வெள்ளி, 1 டிசம்பர், 2023

 வெள்ளாளங்குளம் கல்வி வள்ளல் 
எம் ஜே பாண்டியன் அவர்களின்
நூற்றாண்டு விழாவும் சிலை திறப்பும்!
----------------------------------------------------------
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் 
சுரண்டை, சேர்ந்தமரம் ஊர்களுக்கு அருகில் உள்ள 
சிற்றூர் வெள்ளாளங்குளம் ஆகும்.

1960களில் இவ்வூரில் முதன் முதலாக ஓர் 
உயர்நிலைப்பள்ளி கொண்டு வரப்பட்டது.
அதற்காகப் பாடுபட்டு அச்சிற்றூரில் 
பள்ளியைக் கொண்டு வந்தவர் அவ்வூரின்
ஊராட்சி மன்றத் தலைவரான சடையப்பத் தேவர் 
எனப்படும் திரு எம் ஜே பாண்டியன் அவர்கள்.

எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டியிருந்த 
நிலையில் இருந்த ஊர்ப் பிள்ளைகள் இன்று பெரிய 
படிப்புப் படித்து உயர் அதிகாரிகளாய்ச் 
சமூகத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றனர்.

கல்விக்கு வழி சமைத்த எம் ஜே பாண்டியன் 
அவர்களை நன்றியுடன் நினைவுகூரும் வண்ணம் 
தற்போது வெள்ளாளங்குளத்தில் அவருடைய 
நூற்றாண்டு விழாவும் சிலை திறப்பும் நடக்கிறது. 

இந்த விழா சிறப்புற இப்பள்ளியின் முன்னாள் மாணவனாகிய 
நான் வாழ்த்துகிறேன். 
எம் ஜே பாண்டியன் அவர்களின் புகழ் ஓங்குக!


இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர்!
---------------------------------------------------------------
என்னுடைய தந்தையார் திரு மு பிச்சாண்டி எம் ஏ பி டி அவர்கள் வெள்ளாங்குளம் பள்ளியின் முதல் தலைமையாசிரியராகப் 
பொறுப்பேற்றுப் பணியாற்றினார்கள். அர்ப்பணிப்புடன் 
பணியாற்றினார்கள். அவர்கள் அப்பள்ளியில் 
பணியாற்றிய காலத்தில், தமிழக அரசு அவர்களுக்கு 
நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

வெள்ளாளங்குளம் மட்டுமின்றி அருகிலுள்ள 
பல சிற்றூர்களையும் இப்பள்ளி அரவணைத்தது.


இந்த விழாவில் முதல் ஆளாகப் பங்கேற்க வேண்டியவன்
நான். உடல்நலக்குறைவு காரணமாக டயாலிசிஸ் செய்து 
கொண்டு இருப்பதால் தற்போது என்னால் பயணத்தை 
மேற்கொள்ள இயலவில்லை. வீரவநல்லூரில் இருந்து 
என் தம்பிமார்கள் இவ்விழாவில் பங்கேற்றுச் 
சிறப்பிக்கின்றனர்.

மதிப்புக்குரிய எம் ஜே பாண்டியன் அவர்களை 
நான் நன்கறிவேன். அவரின் திசை நோக்கி 
வணங்கி மகிழ்கிறேன்.
என்னுடைய வணக்கமும் நன்றியும்
எம் ஜே பாண்டியன் அவர்களைச் சென்றடையும் 
என்ற நம்பிக்கையுடன் இந்த விழாவில் 
நான் மானஸீகமாகப் பங்கேற்கிறேன்.

எம் ஜே பாண்டியன் புகழ் ஓங்குக!
********************************************            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக