தமிழ்ப் பண்டிட் தற்குறிகள்!
---------------------------------------------
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்- சபைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.
1) மருத்துவன் தாமோதரனார் என்று ஒரு
சங்கப் புலவர் இருந்தார். தொழில்வழியாக
அவர் ஒரு மருத்துவர்.
2) கணியன் பூங்குன்றனாரை நாம் அறிவோம்.
அவர் ஒரு கணித வல்லுநர். அது போலவே
பக்குடுக்கை நன்கணியாரும் கணிதம்
பயின்றவர்.
3) மேலும் அரசர்கள் பலர் பாடிய பாடல்கள்
பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் உள்ளன.
4) தமிழர்களின் அறிவு, அறிவியல் ஆகியவை
பல்துறை அறிஞர்களால் உருவாக்கப்பட்டு
வளர்த்தெடுக்கப்பட்டவை. மாறாக
தற்குறிகளான தமிழ்ப்பண்டிட்டுகள்
உருவாக்கியவை அல்ல. எனவே தமிழர்களின்
பண்டைய அறிவியலுக்கு இன்றைய
தமிழ்ப்பண்டிட் தற்குறிகள் சொந்தம்
கொண்டாட அருகதையற்றவர்கள்.
5) இன்றைய சமூகத்தில் ஒரு தமிழ்ப்பண்டிட்
என்பவன் யார்? ஓர் இழிந்த தற்குறி.
அ) a plus b whole squared என்றால் என்னவென்று
தெரியாதவன்.
ஆ) டி மோவிர் தேற்றம் தெரியாதவன்.
இ) tan 45ன் value தெரியாதவன்.
ஈ) ஒரு சபையில் கேட்கும் கேள்விக்குப் பதில்
சொல்லத் தெரியாமல் பேந்தப்பேந்த
முழிப்பவன். இத்தியாதி...இத்தியாதி.
5) எனவே இத்தகைய தமிழ்ப்பண்டிட் தற்குறிகள்
பண்டைத் தமிழரின் வானியல் அறிவுக்குச்
சொந்தம் கொண்டாடுவது கயமை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக