செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

ஒளி குறித்த சில விவரங்கள்!
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------- 
******************************
ஒளியின் பாதையும் பயணமும்!
-------------------------------------------------
ஒளியானது ஒரு ஊடகத்தினுள் செல்லும்போது 
எவ்வித பாதை விலகலும் (deviation) அடையாமல் 
நேர்கோட்டுப் பாதையில் செல்லும். இது 
ஒளியின் நேர்கோட்டுச் செல்கை 
(rectilinear propagation of light) எனப்படும்.
இது நியூட்டனின் முதல் விதிக்கு உட்பட்டது.

ஒளியின் பாதையில் வேறொரு ஊடகம் 
குறுக்கிடுமானால், ஒளியானது விலகல் 
அடையும். இது ஒளி விலகல் (refraction) 
எனப்படும். அதாவது ஒளியானது தான் 
அதுவரை சென்ற பாதையில் இருந்து 
விலகிச் செல்லும்.  

காற்று ஒரு ஊடகம். தண்ணீர் ஒரு ஊடகம்.
கண்ணாடி ஒரு ஊடகம். ஒவ்வொன்றும் 
வெவ்வேறு ஒளிவிலகல் எண்ணை உடையவை.
(refractive index).   

ஒளியானது ஆற்றலின் துகள் ஆகும்!
-------------------------------------------------------
துகள்கள் இரண்டு பெரும் பிரிவுகளில் 
அடங்குபவை.
ஒன்று: பொருள்சார் துகள்கள் (matter particles).
இன்னொன்று: ஆற்றல்சார் துகள்கள் (energy particles).

இதில் ஒளியானது ஆற்றல்சார் துகள் ஆகும்.
இது அணுவின் உட்கருவில் உண்டாவதில்லை. 
ஒளியை அழிக்க முடியாது. ஒளி என்பது 
ஆற்றல் ஆகும். ஆற்றலை அழிக்க இயலாது.
ஆற்றலின் அழியாமை விதி இருக்கிறது. 

Law of conservation of energy:
Energy can neither be created nor be destroyed 
but can be transformed from one form to another.    
(Light energy, heat energy, electrical energy போன்றவை 
ஆற்றலின் வெவ்வேறு வகைக்கு  உதாரணங்கள்).
******************************************** 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக