வியாழன், 7 நவம்பர், 2013

125th birthday of scientist c v raman

இயற்பியல் அறிஞர்  சி வி ராமன் 
125ஆவது பிறந்த நாள்!
---------------------------------------------------------------------- 
7 நவம்பர் 2013
----------------------------------------------------------------------  
ராமன் விளைவைக் கண்டறிந்த 
நோபல் பரிசு பெற்ற 
தமிழ்நாட்டு இயற்பியலாளர் 
சி வி ராமன் அவர்களின் 
125 ஆவது பிறந்த நாள் 
இன்று ( நவம்பர் 7, 2013).
ராமனைப் போற்றுவோம்!
அறிவியலைக் கற்போம்!!
--------------------------------------------------------------------- 

வெள்ளி, 1 நவம்பர், 2013

CHESS IS A PSYCHIC MURDER?!

சதுரங்கமா 

உளவியல் படுகொலையா?

---------------------------------------------------------- 
பி.இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------  
சதுரங்கத்தின் தாயகம் இந்தியாதான். 
என்றாலும் இந்தியா நீண்ட
காலமாக இதில் சோபிக்கவில்லை.
விஸ்வநாதன் ஆனந்த்தின் வெற்றிக்குப்  
பின்னர்தான் சதுரங்கம் இந்திய மக்கள் மத்தியில்
பரவலான கவனிப்பைப் பெற்றது.

சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தவன் 
ஒரு கணித நிபுணன் என்பது குறிப்பிடத்தக்கது.
"சதுரங்கம் ஒரு மனப்பயிற்சிக் கூடம்"
(  CHESS IS THE GYMNASIUM OF MIND" )   
என்றார் லெனின்.
லெனினும் கார்க்கியும் அவ்வப்போது 
சதுரங்கம் விளையாடுவது உண்டு; 
வழக்கம் போல் லெனின் தோற்பார்; கார்க்கி ஜெயிப்பார்.

"சதுரங்கம் ஒரு உளவியல் படுகொலை!" 
(CHESS IS A PSYCHIC MURDER )
என்றார் பாபி பிஷெர் ( BOBBY பிஷேர்).
அமெரிக்கரான இவர் உலக சாம்பியன். 
போரிஸ் பாஸ்கி ( BORRIS SPAASKEY )
என்ற ரஷ்யரிடமிருந்து 
உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவர் இவர்.

---------------------------------- தொடரும்------------------------------------------------

MAGNUS CARLSON WILL BE THE WORLD CHESS CHAMPION

உலக சதுரங்கப் போட்டி!
-------------------------------------  
மேக்னஸ் கார்ல்சனே வெல்வார்!
-----------------------------------------------

விஸ்வநாதன் ஆனந்த் 
மகத்தான சதுரங்க வீரர்தான்!
என்றாலும் உலக அளவில் 
ரஷ்யாவின் 
காரி காஸ்பரோவ்தான் 
தலைசிறந்த வீரராகக் 
கருதப்படுகிறார்( இன்று வரை) .

சென்னையில் நடைபெற இருக்கும் 
உலக சதுரங்கப் போட்டியில்
நார்வேயின் இளம் வீரர் (வயது 23)
மேக்னஸ் கார்ல்சன் 
விஸ்வநாதன் ஆனந்த்தை(வயது 43) வீழ்த்தி 
சாம்பியன் பட்டத்தை வெல்வார் 
என்று நிபுணர்கள் 
கருதுகிறார்கள்!  

இதுகுறித்த விரிவான கட்டுரை 
நாளை வெளிவரும்.
---------------------------------------------------------------
  

INDIA MUST ATTEND COMMONWEALTH MEET

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா 
கட்டாயம் பங்கேற்க வேண்டும்! ஏன் ? 
------------------------------------------------------  
பி.தமிழ்த்தொண்டன் 
------------------------------------------------------- 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா 
கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
அதுவும் இந்தியப் பிரதமரே 
நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.
ஒரு உண்மையான தமிழின உணர்வாளன், 
மானமுள்ள தமிழன் இப்படித்தான் சிந்திப்பான்.

தொலைநோக்குப் பார்வையோடு 
பார்க்கிற யாரும் 
இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் 
பங்கேற்பதையே விரும்புவார்கள்!

                                       ஏனென்றால்,

அப்போதுதான் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் 
கருமாதி பண்ண முடியும்.
ஈ.வே.கி.ச. இளங்கோவன் போன்ற 
நிரந்தரத் தமிழின விரோதிகளை 
மொட்டை அடித்து 
மூலையில் உட்கார வைக்க முடியும்.

காங்கிரசுக்குக்  கருமாதி பண்ணாமல் 
தமிழினத்துக்கு விடிவு என்பது கிடையாது.
******************************************************                                

செவ்வாய், 22 அக்டோபர், 2013

WORLD CHESS CHAMPIONSHIP MATCH IN CHENNAI

இதுதான் ஹியாத் ரிஜென்சி ஓட்டல் 

உலக சதுரங்கப் போட்டி!
முதல் முதலாக இந்தியாவில்!!
அதுவும் சென்னையில்!!!
---------------------------------------------------
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தும் (43) 
நார்வேயின் மக்னஸ் கார்ல்சென்னும் (22)
மோதும் உலக சதுரங்க சாம்பியன் போட்டி 
முதல் முதலாக இந்தியாவில், அதுவும் சென்னையில் நடக்க இருக்கிறது.

நவம்பர் 6 முதல் நவம்பர் 26 வரை இப்போட்டி நடைபெறும்.
போட்டி நடைபெறும் இடம், சென்னை தேனாம்பேட்டையில் 
(அண்ணா  சாலை) உள்ள ஹயாத் ரிஜென்சி  ( HYATT REGENCY)
எனப்படும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இப்போட்டி நடைபெற உள்ளது.

83 கிரவுண்டு பரப்பளவில் அமைந்த இந்த ஓட்டல்/விடுதியில் 
327 அறைகள் உள்ளன. சதுரங்க உலகமே போட்டியின் போது
இந்த ஓட்டலில் திரளும். 

இந்தியாவில் சதுரங்க விளையாட்டை முன்னேற்ற, 
இப்போட்டிசென்னையில் நடப்பது பெரிதும் உதவும்.   

கார்ல்சென்னா, ஆனந்தா?
பொறுத்திருப்போம்!

SCIENCE MEETING... PLEASE ATTEND.

NEWTON SCIENCE CLUB
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------------------------ 
தொடர்புக்கு: ilangophysics@gmail.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அறிவியல் கூட்டத்துக்கு வருக!
-------------------------------------------------------------------------------- 
இடம்: அன்னை மணி அம்மையார் அரங்கம்,
             பெரியார் திடல், தினத்தந்தி அலுவலகம் அருகில்,
              வேப்பேரி, சென்னை 007

நாள்: 24/10/2013 வியாழன் 
நேரம்:மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை.

பொருள்: பிரபஞ்சம் தோன்றியது எப்படி? 
                   ஓர் அறிவியல் விளக்கம்.

சொற்பொழிவாளர்: 

பி. இளங்கோ சுப்பிரமணியன் 
இயக்குனர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை.

கூட்ட ஏற்பாடு: பெரியார் நூலக வாசகர் வட்டம் 

குறிப்பு:
 இது முற்றிலும் அறிவியல் சொற்பொழிவு.
              இது முழுமையான ஒரு மணி நேர உரை. 
              மாலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை 
              தோழர் இளங்கோ பேசுவார்.

பேசுபொருள்:

பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன?
ஹிக்ஸ் புலம், ஹிக்ஸ் துகள் என்றால் என்ன?
ஸ்டாண்டர்ட் மாடல் என்றால் என்ன?
குவார்க்குகள், குளுவான்கள் முதலிய துகள்களின் பண்பு என்ன? 
பொருள்கள் நிறையைப் பெறுவது எப்படி?
நடப்பாண்டின் இயற்பியல் நோபல் பரிசு
பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
இயங்குவது எப்படி?
பிரபஞ்சத் தோற்றத்தில் கடவுளுக்கு
ஏதேனும் பங்கு உண்டா?

அனைவரும் வருக!
நேரத்துடன் வருக!!

அன்புடன் அழைக்கும்,
 நியூட்டன் அறிவியல் மன்றம் 
பெரியார் நூலக வாசகர் வட்டம்  
                             

வியாழன், 17 அக்டோபர், 2013

DEATH PENALTY COMMUTTED TO LIFE IN NAINA SAHANI CASE

தலைவாழை இலையில்
லட்டும் ஜிலேபியும் பாதாம் அல்வாவும்!
-------------------------------------------------------------------- 

கொடுத்து வைத்தவர்கள்தான் அவர்கள்!
யார்? மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்!


ஒன்றல்ல, இரண்டல்ல;
16 மரண தண்டனைகளை
பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது.
தூக்கில் தொங்கி, நாக்கு வெளித்தள்ளிச்  
செத்துப் போய் இருக்க வேண்டிய

16 குற்றவாளிகள்
தப்பித்து விட்டார்கள். 

சிறையில் இருந்து விடுதலை ஆன
அத்தனை பேரும் உயர் நீதிமன்றம் வழங்கிய
நிரபராதிகள் என்ற பட்டத்துடன்

தெருக்களில் திமிருடன் நடந்து செல்கிறார்கள்.
58 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட
லட்சுமண்புர் பதே வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம்
குற்றவாளிகள் அனைவரையும்

 விடுதலை செய்து
வழங்கிய தீர்ப்பை ஒட்டி 

நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

ஒருவேளை 58 தலித்துகளும் கொல்லப்படவில்லையோ?
உயிருடன்தான் இருக்கிறார்களோ!
எங்கேனும் தலைமறைவாக வாழ்கிறார்களோ?


எது எப்படி இருப்பினும், கொடுத்து வைத்தவர்கள்
மரண  தண்டனை எதிர்ப்புப் போராளிகள்(!!!)தான். 
ஒரு தீர்ப்பா,  இரண்டு தீர்ப்பா?
எல்லாத் தீர்ப்புகளுமே
மரண தண்டனை எதிர்ப்புப்  போராளி(!!!)களுக்குச் சாதகமாக அல்லவா
வந்து கொண்டு இருக்கின்றன!


நைனா சஹானி கொலை வழக்கிலும்
மரண தண்டனையை  ரத்து செய்து
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பந்தியில் உட்கார்ந்து இருக்கிறார்கள் 
மரண தண்டனை எதிர்ப்புப் 'போராளிகள்'.
அவர்களுக்கு முன் விரித்து இருக்கிற 

தலை வாழை இலையில்
லட்டு, ஜிலேபி, பாதாம் அல்வா, முந்திரி கேக்
என்று இனிப்புகளாகப் பரிமாறப் படுகிறது!


நைனா சஹானி ஒரு இளம் பெண். 
இளம் மனைவி. வயது 29.
இவள் கணவன் சுசீல் சர்மா இவளைச் சுட்டுக்கொன்று,
பிரேதத்தை கண்டம் துண்டமாக வெட்டி
தந்தூரி அடுப்பில் நெய்யை விட்டு எரித்தவன்.
சுசீல் சர்மா ஒரு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பதற்கு
அருகதை உள்ளவர். இல்லாவிடில் மனைவியைக் கொன்று
தந்தூரி அடுப்பில் வைத்து எரிக்க முடியுமா?   


இச் சம்பவம் நடந்தது ஜூலை 2, 1995 அன்று. அதாவது,
18 ஆண்டுகளுக்கு முன்பு.

புதுடில்லி செசன்சு நீதிமன்றம்
சுசீல்  சர்மாவுக்கு மரண தண்டனை விதித்தது. (தீர்ப்பு நாள்: நவம்பர் 7, 2003)
புதுடில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனையை
உறுதிபடுத்தியது.

(தீர்ப்பு நாள்: பெப்ரவரி 19, 2007)

உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை
ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

( தீர்ப்பு நாள்: அக்டோபர் 8, 2013)
தீர்ப்பு வழங்கிய மூவர் அமர்வில் 

( 3 member division bench )   
தலைமை நீதியரசரான 

மேதகு தமிழர் சதாசிவம் அவர்களும் அடக்கம்.

ஆக, மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்
ஆனந்தக் கூத்தாடி வருகிறார்கள்.
குற்றவாளிகளுக்குத் தண்டனையே 

விதிக்கப் படக்கூடாது
என்ற தங்களின் லட்சியம் கைகூடி வருவது கண்டு 
களிப்பும்  எக்களிப்பும் அடைகிறார்கள்!


*****************************************************************************************************