மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் !
(பகுதி ஐந்து )
-------------------------------------------------
பருண்மையாகப் பிரயோகிக்க வேண்டியதன் அவசியம் கருதி
மெய்யான அக்கறையுடன் மார்க்சியத்தைப் புதுப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எல்லாம்
திரிபுவாதம் ( revisionism) என்ற சிமிழுக்குள் அடைக்க முற்படுவது வாடிக்கை. இது மார்க்சியத் தலிபான்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஒரு துருப்பிடித்த தந்திரமே.இத்தகைய முயற்சிகள்
மார்க்சியத்தைப் பின்னுக்கு இழுப்பவை.
எந்த ஒரு தத்துவமும் செயல்முறையில் பரிசோதிக்கப் படும்போது
ஒரு நேர்கோட்டுப் பாதையில் பயணிக்க இயலாது .
எனவே வலது இடது விலகல்கள் தவிர்க்க இயலாதவை.திரிபுகள் தோன்றும்போதெல்லாம் அவற்றை சரி செய்து பாதையை நேராக்கும்
தத்துவ வலிமை உடையது மார்க்சியம்.
ஆனால் திரிபுவாதம் வேறு; புதுப்பித்தல் வேறு. திரிபுவாதம் தத்துவத்தைக் கெடுக்கும்;
புதுப்பித்தலோ தத்துவத்தை வளர்க்கும்.
புதுப்பித்தல் என்பது வளர்ச்சிக்கான முன் நிபந்தனை.
புதுப்பித்தல் இன்றி வளர்ச்சி இல்லை.
( WHAT IS GROWTH? GROWTH MEANS CHANGE;
THERE IS NO GROWTH WITHOUT CHANGE.
WHAT IS CHANGE?
CHANGE IS THE DISAPPEARANCE OF OLD AND THE APPEARANCE OF NEW.)
எனவே மார்க்சியம் புதுப்பிக்கப் படவேண்டும் என்ற முடிவு பிறக்கிறது.இது சமகாலத் தேவையில் இருந்து எழுந்த இயற்கையான முடிவு.
இது அகநிலை விருப்பத்தின் உந்துதலால் விளைந்தது அல்ல.
மாறாக புறநிலையை மெய்மையைக் கவனத்துடன் பரிசீலித்தான் விளைவு. இது எந்த ஒரு தனி நபரின் முடிவும் அல்ல. இதில் எவ்விதமான தனித்துவ வாதத்துக்கும் ( individualism ) இடமில்லை.
சமூக மாறத்துக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு , மெய்யான அக்கறையுடன் மார்க்சியம் பயின்று, பயின்ற மார்க்சியத்தை சமூகத்தில் பிரயோகித்துப் பட்டறிவு பெற்ற எவர் ஒருவரும் இயற்கையாகவே வந்து சேருகிற ஒரு முடிவு இது .
எனினும் இது குறுகிய அனுபவவாதம் (EMPIRICISM ) அன்று.
அனுபவத்தின் தொகுப்பும் அன்று. மாறாக, சரியான அறிவியல் பார்வையின் விளைவு.
-----------பகுதி ஐந்து முற்றியது -------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக