இதைப் படித்து விட்டு கோபம் எல்லாம் வரவில்லை. சிரிப்பு தான் வந்தது, அதுவும் வாய் வழியான சிரிப்பு அல்ல. பிறகு எந்த உறுப்பு வழி சிரிப்பு என்பது அவரவர் விருப்பம்.
Mcap என்பது ஒரு Notion, அதை உடனடியாக செல்வம் (Wealth) என்று கருதுவதோ, ஐயகோ வாராவாரம் மூவாயிரம் கோடி பூடுச்சாமே என்று ஒப்பாரி வைப்பதோ, well, பல லட்சம் முறை வடிகட்டப்பட்ட அடிமுட்டாள்களுக்கு மட்டுமே சாத்தியம். அத்தகைய ஒன்றினை நாம் காண வாய்ப்பளித்தது இப்பிறவியில் நமக்கு அளிக்கப்பட்ட Laughter Quotientகளில் ஒன்று. அப்புறம் ஒரு விஷயம், Laughter through @$$ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டாத விஷயங்கள்.
அடானி மதிப்பு விழுந்தது, அம்பானி மதிப்பு விழுந்தது, இந்தியாவில் முதலீட்டாளன் எல்லாம் பஞ்சப்பராரி ஆகி விட்டான் என்று பிலாக்கணம் பாடுகிறான். சரி. அமெரிக்காவில்??? இங்கிலாந்தில்???? என்னவோ மாரியம்மன் கோவில் திருவிழா பந்தலை பிரிப்பது போல ஒவ்வொரு வங்கியாக தினமும் மூடுவிழா நடத்துகிறான் அமெரிக்கா. ஆனானப்பட்ட Credit Suisse நிறுவனத்தை பழைய இரும்பு வாங்கும் காசுக்கு விற்றிருக்கிறான். ஒரு வார்த்தை கிடையாது அதைப் பற்றி!
எதில் வந்துள்ளது ரிப்போர்ட் என்று பார்த்தால் BS. சரியான பெயர் தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக