சனி, 10 டிசம்பர், 2022

 இமாச்சலப் பிரதேசம்: தேர்தல் 2022 புள்ளி விவரங்கள்!
--------------------------------------------------------------------------------------
இமாச்சலப் பிரதேசம் ஒரு குட்டி மாநிலம்.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை 55 லட்சம் மட்டுமே. 
நடைபெற்று முடிந்த 2022 சட்டப் பேரவைத் தேர்தலில்
மொத்தமே 43 லட்சம் வாக்குகள்தான் பதிவாகின.
இது மொத்த வாக்காளரில்  75 சதவீதம் ஆகும்.

ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் 
எவ்வளவு என்று சில உதாரணங்களைப் பார்ப்போம்.
75000, 76000, 81000, 73000, 78000 என்கிற அளவில்தான் 
வாக்குகள் உள்ளன. சுருங்கக் கூறின், சென்னை 
மாநகராட்சியின் ஒரு வார்டு என்கிற அளவில்தான்
இமாச்சலின் சட்டப்பேரவைத் தொகுதி ஒவ்வொன்றும் 
உள்ளது (தோராயமாக).     

இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் 
பிடித்துள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 
காங்கிரஸ் 40 இடங்களையும் பாஜக 25 இடங்களையும் 
ஏனையவ்ர் 3 இடங்களையும் பெற்றுள்ளனர்.

வாக்கு சதவீதம்:
-------------------------
காங்கிரஸ் பெற்ற வாக்கு = 18.52 லட்சம் (43.90 சதவீதம்)
பாஜக பெற்ற வாக்கு = 18.14 லட்சம் (43 சதவீதம்)    
FIRST PAST POST முறையில் நடைபெறும் தேர்தலில் 
1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளில் ஒரு 
கட்சி ஆட்சியை இழக்கவும் ஒரு கட்சி ஆட்சியைக்
கைப்பற்றவும் முடியும்.
********************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக