ஆண்டுகளுக்குப் பெயரிடும் வழக்கம்
தமிழ் மரபில் ஒருபோதும் இருந்ததில்லை!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
தமிழன் கிழமைகளுக்குப் பெயரிட்டான்
(ஞாயிறு, திங்கள், செவ்வாய்....). அடுத்து
மாதங்களுக்குப் பெயரிட்டான்
(சித்திரை, வைகாசி,ஆனி.....). ஆனால்
ஆண்டுகளுக்குப் பெயரிடவில்லை.
ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கம் தமிழனிடம்
ஒருபோதும் இருந்ததில்லை.
தொல்காப்பியம் தமிழின் தொன்மையான இலக்கண
நூல். அதில் பெரும்பொழுது, சிறுபொழுது
பற்றியெல்லாம் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
ஆனால் ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டுவது பற்றியோ,
ஆண்டுகளின் பெயர்கள் பற்றியோ தொல்காப்பியத்தில்
ஒரு சிறு குறிப்பும் இல்லை.
தொல்காப்பியத்தின் பின்னர் எழுந்த நன்னூல்
இன்று நடைமுறையில் உள்ள தமிழிலக்கண நூல்.
அதிலும் ஆண்டுகளின் பெயர்கள் பற்றி எவ்விதக்
குறிப்பும் இல்லை.
இலக்கண நூல்கள் மட்டுமின்றி, பத்துப்பாட்டு
எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு நீதிநூல்கள்
பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட எந்த ஒன்றிலும்
ஆண்டுகளின் பெயர்களைப் பற்றி எக்குறிப்பும் இல்லை.
இதனால் பெறப்படும் நீதி என்னவெனில், தமிழர்கள்
ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டும் மரபைக்
கொண்டவர்கள் அல்லர் என்பதுதான்.
ஆங்கில, ஐரோப்பிய மரபுகளிலும்கூட, ஆண்டுகளுக்குப்
பெயர் சூட்டும் வழக்கம் இல்லை என்பதை நாம்
அறிவோம். கிழமைகளுக்கும் (Sunday, Monday)
மாதங்களுக்கும் (January, February) பெயர் சூட்டிய
ஐரோப்பியர்கள் ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டவில்லை.
ஆண்டுகளை எண்களால் குறிப்பிட்டனர் பண்டைத்
தமிழர்கள். 1,2 ,3 என்று 60 வரையிலான எண்களைக்
கொண்டு ஆண்டுகளைக் குறித்தனர். 60 ஆண்டுச்
சுழற்சி வானியல் அடிப்படையில் அமைந்தது.
(இது பற்றி தனிக் கட்டுரையில் காணலாம்).
ஆந்திரத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டை
ஆக்கிரமித்த தெலுங்கு வந்தேறி நாயக்கர்கள்
தங்களோடு தங்களின் பெயர் சூட்டப்பட்ட
ஆண்டுகளையும் இங்கு கொண்டு வந்து
புகுத்தினார்கள். ஈ வே ராமசாமி, அண்ணாத்துரை
போன்ற தெலுங்கர்கள் பிரபவ விபவ என்று
தொடங்கும் அந்த ஆண்டுகளை வெகுவாக
மக்களிடம் கொண்டு சென்றார்கள். தமிழ்
மக்களிடம் இல்லாத ஆண்டுகளுக்குப் பெயர்
சூட்டும் மரபை தெலுங்கர் ஈவே ரா தீய
உள்நோக்கத்துடன் தமிழர்களிடம் திணித்தார்.
இன்று சில தமிழக் கோமாளிப் பயல்கள் பிரபவ
விபவ என்று தொடங்கும் 60 ஆண்டுகளின்
பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு
தங்களின் அறியாமையை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள். கோமாளிகளே, தமிழன்
ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டுவதில்லை; தமிழிலும்
சரி, சமஸ்கிருதத்திலும் சரி.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல், விண்ணியற்பியல் கற்றவர்களிடம் இருந்து
காத்திரமான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
*********************************************** 99
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக