---------------------------------------------------------
பெரும் பிற்போக்குவாதி எஸ் வி ராஜதுரை
மின்னம்பலம் என்னும் இணைய இதழில்
அண்மையில் மே 12 அன்று எழுதிய கட்டுரை இது.
கட்டுரையின் தலைப்பு கயமைத்தனமான
ஒரு தலைப்பு: " இல்லாத சொத்துக்கு உரிமை
கொண்டாடும் சி பி ஐ ".
NCBH (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) என்பது
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (CPI)
புத்தக விற்பனை மற்றும் பதிப்பக நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் தற்போது பறிபோய் இருக்கிறது.
இதற்கு மூல காரணமான நல்லகண்ணு அவர்கள்
அரசியலை விட்டே விலக வேண்டும்.
நல்லகண்ணு தம் கடமையில் தவறியதாலேயே
இன்று NCBH பறிபோனது.
எஸ் வி ராஜதுரை என்பவர் கடைந்தெடுத்த
பிற்போக்குவாதி. ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட்டாக,
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டாக இருந்தவர்.
மக்கள் யுத்தக் குழுவில் இருந்தவர். பின்னாளில்
சீரழிந்து பிற்போக்குவாதியாக மாறினார்.
இந்தக் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி
தங்களின் மார்க்சிய எதிர்ப்புப் போக்கை
வெளிப்படுத்திக் கொண்டவர்கள்
CPM கயவர்கள். அவர்களின் தமுஎகச
(என்று நினைக்கிறேன்) எஸ் வி ராஜதுரைக்கு
மார்க்சிய அறிஞர் பட்டம் வழங்கி
மார்க்சியத்துக்கு கொள்ளி வைத்தது.
இது குறித்த எல்லா விஷயங்களையும்
மார்க்சிஸ்டுகளும் போலி மார்க்சிஸ்டுகளும் ஏன்
வலதுசாரிகளும் கூட தெரிந்து கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக