செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பூமி சூடாகிக் கொண்டே போகிறது!
இன்னும் 30 ஆண்டுகளுக்குத்தான் தாங்கும்!
-------------------------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------
நாம் வாழும் பூமி சூடாகிக் கொண்டே போகிறது.
இதுதான்  GLOBAL WARMING என்று சொல்லப் 
படுகிறது.பூமி சூடானால் என்ன ஆகும்?

இமயமலை போன்ற பனிமலைகள் உருகிவிடும்.
கடல் மட்டம் உயர்ந்து, கடல்நீர் ஊருக்குள் 
புகுந்து ஊர்களை எல்லாம் விழுங்கி விடும்.
பருவநிலை தாறுமாறாக மாற்றம் அடையும்.
அதாவது, மழை பெய்துகொண்டே இருக்கும்;
வெயில் காய்ந்துகொண்டே இருக்கும். 
வெள்ளச்சேதம், மண்சரிவு, வறட்சி  இவற்றால் 
ஊர்களும் உயிர்களும் அழிந்து போகும். 
கற்பனைக்கும் எட்டாத, 
விவரிக்க இயலாத பேரழிவுகள் ஏற்படும்.

நிபுணர்களின் அறிக்கைப்படி, நடப்பாண்டின்  
இறுதிக்குள் (2014) நாம் வளி மண்டலத்துக்கு 
அனுப்புகிற கார்பன்-டை-ஆக்சைடின் அளவு 
40 பில்லியன் டன் ஆக இருக்கும்.இங்கு நாம் 
என்பது உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து.
இந்தியா மட்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. 

நான்கு முக்கிய குற்றவாளிகள்:
------------------------------------------------------ 
சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்,
இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் சேர்ந்து    
மேற்கூறிய 40 பில்லியன் டன்னில் 58%ஐ 
வளிமண்டலத்தில் சேர்ப்பிக்கின்றன.
கார்பன்-டை-ஆக்சைட் சேர்மானத்தைப் 
பொறுத்த மட்டில் ,1990ஆம் ஆண்டு 
அடிப்படை ஆண்டாக (reference  year ) 
கருதப் படுகிறது. இது க்யோட்டோ சட்ட
திட்டப் படி  ( KYOTO PROTOCOL ) அமைந்தது ஆகும்.
வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் 
சேர்மானம் 1990ஆம் ஆண்டு இருந்ததை விட 
இன்று 2014இல் 65% அதிகரித்து இருக்கிறது.

இதே அளவில் போனால், என்ன ஆகும்?
வளிமண்டலத்தில் அதிகபட்சமாக 
1200 பில்லியன் டன் வரை மட்டுமே 
கார்பன்-டை-ஆக்சைடை நாம் சேர்க்கலாம்.
( இங்கு நாம் என்பது உலகம் ஆகும்: இந்தியா 
மட்டும் என்று கருதக் கூடாது.) 
     
இந்த 1200 பில்லியன் டன்  என்பதுதான் அளவு.
( threshold level ).இந்த அளவுக்குள் இருந்து விட்டால் 
பாதுகாப்பு. இதைத் தாண்டினால் பேரழிவு!
போகிற போக்கில், கார்பன்-டை-ஆக்சைடின் 
சேர்மானம் இதே வீதத்தில் இருந்தால் 
(at the same rate during 2014 ), இன்னும் முப்பது 
ஆண்டுகளுக்குள் இந்த 1200 பில்லியன் டன் 
என்கிற அபாய அளவை எட்டி விடுவோம்.
அப்படி எட்டி விட்டால் அதன்பின் சர்வ 
நாசம்தான்.

எனவே, பூமி சூடாவதைத் தடுத்திட,
1) நிலக்கரியை எரித்து அனல் மின்சாரம் 
    தயாரிக்கும் எல்லா அனல்மின் நிலையங்களையும்  
    மூட வேண்டும்.
2) பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டைக் 
     குறைக்க வேண்டும்.

இவை இரண்டும் மிக முக்கியம். இன்னும் செய்ய 
வேண்டியது நிறையவே உள்ளது. அதைப் 
பின்னர் பார்ப்போம்.

குறிப்பு: ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும்.
********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக