செவ்வாய், 9 மே, 2023

 OBC இடஒதுக்கீட்டின் தந்தை வி பி சிங் வாழ்க!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
பெரியாரும் அம்பேத்காரும்தான் 
இடஒதுக்கீட்டையே கண்டுபிடித்தார்கள்; 
கொண்டு வந்தார்கள் என்று அவர்களின்
ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு 
திரிகிறார்கள். 

OBCக்கான இடஒதுக்கீட்டுக்கும் 
அம்பேத்காருக்கும் எள்முனையளவும் 
சம்பந்தம் கிடையாது.
அவர் ஒரு SECTARIAN LEADER.   
 
OBC இடஒதுக்கீடு, மண்டல் கமிஷன், 
வி பி சிங் உத்தரவு ஆகியவற்றால்தான் 
OBCக்கு 27% ஒதுக்கீடு கிடைத்தது. 

இதற்குப் பாடுபட்ட பலரில் முக்கியமானவர் 
ஆனைமுத்து. OBC 27% இடஒதுக்கீட்டில் 
பெரியாருக்கு எப்பங்கும் இல்லை. அவர் 
அதற்கெல்லாம் வெகுகாலத்துக்கு 
முன்னரே இறந்து விட்டார்.

ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக் 
கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் 
பெரியார் அம்பேத்கார் என்று ஸ்தோத்திரம் 
சொல்வதால் பயனில்லை. உண்மை 
அதைத் தாண்டி இருக்கிறது.

OBC இடஒதுக்கீடு என்றால்,
1) பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்        
2) ஆனைமுத்து 
3) வி பி சிங் 
ஆகியோரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.
அங்கு ஈ வெ ராமசாமி பற்றியோ 
அம்பேத்கார் பற்றியோ பேசுவதற்கு 
ஒன்றுமே இல்லை. 

சாகு மகாராஜை அடுத்து இந்தியாவை ஆண்ட 
பிரிட்டிஷ்காரன் பல சமூகங்களுக்கும் 
இடஒதுக்கீடு கொடுத்தான். பிரிட்டிஷ்காரனைப் 
பின்பற்றி அன்றைய பல சமஸ்தானங்களிலும் 
இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரன் கொடுத்த இடஒதுக்கீட்டில்தான் 
அம்பேத்காரே படித்தார். இதுதான் உண்மை.
இதுதான் மெய்யான வரலாறு.

தன சொந்தசாதிக்கு மட்டுமே (SC,ST) 
இடஒதுக்கீடு வேண்டுமென அம்பேத்கார் 
உழைத்தார்.

இந்திய மக்கள்தொகையில்பாதிக்கும் மேலாக 
உள்ள OBC மக்களை அம்பேத்கார் கிஞ்சித்தும் 
பொருட்படுத்தவில்லை. அவர் வெறும் 
SECTARIAN LEADER.

எவர் ஒருவருடைய வீட்டில் சாஹு மகராஜ்,
B P மண்டல், வி பி சிங், ஆனைமுத்து 
ஆகியோரின் படம் இருக்கிறதோ அவர் 
மட்டுமே OBC ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும் 
அருகதை உடையவர். 

பி பி மண்டல், வி பி சிங், ஆனைமுத்து 
ஆகியோரின் உழைப்பால் விளைந்ததே OBC 
இடஒதுக்கீடு. இவர்களின் பாத்திரத்தை 
மறைத்து விட்டு தொட்டதெற்கெல்லாம் 
அம்பேத்கார் பெரியார் என்று கூறுவதில் 
உண்மையும் இல்லை; நேர்மையும் இல்லை.

தமிழ்நாட்டில் 69 சதவீதம் அளவு இடஒதுக்கீட்டை 
உயர்த்தியவர் அன்றைய முதல்வர் எம் ஜி ஆர்.
பின்னர் ஜெயலலிதா அதை எட்டாவது 
அட்டவணையில் வைத்தார். இன்று 69 சதவீத 
இடஒதுக்கீடு சாசுவதமான, நிலைபேறு 
உடையதாக இருக்கிறது என்றால் 
அதற்குக் காரணம் எம்ஜியாரும் 
ஜெயலலிதாவுமே.

இதெல்லாம் யார் எவராலும் மறுக்க முடியாத
வரலாறு. ஆனால் முழுப்பூசணிக்காயைச்
சோற்றில் மறைக்க முயல்வதைப்போல, 
மேற்கூறிய இவ்வளவு பேரையும் மறைத்து 
விட்டு, அவர்களின் உழைப்பை அபகரித்துக்
கொண்டு தொட்டதெற்கெல்லாம் அம்பேத்கார் 
பெரியார் என்ரூ பேசுவது நியாயம் அல்ல.

அம்பேத்காருக்கும் பெரியாருக்கும் 
இடஒதுக்கீடு முறையை வளர்த்ததில் 
நிச்சயம் பங்குண்டு. அவர்களின் பங்கைப் 
பற்றிச் சொல்லுங்கள். அதற்குப்பதிலாக 
இடஒதுக்கீடு என்றாலே அம்பேத்கார் 
பெரியார்தான் என்று சொல்லி 
OBC இடஒதுக்கீட்டுக்காகப் பாடுபட்ட 
மற்றப் பலரின் பங்களிப்பை அபகரிக்காதீர்கள். 
       






 என்னுடைய வாழ்க்கையில் சுமார் 
15 ஆண்டு காலம் மிகத் தீவிரமாக 
OBC இடஒதுக்கீட்டுக்காகப் பாடுபட்டவன் 
நான். ஆனைமுத்து ஐயாவோடு அவர் 
நடத்திய பல போராட்டங்களில் கலந்து 
கொண்டவன் நான்.
இன்றைக்கு அமலில் உள்ள OBC 
இடஒதுக்கீட்டில் (27%) என்னுடைய 
வேர்வையும் ரத்தமும் கலந்திருக்கிறது 
என்பதை நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறேன் 

என்னுடைய வாழ்க்கையில் சுமார் 
15 ஆண்டு காலம் மிகத் தீவிரமாக 
OBC இடஒதுக்கீட்டுக்காகப் பாடுபட்டவன் 
நான். ஆனைமுத்து ஐயாவோடு அவர் 
நடத்திய பல போராட்டங்களில் கலந்து 
கொண்டவன் நான்.
இன்றைக்கு அமலில் உள்ள OBC 
இடஒதுக்கீட்டில் (27%) என்னுடைய 
வேர்வையும் ரத்தமும் கலந்திருக்கிறது 
என்பதை நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறேன்.

திங்கள், 8 மே, 2023

 இடஒதுக்கீட்டின் தந்தை யார்?
------------------------------------------------
அன்றைய மராட்டியத்தில் இருந்த கோலாப்பூர் 
சமஸ்தான மன்னர் சாஹு மகராஜ் அவர்களே 
இந்தியாவில் முதன் முதலில் இடஒதுக்கீட்டைக்   
கொண்டு வந்தவர்.

பார்ப்பனர் அல்லாதோருக்கு கல்வியில் 50 சதவீதம் 
இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை 1882ல் 
அவர் பிறப்பித்தார். 1892 முதல் அச்ச்ட்டம் 
செயல்பாட்டுக்கு வந்து பார்ப்பனர் அல்லாதோர் 
இடஒதுக்கீட்டைப் பெற்றனர்.

இடஒதுக்கீட்டின் தந்தை சாஹு மகராஜ் ஆவார்.

சாஹு மகராஜ் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவந்த 
1882ல் அம்பேத்கார் (1891-1956) பிறந்திருக்கவே இல்லை.

ஈ வெ ராமசாமிக்கு (1879-1973) அப்போது மூன்று வயது.
எனவே அம்பேத்காருக்கும் ஈ வெ  ராமசாமிக்கும் 
முன்னதாகவே சாஹு மகராஜ் இடஒதுக்கீட்டைக் 
கொண்டு வந்து விட்டார்.
*************************************************************
 

 இட ஒதுக்கீடு குறித்த முழுமையான வரலாறுகளை அறியாமல், அரைகுறையாகப் படித்ததையும், கேட்டதையும் வைத்துக் கொண்டு, உணர்வெழுச்சியாக இட ஒதுக்கீடு பற்றிய தவறான கருத்துகளைப் பலரும் எழுதுகின்றனர். பேசுகின்றனர். அம்பேத்கரை உயர்வுபடுத்துவதாக எண்ணிக் கொண்டு, இட ஒதுக்கீடு என்றாலே அம்பேத்கர் தான் என்ற பொய்யை ஓயாது பரப்புகின்றனர். இட ஒதுக்கீடு வரலாறு என்பது அம்பேத்கருக்கும் முந்தியது. இன்னும் சொல்லப் போனால், நீதிக் கட்சி

தொடங்குவதற்கு முன்பே வரம்புக்குட்பட்ட அளவில் பிரித்தானிய இந்தியாவில், சமஸ்தான இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறைகள் இருந்தன. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டம் என்பது மிக நீண்ட வரலாறைக் கொண்டது. அம்பேத்கருக்கும் முந்தையது.
சுதந்தர இந்தியாவிலும் சரி, பிரித்தானிய இந்தியாவிலும் சரி, அம்பேத்கரின் வாழ்நாள் இலட்சியம் என்பது " பட்டியலின மக்களின் விடுதலை" என்பதாகவே இருந்தது. அம்பேத்கர் சொல்கிறார், "அரசியல் நிர்ணய சபைக்கு நான் சென்றபோது, அட்டவணை சாதியினரின் நலன்களைக் காப்பது தவிர, வேறெந்தப் பெரிய நோக்கமும் எனக்கு இருக்கவில்லை ...."I came into the Constituent Assembly with no greater aspiration than to safe gaurd the interest of Schedule Castes". இது அம்பேத்கரின் வாக்கு மூலம் .
அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக Article 340,341 , 342 பகுதிகள் இனங்காட்டப்பட்டுள்ளன. இதில் Article 340 பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு குறித்துப் பேசுகிறது. இந்தப் பிரிவு என்ன சொல்கிறது?
Article 340 in The Constitution Of India 1949
340. Appointment of a Commission to investigate the conditions of backward classes
(1) The President may by order appoint a Commission consisting of such persons as he thinks fit to investigate the conditions of socially and educationally backward classes within the territory of India and the difficulties under which they labour and to make recommendations as to the steps that should be taken by the Union or any State to remove such difficulties and to improve their condition and as to the grants that should be made for the purpose by the Union or any State the conditions subject to which such grants should be made, and the order appointing such Commission shall define the procedure to be followed by the Commission
(2) A Commission so appointed shall investigate the matters referred to them and present to the President a report setting out the facts as found by them and making such recommendations as they think proper
(3) The President shall cause a copy of the report so presented together with a memorandum explaining the action taken thereon to be laid before each House of Parliament
இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஷரத்து 340 - 1949
340: பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆராய்ந்தறிய ஒரு ஆணையத்தை நியமித்தல்:
1) குடியரசுத் தலைவர் தமது உத்தரவின் மூலம் ஓர் ஆணையத்தை நியமிக்கலாம்; இந்தியாவின் பிரதேச எல்லைக்குள் வாழும் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கி உள்ள வகுப்பினரின் நிலைமைகளையும், எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் ஆராய்ந்தறியத் தகுதி வாய்ந்தோர் என்று தாம் கருதும் நபர்களைக் கொண்டு அந்த ஆணையத்தை அமைக்கலாம்; அவர்களின் சிரமங்களைக் களையவும், அவர்களின் நிலைமையை மேம்படுத்தவும் ஒன்றியமோ அல்லது எந்த ஒரு மாநிலமோ மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், இந்த நோக்கத்துக்காக ஒன்றியமோ அல்லது எந்த ஒரு மாநிலமோ வழங்க இருக்கும் மானியங்கள் குறித்தும், எந்தெந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த மானியங்கள் வழங்கப்படும் என்பது குறித்தும், ஆணையமானது பரிந்துரைக்கும். மேலும் இந்த ஆணையம் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என்பது பற்றி இந்த ஆணையத்தை நியமிக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு வரையறுக்கும்.
2) அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணையமானது தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆராய்ந்தறிந்து, தாங்கள் கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்தும் , தகுதியானவை என்று தாங்கள் கருதும் பரிந்துரைகளைச் செய்தும் ஓர் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும்..
3) அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு பிரதியையும்
அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
விளக்கும் ஒரு விஷயக் குறிப்பையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் முன்வைப்பார்.
இதன் உள்ளார்ந்த பொருளை விளக்குவதற்கு முன் அரசியல் நிர்ணய சபை பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
1946, மே 16 அன்று அமைச்சரவைத் தூதுக்குழு, அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. 9 டிசம்பர் 1946 அன்று "டாக்டர்.சச்சிதானந்த் சின்ஹா " இந்திய அரசியல் தற்காலிக நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் டாக்டர் இராசேந்திர பிரசாத், அரசியல் நிர்ணய சபை நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோராயமான வரைவு வி.என். ராவ் அவர்களால் தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்பு முன்னுதாரணங்கள் தலைப்பில் மூன்று வரிசைகளில் தரப்பட்ட அந்தப் பின்னணி விவரங்களில் சுமார் அறுபது நாடுகளின் அரசியல் சட்டங்களின் சிறப்புக் கூறுகள் தொகுத்துத் தரப்பட்டிருந்தன.
டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக்குழு ஒன்று 1947 ஆகஸ்ட் 29ஆம் நாள் நியமிக்கப்பட்டது. வரைவுக்குழு 7 உறுப்பினர்களை கொண்டது.
தலைவர்: பி.ஆர். அம்பேத்கர்
மற்ற உறுப்பினர்கள்: கோபாலஸ்வாமி ஐய்யங்கார், அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர், கே.எம். முன்சி, முகமது சாதுல்லா, என். மாதவராவ், டி. பி. கைதான்.
1949 நவம்பர் 26ஆம் தேதி இக்குழு அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி முடித்தது. 1950 ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
பல நாடுகளில் உள்ள சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தான் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் வழங்கிய இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களுக்குச் செல்லும் முன் இட ஒதுக்கீடு குறித்த ஆரம்ப கால வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.
இட ஒதுக்கீடு முறை பிரித்தானிய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே சமஸ்தான இந்தியாவில் தான் முதன் முதலில் நடைமுறைக்கு வந்தது.
மராட்டியத்தில் ஒரு சமஸ்தானமான கோல்ஹாப்பூரில், பார்ப்பன பேஷ்வாக்கள் மிக கொடூரமான சுரண்டலிலும், ஒடுக்குமுறையிலும் ஈடுபட்டதால், அங்கு பார்ப்பனரல்லாத மக்களுக்கும் பார்ப்பன பேஷ்வாக்களுக்கும் இடையே பெரும் முரண்பாடு வெடித்தது. கோல்ஹாப்பூரை ஆண்ட சாகு மகாராஜா, முதன் முதலாக 1882 ஆம் ஆண்டு, தன் ஆட்சிக்குட்பட்ட மக்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வை நீக்கும் நோக்கத்தில், கல்வியின் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை வழங்க சட்டம் இயற்றினார். ஆனால் அந்த சட்டம் 1892 ல் தான் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதுவே இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் சாதி ரீதியான இடஒதுக்கீடு ஆகும். இது அம்பேத்கருக்கும், நீதிக் கட்சிக்கும் முன்னரே வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மன்னர் ஆட்சிக்குப் பின்னரான ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது செல்வாக்கு உயர்ந்திருந்தது. சுமார் 3.2% மட்டுமே இருந்த பிராமணர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை அனுபவித்தனர். ஆங்கிலேய ஆட்சியில் கல்வி பெறும் உரிமை, தரமான வேலை வாய்ப்புரிமை, நில உரிமை, அரசியல் உரிமை, சமூக பங்கேற்பு உரிமை, அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் சாதி
ஆதிக்கத்தின் தாக்கத்தையும், யார் அதிகமாக பயனடைந்தனர் என்ற தகவலையும் பிரித்தானிய அரசின் கீழ்க்கண்ட ஆவணங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
" 1. மாவட்டங்களில் உள்ள சார்புநிலைப் பணிகளில் சில குறிப்பிட்ட குடும்பங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அந்த பகுதிகளில் முதன்மை சாதிகளுக்குப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்" என வருவாய்த்துறையின் நிலைமை குறித்து 1854 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு உத்தரவு (எண். 128 (2)) கூறுகிறது".
2. "பெரும்பான்மை மக்கள் எவ்வித உதவியுமின்றிக் கற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள்" என்று 1883 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக் குழுவின் அறிக்கை, அத்தியாயம் 1 இவ்வாறு கூறுகிறது.
3. 09.03.1894 அன்று வெளியிடப்பட்ட, அரசுக் குழு ஒன்றின் நிலை ஆணைதான் (Board's Standing order - 128(2)), '"அரசு வேலைகளில் ஒரே ஒரு சாதியாரின் ஆதிக்கம் இருப்பதை" அறிந்து கூறியது ".
பிரித்தானிய அரசின் மாவட்ட ஆட்சியர்களை விட பல இடங்களில் பார்ப்பன அதிகார மையங்கள் சமூகச் செல்வாக்குச் செலுத்தின. மாவட்ட ஆட்சியர் நிர்வாகியாக இருந்தும் கூட இவர்களை மீறி ஒன்றும் செய்து விட முடியவில்லை. எனவே பிரித்தானியர்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவை உருவாக்க புதிய பதவிகளில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டிய நடைமுறை அவசியத்தை உணர்ந்தனர்.
1885 ஆம் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசும் "இந்திய வேலையை இந்திய மயமாக்கு" என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதனால் பிரித்தானிய அரசும்
1885-90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், மாவட்டத் துணை ஆட்சியர், மாவட்ட நீதிபதிகள், அலுவலக முதன்மை பணிகள் இந்திய குடிகளுக்கு எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவையனைத்தும், உயர்சாதியினரே வைத்துக் கொண்டார்கள். இதனால் எதிர்ப்பு எழுந்தது.
இஸ்லாமியர்கள் அமைப்பாக திரண்டு எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். "முஸ்லீம் லீக் "கட்சி தொடங்கப்பட்ட உடனேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையையே முதலில் முன்னிறுத்தினர். 1906 அக்டோபர் 1ஆம் நாள் ஆகாகான் தலைமையில் அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோரினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு 1909 ஆம் ஆண்டு, மின்டோ மார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த இடஒதுக்கீடு அரசியல் தளத்தில் மட்டுமே அமைந்தது, வரலாற்றில் பிரிட்டிஷ் வெள்ளையர் அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடு இதுவேயாகும்.
அம்பேத்கரோ, நீதிக்கட்சியோ இந்த உரிமையை பெற்றுத் தரவில்லை. அது மட்டுமல்ல. DNT மக்களுக்கான சமூக நீதிப் போராட்டத்திலும் இவர்கள் பங்கு எள்ளவும் இல்லை. இந்த மக்களுக்கான போராட்ட வரலாறு மிக நீண்டது. சமூக நீதி இயக்கங்களும் , விடுதலைப் போராட்ட இயக்கங்களும் இவர்களைப் பற்றி பேசவில்லை. "லல்வக் " அறிக்கையைப் பற்றி கூட இன்னும் சமூக நீதி வரலாற்று ஏட்டிலே யாரும் எழுதவில்லை. இந்த நிலையில் தான் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தந்தார் என்ற வரலாற்று மோசடியை பரப்புகின்றனர்.
தோழமையுடன்
மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060
------------------------

 நீட் தேர்வு வினாத்தாள் கடினமா?
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
பார்வை: NEET UG 2023 கேள்வித்தாள்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
எப்போதுமே Botany, Zoology படங்களில் 
கேள்வித்தாள் எளிதாக இருக்கும். அதற்குக் 
காரணம் அந்தப் பாடங்களின் தன்மை!

பெரிய அளவில் conceptual questions எவற்றையும் 
Botany, Zoologyல் கேட்க முடியாது. ப்ளஸ் டூ 
பாடத்திட்டத்தைப் பொறுத்து Botany, Zoologyல் 
knowledge, understanding சார்ந்த கேள்விகள் 
மட்டுமே கேட்கப்படும். சமயங்களில் 
application சார்ந்து கேள்விகள் வரும்.
Skill சார்ந்த கேள்விகளோ, conceptual questions
போன்ற கடினமான கேள்விகளையே 
Botany, Zoologyல் கேட்க இயலாது. அப்பாடங்கள்
அதற்கு இடமளிப்பதில்லை.

Chemistryல் ஓரளவுக்கு கடினத்தன்மை வாய்ந்த 
கேள்விகளைக் கேட்கலாம். அதற்கு chemistry 
இடமளிக்கும்.

அடுத்து Physics. இதன் தன்மை என்னவெனில் 
கடினமான கேள்விகளைத் தவிர வேறு எளிதான 
கேள்விகளைக் கேட்பதற்கு physics இடமளிக்காது.
எனவே எப்போதுமே physics portion கடினமாகவே 
இருக்கும். மானாவாரியாக conceptual questionsஐக் 
கேட்பது physics வினாத்தாள் தயாரிப்பவரின் 
இயல்பு. அத்தோடு physics always includes mathematic
என்பதால் sums உள்ள கேள்விகளைக் கேட்டு 
விடுவார்கள். இயற்பியல் ஆசிரியர்கள்.
எனவே எப்போதுமே physics கஷ்டமாகவே இருக்கும்.

சுருங்கக் கூறின்,
NEET UG வினாத்தாளைப்  பொறுத்தமட்டில்,
இதுதான் எப்போதும் உள்ள நிலவரம்!

Botany ..... Always Easy; fully easy.
Zoology.... 90% is ever Easy. 
Chemistry: 80% is ever easy and 20% is slightly difficult.
Physics: Physics portion is always TOUGH.
இதுதான் NEET.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு: 
வீரவநல்லூரில் இசக்கிமுத்து அண்ணாச்சி கையில் 
NEET  வினாத்தாளை வைத்துக்கொண்டு சில 
தர்க்குறிப் பயல்களை செருப்பால் அடித்துக் கொண்டு 
இருக்கிறார். இடம்: வீரவநல்லூர் மோர் மடம்.
இசக்கிமுத்து அண்ணாச்சி இயற்பியலில் MSc படித்தவர் 
என்பதால் ஊரார் அவருடைய செயலுக்கு அங்கீகாரம் 
அளிக்கிறார்கள்.
*****************************************************
          
     

      

வியாழன், 4 மே, 2023

பின்ராயி விஜயனின் பிம்ப்புகளாக 
போலி மாவோயிஸ்டுகளும் போலி நக்சல்பாரிகளும்!
ஒரு இழவும் தெரியாத உள்ளூர் கபோதிகள்!
-----------------------------------------------------------------------------------
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே (2022)
கேரளத்தில் அரசுப் போக்குவரத்துத் துறையில் 
(KSRTC) 12 மணி நேர வேலையை அமல்படுத்தி 
விட்டது பினராயி விஜயனின் போலி மார்க்சிஸ்ட் அரசு.

கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமான இந்த
12 மணி நேர வேலை அமலானது பற்றி இங்குள்ள 
நமது உள்ளூர் போலி மாவோயிஸ்டுகளுக்கோ
போலி நக்சல்பாரிகளுக்கோ ஒரு இழவும் தெரியாது.

ஒட்டு மொத்த தமிழ் வாசக்காப் பரப்பில் இதை 
முதன் முதலில் எடுத்துச் சொல்லி CPMன் தொழிலாளி 
விரோதப் போக்கை அம்பலப் படுத்தியவன் நான் ஒருவனே.

நான் கரடியாகக் கத்தியபோது இந்த மானங்கெட்ட 
போலி மாவோயிஸ்டுகளும் போலி நக்சல்பாரிகளும்
னவத் துவாரங்களை மூடிக்கொண்டு பினராயி 
விஜயனின் பிம்ப்புகளாக (pimps) வாழ்ந்து கொண்டுஇருந்தார்கள்.

மேதினச் சிறப்பிதழ் வெளியிட்ட இந்தக் கோமாளிகள் 
தங்களின் சிறப்பிதழில் கேரளத்தில் அமலுக்கு வந்த 
12 மணி நேர வேலையைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட 
எழுதியது கிடையாது.

ஏனெனில் இந்த முண்டங்களுக்கு ஒரு இழவும்  தெரியாது.
இவர்களிடம் பேப்பர் படிக்கும் பழக்கம் கிடையாது.
இவர்களில் 99 சதவீதம் தற்குறிகள். இவர்களுக்கு 
ஆங்கிலம் தெரியாது. இந்தச் செய்திகளெல்லாம் 
தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவராது. ஆங்கிலச் 
செய்தித்தாள்களை படிக்க வேண்டும். அதற்கு 
ஆங்கிலம் தெரிய வேண்டும். இவர்களில் பலருக்கு 
பட்லர் இங்கிலீஷ் மட்டுமே தெரியும்.

நான் Main stream mediaவில் பல்வேறு யூடியூப் சானல்களில் 
12 மணி நேர வேலை குறித்து கடுமையாகக் 
கண்டித்து நேர்காணல் வழங்கி உள்ளேன். அண்மையில் 
நான் கொடுத்த ஒரு நேர்காணல் இரண்டு லட்சம் பேரால் 
பார்க்கப்பட்டு உள்ளது.

ஆதன் தமிழ், பேசு தமிழா பேசு, ஐதமிழ், தினமலர், 
சாணக்யா உள்ளிட்ட பல்வேறு சானல்களில் பல்வேறு 
அரசியல் பொருள் பற்றி நேர்காணல் அளித்துள்ளேன்.

ஆளும் திமுக அரசையும் அதன் கூட்டணிக் 
கட்சிகளான போலிக் கம்யூனிஸ்டுகளையம் 
உறுதியுடன் எதிர்த்துக் கொண்டு, லெனின் மிகவும் 
சிலாகித்துக் கூறிய அரசியல் அம்பலப்படுத்தல்களை 
(political exposures) மிகவும் வீரியத்துடன் செய்து 
வருகிறேன். 

நான் சொல்லாமலும், என் மூலமாக அல்லாமலும் 
வேறெந்த வழியிலும் நமது உள்ளூர் போலி மாவோயிஸ்டுகளும்   
போலி நக்சல்பாரிகளும் கேரளத்தில் அமலுக்கு வந்து விட்ட 
12 மணி நேர வேலை பற்றி அறிந்திருக்கவில்லை.
அப்படி அறிந்திருந்தால் நான் சொல்வதற்கு முன்னதாக 
அவர்கள் சொல்லி இருந்தால் அதற்கான ஆதாரத்தை 
மேற்கூறிய போலிகள் தரட்டும்.

இந்தியாவிலேயே முதன் முதலாக 12 மணி நேர வேலை 
அமல் படுத்தி இருப்பது கேரளத்தில் உள்ள போலி 
மார்க்சிஸ்டு விஜயனின் அரசே ஆகும். இது 
கம்யூனிசத்திற்கே ஒரு தலைகுனிவு ஆகும். பின்ராயி 
விஜயனின் இந்த தொழிலாளி விரோதப் போக்கை 
கண்டிக்க மனமில்லாத போலி நக்சல்பாரிகளும் 
போலி மாவோயிஸ்டுகளும் நாசமாகப் போகட்டும்.
********************************************************   
   
    
   
 

செவ்வாய், 2 மே, 2023

அஞ்சல் துறையில் இரண்டு தொழிற்சங்கங்களின் 
அங்கீகாரத்தை ரத்து செய்தது மத்திய அரசு!
தொழிற்சங்கங்களின் குட்டி முதலாளித்துவத் 
தலைவர்களின் தற்குறித்தனமே காரணம்!
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------
அஞ்சல் துறையில் செயல்பட்டு வரும் இரண்டு 
தொழிற்சங்கங்களின் (AIPEU, NFPE) சங்க அங்கீகாரத்தை 
அண்மையில் (ஏப்ரல் 26, 2023) மத்திய அரசு ரத்து 
செய்துள்ளது. 
(AIPEU = All India Postal Employees Union.
NFPE = National Federation of Postal Employees).

அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான காரணங்களாக 
மத்திய அரசு கூறியிருக்கும் காரணங்கள் legally valid 
என்றபோதிலும் அவை அற்பக் காரணங்களே. 
மேற்கூறிய இரு சங்கங்களின் அங்கீகாரத்தை 
நிரந்தரமாக ரத்து செய்வதற்குரிய வலுவான 
காரணங்கள் அல்ல அவை.    

இன்றோடு (மே 02, 2023) அங்கீகாரம் ரத்தாகி ஒரு வாரம் 
முடிகிறது. ஒரு வார காலத்திற்கு அங்கீகாரம் ரத்து 
என்பதே போதுமான நடவடிக்கை என்று கருதி 
மத்திய அரசு மேற்குறித்த இரண்டு சங்கங்களின் 
அங்கீகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஒரு வார 
காலத்திற்கும் மேலாக அங்கீகாரப் பறிப்பை 
நீட்டித்துக் கொண்டே செல்வது the punishment does not 
commensurate with the gravity of the offence என்பதையே சுட்டும். 

மொத்தமுள்ள சுமார் ஐந்து லட்சம் அஞ்சல் ஊழியர்களில் 
இச்சங்கங்களுக்கு மூன்று லட்சம் ஊழியர்களுக்கு 
மேல் ஆதரவு இருக்கிறது என்ற யதார்த்தத்தையும் 
கணக்கில் கொள்ள வேண்டும். 

அரசு ஊழியர்களுக்கு அரசியல் உரிமை எதுவும் கிடையாது.
இதுவே பிரிட்டிஷ் ஆட்சி முதற்கொண்டு இன்று வரை 
காலங்காலமாக நீடித்து வரும் நிலைமை ஆகும். எனவே 
மத்திய அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் 
(CCS Conduct Rules 1964) எந்த ஒரு அரசியல் கட்சியின் 
நடவடிக்கைகளிலும் அரசு ஊழியர்கள் பங்கேற்பதை 
கடுமையாகத் தடுக்கின்றன. அரசியல் கட்சிகளில் 
உறுப்பினராக இருப்பது முதல்  அக்கட்சிக்கு நன்கொடை 
கொடுப்பது வரை அனைத்தையும்  அரசு ஊழியர்கள்  
மேற்கொள்ள இயலாது. நடத்தை விதிகள் அவற்றை 
அனுமதிப்பதில்லை.

என்றாலும் நடத்தை விதிகளைக் காலின் கீழ் போட்டு 
மிதித்துக்கொண்டு லட்சக் கணக்கான மத்திய மாநில 
அரசு ஊழியர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் 
கட்சிகளில் இணைந்து அன்றும் இன்றும் செயல்பட்டுக் 
கொண்டுதான் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் 
கட்சிகளுக்கு நன்கொடை வசூலித்துக் கொடுத்துக் 
கொண்டுதான் இருக்கிறார்கள், பகிரங்கமாக அல்ல, 
ரகசியமாக.

பல ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது சிறையில் இருந்த 
மறைந்த நக்சல்பாரித் தலைவர் தோழர் கொண்டபள்ளி 
சீதாராமையா (மக்கள் யுத்தக் குழு)  அவர்களை, சிறையில்  
இருந்து தப்பிக்க வைத்து வெளியே கொண்டு வரும் ஒரு 
முயற்சி நடைபெற்றது; இது வெற்றியும் பெற்றது. 

இந்நிகழ்வின்போது மருத்துவமனையில் நக்சல்பாரிகள் 
நடத்திய ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்து போக 
நேர்ந்தது. இந்த நடவடிக்கைக்கு அன்று தேவைப்பட்ட 
சுமார் ஒரு லட்ச ரூபாய் பணத்தில் பெரும்பகுதியை 
கட்சிக்கு (மக்கள் யுத்தக் குழுவிற்கு) ரகசியமாக 
வழங்கியவர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்களே 
என்பதை நான் நன்கறிவேன்; அதை இங்கு பதிவு செய்ய 
விரும்புகிறேன். கருணாநிதியின் போலீசால் போலி 
என்கவுண்டரில் கொல்லப்பட்ட மறைந்த நக்சல்பாரிப் 
புரட்சியாளர் தோழர் ரவீந்திரன் நிதி திரட்டியதை  
நான் நன்கறிவேன். (தோழர் ரவீந்திரன் இளநிலைப் 
பொறியாளராக எங்களுடன் (Govt Telecom) அன்று 
பணியாற்றியவர்). 

நமது அஞ்சல் துறையின் குட்டி முதலாளித்துவத் 
தலைவர்கள் யாரும் நக்சல்பாரிகள் அல்ல. அவர்கள் 
போலி கம்யூனிஸ்டுகள். ஜோதிபாசு, புத்ததேவ் 
பட்டாச்சாரியா, பினராயி விஜயன் ஆகியோரைப் 
பார்த்து வளர்ந்தவர்கள். எனவே அவர்களிடம் புரட்சிகர
விழிப்புணர்வு என்பது மருந்துக்கும் கிடையாது. 
எனவே அவர்கள் என்ன செய்தார்கள்?

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் CITU சங்கத்திற்கும் நன்கொடை 
கொடுத்தார்கள். மிகவும் பகிரங்கமாகக் கொடுத்தார்கள்.
காசோலை மூலம் கொடுத்தார்கள். அவ்வளவுதான்!
மாட்டிக் கொண்டார்கள். 

மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களை 
அங்கீகரிக்கும் சட்டப்படி, எந்த ஒரு தொழிற்சங்கமும் 
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை வழங்கக் 
கூடாது. இச்சட்டத்தை மீறி, எந்தச் சங்கமாவது எந்தக் 
கட்சிக்கேனும் நன்கொடை வழங்கி இருந்தால், 
அச்சங்கத்தின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்யும்.

AIPEU, NFPE சங்கங்களின் குட்டி முதலாளித்துவத் 
தலைவர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ 30,000 நன்கொடை 
வழங்கி இருக்கிறார்கள்; காசோலை மூலமாக! 
Utter foolishness! 

தடை செய்யப்பட்ட கட்சியின் தலைவரை
சிறை உடைப்பு (jail break) செய்து விடுதலை செய்ய 
நிதி திரட்டிய தோழர் ரவீந்திரனின் மயிரைக்கூட 
போலீசாலும், கியூ பிராஞ்சாலும், உளவுத்துறையாலும் 
பிடுங்க முடியவில்லை. ஆனால் கேவலம் ஒரு அற்பத் 
தொகையான ரூ 30,000ஐ மார்க்சிஸ்ட் கட்சிக்கு 
காசோலை மூலம் கொடுத்து விட்டு மாட்டிக் 
கொண்டார்கள் குட்டி முதலாளித்துவப் பிழைப்புவாதத் 
தலைவர்கள்!

இறுதியாக அங்கீகாரத்தை ரத்து செய்த தொலைதொடர்பு-
ரயில்வேத் துறைகளின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ 
அவர்களுக்கு எங்களின் வேண்டுகோள்!

பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம் என்றார் லெனின்
மார்க்சிஸ்ட்  கட்சி பன்றித் தொழுவச் சீமான்களின் கட்சி!
பன்றித் தொழுவச் சீமான் ஸ்ரீமான் சோம்நாத் சட்டர்ஜி (CPM) 
பன்றித் தொழுவத்தில் சபாநாயகராக இருந்தவர். ஸ்ரீமான் 
இந்திரஜித் குப்தா (CPI)  உள்துறை அமைச்சராகவே 
இருந்தவர். CPI, CPM கட்சிகள் புரட்சிகரக் கட்சிகள்
அல்ல. அவை எதிர்ப்புரட்சிகர அமைப்புகள். குறிப்பாக 
மார்க்சிஸ்ட் கட்சி ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்று
இந்திய மக்களிடையே நன்கு அம்பலப் பட்டுச் 
சீரழிந்த கட்சி.

அங்கீகார ரத்து என்னும் நடவடிக்கையானது, 
செல்வாக்கிழந்து போன CPM கட்சி தனது 
கிழிந்துபோன புரட்சிகர முகமூடியைத் 
தைத்து அணிவதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பே ஆகும்.  
இத்தகைய ஒரு வாய்ப்பை பிழைப்புவாத CPM கட்சிக்கு
வழங்குவது அறிவுடைமை ஆகாது. 

எனவே போலிக் கம்யூனிஸ்ட் கட்சியான CPMன் 
தலைமையில் உள்ள AIPEU, NFPE என்னும் அஞ்சல் 
துறையின் இரண்டு தொழிற்சங்கங்களின் 
அங்கீகாரத்தை ரத்து செய்ததை உடனடியாக 
முடிவுக்குக்  கொண்டு வந்து அச்சங்கங்களின் 
அங்கீகாரத்தை மீண்டும் வழங்குமாறு கேட்டுக் 
கொள்கிறோம்.

தோழமையுள்ள, 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் மாவட்டச் செயலாளர் 
NFTE BSNL, தமிழ்நாடு, சென்னை.
நாள்: 02.05.2023, 2020 hours.
************************************************