நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை
BSNL கட்டி வருகிறது!
BSNLக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்யும்
தனியார் நிறுவனக் கைக்கூலிகளை ஒடுக்குவோம்!
தனிக்கட்டுரை இன்றிரவு வெளியிடப்படும்
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
BSNL மற்றும் MTNL ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களும்
மொத்தமாக 80,000 டவர்களை வைத்திருக்கின்றன.
இது 2022ல் உள்ள நிலைமை.
அதன் பிறகு, நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை
புதிதாகக் கட்டி வருகிறது BSNL. இந்தச் செய்தியை
தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி
வைஷ்ணவ் ஏப்ரல் 2022ல் மக்களவையில் கேள்வி
நேரத்தின்போது தெரிவித்தார்.
இச்செய்தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகையின்
டெலிகாம் வெர்ஷனான Telecom Times பத்திரிகையில்
வெளிவந்துள்ளது.
ஆக 80,000 டவர்கள் BSNLஇடம் ஏற்கனவே இருக்கின்றன.
1.12 லட்சம் டவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம்
1.92 லட்சம் டவர்கள் ஆகின்றன.
அதே நேரத்தில் பயன் தராத (Non viable) சுமார்
15,000 டவர்களை BSNL விற்கிறது. அதாவது 1.92 லட்சம்
டவர்களில் 15,000 பயனற்ற டவர்களை விற்றபின்
நிகர டவர்களின் மதிப்பு 1..77 லட்சம் ஆகும். அதாவது
BSNL ஒன்றேமுக்கால் லட்சம் டவர்களின் அதிபதி/
வேறு எந்த தனியார் நிறுவனமும் இந்த அளவு
டவர்களைக் கொண்டிருக்கவில்லை. அவர்களால்
ஒன்றே முக்கால் லட்சம் டவர்களை கற்பனையில்
கூடக் கட்ட முடியாது.
சரி, 15,000 டவர்களை BSNL ஏன் விற்கிறது? இதற்கான
காரணம் முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது.
இதைப் பொதுவெளியில் தொழில்நுட்ப அறிவு
பெற்றிராதவர்களுடன் விவாதிக்க இயலாது.
உங்களில் எத்தனை பேர் Physics படித்திருக்கிறீர்கள்?
Physcsல் Lightல் interference phenomenon பற்றித் தெரியுமா?
இன்று ப்ளஸ் டூ பிசிக்சில் Interference இருக்கிறது.
அதே போல, induction effect பற்றித் தெரியுமா? மைக்கேல்
ஃபாரடே பற்றி அவரின் electro magnetic induction பற்றித்
தெரியுமா? தெரியாவிட்டால் தெரிந்து கொள்ள
வேண்டும்! இதுவும் பிசிக்சில் ப்ளஸ் டூ போர்ஷனில்
இருக்கிறது.
இதெல்லாம் தெரிந்திருந்தால், Non viable towers என்றால்
என்ன? அவற்றை ஏன் BSNL விற்கிறது? BSNLஇடம் இருந்து
இந்த டவர்களை வாங்குவது யார்? இந்தக் கேள்விகளுக்கு
எல்லாம் நான் விடை கூறினால் உங்களால் அதைப்
புரிந்து கொள்ள இயலும்.
இந்தியாவில் வயர்லெஸ் மொபைல் சேவை எப்போது
ஆரம்பித்தது? 1995 ஜூலையில்தான்! முதலில்
நான்கு பெருநகரங்களில் மட்டும் வயர்லெஸ் மொபைல்
சேவை அறிமுகம் ஆனது. பின்னர் நாடு முழுவதும்
பரவியது.
1995-2000ல் 2G டவர்கள் மட்டுமே கட்டப் பட்டன.
பின்னர் GPRS டவர்கள், அடுத்து EDGE டவர்கள்,
தொடர்ந்து 3G டவர்கள் (UMTS), பின்னர் 4G டவர்கள்,
5G டவர்கள் என்று டவர்கள் பலவாறாக ஆகி விட்டன.
தனியார் நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு
டவர்களைக் கட்ட ஆரம்பித்தன. இதன் விளைவாக
டவர்களுக்கு இடையிலான இடைவெளி மிகவும்
குறைந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட சூழலில்
BSNLக்கு அதிகப் பயன் தந்த டவர்களில் சில
கால ஓட்டத்தில் Nonviableஆக மாறிவிட்டன. இத்தகைய
பயனற்ற டவர்களை BSNL விற்கிறது. இது முற்ற
முழுக்க BSNLன் சொந்த விஷயம். இதில் மற்றவர்கள்
அக்கறை செலுத்த என்ன இருக்கிறது?
பாலிமர் நியூஸ் முட்டாள்கள் டவர்களை விற்று
மத்திய அரசுக்கு BSNL நிறுவனம் வருவாய் ஈட்டிக்
கொடுப்பதாகச் செய்தி வெளியிடுகிறார்கள்.
BSNL மத்திய அரசுக்கு எந்த வருவாயையும் ஈட்டிக்
கொடுக்கவில்லை.
மத்திய அரசுதான் BSNLக்கு 1.64 லட்சம் கோடி
ரூபாய் அளவுக்கு நிதி வழங்கி உள்ளது. முன்னதாக
69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு.
தற்போது மூன்றாவது நிதி உதவியாக ரூ 89,047
கோடியை மத்திய அரசு BSNLக்கு ஒதுக்கி உள்ளது.
எனவே மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதற்காக
BSNL நிறுவனம் டவர்களி விற்கிறது என்று சொல்வதெல்லாம்
முழுமுட்டாள்தனம்.
இறுதி எச்சரிக்கை!
பாலிமர் நியூஸ் மட்டுமல்ல, இந்த நாட்டில் உயிர் வாழ்ந்து
கொண்டு இருக்கும் தனியார் நிறுவனக் கைக்கூலிகள்
அனைவருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றம் ஒரு
கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறது. BSNL குறித்த
பொய்களையும் அவதூறுகளையும் பரப்புவதை
தொடர்புடைய அனைவரும் உடனையாகக் கைவிட
வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக