தமிழ்நாட்டுக்கென்று தனியான கல்விக் கொள்கை!
கொள்கை வகுக்கும் குழுவில் மீண்டும் மீண்டும்
தமிழ்ப் பண்டிட்டுகள் நியமனம்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
முனைவர் ஜி பழனி என்னும் சென்னை பல்கலை
தமிழ் இலக்கிய பேராசிரியர் (ஒய்வு) அவர்கள்
தமிழக அரசின் கல்விக் கொள்கை வகுப்புக்
குழுவின் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இது மிகுந்த அருவருப்பைத் தருகிறது. எவ்வளவு
காலம்தான் தற்குறிகளான தமிழ்ப் பண்டிட்டுகளையே
முக்கியமான பதவிகளில் நியமித்துக் கொண்டு
இருப்பீர்கள்?
அறிவியல் சார்ந்து இயங்கும் அறிஞர்களை
கல்விக்குழுவில் நியமிப்பதற்குப் பதிலாக
தற்குறித் தமிழ்ப் பண்டிட்டுகளையே
நியமிக்கும் இழிவு என்றைக்கு முடிவுக்கு வரும்?
இஸ்ரோவின் முன்ன தலைவர் சிவன் இருக்கிறார்.
அவரை கல்விக் குழுவில் நியமித்தால் என்ன?
உலக அளவில் வழங்கப்படும் தியடோர் வான் கார்மன்
விருது பெற்றவர் சிவன். அறிவியல் கல்வி குறித்து
சரியான கொள்கையை அவரால் வகுக்க இயலும்.
ஆனால் தமிழ்ப்பண்டிட் பழனியால் என்ன முடியும்?
இஸ்ரோவில் பணியாற்றி ஒய்வு பெற்ற சந்திரயான்
புகழ் மயில்சாமி அண்ணாத்துரை இருக்கிறார். அவரை
கல்விக்குழுவில் நியமித்தால் என்ன?
வானிலை ஆய்வு மைய இயக்குநராகப் பணியாற்றி
ஒய்வு பெற்ற முனைவர் ரமணன் அவர்கள் இருக்கிறார்.
அவரை கல்விக் குழுவில் நியமித்தால் என்ன?
அறிவியல் கல்வியைப் பற்றியே கவலைப்படாமல்
தமிழ்ப் பண்டிட்டுகளையே கட்டி அழுது
கொண்டிருந்தால் எப்படி?
நீதியரசர் முருகேசன் தலைமையில் இயங்கும்
இக்கல்விக்குழு தமிழில் வெளிவரும் சிறந்த
அறிவியல் பத்திரிகையான அறிவியல் ஒளியில்
எழுதும் கட்டுரையாசிரியர்களிடம் கலந்து
ஆலோசித்ததா? இல்லையே! பின்பு இந்தக் குழு
எதற்குப் பயன்படும்?
*********************************************888
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக