திங்கள், 29 செப்டம்பர், 2014

மகிழ்ச்சிக் கடலில் மலைச்சாமி!
--------------------------------------------------- 
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மலைச்சாமி 
மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறார்.
ஏன், என்ன காரணம்?
**
வெளிமாநிலத்தின் மிக முக்கியமான சட்ட நிபுணர்களைக் 
கலந்து ஆலோசித்து இருக்கிறார். தண்டனை உறுதி என்று 
எல்லோரும் அடித்துச் சொல்லி இருக்கிறார்களாம்.
விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்,
தண்டனைக் குறைப்பு என்பதற்கும் கூட துளியும் 
சாத்தியமில்லை என்றார்களாம் சட்ட நிபுணர்கள்.
** 
மதுரையில் இருந்து கருப்பு நிற வெள்ளாடுகள் கொண்டு 
வரப்பட்டு, நெய்யில் வெந்த மட்டன் பிரியாணி விருந்து 
அவர் வீட்டில் இன்று. அவர் வீட்டு வாசலில் கால் வைத்தவர் 
எவரும் மட்டன் பிரியாணி சாப்பிடாமல் வெளியே போக 
முடியாது. வேண்டாம் என்றாலும் வாயில் ஊட்டி விடுகிறார்கள் 
என்றார் அங்கு போய்விட்டு வந்த ஒரு நண்பர்.  
**
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே,
பச்சைக் கிளிகள் தோளோடு, 
பாட்டுக் குயிலோ மடியோடு,
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை,
என்று பாடிக் கொண்டு இருக்கிறாராம் மலைச்சாமி.
*************************************************************
சங்கர மடத்தில் கோலாகலம்!
குதூகலம்!!கொண்டாட்டம்!!
ஒரே ஆனந்த லஹரி!!!
------------------------------------------ 
" பகவான் கண்ணைத் தொறந்துட்டார் !
தண்டனை கெடைக்கணும்னு நெனச்சோம்,
கெடச்சுடுத்தூ! " 
** "இதுதான் பெரியவா சொன்னது. பெங்களூர் 
தீர்ப்பைப் பத்தி பெரியவாளொட அபிப்பிராயம் 
இதுதான்" என்றார் மடத்து அன்பர்.
** மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்.
மடத்தில் இருந்த அத்தனை பேருக்கும் 
சந்தோசம்! சாதாரண சந்தோசம் அல்ல.
ஆனந்த லஹரி! லஹரி என்றால் வெள்ளம்.
**
நெய் வழியும் சக்கரைப் பொங்கலை 
வருவோர் போவோர் எல்லோருக்கும் 
கை நிறைய வழங்கி கொண்டு இருந்தார்கள் 
மடத்து ஊழியர்கள். ரோட்டில் போய்க்கொண்டு 
இருந்தவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக 
மடத்துக்கு உள்ளே இழுத்துக் கொண்டு வந்து 
வாயில் ஊட்டாத குறையாக சக்கரைப் பொங்கலை 
கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்!
**
அவரவர் சித்தம், அவரவர் சந்தோசம் 
என்றார் ஒரு மூத்த பிராமணர் முகமும்
மனசும் நிறைந்த சந்தோஷத்துடன். லோகமே 
சந்தோஷப் படுதோன்னோ என்றார் இன்னொரு 
பிராமணர். மடத்தில் உள்ள சுவர், தூண், தட்டுமுட்டுச் 
சாமான் உட்பட எல்லாம் சிரித்தன; சந்தோஷத்தில் 
மிதந்தன. 
************************************************* 
பின்குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு மடத்தில் நிகழ்ந்தது 
இது. இந்தப் பதிவைப் படிப்போர் தாங்களாகவே 
இடஞ்சுட்டிப் பொருள் விளங்கிக் கொள்வார்கள் என்று 
நம்புகிறேன்.
------------------------------------------------------------------------------------------- 


ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்!
சட்ட நிபுணர்கள் கருத்து!!
------------------------------------------------------------------------------
1) சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று
     தீர்ப்பு வழங்கப்பட்டு, பெங்களூரு மத்திய சிறையில்
     ஜெயலலிதா தண்டனையை அனுபவித்து வருகிறார்.

2) இதையொட்டி வரலாறு காணாத வன்முறையை
    அதிமுகவினர் தமிழகத்தில் கட்டவிழ்த்து
    விட்டு உள்ளனர். பேருந்து எரிப்பு, கடைகள் அடைப்பு,
    பொது அமைதி குலைவு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு என
    தமிழகம் கடந்த சில நாட்களாக வன்முறையின்
    வேட்டைக்காடாக உள்ளது.

3) கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில்
     கடந்த காலத்தில் ஜெயலலிதா குற்றவாளி என்று
     தீர்ப்பு வழங்கப் பட்ட போது , அதிமுக காடையர்கள்
     நிகழ்த்திய வன்முறையில் கோகிலவாணி,
     காயத்ரி, ஹேமலதா என்ற மூன்று மாணவிகள்
     உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டனர்.  இது
     அதிமுகவின் வன்முறை வெறியாட்டத்துக்குச்
     சாட்சியமாக நிற்பதால் மக்கள் வெளியே வர 
     அஞ்சுகின்றனர்.

4) தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் நடத்தி வரும்
     ரவுடித்தனங்களும் வன்முறை வெறியாட்டங்களும்
     ஜெயலலிதாவுக்கு எதிராக அமைகின்றன.
     நீதித்துறையை மிரட்டிப் பணிய வைக்கும்
     நோக்கில் நிகழ்த்தப்பட்டு வரும் இத்தகைய வன்முறைகள்
     ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை
     ஏற்படுத்தி விட்டன என்று சட்ட நிபுணர்கள்
     கருதுகிறார்கள்.

5)  கர்நாடக உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின்
     ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, அரசுத்
     தரப்பு அதை எதிர்க்கும்.

6) அதே நேரத்தில், இவ்வழக்கின் மூன்றாவது தரப்பாக
      (third party intervener ) உள்ள, நீதிமன்றத்துக்கு
      உதவி புரியும் தரப்பாக அங்கீகரிக்கப்பட்ட
     தி.மு.க,  ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவைத்
     தாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று கூறி உள்ளது.
     இக்கருத்தை திமுகவின் சட்டப் பிரிவு
    வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.
    (பார்க்க: DMK WONT OPPOSE   J's bail plea ,
     TIMES OF INDIA , CHENNAI , 29.09.2014)

7) ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வழி இல்லை
     என்று அடித்துக் கூறும் சட்ட நிபுணர்கள், அப்படி
    ஒருவேளை கிடைக்குமேயானால் அதற்குக்
    காரணம், திமுக ஜாமீன் மனுவை எதிர்க்காமல்
    விட்டு விடுவதுதான் என்று கூறுகிறார்கள்.

8) வழக்குத் தொடர்ந்த திமுகவே ஜெயலலிதாவின்
     ஜாமீன் மனுவை எதிர்க்க விரும்பவில்லை என்பது
     ஒரு முக்கிய காரணி ஆகும்.

9) ஆக மொத்தத்தில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன்
    கிடைக்காது; அப்படிக்  கிடைத்தாலும் அது
   திமுகவின் கருணையினால் மட்டுமே
   கிடைக்கப் பெறும்.

10) அதிமுக காடையர்கள் ஊர் ஊராக
      கலைஞரின் கொடும்பாவியைக் கொளுத்தி
      தங்களின் மன வக்கிரத்தை வெளிப் படுத்திக்
     கொண்டிருக்க, கலைஞரோ,
           இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
           நன்னயம் செய்து விடல்
     என்ற வள்ளுவரின் குறளை வாழ வைத்துக் கொண்டு
     இருக்கிறார். இதில் வியப்பதற்கு இல்லை;
     ஏனெனில், கலைஞர் வாழும் வள்ளுவர்!

*************************************************************************** 

புதன், 24 செப்டம்பர், 2014

மங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி!
----------------------------------------------------------------------------  
மானுடத்தின் மாட்சி மிக்க வரலாற்றில் 
மங்கள்யானின் வெற்றிமகத்துவம் வாய்ந்தது.
மங்கள்யான் என்ற விண்கலம் இன்று காலை 
(24 செப்டம்பர் 2014) எட்டு மணி அளவில் செவ்வாய்க்கோளின் 
சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டது.

மங்கள்யான் என்பது  கோள்சுற்றி (orbiter) வகையைச் 
சேர்ந்த  விண்கலம் ஆகும்.இது செவ்வாய்க் கோளைச் 
சுற்றி வந்து ஆய்வு செய்யும்; படம் எடுத்து அனுப்பும்.  

இந்த வெற்றிக்கு மூல காரணமாய் இருந்த பலரில் 
குறிப்பிடத்தக்கவர்கள் இரண்டு தமிழர்கள்.
ஒருவர், மங்கள்யான் திட்ட இயக்குனரான 
திரு சுப்பையா அருணன் (project director) அவர்கள்.
இன்னொருவர், மங்கள்யானின் பயண நிகழ்ச்சி நிரல் 
இயக்குனரான திரு மயில்சாமி அண்ணாத்துரை 
(programme director)  அவர்கள்.

யாரினும் கூடுதலாக இவ்விருவரும் பாராட்டுக்கு 
உரியவர்கள். பத்ம விபூஷண் முதல் பாரதரத்னா வரை 
இவ்விருவருக்கும் வழங்கி இந்தியா பெருமைப் படட்டும்.

*************************************************************


செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பூமி சூடாகிக் கொண்டே போகிறது!
இன்னும் 30 ஆண்டுகளுக்குத்தான் தாங்கும்!
-------------------------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------
நாம் வாழும் பூமி சூடாகிக் கொண்டே போகிறது.
இதுதான்  GLOBAL WARMING என்று சொல்லப் 
படுகிறது.பூமி சூடானால் என்ன ஆகும்?

இமயமலை போன்ற பனிமலைகள் உருகிவிடும்.
கடல் மட்டம் உயர்ந்து, கடல்நீர் ஊருக்குள் 
புகுந்து ஊர்களை எல்லாம் விழுங்கி விடும்.
பருவநிலை தாறுமாறாக மாற்றம் அடையும்.
அதாவது, மழை பெய்துகொண்டே இருக்கும்;
வெயில் காய்ந்துகொண்டே இருக்கும். 
வெள்ளச்சேதம், மண்சரிவு, வறட்சி  இவற்றால் 
ஊர்களும் உயிர்களும் அழிந்து போகும். 
கற்பனைக்கும் எட்டாத, 
விவரிக்க இயலாத பேரழிவுகள் ஏற்படும்.

நிபுணர்களின் அறிக்கைப்படி, நடப்பாண்டின்  
இறுதிக்குள் (2014) நாம் வளி மண்டலத்துக்கு 
அனுப்புகிற கார்பன்-டை-ஆக்சைடின் அளவு 
40 பில்லியன் டன் ஆக இருக்கும்.இங்கு நாம் 
என்பது உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து.
இந்தியா மட்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. 

நான்கு முக்கிய குற்றவாளிகள்:
------------------------------------------------------ 
சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்,
இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் சேர்ந்து    
மேற்கூறிய 40 பில்லியன் டன்னில் 58%ஐ 
வளிமண்டலத்தில் சேர்ப்பிக்கின்றன.
கார்பன்-டை-ஆக்சைட் சேர்மானத்தைப் 
பொறுத்த மட்டில் ,1990ஆம் ஆண்டு 
அடிப்படை ஆண்டாக (reference  year ) 
கருதப் படுகிறது. இது க்யோட்டோ சட்ட
திட்டப் படி  ( KYOTO PROTOCOL ) அமைந்தது ஆகும்.
வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் 
சேர்மானம் 1990ஆம் ஆண்டு இருந்ததை விட 
இன்று 2014இல் 65% அதிகரித்து இருக்கிறது.

இதே அளவில் போனால், என்ன ஆகும்?
வளிமண்டலத்தில் அதிகபட்சமாக 
1200 பில்லியன் டன் வரை மட்டுமே 
கார்பன்-டை-ஆக்சைடை நாம் சேர்க்கலாம்.
( இங்கு நாம் என்பது உலகம் ஆகும்: இந்தியா 
மட்டும் என்று கருதக் கூடாது.) 
     
இந்த 1200 பில்லியன் டன்  என்பதுதான் அளவு.
( threshold level ).இந்த அளவுக்குள் இருந்து விட்டால் 
பாதுகாப்பு. இதைத் தாண்டினால் பேரழிவு!
போகிற போக்கில், கார்பன்-டை-ஆக்சைடின் 
சேர்மானம் இதே வீதத்தில் இருந்தால் 
(at the same rate during 2014 ), இன்னும் முப்பது 
ஆண்டுகளுக்குள் இந்த 1200 பில்லியன் டன் 
என்கிற அபாய அளவை எட்டி விடுவோம்.
அப்படி எட்டி விட்டால் அதன்பின் சர்வ 
நாசம்தான்.

எனவே, பூமி சூடாவதைத் தடுத்திட,
1) நிலக்கரியை எரித்து அனல் மின்சாரம் 
    தயாரிக்கும் எல்லா அனல்மின் நிலையங்களையும்  
    மூட வேண்டும்.
2) பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டைக் 
     குறைக்க வேண்டும்.

இவை இரண்டும் மிக முக்கியம். இன்னும் செய்ய 
வேண்டியது நிறையவே உள்ளது. அதைப் 
பின்னர் பார்ப்போம்.

குறிப்பு: ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும்.
********************************************************   

திங்கள், 22 செப்டம்பர், 2014

அழிவின் விளிம்பில் தமிழ்!
குமரி அனந்தன் வருத்தம்!!
-----------------------------------------------------
தமிழ்ப் பற்றாளர்  குமரி அனந்தன் இன்று 
வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"அழிவின் விளிம்பில் இருக்கும்  மொழிகள் என்று 
நூறு மொழிகளை  ஐநா பட்டியல் இட்டு உள்ளது.
இதில் தமிழ் எட்டாவது இடத்தில் உள்ளது."  

ஆதாரம்: தினமணி 22.09.2014

******************************************************  

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சிதம்பர ரகசியம் என்றால் என்ன?
சரியான விடைக்குப் பரிசு உண்டு!!
--------------------------------------------------- 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
---------------------------------------------------------- 

சிதம்பர ரகசியம் என்பது...

அ ) இந்தியப் பொருளாதாரம் குறித்த சில நுட்பங்களை 
       யாருக்கும் தெரிவிக்காமல் திரு. ப. சிதம்பரம் 
        அவர்கள் ரகசியம் காத்து வருகிறார். இதுவே 
        சிதம்பர ரகசியம் ஆகும்.
ஆ) உண்மையில் சிதம்பர ரகசியம் என்று ஒன்றுமே இல்லை.
        ஒன்றும் இல்லை என்பதுதான் சிதம்பர ரகசியம்.
இ)  நாவுக்கரசர் பெருமான் சிதம்பரத்தில் கொன்று 
       புதைக்கப் பட்டார். இதை மறைத்து நாவுக்கரசர் 
       இறைவனுடன் ஒன்று கலந்து விட்டார் என்று 
       மக்களுக்குக் கூறப்பட்டது. இதுவே சிதம்பர ரகசியம்.
ஈ)  மேற்கூறியவை எவையும் இல்லை.

பரிசு குறித்த விவரங்கள்:
-----------------------------------

1) எமக்கு முதலில் வந்து சேரும் சரியான 
    ஒரு விடைக்கு எளியதொரு பரிசாக 
    ரூபாய் 100 பரிசு உண்டு.

2) தேர்ந்து எடுக்கப்படும் சரியான விடையுடன் 
     அதற்கான   விளக்கமும் தருதல் வேண்டும். 

3) முகநூலில் இந்த நிலைத் தகவலின் ( ஸ்டேட்டஸ்)
    கமென்ட் ( comment ) பகுதியில் விடையை 
    எழுத வேண்டும்.

4)  விடை எழுதுபவரின் பெயர், கணக்கு வைத்துள்ள வங்கி,
      வங்கிக்கிளை, கணக்கு எண், IFSC  CODE 
      ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.   
      பரிசுத்தொகை அவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

5)  நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தீர்ப்பே 
     இறுதியானதும் கட்டுப்படுத்தக் கூடியதும் ஆகும்.

முகநூலினர் அனைவரும் இப்போட்டியில் கலந்து 
கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

      .....................அன்புடன்.............................
 ............. நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை...................................... 







  

புதன், 17 செப்டம்பர், 2014

நியூட்டன் அறிவியல் மன்றம் 
பாராட்டுப் பெறுகிறது!
----------------------------------------------- 
அறிவியல் செய்திகளையும் கருத்துக்களையும் 
பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்லும் பணியினை 
கடந்த பத்தாண்டுகளாக நியூட்டன் அறிவியல் மன்றம்
மேற்கொண்டு வருகிறது.

இதனை அங்கீகரித்து, 
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் இயக்குனர்  
   தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன் அவர்கள் 
பாராட்டப் படுகிறார்.

பாராட்டுரை:
----------------------- 
தமிழர் தலைவர் மானமிகு 
    கி வீரமணி அவர்கள் 

பெரியார் அண்ணா பிறந்த நாளை ஒட்டி 
நடைபெறும் கூட்ட்டத்தில் 
நமது இயக்குனருடன் மேலும் இரண்டு பெருமக்கள் 
பாராட்டப் படுகிறார்கள். 

கூட்ட விவரம்:
---------------------------- 
இடம்: பெரியார் திடல் 
நாள்: வியாழன் 18.09.2014 மாலை 6.30 மணி 

  அனைவரும் வருக!
***************************************************************************
பூகம்பம் வெடித்த புரட்சிப் பெரியார்!
------------------------------------------------------ 
பெரியார் பிறந்த நாள்: செப்டம்பர் 17
------------------------------------------------------

     தொண்டு செய்து பழுத்த பழம் 
     தூய தாடி மார்பில் விழும் 
     மண்டைச் சுரப்பை உலகு தொழும்
     மனக்குகையில் சிறுத்தை எழும். 
         ---- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தமிழ்ச் சமூகத்திற்குப் பெரியார் இன்னமும் 
தேவைப்படுகிறார். பெரியாரின் 136ஆவது 
பிறந்தநாளாம் இன்று (17.09.2014) அவரது 
கொள்கைகளைப் பின்பற்றி நடக்க உறுதி ஏற்போம்!

************************************************************************************