புதன், 20 டிசம்பர், 2023

இணையத்தில் அதிகபட்ச வேகம்!
இன்றைய ChatGPTல் இந்த அதிவேகம் பயன்படுகிறது!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------  
2G, 3G,4G,5G என்பனவற்றில் வரும் G என்பது 
அலைக்கற்றைத் தலைமுறையைக் குறிக்கும்.
அதை மட்டுமே குறிக்கும்.

ஒரு அலைக்கற்றையை வரையறுப்பதற்கும்,
அடையாளப் படுத்துவதற்கும் ITU 
(International Telecommunication Union அமைப்பிற்கு 
மட்டுமே உரிமையும் அதிகாரமும் உண்டு.
இது 5G என்றும் இது 4G என்றும் SPECIFICATION 
அடிப்படையில் சொல்லக்கூடிய அதிகாரம் படைத்த 
ஒரே அமைப்பு இந்தப் பிரபஞ்சத்தில் ITU மட்டுமே;

இன்று இந்த 2023 டிசம்பரில் உலகில் எங்கும் 
10G எனப்படும் 10ஆம் தலைமுறை அலைக்கற்றை 
கிடையாது. 5G கூட உலகின் சில நாடுகளில் 
மட்டுமே உள்ளது.

10 Gbps speed பற்றி மக்கள் அறிவார்கள். ஒரு வினாடிக்கு 
10 கிகா பிட் வேகம் என்பதே இதன் பொருள். இது 5G 
அலைக்கற்றையில் ஏற்கனவே அடையப்பட்டு 
விட்டது (achieved)

நல்லதொரு stand alone 5G NETWORK போடப்பட்டு,
அதில் MIMO (Multiple Input Multiple Output) போன்ற 
அதிஉயர்திறன் கொண்ட சாதனங்கள், கருவிகள் 
பொருத்தப்பட்டு திறமையாக அமைக்கப்பட்ட networkல், 
coverage அதிகமுள்ள டவர்கள் அனாவசிய 
இடைவெளியின்றி அமைக்கப்பட்ட networkல்        
10Gbps ஸ்பீட் சாத்தியமே.speed என்பது எப்போதுமே 
பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற 
அறிவியல் உண்மையை மனதில் பதிக்கவும்.
 
இணையத்தைப் பொறுத்தமட்டில் அதிகபட்ச Internet 
Speed 319 Tbps (Tera bits per second) கடந்த ஆண்டிலேயே 
அடையப்பட்டு விட்டது என்பதை வாசகர்கள் 
நினைவு கூறவும். இது குறித்து அறிவியல் ஒளி 
ஏட்டில் நான் எழுதி ய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
310Tb speedஐ அடைந்தவர்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள்.

அறிவியல் உலகம் SI unitsஐ பயன்படுத்துகிறது.
வாசகர்கள் Multiples of 10, Sub multiples of  10 ஆகியவற்றில் 
அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Multiples of 10 ஆனது, Kilo, Mega, Giga. Tera, Peta என்று 
போய்க்கொண்டே இருக்கும். இந்த metric prefixes பற்றி 
அறிந்து கொள்ள வேண்டும்.   

Giga (கிகா) என்பது 10^9 ( 10 raised to 9th power) ஆகும்.
இதை கிகா என்றே உச்சரிக்க வேண்டும். 
ஜிகா என்று உச்சரிக்கக் கூடாது.      

SI units, Scientific Notation,  Metric Prefixes, Modern large numbers 
ஆகியவற்றைப் பற்றி அறியாமல் இன்னும் இருக்கக் 
கூடாது. தமிழில் பெரிய எண்களைக் குறிக்க 
லட்சம் கோடி என்ற சொற்களைத் தவிர வேறு 
சொல் வழக்கில் கிடையாது.

மில்லியன், பில்லியன், டிரில்லியன், குவாட்ரில்லியன், 
குவின்டில்லியன், செக்ஸ்டில்லியன், செப்டில்லியன் 
என்றெல்லாம் நவீன காலப் பேரெண்கள் போய்க் 
கொண்டே இருக்கின்றன. லட்சம், கோடி என்று 
இரண்டே இரண்டு சொற்களில் தமிழ் தேங்கிக் 
கிடக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, `1985வாக்கில்,
எண்ணம், இரத்தம் என்று தொடங்கி மில்லியன் 
பில்லியன் என்ற சொற்களுக்கு தமிழில் ஆக்கினேன்.
போலியாகத் தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் 
எந்த வேசிமகனும் இவ்வழகிய தமிழ்ச்சொற்களைச் 
சீந்தவில்லை.

இறுதியாக ஒன்று! யாரும் எக்காரணம் கொண்டும்  
BSNLஜக் குறைத்துப் பேச வேண்டாம் என்று 
எச்சரிக்கின்றேன்! நன்றி. வணக்கம்!
****************************************



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக