ஞாயிறு, 19 ஜனவரி, 2025


 1.2 கோடி மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியருக்கு   maru 
எட்டாவது ஊதியக்குழுவை மோடி அரசு 
அமைக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் ரூ 40,000 
ஆஆகு    ம்.


க உஆகக்கூடும் யர் வாய்ப்பு. கும்.  ஆகும்.  8ஆவது 



இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856ல் 
இயற்றப் பட்டது. இதற்காகப் போராடியவர் 
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். 1879ல் பிறந்த 
பெரியார் அல்ல.


 அழகான ஓர் இளம்பெண்ணை 
நான் காதலிக்கிறேன்!
------------------------------------------------


பூ விற்கும் 



முன்பை விட 




பின்குறிப்பு:
-------------------
மனிதகுல வரலாற்றிலேயே  கால்குலஸ் கணிதத்தை 
இவ்வளவு எளிமையாக என்னைத் தவிர யாரும் 
சொல்லித் தந்ததில்லை. இனிமேலும் எவரும் 
சொல்லித் தரப் போவதில்லை.

நான் உயிரோடு இருக்கும்வரை இதெல்லாம் 
உங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும். நான் 
மண்டையைப் போட்டு விட்டால் எல்லாம் நின்றுவிடும்.

72 வயதில் வாரத்துக்கு இருமுறை டயாலிசிஸ் 
செய்து கொண்டு இதையெல்லாம் எழுதிக் 
கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு 
காலமான எனது தந்தையார் திரு மு பிச்சாண்டி 
எம் ஏ பி டி அவர்களை நினைவு கூர்ந்து 
வணங்குகிறேன். தந்தையார் என்பதற்காக அல்ல.
அறிவைப் போதித்த ஆசிரியர் என்பதற்காக.

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற என் 
தந்தையார்  நெல்லை மாவட்டத்தில் 
ஒரு மேநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப்  
பணியாற்றி  ஒய்வு பெற்றவர். எனது அறிவுக்கு 
நான் எனது தந்தையாருக்கு கடன் பட்டுள்ளேன்.

என்னுடைய பதிவுகளின் மகத்துவத்தை 
உணருங்கள் நண்பர்களே.
********************************************   


 

வியாழன், 16 ஜனவரி, 2025



வேகவேகமாக விரிவடையும் பிரபஞ்சம்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது
என்ற உண்மையை எட்வின் ஹப்பிள் 1929ஆம்
ஆண்டிலேயே கண்டு பிடித்து உலகிற்குச்
சொன்னார். ஹப்பிளின் கண்டுபிடிப்பை ஏற்று
ஐன்ஸ்டின் தமது நிலைத்த பிரபஞ்சம் (static universe) 
என்ற கருத்தை மாற்றிக் கொண்டார்.

விரிவடையும் பிரபஞ்சம் (expanding universe)
என்றுதான் ஹப்பிள் கூறினார்.பின்னர் 
வேகமாக விரிவடையும் பிரபஞ்சம் (accelerating universe) 
என்று கண்டுபிடிக்கப் பட்டது. இதை நிரூபித்த மூன்று 
விஞ்ஞானிகளுக்கு 2011ஆம் ஆண்டிற்கான நோபல் 
பரிசு வழங்கப் பட்டது.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது போன 
நூற்றாண்டின் கதை. மொத்தப் பிரபஞ்சமும் 
அதிவேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது
என்பதுதான் தற்கால உண்மை. 

-----------------------------------------------------------
இதுதான் பிரபஞ்சத்தின் உள்ளடக்கம்.
Dark maatterம் dark energyயம் சேர்ந்து 
95 சதவீதமாக உள்ளது. இது அறியப்படாத 
பிரபஞ்சம் என்று வழங்கப் படுகிறது.

அப்படியானால் அறியப்பட்ட பிரபஞ்சம் என்பது 
5 சதவீதம் மட்டுமே. இது observable universe
என்று அழைக்கப் படுகிறது.

இதன் பொருள்: பிரபஞ்சத்தில் நாம் அறிந்து 
வைத்திருப்பது 5 சதவீதம் மட்டுமே. மீதியுள்ள 
95 சதவீத பிரபஞ்சம் பற்றி நமக்குத் தெரியாது.  
-----------------------------------------------------------------------------

பிரபஞ்சம் எப்படி விரிவடைகிறது?
------------------------------------------------------
வெயில் நேரங்களில் ரயில் தண்டவாளங்கள்
விரிவடையும். அவை விரிவடைவதற்கு இடம் 
வேண்டும். அதற்காகவே தண்டவாளங்களுக்கு  
இடையில் இடைவெளி ஏற்படுத்தி இருப்பார்கள்.
அந்த இடைவெளி  தருகின்ற இடத்தில் தண்டவாளம் 
விரிவடையும். இதை நாம் நன்கறிவோம்.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது தண்டவாளம் 
விரிவடவதைப் போல் அல்ல. தண்டவாளம் 
விரிவடைவதற்கு அதன் வெளிப்புறத்தில் 
(external space) இடம் தரப்பட்டுள்ளது. ஆனால்  
பிரபஞ்சம் விரிவடைவதற்கு இடமளிக்கும் 
எந்த விதமான வெளிப்புற இடமும் (external space) 
கிடையாது. 

எனவே பிரபஞ்சம் தனக்குள்ளேயே  விரிவடைந்து 
கொள்கிறது (The universe expands by itself) .அனைத்து
விரிவைடைதலும் பிரபஞ்சத்திற்கு உள்ளேயே 
நடைபெறுகிறது.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதன் பொருள்  
என்ன? தொலைதூர காலக்சிகள் நமது பால்வீதி 
(Milky Way) காலக்சியில் இருந்து  வேகமாக விலகிச் 
செல்கின்றன என்பதுதான் பிரபஞ்ச விரிவடைதல். 
அதாவது நமது காலக்சிக்கும் தொலைதூர 
காலக்சிகளுக்கும் இடையிலான தூரம் அதிகரித்துக் 
கொண்டே செல்வதுதான் பிரபஞ்சம் விரிவடைதல் 
எனப்படுகிறது. 

தொலைதூர காலக்சிகள்தான் விலகிச் 
செல்லுமா? நமக்கு அருகில் உள்ள காலக்சிகள் 
விலகிச் செல்லாதா என்ற கேள்வி இங்கு 
எழுகிறது. இதற்கான பதில் இதுதான்:
தொலைதூர காலக்சிகள் மட்டுமே விலகிச் 
செல்லும்; நமது காலக்சிக்கு அருகில் உள்ள 
காலக்சிகள் விலகிச் செல்லாது. ஏன்?

நமக்கு அருகில் உள்ள காலக்சிகள் ஈர்ப்பு 
(gravity) காரணமாக நம்முடைய காலக்சியுடன் 
கட்டுண்டு கிடக்கும். எனவே அவற்றால் 
விலகிச் செல்ல இயலாது. 

ஆனால் தொலைதூர காலக்சிகளுக்கும் நமது 
காலக்சிக்கும் இடையில் எவ்விதமான ஈர்ப்பும் 
(gravity) இல்லை. ஈர்ப்பு இல்லாததால் அவை 
நம்முடைய காலக்சியுடன் கட்டுண்டு 
கிடப்பதில்லை. எனவே 
அவை தம் இஷ்டம் போல் விலகிச் செல்லும்.

அன்று ஹப்பிள் தொலைநோக்கி (Hubble Space Telescope) 
மூலம் அறிந்து கொண்டதை விட, இன்று   
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி (James Webb Space Telescope)
மூலம் பிரபஞ்சம் விரிவடைவதை ஆழமாகவும் 
துல்லியமாகவும் அரிது கொள்கிறோம்.

நமது சூரியக் குடும்பத்தில் சனி கிரகம் உள்ளது.
சனிக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 
சற்றுத் தோராயமாக ஒன்றரை பில்லியன் 
கிலோ மீட்டர். அதாவது 150 கோடி கிலோமீட்டர். 
(1 billion = 100  crore).

பிரபஞ்சம் விரிவடைவதால் இந்த தூரம் 
மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறதா?
இல்லை. ஏனெனில் நமது சூரியக் குடும்பத்தில் 
உள்ள கோள்களும் சூரியனும் ஈர்ப்பினால் 
(gravity) கட்டுண்டு கிடப்பவை. எனவே அவை 
விலகிச் செல்லாது.
**********************************

இஙகம்ப்லேட். அச்சுரசி டு பெ வெரிஃபித் 
  

    
.    





  

  


 
புத்தாண்டின் அறிவியல்!
---------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
(முன்குறிப்பு: சிறு சிறு கட்டுரைகளாக எழுதி 
இறுதியில் தொகுத்துக் கொள்கிறேன்.
தொடர்ச்சியாக எழுத உடல்நலம் 
ஒத்துழைக்கவில்லை).
**********************************
(1) Y 2 K சிக்கல்:
------------------------
இன்றிலிருந்து கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு,
அதாவது 2000ஆம் ஆண்டில் ஒரு சிக்கல் கணினிகளில் 
ஏற்பட்டது. அதுதான் Y2K problem ஆகும்.

Y2K என்றால் year  2000 என்று பொருள்படும். மெட்ரிக் 
முறையில் K என்பது (kilo) 1000ஐக் குறிக்கும்.
2K என்றால் 2000.

இன்று 5K, 10K என்றால் 5000, 10,000 என்று சுலபமாகப் 
புரிந்து கொள்கிறார்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு 
அப்படி அல்ல.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேதியை எப்படி 
எழுதினோம்? 1985ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் 
தேதியை எப்படி எழுதினோம்?

25.05.84 என்று இந்திய முறையிலும் 
05.25.84 என்று அமெரிக்க முறையிலும் எழுதினோம்.
இந்திய முறை dd-mm-yy ஆகும்.
அமெரிக்க முறை mm-dd-yy ஆகும்.

1984ஐ 84 என்றே short formல்  குறிப்பிட்டோம் 
2000 ஆண்டின் பின் இவ்வாறு short formல்
குறிப்பிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் 
என்பது புரிந்தது. 04-26-12 என்று ஒரு தேதியைக் 
குறிப்பிட்டால் அது 1912ஆ அல்லது 2012ஆ 
 என்ற குழப்பம் ஏற்படும்.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
mm-dd-yy என்பதை mm-dd-yyyy என்று 
மாற்ற வேண்டும். இரண்டு இலக்க short formஐக் 
கைவிட்டு நான்கு இலக்க long formல் 
எழுத வேண்டும். இதுதான் தீர்வு.

இதற்கேற்ப கணினிகளில் mm-dd-yyyy
என்ற longform கொண்டு வரப்பட்டது. 
Y2K சிக்கல் தீர்ந்தது.

நான் எளிமையாக எழுதி விட்டேனே தவிர, 
தீர்வு அவ்வளவு சுலபமாக இல்லை.
உலகெங்கும் உள்ள கணினி நிபுணர்கள் 
(இந்திய நிபுணர்கள் உட்பட) தங்களின் 
அறிவுத்திறனால் இதை சாதித்தார்கள்.

அன்று இரவு, அதாவது புத்தாண்டு 2000 பிறந்த 
அன்றைய தேதியில் (01-01-2000) இரவு 12 மணிக்கு 
நைட் டியூட்டியில் இருந்த நாங்கள் கணினிகளையே 
வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
நாங்கள் கொடுத்த inputபடி dd-mm-yyyy   
என்று கணினி மாறுகிறதா என்று பார்த்துக் 
கொண்டிருந்தோம். SUCCESS! GRAND SUCCESS!  

வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்களில் எல்லாம் 
நான் டியூட்டியில் இருந்திருக்கிறேன்; டியூட்டி 
பார்த்திருக்கிறேன். அதனால்தான்.
என்னால் அதிகபட்சமான அறிவைப் பெற 
முடிந்தது.

இன்று நினைத்தாலும் அந்நிகழ்வு என் உடலில் 
goose bumpsஐ ஏற்படுத்துகிறது.

புத்தாண்டை, நூற்றாண்டை மில்லேனியத்தை 
கணினிக்குள் அடைப்பதும் கால ஒழுங்குடன் 
கணினிகளை இயங்க வைப்பதும் அறிவியலின்  
மகத்தான சாதனைகள்.

புத்தாண்டின் அறிவியல் குறித்து தொடர்ந்து 
பார்ப்போம்.
***************************************************      

   
மனோன்மணீயம் நான் படித்திருக்கிறேன்.
பட்ட வகுப்பில் தமிழ் மொழிப்பாடத்தில் 
drama பிரிவில் மனோன்மணீயம் இருந்தது. 
எனக்கு முந்திய ஆண்டு மாணவர்களுக்கு 
மிருச்ச கடிதம் என்ற சம்ஸ்கிருத நாடகம் 
இருந்தது. அதை மண்ணியல் சிறுதேர் என்று 
தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்கள்.

மனோன்மணீயத்தில் குடிலன் என்று ஒரு 
 பாத்திரம் உண்டு. வில்லன் பாத்திரம்தான். 
அன்று எங்கள் கல்லூரியின் மேனேஜராக 
இருந்த ஒருவரை குடிலன் என்றுதான் 
மாணவர்கள் அழைப்பார்கள்.
 
 
   
   

புதன், 15 ஜனவரி, 2025

தமிழும் சமஸ்கிருதமும்!  
--------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------

சமஸ்கிருதம் தமிழுக்குப் பிந்தியது. தமிழரின் 
வானியல் அறிவு மூலச்சிறப்பு (originality)
உடையது. பரந்துபட்ட மக்களால் ஒருபோதும் 
சமஸ்கிருதம் பேசப்பட்ட்தில்லை.

காளிதாசனின் நாடகங்களைப் படித்திருந்தால் 
ஓர் உண்மை புரியும். காளிதாசனின் நாடகங்களில் 
அரசனும் ராஜகுருவும் மட்டுமே சமஸ்கிருதத்தில் 
பேசுவார்கள். மற்றப் பாத்திரங்கள் எவையும் 
சமஸ்கிருதத்தில் பேச மாட்டார்கள் அவர்களுக்கு 
சமஸ்கிருதம் தெரியாது. அரசிகளில் மிகப் 
பலருக்கும் சமஸ்கிருதம் தெரியாது.

சித்திரை வைகாசி என்பனவெல்லாம் தமிழ் 
மரபில் மூலச்சிறப்புடன் உள்ள விஷயமே.
தமிழக் குழந்தைகள் தங்களில் தாய் தகப்பனை 
மம்மி டாட் என்று அழைப்பதால் தமிழ் மரபில் 
தாய் தகப்பனே கிடையாது என்று முடிவுக்கு 
வருவது எப்பேர்ப்பட்ட அபத்தம். அதுபோன்ற 
அபத்தம் சமஸ்கிருதத்திடம் இருந்து சித்திரையை 
தமிழ் பெற்றுக் கொண்டது என்பதும்.

ஒரு நிலப்பரப்பில் உள்ள மொழிகளுக்கு இடையே 
சொற்களின் கொடுக்கல் வாங்கல் நிகழவே 
செய்யும். அதை வைத்துக்கொண்டு ஒரு மொழி 
உயர்ந்தது என்றும் இன்னொரு மொழி தாழ்ந்தது 
என்றும் முடிவுக்கு வருவது சரியல்ல. தங்களின் 
prejudicesஐ மொழியில் காட்ட வேண்டாம்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அவர்களின் 
விசுவாசிகளும்  சம்ஸ்கிருத எதிர்ப்பை ஓர் 
இயக்கமாகவே நடத்தினர். இல்லாத மேன்மைகளை
சமஸ்கிருதத்திற்கு இருப்பதாகக் கற்பிப்பது 
சம்ஸ்கிருத எதிர்ப்புக்கு தூபம் போடும்.
------------------------------------------------------------

பெற்ற தாயை மம்மி என்றுதான் குழந்தைகள் 
அழைக்கிறார்கள். மம்மி என்பது 
தமிழ்ச்சொல் அல்ல. இதை வைத்துக்கொண்டு 
தமிழகக் குழந்தைகளுக்கு தாயே கிடையாது 
என்ற முடிவுக்கு வருகிறீர்கள்.

சமஸ்கிருதம் அன்று இந்தியா முழுவதும் பரவி 
இருந்தது. எனவே சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக 
இருந்தது. இன்று ஆங்கிலம் இந்தியா முழுமைக்குமான 
உற்பத்தி மொழியாக இருப்பது போல்.

எது உற்பத்தி மொழியாக இருக்கிறதோ இருந்ததோ 
அம்மொழியின் சொற்கள் பிற மொழிகளிலும் 
வழங்குவது இயல்பே. அப்படித்தான் சமஸ்கிருதச் 
சொற்கள் தமிழில் வழங்கின. இது தமிழில் சொற்கள் 
இல்லை என்றோ கருத்தாக்கம் இல்லை என்றோ 
பொருள்படாது.   
-----------------------------------------------------------------------
siththirai maathaththil powrnami enru 




சித்திரை மாதத்தில் என்றைக்கு பெளர்ணமி வரும்?
சித்திரை நட்சத்திரத்தன்று பெளர்ணமி வரும்.
இதன் காரணமாக சித்திரை என்ற மாதம் 
உருவானது. நட்சத்திரங்களின் பெயர்கள் 
சமஸ்கிருதத்தில் உள்ளன. நட்சத்திரங்களின் 
பெயர்களைக் கொண்டே மாதங்கள் பெயர் 
பெற்றமையால் மாதங்கள் அவற்றின் சமஸ்கிருதப் 
பெயர்களோடு நீடிக்கின்றன.

அன்று தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பகைமை 
இல்லை. சமஸ்கிருதம் வேறு, தமிழ் வேறு 
என்று பேதம் பார்க்கும் சிந்தனை இல்லை.
எனவே தமிழில் உள்ள தமிழ் மாதங்களின் 
பெயர்கள் மக்களிடம் சென்று சேரவில்லை.


தை என்பது தமிழ்ப்பெயரே.
தைஇத் திங்கள் தண்கயம் போல (புறம்)
தைஇத்  திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை)

சில நாட்களில் தனிக்கட்டுரை வெளியிடுகிறேன்.
அதுவரை பொறுத்திருக்கவும்.



வையாபுரிப பிள்ளை அனைவரும் அட்டியின்றி 
ஏற்றுக் கொண்ட தமிழறிஞர் அல்லர். அவர் 
முரண்பாடுகளின் மூட்டை. நேற்று ஒன்று 
சொல்லியிருப்பார்; இன்று அதை மறுப்பார்.
திருக்குறள் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு என்று 
உளறி அடிபட்டவர் வையாபுரிப பிள்ளை.

இரண்டாவது வையாபுரிப பிள்ளை தமிழ் 
கற்றவர். அவர் அறிவியல் கற்றவரோ 
வானியல் அறிந்தவரே இல்லை. எனவே 
வானியல் சார்ந்த விஷயங்கள் அவர் கூறும் 
கருத்துக்கள் ஏற்காத தக்கவை அல்ல.

சம்ஸ்கிருத வெறுப்பை அணைக்க நான் 
முயல்கிறேன்.நீங்கள் சமஸ்கிருதம் 
தமிழை விட உயர்ந்தது என்ற prejudiceஉடன் 
பேசுகிறீர்கள்.

நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு முகநூலில் 
பேசி விட்டுப் போய் விடுவீர்கள். ஆனால் ரோட்டில் 
போகிற சம்ஸ்கிருத அபிமானி அடி வாங்குவான்.

என்னுடைய இறுதித் தீர்ப்பு:
--------------------------------------------
சமஸ்கிருதத்தை வெறுக்க வேண்டியது இல்லை.
வெறுப்பது தவறு மட்டுமல்ல தற்குறித் தனமும் 
ஆகும்.

தமிழ் முந்தியது; சமஸ்கிருதம் பிந்தியது.

பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் 
தமிழ் பேசப் படுகிறது; தமிழ் பேச்சு மொழியாக 
இன்றும் உள்ளது.

சமஸ்கிருதம் இறந்துபோன மொழி. உயிரோடு 
இருக்கும்போது கூட சமஸ்கிருதம் மக்களால் 
பேசப்பட்ட மொழி அல்ல.

மக்களால் பேசப்படும் மொழிகளில்தான் அறிவுச் 
செல்வங்கள் திரளும். மக்களால் பேசப்படாத மொழி 
தேங்கும். அதில் அறிவுச் செல்வங்கள் திரளாது 

மற்ற மொழிகளில் திரண்ட அறிவுச் செல்வங்கள் 
சமஸ்கிருதத்தில் எழுதி வைக்கப் பட்டன.
இதுதான் உண்மை!

நியூட்டன் தனது தாயமொழியான ஆங்கிலத்தில்தான் 
சிந்தித்தார். அனால் தனது Principia Mathematica 
நூலை லத்தீனில்தான் எழுதினர். ஆங்கிலத்தில் 
எழுத அன்றைய சமூகம் அன்றைய அரசதிகாரம் 
அவரை அனுமதிக்கவில்லை.

மேற்கே லத்தீன் போன்று இந்தியாவில் சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் ஒருபோதும் தமிழை விட மேம்பட்டதில்லை.

மொழியின் பிரதான பண்பு communicationக்குப் 
பயன்படுவது. இந்தப் பண்பே சமஸ்கிருதத்தில் 
கிடையாது. அது ஒருபோதும் தகவல் தொடர்புக்குப் 
பயன்பட்டதில்லை. அதை எப்படி மொழி என்று 
சொல்ல முடியும்?






 


 
.
  
  
   

   

/         
 

செவ்வாய், 14 ஜனவரி, 2025

"திண்ணிலை  மருப்பின் ஆடு தலையாக 
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல்  மண்டிலம்"
என்கிறது நெடுநல்வாடை. தமிழ் மரபில் 
பன்னிரு ராசிகள் உண்டு.

தமிழ் மரபில் 12 ராசிகள் இல்லை என்றும்
சமஸ்கிருதத்தில்தான் உண்டு என்றும் 
கூறுவது நகைப்புக்கு இடமானது.

மேஷம் ரிஷபம் என்று தொடரும் ராசிகள் 
தமிழில் மேழம், விடை என்று செல்லும்..
தமிழில் உள்ள மேழம்  என்ற சொல்லை 
சமஸ்கிருதம் எடுத்தாள்கிறது; தவறில்லை.
விடை என்றால் காளை. தோடுடைய செவியன்\
விடையேறி ஓர் தூவெண் மதிசூடி ........

மேஷம் ரிஷபம் என்பதை தமிழர்கள் அட்டியின்றி 
ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்  சம்ஸ்கிருத 
எதிர்ப்பு எதுவும் இல்லாமலே.  இந்த நிலைமைக்கு 
எவரும் குந்தகம் விளைவிக்க வேண்டாம்.

குந்தகம் விளைவித்தால் சமஸ்கிருதம் தீவைத்துக் 
கொளுத்தப்படும். சம்ஸ்கிருத அபிமானிகள் 
இன்னலுக்கு ஆளாவார்கள்.
    .  
  

வெள்ளி, 10 ஜனவரி, 2025

பல்கலைகளின் துணைவேந்தர் நியமனம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------
2025 யுஜிசி நகல் விதிகளின்படி பல்கலைகளின் 
துணைவேந்தர்கள் பின்வருமாறு தெரிவு 
செய்யப் படுவர்.

1) மூன்று வல்லுநர்கள்கொண்ட ஒரு தேடல் குழுவை 
பல்கலைகளின் வேந்தர் (ஆளுநர்) நியமிப்பார்.
அ) வேந்தர் நியமிக்கும் ஓர் உறுப்பினர் தேடல் 
குழுவின் தலைவராக இருப்பார்.

2) யுஜிசி ஓர் உறுப்பினரை நியமிக்கும்.

3) சம்பந்தப்பட்ட பல்கலையின் செனட் அல்லது 
சிண்டிகேட் ஓர் உறுப்பினரை நியமிக்கும்.

இவ்வாறு அமைக்கப்பட்ட மூவர் கொண்ட 
தேடல் குழு துணைவேந்தரைத் தெரிவு செய்யும்.
    

துணைவேந்தருக்கான தகுதிகள்!
-----------------------------------------------------
அ) உயர் கல்விநிறுவனங்களில் 10 ஆண்டுகள் 
பேராசிரியராகப் பணி  புரிந்தவர்கள். 
ஆ) சிறந்த ஆய்வுக்கூடங்களில் முதுநிலை 
மட்டத்தில் பணிபுரிந்தவர்கள். 
இ) தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுத்
திட்டமிடல், பொதுத்துறை நிறுவனங்கள் 
ஆகியவற்றில் முதுநிலை மட்டத்தில் 
தலைசிறந்த கல்வியியல் பங்களிப்பைகச் 
செய்தவர்கள். இவர்களில் மிகச்சிறந்த தகுதி 
உடையவர் நுணைவேந்தராகும் அருகதை 
உடையவர்கள்.

கல்வித்துறையைச் சேர்ந்தவரை மட்டுமே 
துணைவேந்தராக ஆக்குவது என்ற பழைய 
நடைமுறை மாற்றத்துக்கு உள்ளாகிறது.

தனியார் துறையிலோ பொதுத்துறையிலோ உயர் 
கல்வித் தகுதியுடன் கூடிய சிறந்த நிபுணர்கள் 
துணைவேந்தராக முடியும்.

புரிந்து கொள்ள வசதியாக சில உதாரணங்களைச்  
சொல்கிறேன்.
உதாரணம்-1. நந்தன் நிலக்கேணி 
-----------------------------------------------------
இன்போசிஸில் பணியாற்றியவர் நந்தன் நிலக்கேணி.
அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இவரை 
அழித்து வந்து ஆதார் அட்டைகளை உருவாக்கும் 
பொறுப்பைக் கொடுத்தார். நந்தன் நிலக்கேணி 
ஒரு மாபெரும் சாதனையாளர். இவரை ஒரு 
பல்கலையில் துணைவேந்தராக நியமிப்பதில் 
என்ன தவறு காண முடியும்?

உதாரணம்-2; ரகுராம் ராஜன்.
---------------------------------------------
பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கி ஆளுநருமான 
ரகுராம் ராஜனை ஏதாவது ஒரு பல்கலையின்
துணைவேந்தராக நியமிப்பதில் என்ன தவறு?

உதாரணம்-3. மகேஷ் ஜெத்மலானி.
------------------------------------------------------
தேசிய சட்டப் பல்கலைகள் இந்தியாவில் 
25 இருக்கின்றன. ராம் ஜெத்மலானியின் மகன் 
மகேஷ் ஜெத்மலானியை (அவர் கட்சி 
சார்பற்றவராக இருக்கும் பட்சத்தில்)   
துணைவேந்தராக ஆக்குவதில் 
என்ன தவறு?

இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல 
முடியும்.இன்போசிஸ் நாராயண மூர்த்தியையோ 
அல்லது சாம் பித்ரோடாவையோ பல்கலைத் 
துணை வேந்தராக நியமிப்பதில் என்ன கேடு 
விளைந்து விடும்?

1950களில் 1960 களில்  என்ன நிலையோ அதே 
நிலை மாற்றமின்றி நீடிக்க வேண்டும் என்று 
எதிர்பார்ப்பது அறிவியலுக்கு எதிரானது. 

1960-1970களில் தமிழ்கற்றவர்களே துணை
வேந்தர்களாக நியமிக்கப் பட்டனர். மதுரைப்  
பல்கலையில் தெ பொ மீ, டாக்டர் மு வ, 
அண்ணாமலை பல்கலையில் டாக்டர் 
வ சுப மாணிக்கனார் என்று தமிழாசிரியர்கள்
துணைவேந்தர்களாகப் பொறுப்பேற்றனர்.

இன்று நந்தன் நிலக்கேணியோ, மகேஷ் 
ஜெத்மலானியோ துணைவேந்தராக ஆவது  
தெபொமீ. முவ காலத்தை விட மிகப் பன்மடங்கு 
முன்னேற்றத்தைக் காட்டும்.

Opposition for the sake of opposition என்பது 
முட்டாள்தனமானது.
***********************************************  

   
    


  
    
  
 

வியாழன், 9 ஜனவரி, 2025

 காமத்தை மகளிடமோ தாயிடமோ தீர்த்துக் 
கொள்ளலாம் என்று பெரியார் கூறியதாக 
பல ஆண்டுகளாக, பல பத்தாண்டுகளாகச் 
சொல்லப்பட்டு வருகிறது. 1980 முதன் 
நான் இதைக் கேட்டு வருகிறேன். 
அப்போதெல்லாம் பெரியார் தரப்பில் 
இருந்து எதிர்ப்பு எதுவும் இல்லாமல்தான் 
இருந்தது.

திராவிடர் கழக அமைப்புகள் ஆள்காட்டி 
அமைப்புகளாக மாறி சீமான்  மீது போலீசில் 
புகார் கொடுத்துள்ளன. 

முதல் பத்தியின் முதல் வாக்கியம் ஓர் 
anarchist statement. Anarchists never hesitated to make 
anarchist statements and EVR was the rank anarchist.     
 




திங்கள், 6 ஜனவரி, 2025

 NEW பிரபஞ்சமும் இணைகோடுகளும்!

------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------

நமது பிரபஞ்சத்தில் இரண்டு இணைகோடுகள்

ஒன்றையொன்று சந்திக்குமா?


பிரபஞ்சவியலில் (cosmology) இது முக்கியமான கேள்வி.

இந்தக்  கேள்விக்குப் பதில் கூற வேண்டுமெனில்,

நமது பிரபஞ்சத்தின் வடிவியல் அமைப்பு (geometry)

எப்படி இருக்கிறது என்று தெரிய வேண்டும்.


அதாவது நமது பிரபஞ்சம் 

1) தட்டையாக இருக்கிறதா? அல்லது 

2) நேர்மறை வளைவுடன் (positive curvature) இருக்கிறதா?

(Positive curvature என்றால் கால்பந்து போல் இருக்கும்)

அல்லது 

3) எதிர்மறை வளைவுடன் (negative curvature) இருக்கிறதா? 

(Negative curvature என்றால் குதிரைச் சேணம் போல் இருக்கும்.

குதிரைச் சேணம் என்று உணர்க; குதிரைச் சாணம் அல்ல).          


இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும். அதற்குக் 

கிடைக்கிற பதிலைக் கொண்டு, இணைகோடுகள் 

சந்திக்குமா சந்திக்காதா என்ற கேள்விக்குப் பதில் 

சொல்லலாம்.


இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, நமது 

பிரபஞ்சம் தட்டையாக இருக்கிறது.அதாவது நமது 

பிரபஞ்சத்தின் வளைவு (curvature) பூஜ்யம் ஆகும்.


சரி, பிரபஞ்சம் தட்டையாக உள்ளது. ஒரு தட்டையான 

பிரபஞ்சத்தில் யூக்ளிட்டின் வடிவியல் செயல்படும்.

தட்டைப் பிரபஞ்சத்தில் ஒரு முக்கோணத்தின் 

கோணங்களின் கூட்டுத்தொகை  180 டிகிரியாக 

இருக்கும். இங்கு பித்தகோரஸின் தேற்றம் 

செய்யும்.


எனவே ஒரு தட்டைப் பிரபஞ்சத்தில் இணைகோடுகள்  

ஒருபோதும் சந்திக்காது.

ஒரு கோடு x = 1 என்றும், இன்னொரு கோடு x = 2 என்றும் 

இருந்தால், (1 and 2 are x coordinates), இக்கோடுகள் 

ஒருபோதும் சந்திக்காது. ஏனெனில் 1 is not equal to 2.


ஆக மொத்தத்தில், 

1) நமது பிரபஞ்சம் தட்டையானது (flat).     

2) இதன் வளைவு (curvature) = 0.  

3) இங்கு யூக்லிட்டின் வடிவியல் வேலை செய்யும்.

(Eucledean geometry holds in our flat universe).

4) ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படியான 

வெளிகால வளைவுக்கும் (spacetime curvature) நமது 

பிரபஞ்சம் வடிவியல் ரீதியாக தட்டையாக  இருப்பதற்கும் 

(geometrically flat) எவ்வித முரண்பாடும் இல்லை. 

Space time curvature holds good as well as flat universe holds good.

5) நமது பிரபஞ்சம் மட்டுமே இருக்கின்ற ஒரே ஒரு 

பிரபஞ்சம் ஆகும். பன்மைப் பிரபஞ்சக் கோட்பாட்டை 

(multiverse theory) இக்கட்டுரையாசிரியர் ஏற்கவில்லை.

**********************************************************

பின்குறிப்பு:

இணைக்கப்பட்ட படங்களைப் பார்க்கவும்.

*********************************************************


   


ஞாயிறு, 5 ஜனவரி, 2025

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.

வேண்டாமை போலும் தீண்டாமை போலும் 
எதிர்மறைப் பொருளைக் கொண்டது அருகாமை.

இங்கிலாந்து ஸ்காட்லாந்து அயர்லாந்து ஆகிய 
இடங்களில்  ஆங்கிலம் வெவ்வேறு விதமாகப் 
பேசப்பட்டது. இதன் பின்னரே ஆங்கிலம் 
தரப்படுத்தப் பட்டது. ஆக்ஸ்போர்டு பகுதியில் 
பேசப்படும் ஆங்கிலமே சரியானது என்று 
தரப்படுத்தப் பட்டது.

தமிழ் அவ்வாறு தரப்படுத்தப் படவில்லை. 
இதன் விளைவாக எந்த ஒரு தரப்பும் தனது 
நிலையே சரி என்று உரிமை கோர இயலாது.

தொல்காப்பிய இலக்கணம் தற்காலத்தில் 
பின்பற்றப் படவில்லை. நன்னூல் இலக்கணமே 
பின்பற்றப் படுகிரது. பள்ளி, கல்லூரிகளில் 
நன்னூலே கற்றுத் தரப் படுகிறது.

எனவே அருகாமை என்பது தொலைவில் என்றே 
பொருள்படும்.


உளவியல் ஆலோசகரும் கலாம் ஸ்கூல் 
நிர்வாகியுமான மீனா என் இல்லத்திற்கு 
வருகை தந்து என்னைச் சந்தித்தார்.
இருவரும் அளவளாவினோம்.

மீனாவுக்கு மறைந்த சுஜாதா எழுதிய 
தலைமைச் செயலகம் என்ற அறிவியல் 
நூலைப் பரிசளித்தேன். அவரின் தம்பிக்கும் 
நூல்  பரிசளித்தேன்.

இனிய நினைவுகள்!
********************************************






  
குற்றவாளி ஞானசேகரனின் தொழில்நுட்ப அறிவு!
------------------------------------------------------------------------------
குற்றவாளி ஞானசேகரன் தனது மொபைல் 
போனை ஃபிளைட் மோடில் வைத்திருந்தார் 
என்று காவல் ஆணையர் பொதுவெளியில் 
தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட 
மூன்று பெண் அதிகாரிகளின் தலைமையிலான 
சிறப்புப் புலனாய்வுக்குழு பாதிக்கப்பட்ட 
மாணவியை விசாரித்தது. சம்பவம் நடந்தபோது  
குற்றவாளி ஞானசேகரன் தனது மொபைல் 
போனில் பேசியதை மாணவி பெண் போலீஸ் 
அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார். 

காவல் ஆணையரின் வெர்ஷனும் பாதிக்கப்பட்ட 
பெண்ணின் வெர்ஷனும் வேறுபடுகிறது.
இரண்டுக்கும் இடையிலான முரண்பாடு 
பாரதூரமாக உள்ளது. 

ஒரு மொபைல் போன் ஃபிளைட் மோடில் வைக்கப் 
பட்டிருந்தால் அதில் பேச முடியாது. Outgoing and 
incoming calls ஃபிளைட் மோடில் கிடைக்காது.
ஏனெனில் ஃபிளைட் மோட் என்பது Wireless Disabled
நிலை ஆகும்.

மொபைல் ஃபோன் என்பது முற்றிலும் ஒரு 
வயர்லெஸ் கருவி. Wireless Enabled நிலையில்தான் 
அதில் பேச முடியும்  Wireless Disabled நிலையில் அதில் 
அழைப்புகளைப் பெறவோ பேசவோ முடியாது.

ஞானசேகரன் தனது மொபைல் ஃபோனில் 
பேசினான் என்பதை மாணவி உறுதிப் படுத்துவதால் 
அவன் தனது மொபைல் ஃபோனை ஏரோப்பிளேன் 
மோடில் வைத்திருக்கவில்லை என்பது நிரூபணம் 
ஆகிறது. 

ஃபிளைட் மோட் பற்றியும் Wireless Disabled கண்டிஷன் 
பற்றியும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றவன் 
தள்ளு வண்டியில் பிரியாணி விற்கும்  ஞானசேகரன் 
என்று வர்ணிப்பது பித்தலாட்டம் ஆகும்.
***********************************************    



                
மாக்னஸ் கார்ல்சன்னும் டி  எம் கிருஷ்ணாவும்! 
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
2024ஆம் ஆண்டிற்கான மின்னல்வேக சதுரங்கப் 
போட்டி (Rapid and Blitz format) நியூயார்க்கில் (வால் ஸ்டிரீட்)  
டிசம்பர் 26 முதல் 31 வரை நடைபெற்றது.

இதில் பங்கேற்று ஆடிய உலக சாம்பியன் மாக்னஸ் 
கார்ல்சன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததால் 
அவருக்கு அபராதம் விதிக்கப் பட்டது. அதைச் 
செலுத்த மறுத்ததால் அவர் தகுதிநீக்கம் 
(disqualified) செய்யப்பட்டார். ஒன்பதாவது சுற்றில் 
விளையாட அவரை FIDE நிர்வாகம் 
அனுமதிக்கவில்லை.

நம்மூர் போலி முற்போக்குகளுக்கு இந்தச் செய்தி 
பெரும் ஆச்சரியத்தைத் தரலாம். தாராளவாத 
அமெரிக்காவில்  கூட ஜீன்ஸ் அணியத் தடையா 
என்று அதிர்ச்சி அடையலாம். FIDE விதிகளின்படி 
(Dress code)  ஜீன்ஸ் பேன்ட் முறையான உடை அல்ல.
எனவே உலக சாம்பியனுக்கே அனுமதி மறுக்கப் 
பட்டு அவர் தகுதிநீக்கம் செய்யப் பட்டார். (பின்னர் 
சமரசம் ஏற்பட்டு கார்ல்சன் பங்கேற்க 
அனுமதிக்கப்பட்டு  2024ஆம் ஆண்டின் உலக 
சாம்பியன் பட்டத்தை  அவர் அயான் நெப்போவுடன்
பகிர்ந்து கொண்டார்..

நம் ஊரிலும் ஒரு பூர்ஷ்வா இசைமேதை 
உடைப்புரட்சி செய்தார். 2024 டிசம்பர் சங்கீத 
சீசனில் லுங்கி அணிந்து வந்து கச்சேரி செய்தார்.
டி எம் கிருஷ்ணா.  

லுங்கி முரளியான உடை அல்ல. சபாக்களில் 
கச்சேரி செய்யும் ஒரு வித்துவான் முறையான 
உடையை அணிந்திருக்க வே ண்டும் என்று 
ரசிகர்கள் எதிர்பார்ப்பர். இது நியாயமே.

இந்த சீசனில் லுங்கி அணிந்து வந்து புரட்சி
செய்த பூர்ஷ்வா இசைமேதை அடுத்த சீசனில் 
பாவாடை தாவணி அணிந்து வந்து கச்சேரி
செய்து ஆண்-பெண் சமத்துவத்தை 
நிலைநாட்ட முற்படலாம்.

ஜீன்ஸ் அணிந்து வந்ததால் உலக சாம்பியன் 
கார்ல்சனுக்கே  அமெரிக்காவில் தடை என்ற 
செய்தியைப் படித்து அரண்டு போயிருக்கக்
கூடும் நமது பூர்ஷ்வா இசைமேதை. 
***************************************************

   

 
  
 

       

சனி, 4 ஜனவரி, 2025

உலகப்புகழ் பெற்ற இந்தியப் பெண்மணி!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
Indian woman's Rapid CHESS champion) 
சதுரங்க வீராங்கனை கோனேரு ஹம்பியை 
அழைத்துப் பாராட்டி உள்ளார் பிரதமர் மோடி.
உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) நடத்தும் 
அதிவிரைவு சதுரங்கப் போட்டியில் (Rapid Chess Tournament)  
பெண்கள் பிரிவில் 2024ஆம் ஆண்டிற்கான உலக 
சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் ஹம்பி. 

இவ்வாறு கோனேரு ஹம்பி உலகப்புகழ் பெற்ற 
பெண்மணியாகி விட்டார். இதனால் பிரதமரின் 
பாராட்டு என்ற கெளரவத்தைப் பெறுகிறார்.

ஆத்திர மாநிலம் குடிவாடா நகரைச் சேர்ந்த
தெலுங்குப் பெண்மணியே கோனேரு ஹம்பி.  
இவரின் தந்தையார் வேதியியல் பேராசிரியர்.
ஹம்பிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் 
இவரின் கணவர் ஒரு software professional.  

இந்திய சதுரங்க வீராங்கனைகளில் முதலிடத்தில்  
இருப்பவர் கோனேரு ஹம்பி. நியூயார்க்கில் 
அண்மையில் டிசம்பர் 2024ல் நடைபெற்ற 
அதிவிரைவு சதுரங்கப் போட்டியில்  பெண்கள் 
பிரிவில் (Rapid Chess World Champion Women) 
உலக சாம்பியன் பட்டம் வென்றார் கோனேரு 
ஹம்பி. உலக சாம்பியன் பட்டத்தை இவர்
இரண்டாவது முறையாக வெல்கிறார். 2019ல் 
ஏற்கனவே Rapid Chess சாம்பியனாக வெற்றி 
பெற்றவர் ஹம்பி. பிரசவம், குழந்தைப்பேறு
காரணமாக சில ஆண்டுகள் விளையாடாமல் 
இருந்த அவர் மீண்டும் விளையாடத் தொடங்கி 
சாம்பியன் ஆகி உள்ளார். 
    
உலக சதுரங்க சம்மேளனம் சதுரங்கப் போட்டிகளை  
மூன்று வகையாக  (Three Formats) நடத்துகிறது.
1) Classical 2) Rapid 3) Blitz.

இமமூன்று வகைப் போட்டிகளிலும் ஆட்டத்திற்கு  
அனுமதிக்கப்படும் நேரம் மாறுபடும்.
கிளாசிக்கல்: ஒவ்வொரு பிளேயருக்கும் 
முதல் 40 நகர்த்தல்களுக்கு 90 நிமிடங்கள் 
வழங்கப்படும். தொடர்ந்து 30 நிமிடங்கள் 
வழங்கப்படும். அதற்குள் ஆட்டத்தை முடிக்க 
வேண்டும்.அத்துடன் ஒரு நகர்த்தலுக்கு 
30 வினாடி இன்கிரிமெட் வழங்கப்படும்.

Rapid: ஒவ்வொரு பிளேயருக்கும் 15 நிமிடங்கள் 
வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு பிளேயருக்கும் 
ஒரு நகர்த்தலுக்கு 10 வினாடி இன்கிரிமென்ட் 
வழங்கப்படும்.

Blitz: ஒவ்வொரு பிளேயருக்கும் 3 நிமிடங்கள் 
வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு பிளேயருக்கும் 
ஒரு நகர்த்தலுக்கு 2 வினாடி இன்கிரிஎண்ட் 
வழங்கப்படும்.      

2013ல் சென்னையில் நடைபெற்ற உலக சாம்பியன் 
போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்து 
மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். இதுதான் 
கிளாசிக்கல் ஃபார்மட்.    

அன்மையில் டிசம்பர் 2024ல் சிங்கப்பூரில் நடைபெற்ற 
உலக சாம்பியன் போட்டியில் சீன வீரர் 
டிங்  லிரென்-ஐ (Ding Liren) தோற்கடித்து இந்திய 
வீரர் குகேஷ் தொம்மராஜ் (Gukesh Dommaraju)  
வெற்றி பெற்றாரே, அது Classical Format.

Rapid Chess formatல் பொதுப்பிரிவில் (open) ரஷ்ய 
இளம் வீரர் பதினெட்டே வயதான வோலோடர் 
முர்சின் (Volodar Murzin) சாம்பியன் ஆகி உள்ளார். 
பெண்கள் பிரிவில் 37 வயதிலும் தனது ஆட்டத் 
திறனைத் தக்க வைத்துக் கொண்டு சாம்பியனாகி 
உள்ளார் கோனேரு ஹம்பி.  

உலக Blitz Chess  போட்டியில் மாக்னஸ் கார்ல்சன், 
ரஷ்ய வீரர் அயான் நெப்போ ஆகிய இருவரும் 
கூட்டாக உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
இது பொதுப்பிரிவு (open section) சாம்பியன் போட்டியின் 
முடிவு.
        
Blitz Chess மகளிர் பிரிவில்  சீன வீராங்கனை 
ஜூ வெஞ்சன் ( Ju Wenjun)  உலக சாம்பியன் 
ஆகியுள்ளார்.

மோடி அரசுக்கும் தமிழகப் பெண்கள் 
அமைப்புகளுக்கும் நியூட்டன் அறிவியல் மன்றம் 
பின்வரும் வேண்டுகோளை விடுக்கிறது. 

பெண்களும் பெண்ணுரிமை அமைப்புகளும் 
கோனேரு ஹம்பியை ஒரு iconic figureஆக 
பெண்களிடமும் மக்களிடமும் எடுத்துச் 
செல்ல வேண்டும்.

கோனேரி ஹம்பி 2007ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
மோடி அரசு அவருக்கு பத்மபூஷண் விருது  
வழங்க வேண்டும்.
************************************************



வியாழன், 2 ஜனவரி, 2025

கேம் தியரி என்னவெல்லாம் செய்யும்?
தமிழக அரசியலில் முதன் முதலாக 
கேம் தியரியைப் பிரயோகித்த அண்ணாமலை!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
ஜவகர்லால் நேரு, சாஸ்திரி போன்ற பிரதமர்கள் 
காலத்தில் இந்தியத் தேர்தலானது பத்தாம் 
பசலித் தனமாகவே இருந்து வந்தது.

இந்தியத் தேர்தல்களை அறிவியல்படுத்த 
வேண்டும் என்று முயன்றவர் இந்திரா காந்தி 
அம்மையார்.EVM எனப்படும் மின்னணு 
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகத் தேர்தல் 
நடத்தும் முறையைக் கொண்டு வந்தவர் அவர். 1982ல் 
கேரளத்தில் பரவூர் சட்ட மன்றத் தொகுதிக்கு
நடந்த இடைத்தேர்தலில் முதன் முதலாக EVM 
பயன்படுத்தப் பட்டது. 

இந்தியத் தேர்தல்களை அறிவியல்மயம் ஆக்கும் 
செயல்களைத் தொடங்கி வைத்த இந்திராகாந்தி 
அம்மையாரின் காலில் விழுந்து வணங்குகிறேன். 

1984ல் இந்தியாவில் மக்களவைத் தேர்தல்கள் 
நடந்தன. இந்திரா காந்தி படுகொலைக்குப் 
 பின்னர் நடந்த இத்தேர்தலில் காங்கிரஸ்
வரலாறு காணாத பெருவெற்றியைப் பெற்றது.
இந்தத் தேர்தலில் இந்திய வாக்காளர்களுக்கு 
Psephologyஐ அறிமுகப் படுத்தினார் பிரணாய் ராய். 
ஸெபாலலஜி என்பது தேர்தல் முடிவுகளை 
முன்கூட்டிக் கணிக்கும் ஒரு அறிவியல். 

இந்தியத் தேர்தல்களில் பிரயோகிக்கப் பட்ட 
ஸெபாலஜி இரண்டாவது அறிவியல் 
நடவடிக்கை ஆகும். Opinion pollம் Exit pollம்   
இல்லாத இன்றைய தேர்தல்களை நாம் 
நினைத்துப் பார்க்க முடியுமா?

இந்தியத் தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்ட 
மூன்றாவது அறிவியல் நடவடிக்கை என்ன?
அரசியல் கட்சிகளின் சார்பாக தேர்தல் வியூக 
நிபுணர்கள் தேர்தல்களை பற்றி முடிவு 
செய்வது. பிரசாந்த் கிஷோர் என்னும் 
தேர்தல் வியூக நிபுணர் திமுகவுக்கு தேர்தல் 
வியூகம் அமைத்துக் கொடுத்ததை நாம் அறிவோம்.   

மேற்கூறிய  மூன்று பிரதான அறிவியல் 
நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியத் 
தேர்தல் அரசியலில் நான்காவதாக Game theoryஐப் 
பிரயோகிக்கிறார் பாஜக தலைவர் 
அண்ணாமலை.

அண்ணா பல்கலை மாணவிக்கு இழைக்கப்பட்ட 
பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து   

தன்னை சவுக்கால் அடித்துக் கொள்ளும் போராட்டம், 
செருப்பு அணியாமல் இருத்த ஆகிய தொடர் 
அதிரடிகளை அறிவித்தார் அண்ணாமலை.
இது சரியா, தப்பா? அண்ணாமலை அவர்கள் 
இப்போராட்டங்களலின் மீது Game theoryயைப் 
பிரயோகித்து நாஷ் சமநிலை கண்டறிந்து 
optimum benefit கிடைப்பது உறுதி செய்து 
அப்போராட்டங்களை அறிவித்துள்ளார் அண்ணாமலை.    


1) EVMகள் (இந்திரா காந்தி) 
2) opinion polls (பிரணாய் ராய்) 
3) தேர்தல்களின் வெற்றி தோல்வியை கட்சித் 
தலைவர்களுக்குப் பதிலாக தேர்தல் வியூக 
நிபுணர்கள் முடிவு செய்வது (பிரசாந்த் கிஷோர்) 
4) Game theory (அண்ணாமலை)
ஆகிய நான்கும்  இல்லாமல் இந்தியத் தேர்தல்கள் 
இனி இல்லை.

Game theory என்ற ஒன்றை உருவாக்கி அதை
 நிரூபித்துக் காட்டியவர் ஜான் வான் நியூமேன் 
என்னும் அமெரிக்க இயற்பியலாளர். 
Game theoryயை துல்லியப் படுத்தும் பொருட்டு 
நாஷ் சமநிலை (Nash equilibrium) என்பதை  
உருவாக்கியவர் அமெரிக்க கணித நிபுணர் 
ஜான் நாஷ். Gametheroy பற்றியும் நாஷ் சமநிலை 
பற்றியும் ஒன்றும் தெரியாதவர்களால் 
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.
(நாஷ் சமநிலை குறித்தும் Game theory குறித்தும் 
அறிவியல் ஒளி ஏட்டில் முன்பு நான் எழுதிய 
கட்டுரைகளைப் படிக்கலாம்).

அறிவியல் சிக்கல்களுக்கு மட்டுமே அறிவியலால் 
தீர்வு வழங்க முடியும் என்றும் சமூகவியல் 
சிக்கல்களுக்கு அறிவியலால் தீர்வு வழங்க 
இயலாது என்றும் ஒரு தப்பெண்ணம் (prejudice)
சமூகத்தில் நிலவுகிறது. Game theoryயின் 
பிரயோகத்தைத் தொடர்ந்து மேற்குறித்த 
தப்பெண்ணம் மறையத் தொடங்கி விட்டது.

சமூகவியல் சிக்கல்களுக்கும் துல்லியமான 
தீர்வுகளை சமகால அறிவியல் வழங்குகிறது.    

மூன்றாம் உலகப்போர் வருமா?
அணுஆயுதப்போர் வருமா?
உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு வீசுமா?
போன்ற பல்வேறு கேள்விகள் சமூகவியல் 
சிக்கல்களை உணர்த்துபவை. இவற்றுக்கு 
Game theory மூலம் அறிவியல் தீர்வு வழங்குகிறது.

அண்ணாமலையின் கேம் தியரி பிரயோகத்தை 
அடுத்து நான் மூன்று கட்டுரைகளை எழுதி 
உள்ளேன். அவற்றை போலி முற்போக்குகள்,
போலி நக்சல்பாரிகள், திராவிடக் கசடுகள் 
ஆகியோரால் புரிந்து கொள்ள முடியவில்லை 
என்பதை நான் உணர்கிறேன்.    

 தமிழ் வாசகச் சூழலில் Game theory, நாஷ் சமநிலை 
குறித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவன் 
நான் மட்டுமே; நான் ஒருவனே.

1984ல் Psephology குறித்து நாபி பேசியபோது யாராலும் 
புரிந்து கொள்ள உடியவில்லை. கிட்டத்தட்ட 
அதே நிலைதான் தற்போது Game theoryயிலும் 
நீடிக்கிறது. 
****************************************************