திங்கள், 29 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்!
சட்ட நிபுணர்கள் கருத்து!!
------------------------------------------------------------------------------
1) சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று
     தீர்ப்பு வழங்கப்பட்டு, பெங்களூரு மத்திய சிறையில்
     ஜெயலலிதா தண்டனையை அனுபவித்து வருகிறார்.

2) இதையொட்டி வரலாறு காணாத வன்முறையை
    அதிமுகவினர் தமிழகத்தில் கட்டவிழ்த்து
    விட்டு உள்ளனர். பேருந்து எரிப்பு, கடைகள் அடைப்பு,
    பொது அமைதி குலைவு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு என
    தமிழகம் கடந்த சில நாட்களாக வன்முறையின்
    வேட்டைக்காடாக உள்ளது.

3) கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில்
     கடந்த காலத்தில் ஜெயலலிதா குற்றவாளி என்று
     தீர்ப்பு வழங்கப் பட்ட போது , அதிமுக காடையர்கள்
     நிகழ்த்திய வன்முறையில் கோகிலவாணி,
     காயத்ரி, ஹேமலதா என்ற மூன்று மாணவிகள்
     உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டனர்.  இது
     அதிமுகவின் வன்முறை வெறியாட்டத்துக்குச்
     சாட்சியமாக நிற்பதால் மக்கள் வெளியே வர 
     அஞ்சுகின்றனர்.

4) தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் நடத்தி வரும்
     ரவுடித்தனங்களும் வன்முறை வெறியாட்டங்களும்
     ஜெயலலிதாவுக்கு எதிராக அமைகின்றன.
     நீதித்துறையை மிரட்டிப் பணிய வைக்கும்
     நோக்கில் நிகழ்த்தப்பட்டு வரும் இத்தகைய வன்முறைகள்
     ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை
     ஏற்படுத்தி விட்டன என்று சட்ட நிபுணர்கள்
     கருதுகிறார்கள்.

5)  கர்நாடக உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின்
     ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, அரசுத்
     தரப்பு அதை எதிர்க்கும்.

6) அதே நேரத்தில், இவ்வழக்கின் மூன்றாவது தரப்பாக
      (third party intervener ) உள்ள, நீதிமன்றத்துக்கு
      உதவி புரியும் தரப்பாக அங்கீகரிக்கப்பட்ட
     தி.மு.க,  ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவைத்
     தாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று கூறி உள்ளது.
     இக்கருத்தை திமுகவின் சட்டப் பிரிவு
    வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.
    (பார்க்க: DMK WONT OPPOSE   J's bail plea ,
     TIMES OF INDIA , CHENNAI , 29.09.2014)

7) ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வழி இல்லை
     என்று அடித்துக் கூறும் சட்ட நிபுணர்கள், அப்படி
    ஒருவேளை கிடைக்குமேயானால் அதற்குக்
    காரணம், திமுக ஜாமீன் மனுவை எதிர்க்காமல்
    விட்டு விடுவதுதான் என்று கூறுகிறார்கள்.

8) வழக்குத் தொடர்ந்த திமுகவே ஜெயலலிதாவின்
     ஜாமீன் மனுவை எதிர்க்க விரும்பவில்லை என்பது
     ஒரு முக்கிய காரணி ஆகும்.

9) ஆக மொத்தத்தில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன்
    கிடைக்காது; அப்படிக்  கிடைத்தாலும் அது
   திமுகவின் கருணையினால் மட்டுமே
   கிடைக்கப் பெறும்.

10) அதிமுக காடையர்கள் ஊர் ஊராக
      கலைஞரின் கொடும்பாவியைக் கொளுத்தி
      தங்களின் மன வக்கிரத்தை வெளிப் படுத்திக்
     கொண்டிருக்க, கலைஞரோ,
           இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
           நன்னயம் செய்து விடல்
     என்ற வள்ளுவரின் குறளை வாழ வைத்துக் கொண்டு
     இருக்கிறார். இதில் வியப்பதற்கு இல்லை;
     ஏனெனில், கலைஞர் வாழும் வள்ளுவர்!

*************************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக