சனி, 31 டிசம்பர், 2022

இரண்டாம் உலகப்போரின் முடிவில் 
ஏகாதிபத்தியம் பெற்ற படிப்பினை!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
ஒருவழியாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
எப்போது? 1945 செப்டம்பரில் ஜப்பான் சரண் அடைந்ததைத் 
தொடர்ந்து.

உலகப்போரில் வெற்றி பெற்றிருந்தாலும், சர்வதேச 
அளவில் ஏகாதிபத்தியமானது மிகவும் பலவீனம் 
அடைந்திருக்கிறது என்ற உண்மை ஏகாதிபத்தியத்திற்குத் 
தெரிய வந்தது.

இதனால் பெரும் அச்சமும் கிலியும் அடைந்த 
ஏகாதிபத்தியம், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து 
தக்க வைக்கவும், தனது எதிரியான கம்யூனிச 
பூதத்தை ஒடுக்கி வைக்கவும் சில உபாயங்களைக் 
கைக்கொண்டது.

சுரண்டலின் தீவிரத்தைச் சிறிதே குறைத்துக் கொண்டு 
முதலாளியச் செயல்பாடுகளுக்கு மனித முகம் 
பொருத்துவது மற்றும் ஏழை நாடுகளில் பரவலாக 
மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவது  
ஆகியவற்றில் ஏகாதிபத்தியம் ஈடுபட்டது. இது 
பின்வருமாறு நிறைவேற்றப் பட்டது.

ஏழை நாடுகள், வளரும் நாடுகள் மற்றும் முதலாளிய 
முரண்பாடுகள் கூர்மைப்பட்டு இருந்த நாடுகளில்
என்ஜிஓக்கள் என்னும் அரசுசாரா நிறுவனங்களை 
ஏகாதிபத்தியம் தன சொந்த நிதி, சொந்த அஜெண்டாவுடன் 
தொடங்கியது. இது அரசியல் மற்றும் அமைப்புரீதியான 
நடவடிக்கை. 

இதற்கான தத்துவ வலிமையைப் பெறுவதற்காக 
பின்நவீனத்துவம் என்னும் ஏகாதிபத்திய ஆதரவுத் 
தத்துவத்தை உலகெங்கும் இறக்கியது ஏகாதிபத்தியம்.

இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் ஏவுகணைகளான 
இவ்விரண்டும், பின்நவீனத்துவமும் என்ஜிஓக்களும் 
1980களில் வந்து இறங்கின.ரஜனி கோத்தாரி போன்ற 
ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் அகாடமி, இலக்கியம்,
அரசியல் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் 
பின்னவீனத்தையும் என்ஜிஓக்களையும் நாடெங்கும் 
நாற்றுக்களாக நட்டனர். இன்று நாம் நன்கறிந்த என்ஜிஓ
தலைவர் யோகேந்திர யாதவ் ரஜனி கோத்தாரியின் 
சீடர்தான்.

அப்போது இந்தியாவில் பகுஜன் சமாஜ், பாட்டாளி மக்கள் 
கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் 
ஆரம்பிக்கப் பட்டதில் பின்நவீனத்துவத்தின் பங்கும் 
வீச்சும்  மிகவும் அதிகம்.

பறிபோன சமூக அரசியல் வாழ்க்கை!
-------------------------------------------------------------
இந்தியாவின் சமூக அரசியல் வாழ்க்கையை என்ஜிஓக்கள் 
அரசியல் கட்சிகளிடம் இருந்து பறித்தெடுத்துக் 
கொண்டனர். சமூக அரசியல் இயக்கங்கள், சமூக 
அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தும் 
தங்களின் தனிப்பெரும் உரிமையை என்ஜிஓக்களிடம் 
இழந்து விட்டனர் அரசியல் கட்சிகள்.

தமிழ்நாட்டில் பல ஆண்டு காலம் நடைபெற்ற கூடங்குளம் 
அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் முற்றிலுமாக 
என்ஜிஓக்களின் கட்டுப்பாட்டில்தான் நடந்தது முடிந்தது.
ஓராண்டு காலம் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் 
போராட்டம் முற்றிலுமாக ஒரு என்ஜிஓப் போராட்டமே.
தற்போது கேரளத்தில் நடைபெற்று வரும் விழிஞ்சம் 
போராட்டம் கிறிஸ்துவப் பாதிரியார்களின் 
கட்டுப்பாட்டில் உள்ள என்ஜிஓக்கள் நடத்தும் 
போராட்டமே. 

இங்கெல்லாம் அரசியல் கட்சிகளின் இருப்பு என்பது 
முற்றிலுமாகவே என்ஜிஓக்களால் அடித்து உடைத்து
நொறுக்கப் பட்டு விட்டது.

இதன் உபரி விளைவாக பின்நவீனத்துவப் பண்பாடானது 
தமிழ்நாட்டின் அதிகாரபூர்வமான பண்பாடாக 
பண்பாட்டுத் தளத்தில் கோலோச்சுகிறது.
நிலவுடைமைச் சமூக காலத்தில் நிலவிய நிலவுடைமைப் 
பண்பாடு, முதலாளிய வளர்ச்சியோடு உருவாகி வந்த 
முதலாளியப் பண்பாடு, பாட்டாளி வர்க்கப் 
பண்பாடு ஆகிய எந்தப் பண்பாடும் தமிழ்நாட்டின் 
அதிகாரபூர்வ பண்பாடாக இன்று இல்லை. மாறாக 
அருவருக்கத்தக்க ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாடு 
மக்களின் பண்பாட்டுத் தளம் முழுவதையும் ஆக்கிரமித்துக் 
கொண்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டின் முதல்நாளன்று குடித்து 
விட்டு சாலைகளில் பேய் வேகத்தில் வாகனம் ஓட்டுவது,
நள்ளிரவைத் தாண்டியும் நீடிக்கும் இரவு விருந்து 
மற்றும் பார்ட்டிகளில் (rave parties) ஆன் பெண் இரு பாலரும் 
பங்கேற்பது, முறைப்படியான திருமணம் புரிந்து 
கொள்ளாமல் "லிவ்விங் டுகதர்" முறையில் சிலகாலம் 
பொழுதுபோக்கு விட்டுப் பின் பிரிவது, பாலுறவை 
திருமணத்துக்கு அப்பால் வைத்துக் கொள்ளுவதே 
அறம் என்னும் பிறழுணர்வு இத்தியாதி இத்தியாதி!

ஏகபத்தினி விரதன் என்பது,
இம்மை மாறி மறுமை ஆயினும் 
நீயாகியர் என் கணவர் 
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே 
என்ற பண்பாட்டைப் பழிப்பது 
என்பதாக கழிபெருங்காமமே இன்றய தமிழ் மக்களின் 
பண்பாடாக மாறியுள்ளது. இது உறுதியிலும் 
உறுதியாக பாட்டாளி வர்க்கப் பண்பாடு அல்ல.
சீரழிந்த பின்நவீனத்துவப் பண்பாடு! இதை 
முறியடிப்போம்!
***********************************************   திருமணத்தைத் தாண்டியும் 

பின்நவீனத்துவக் காமவெறிப் பண்பாடு!

        
 
     
 
 
  
  
  

  
  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக