புதன், 22 மார்ச், 2023

 பேராசிரியர் DS அவர்களின் கவனத்திற்கு,

இயற்கை அறிவியலை மட்டுமே 

(இயற்பியல், கணிதம் முதலியவை)

நான் அறிவியல் என்று குறிப்பிடுகிறேன்.

மூல ஆசான் ஸ்டாலின் அவ்வாறே 

குறிப்பிட்டார். அவர் வழி நின்று 

இயற்கை அறிவியலையே அறிவியல் 

என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளேன்.


சமூக அறிவியல்களைக்கூட (social sciences) 

அறிவியல் என்று குறிப்பிடும் தவறான 

நடைமுறை சமூகத்தில் உள்ளது. 

சமூகவியல் துறைகள் என்றே அவற்றைக் 

குறிப்பிட வேண்டும். அவை அறிவியல் அல்ல.    


அறிவியலைப் போன்றே மொழியும் 

வர்க்க சார்பற்றதுதான்.

மொழி அடித்தளம்-மேற்கட்டுமானம் என்ற 

இருமையில் மேற்கட்டுமானத்தைச் 

சேர்ந்தது என்பது மார்க்சிய பால பாடமாக

நமக்குச் சொல்லித் தரப்பட்டது. பின்னாளில் 

மூல ஆசான் ஸ்டாலின் அவர்கள் மொழி 

அடித்தளத்தைச் சேர்ந்தது என்றும் 

கொள்ளலாம் என்று அறிவித்தார்.


தமிழ் மொழியானது பெரும் பூர்ஷ்வா

கலாநிதி மாறனுக்கும் அவருடைய 

வீட்டைத் துடைத்துப் பெருக்கும் குப்பன் 

சுப்பனுக்கும் பொதுவானதே! பூர்ஷ்வா 

வர்க்கத்துக்கு என்று தனிச் சலுகை எதையும் 

தமிழ் அவர்களுக்கு வழங்குவதில்லை.

அன்றாடங்காய்ச்சி என்பதற்காக குப்பனுக்கும் 

சுப்பனுக்கும் தமிழ் எதையும் மறுப்பதும் இல்லை. 

  


பேராசிரியர் DS அவர்களின் கவனத்திற்கு,

----------------------------------------------------------------

அறிவியல் கண்ணோட்டம் (scientific outlook, 

scientific approach etc)  இல்லாமல் உலகில் 

எந்த ஒரு துறையும் இருக்க இயலாது.

பொருளியல், வரலாறு, சமூகவியல் 

உள்ளிட்ட எல்லாத் துறைகளும் 

அறிவியல் அணுகுமுறையைக் கொண்டவை.

அறிவியல் பார்வையை உடையவை.

அறிவியலில் இருந்து துண்டித்துக் கொண்டு 

எந்த ஒரு துறையும் இயங்க இயலாது.


உதாரணமாக, தொல்லியல் துறையில் இன்று 

ரேடியோ கார்பன் டேட்டிங் பயன்படுகிறது.

நோபல் பரிசு பெற்ற வில்லார்டு லிபி என்னும் 

வேதியியல் அறிஞர் கண்டுபிடித்த உத்தியே 

இது. இவ்வர்று தொல்லியல் துறையில் 

அறிவியல் அணுகுமுறை இருப்பதாலே, 

அத்துறையை அறிவியல் என்று குறிப்பிடுவது 

துல்லியமற்றதாகும்.


அறிவியல் இவ்வளவு தூரம் அசுரத் தனமாக 

வளர்ந்த பின்னரும், குத்து மதிப்பாக 

ஒன்றை ஏன் குறிப்பிட வேண்டும்? துல்லியமாகக் 

குறிப்பிடலாம்! எனவே சமூக அறிவியல் 

துறைகளை சமூக அறிவியல் என்று 

குத்து மதிப்பாக்கம் செய்வதைத் தவிர்க்க 

வேண்டும் என்பாத்து என் பணிவான கருத்து.   


இக்கட்டுரை குறித்தும் Eastern Marxism Essays

என்ற நூலில் எஸ் என் நாகராசன் அவர்கள் 

அறிவியல் பற்றி எழுதியிருப்பது குறித்தும் 

அவருடன் நேரடியாகவே சிலமுறை 

விவாதித்து உள்ளேன். சில ஆண்டுகளுக்கு 

முன், அவர் சென்னையில் இருந்தபோது,

தோழர் மருது பாண்டியனின் முன்முயற்சியில் 

நான் அடிக்கடி எஸ் என் அவர்களைச் சந்தித்து 

அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த 

விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை.


தற்போது எஸ் என் எழுதிய இந்தக் 

கட்டுரைக்கு மறுப்புக் கூறுவது வீண் 

வேலையாகும். இதைப் படித்துப் 

புரிந்து கொண்டவர்கள் எவரேனும் 

இருப்பின், அவர்களுக்கு பதிலளிக்கலாம்.    



இதெல்லாம் நிச்சயமாக அபத்தம் என்ற 

வகையில் வரும். நீங்கள் சொன்னதை 

நிரூபிக்க வேண்டும். 





அறிவியலைப் போதிய அளவு கற்றிருந்தால் 

மட்டுமே மூல ஆசான் ஸ்டாலின் கூறியதைப் 

புரிந்து கொள்ள முடியும். ஸ்டாலின்

கூறியதைப் புரிந்து கொள்ள வேறு 

குறுக்கு வழி எதுவும் இல்லை.    


இன்று இந்த 2023ல் அறிவியல் அசுரத்தனமாக 

வளர்ந்து நிற்கிறது. அந்த அறிவியலை 

அறிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் 

பெரும் முயற்சிகளை, பேரளவு காலத்தைக் 

கோருபவை. இவ்வளவு முயற்சிகளை 

எல்லோராலும் மேற்கொள்ள இயலாது என்ற 

யதார்த்த நிலையையும் நாம் பார்க்க வேண்டும்.




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக