நான் போற்றும் நயினார்!
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கணினி மென்பொருள் பொறியாளர்
தோழர் சிவசங்கர நயினார் அவர்கள்
நான் எழுதிய "மார்க்சியப் பார்வையில்
அத்வைதம்" என்ற நூலை அனுப்புமாறு
கேட்டுக் கொண்டார். அஞ்சலில்
அனுப்பினேன்.
அதற்கான விலையாக ரூ 700 அனுப்பி
வைத்துள்ளார். நூலின் விலை ரூ 70
மட்டுமே. நூலின் விலையைப் போல
10 மடங்கு பணத்தை அனுப்பி உள்ளார்.
நூலின் விலை போக மீதியை அவருக்கே
G Pay மூலம் அனுப்ப எண்ணினேன். ஆனால்
அனுப்பிய தொகையை ஏற்றுக் கொள்ளுமாறு
தோழர் சிவசங்கர நயினார் கேட்டுக்கொண்டார்.
எனவே ஏற்றுக் கொண்டேன்.
நூல் வேண்டுவோர் கேட்கும்போது அஞ்சல்
செலவு பற்றிக் கவலை கொள்ளாமல்
SPEED POSTல் அல்லது கூரியரில் அனுப்ப
தோழர் சிவசங்கர நயினார் வழங்கிய
பணத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.
தோழர் சிவசங்கர நயினார் அறிவியல் கற்றவர்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவியல் சஞ்சிகையான
"அறிவியல் ஒளி" ஏட்டுக்குச் சந்தா கட்டி
வாங்கிப் படிப்பவர். நான் தொடர்ந்து எழுதி வரும்
கணக்கற்ற அறிவியல் கட்டுரைகளை அவர்
விடாமல் வாசித்து வருபவர்.
எனவே கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற
அடிப்படையில் அவர் என் அறிவியல் படைப்புகள்
மீதும் என் மீதும் அபிமானம் கொண்டுள்ளார்.
எங்கள் இருவரையும் ஐக்கியப் படுத்தும்
காரணி அறிவியலே.
நானும் அவரும் கோனார் என்பதாலோ
அல்லது நானும் அவரும் திருநெல்வேலி சைவப்
பிள்ளைமார் என்பதாலோ அல்லது நானும்
அவரும் நாடார் என்பதாலோ எங்களுக்கு இடையில்
ஐக்கியம் ஏற்படவில்லை. எங்கள் இருவரையும்
ஐக்கியப் படுத்தியது அறிவியலே!
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
அறிவியல் கற்றாரை அறிவியல் கற்றாரே காமுறுவர்!
அறிவியல் கல்லாதார் காமுறார்! (காமுற மாட்டார்)
அவர்கள் அறிவியலாளர்கள் மீது கல்லெறிவர்;
அதுவும் குட்டி முதலாளித்துவ அற்பப்பயல்களைக்
கூட்டுச் சேர்த்து கொண்டு!
"நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்"
(ஒளவையார், மூதுரை)
********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக