒரு நிலை
இ) உண்டு, இல்லை ஆகிய இரு நிலைகளின் ஒன்றிப்பாக
ஒரு நிலை.
மேற்கூறியவாறு உள்ள நிலைகளைப் பாருங்கள்.
உண்டு என்பதற்கு 1 என்ற மதிப்பையும்
இல்லை என்பதற்கு 0 என்ற மதிப்பையும் வழங்குவது
இயற்கை. ஆக மூன்றாம் நிலை என்பதில் 1, 0 என்ற
இரண்டும் இருக்கும்.
இந்த உதாரணத்தை நன்கு புரிந்து கொண்டால்,
x =1 என்ற ஒரே மதிப்பை எல்லா நிலைகளுக்கும்
வழங்க முடியாது என்ற உண்மை புலப்படும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இச்சொல்லை
உருவாக்கி ஒரு கட்டுரையிலோ (அல்லது)
உரையிலோ
என் கட்டுரைகளில் நீண்ட காலமாகவே
இச்சொல்லைப் பயன்படுத்தி வருகிறேன்.
அறிவியல் உலகில் நன்கு அறிமுகமான சொல் இது.
(quantum superposition = குவான்டம் ஒன்றிப்பு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக