ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து
வழங்கிய ஷரத்து 370ஐ ரத்து செய்தபோது
கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும்!
---------------------------------------------------------------------
ஆதரித்த கட்சிகள்:
---------------------------
1) பாஜக
2) பிளவுபடாத சிவசேனை
3) சிரோன்மணி அகாலிதளம்
4) ஆம் ஆத்மி
5) மாயாவதியின் பகுஜன் சமாஜ்
5) தெலுங்கு தேசம்
6) YSR காங்கிரஸ் (ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி)
7) பிஜு ஜனதா தளம்
8) அஇஅதிமுக
9) மற்றும் பல்வேறு சிறிய கடசிகள்.
எதிர்த்து வாக்களித்த கட்சிகள்:
------------------------------------------------
1) காங்கிரஸ்
2) தேசிய மாநாடு (பரூக் அப்துல்லாவின் கட்சி)
3) பிடிபி என்னும் மெஹபூபா மொய்தியின் கட்சி
4) ராஷ்டிரிய ஜனதா தளம் (லல்லு கட்சி)
5) ஐக்கிய ஜனதா தளம் (நித்திஷ்குமார் கட்சி)
6) திமுக
7) CPI
8) CPM
22 எம்பிக்களைக் கொண்டிருந்த திரிணாமூல் காங்கிரஸ்
என்ன செய்தது? ஆதரித்ததா? எதிர்த்ததா?
சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரித்ததா?
எதிர்த்ததா? என்ன செய்தது?
மமதாவின் திரிணமூல் காங்கிரசும் சரத் பவரின் தேசியவாத
காங்கிரசும் வெளிநடப்புச் செய்தன. எனவே ஓட்டெடுப்பில்
கலந்து கொள்ளவில்லை.சாராம்சத்தில் இது காஷ்மீரின் சிறப்பு
அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரித்ததாகவே
அர்த்தம்.
மஹாராஷ்டிராவில் சிவசேனையும் பாஜகவும்
370ஆவது பிரிவு ரத்தை ஆதரிக்கின்றன. காங்கிரஸ்
மட்டுமே எதிர்க்கிறது. சரத் பவார் காங்கிரசோடு
நிற்க விரும்பவில்லை. எனவே வெளிநடப்புச் செய்து
சாமர்த்தியம் காட்டி, 370 ஆவது பிரிவு ரத்தை
ஆதரிக்கிறார்.
சுருகக் கூறின், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து
செய்யும் தீர்மானம் இந்திய அரசியல் கட்சிகளால்
வலுவாக எதிர்க்கப் படவில்லை! பெயராவுக்கான
எதிர்ப்பு மட்டுமே காட்டப்பட்டது. இதுதான் உண்மை!
********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக