ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

வின் தொலைக்காட்சியில் விவாதம்!
-------------------------------------------------------------- 
DEBATE IN WIN TV!
--------------------------------------------------------------- 
08.02.2015 ஞாயிறு இரவு 7 to 8 மணி 
பொருள்:
-------------- 
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து என்ற 
ஒபாமாவின் கருத்தும் மோடியின் மௌனமும்!
பங்கேற்பு:
---------------- 
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன் ( நியூட்டன் அறிவியல் மன்றம் )
திரு அமெரிக்கை நாராயாணன் (காங்)
திரு நாராயணன் (பாஜக)

விரும்புவோர் காணலாம்!
................................... நியூட்டன் அறிவியல் மன்றம்.................. 

**********************************************************88.

சனி, 7 பிப்ரவரி, 2015

இடஒதுக்கீடு நியாயமா? தொடர வேண்டுமா?
கேப்டன் செய்திகள் டி.வி.யில் விவாதம்!
--------------------------------------------------------------------------- 
இன்று 07.02.2015 சனிக்கிழமை, இரவு 9.00 to 10.00
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் 
தோழர் பி. இளங்கோ சுப்பிரமணியன் 
பங்கேற்கிறார்.

விருப்பம் உள்ளவர்கள் காணலாம்!
CAPTAIN NEWS TV, 9 TO 10 PM.

.............. நியூட்டன் அறிவியல் மன்றம் ......... 

*******************************************************8  

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

இடஒதுக்கீடு என்பது பாரபட்சமே!
---------------------------------------------------------- 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------
இடஒதுக்கீட்டை எவர் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் 
அல்லது எதிர்க்கலாம். அதற்குமுன் இடஒதுக்கீட்டின் தத்துவம் 
என்ன என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியம்.
இடஒதுக்கீடு குறித்து சரியான ஒரு புரிதலுக்கு 
வருவதற்கு, மேற்கூறிய கேள்விக்கான சரியான விடையைத் 
தெரிந்து இருப்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்கிறது.

கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், இடஒதுக்கீடு என்பது 
"பாதுகாப்புக் கருதிய பாரபட்சம்" ஆகும் (PROTECTIVE 
DISCRIMINATION). இக்காரணம் பற்றியே, (ipso facto) இடஒதுக்கீடானது,
சட்டத்தின் முன்பான சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு 
எதிரானதாகும் ( against the principle of equality before law).  

இப்போது, பரிசீலனையில் இரண்டு கோட்பாடுகள் உள்ளன.
ஒன்று, பாதுகாப்புக் கருதிய பாரபட்சம்;
மற்றொன்று, சட்டத்தின் முன்பான சமத்துவம். இவற்றை 
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்தில், அசமத்துவமான ஒரு 
சமூகத்தில் வாழ்வாதாரங்கள் சமமாகப் பங்கிடப்பட மாட்டாது.
மெலிந்தவனின் பங்கை வலுத்தவன் அபகரித்துக்கொண்டு 
விடுவான்.இதன் விளைவாக, வலுத்தவன் மேலும் கொழுப்பதும்,
மெலிந்தவன் மேலும் இளைப்பதும் நடக்கும். இது முன்னிலும் 
மோசமான அசமத்துவத்துக்கு இட்டுச் செல்லும். இந்தப் போக்கைத் 
தடுத்து நிறுத்தவும், சமத்துவத்தை நோக்கிய தடத்தில் 
சமூகத்தை இயங்க வைக்கவும், சமூகத்தின் உறுப்பினர்களிடையே 
பாரபட்சமான ஓர் அணுகுமுறையைக் கையாள வேண்டியது 
உள்ளது.அத்தகைய ஓர் அணுகுமுறைதான் இடஒதுக்கீடு 
என்னும் பாதுகாப்புக் கருதிய பாரபட்சம் ஆகும். 

அசமத்துவமான இந்தியச் சமூகத்தில், சமூகத்தின் உறுப்பினர்கள் 
இடையே சாதி என்னும் பாரபட்சமும், அதன் உச்சமான தீண்டாமை 
என்னும் பாரபட்சமும் உள்ளன. இதில் தீண்டாமை என்பது 
அழிவு கருதிய பாரபட்சம் ஆகும் (DESTRUCTIVE DISCRIMINATION).
இந்த அழிவு கருதிய பாரபட்சத்தை முறியடிக்க, பாதுகாப்புக் 
கருதிய பாரபட்சத்தைத் தொழிற்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது.
(DESTRUCTIVE DISCRIMINATION versus PROTECTIVE DISCRIMINATION.
CASTE and UNTOUCHABILITY versus RESERVATION.)      

பாம்பு கடித்து நஞ்சு உடலில் ஏறியவனுக்கு, மாற்று மருந்து 
அதாவது, நஞ்சு முறிப்பு மருந்து கொடுப்பது அவசியம்.
அப்படிப்பட்ட நஞ்சு முறிப்பு மருந்தே( ANTIDOTE) இடஒதுக்கீடு 
ஆகும்.

இந்தியாவில் இடஒதுக்கீட்டின் வரலாற்றைத் தெரிந்தவர்கள் 
செண்பகம் துரைராசன் என்ற மாணவியைப் பற்றி அறிந்து 
இருக்கக் கூடும்; அறிந்து இருக்க வேண்டும். இடஒதுக்கீடு 
பாரபட்சமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் அதனால் தமது வாய்ப்பு பறிபோய் விட்டது 
என்றும் செண்பகம் துரைராசன் என்ற மாணவி நீதிமன்றத்தில் 
வழக்குத் தொடர்ந்ததும், அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் 
இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பெரும் போராட்டத்தை நடத்தியதும் அதன் விளைவாக அரசமைப்புச் சட்டம் திருத்தப் பட்டதுமான 
வரலாற்றை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.விரித்துக்கூற 
இங்கு இடமில்லை.

அடுத்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி 
செய்யும், சட்டத்தின் முன்பான சமத்துவம் (EQUALITY BEFORE LAW)
என்னும் கோட்பாட்டைப் பார்ப்போம். மானுட சமூகத்தின் 
ஆக உயர்ந்த கோட்பாடு இது.  எனினும், அசமத்துவமான  ஒரு 
சமூகத்திற்கு இது பொருந்தாது. சமமானவர்களுக்கு இடையில் மட்டுமே நிலவ வேண்டியது சமத்துவம்; சமமற்றவர்களுக்கு
இடையில் அல்ல. சமத்துவத்தை எய்திய பிறகு, ஒரு சமூகத்தில்
செயல்படுத்த வேண்டிய இக்கோட்பாட்டை, சமத்துவம் இன்னும் 
எய்தாத ஒரு சமூகத்தில் பேணுவது அபத்தத்துக்கு இட்டுச் செல்லும்.
THIS IS VALID ONLY IN A POST-EQUALITY SCENARIO!

 LIKEWISE, THE PROTECTIVE DISCRIMINATION IS A CONCEPT THAT 
IS VALID ONLY IN A PRE-EQUALITY SCENARIO!

ஆக, இடஒதுக்கீடு என்னும் பாதுகாப்புக் கருதிய பாரபட்சம் 
ஏற்றத் தாழ்வுகள் நிரம்பியதும் சமத்துவத்தை அடையாததுமான 
இந்திய சமூகத்தின் தேவையை நிறைவு செய்யும் ஒரு 
கோட்பாடு ஆகும். சாதி போன்ற அழிவு கருதிய பாரபட்சம் 
நீடிக்கும் வரை, இடஒதுக்கீடும் நீடிக்கும். சாதி என்று 
ஒழிகிறதோ, அன்று இடஒதுக்கீடும் தேவையற்றுப் போகும்.
--------------------------------------------------------------------------------------------- 
கட்டுரை ஆக்கம்: பி இளங்கோ சுப்பிரமணியன் 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
வெளியீட்டாளர் குறிப்பு:
-----------------------------------------
THIS IS THE CORRECT MARXIST LENINIST AND SCIENTIFIC 
STANDPOINT ON THE QUESTION OF RESERVATION.

******************************************************************      

  


    

வியாழன், 5 பிப்ரவரி, 2015

கிறிஸ்துவம் சாதிகளை ஏற்றுக் கொண்ட மதம்!
எனவேதான் அண்ணல் அம்பேத்கார் 
கிறிஸ்துவத்தை ஏற்கவில்லை!
தொல் திருமாவளவன் கருத்து!
-------------------------------------------------------------------------------- 
"புரட்சியாளர் அம்பேத்கார் 1956இல் பௌத்தத்தைத் 
தழுவினார்.அவர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து,
வெவேறு மதங்களில் உள்ள நல்லது கெட்டதுகளை 
எல்லாம் கண்டறிந்து, கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளலாம் 
என்கிற முடிவுக்கு வந்த நிலையில், திடீர் என்று அவர் அந்தக் 
கருத்தை மாற்றிக் கொண்டார்.ஏனென்றால், மதுரை 
கிறிஸ்துவத் தேவாலயங்களில் இருக்கிற சாதிப் பாகுபாடுகள் 
தீண்டாமைக் கொடுமைகள் பற்றித் தமது ஆய்வில் கண்டு 
அறிந்தார். கிறிஸ்துவமும் சாதி கிறிஸ்துவமாக மாறி விட்டது.
சாதிகளை இது ஏற்றுக் கொண்டு இருக்கிறது. எனவே 
கிறிஸ்துவத்துக்கு மாறுவதில் எந்தப் பயனும் இல்லை 
என்று அவர் வேதனைப் பட்டார்.அதனால்தான் அவர் 
கிறிஸ்துவத்தை தேர்வு செய்யத் தயங்கினார்."
...........தொல் திருமாவளவன்........

ஆதாரம்:
----------------- 
திருமாவளவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 
"நமது தமிழ்மண்"ஏடு, சனவரி 2015, பக்கம்-32.

********************************************************************  
இடதுசாரிகள் தலித்துகளை நெருங்குவதில்லை!
திருமாவளவன் குற்றச்சாட்டு!
------------------------------------------------------------------------------- 
"இசுலாமிய அமைப்புகளோடும் தலித் அமைப்புகளோடும் 
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்காரர்கள் காட்டுகின்ற நெருக்கம் 
கூட இடதுசாரிகள் காட்டவில்லை."
......தொல் திருமாவளவன்....
---------------------------------------------------------------------------------------- 
"ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சில உத்திகளைக் கையாண்டு 
பாஸ்வானை அமைச்சராக்க முடிகிறது. உதித்ராஜை 
நாடாளுமன்ற உறுப்பினராக்க முடிகிறது.அத்வாலேயை 
அவர்களது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடிகிறது.
மிக எளிதாக தலித்துகளை வென்றெடுக்க முடிகிறது.
ஏன் அவ்வாறு இடதுசாரிகளால் வென்றெடுக்க 
முடியவில்லை?"
......... தொல் திருமாவளவன்.....
------------------------------------------------------------------------------------------ 
தகவல் ஆதாரம்:
------------------------- 
தொல் திருமாவளவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 
"நமது தமிழ்மண்"ஏடு. சனவரி 2015, பக்கம்-22.

*********************************************************************8  


புதன், 4 பிப்ரவரி, 2015

ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்துக் குரைப்பதால் மட்டும் 
ஆர்.எஸ்.எஸ்.ஐ வீழ்த்த முடியுமா? 
தோழர் தொல் திருமாவளவன் பேசியதை முன்வைத்து 
கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் அணிகளுக்கு ஒரு கேள்வி!  
----------------------------------------------------------------------------------------- 
ஆர் .எஸ்.எஸ்-ஐ சித்தாந்த ரீதியாக, அமைப்பு ரீதியாக,
அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு CPI, CPM கட்சிகள் 
எவ்வளவு வலிமை பெற்றுள்ளன? எத்தனை முழுநேர 
ஊழியர்கள் சுகங்களைத் துறந்து கட்சிப்பணியாற்றத்
தயாராக உள்ளனர்? பார்ப்பன குட்டி முதலாளித்துவ 
மேனாமினுக்கிகளை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் 
செயல்பாடுகளை முறியடிக்க இயலுமா? சிந்திப்பீர்!
------------------------------------------------------------------------------------------    

திருமணமே செய்து கொள்ளாமல்  
முழுநேரப்பணி ஆற்றும் 
பதின்மூன்றாயிரம் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்!
------------------------------------------------------------------------------

"எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்;
ஆட்சி அதிகாரத்தை இழந்து விடக்கூடாது;
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
அதற்கென்று இந்தியாவில் 13 ஆயிரம் பேர் 
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 
18 வதில் இருந்து 90 வயது வரையில் முழுநேரப் 
பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள்".
..... தொல் திருமாவளவன்
செய்தி ஆதாரம்:
------------------------- 
நமது தமிழ்மண், சனவரி 2015, பக்கம்-20.
நமது தமிழ் மண் ஏட்டின் ஆசிரியர்:
தொல் திருமாவளவன். 
---------------------------------------------------------------------------------------------------- 
குறிப்பு: ஆர்.எஸ்.எஸ்சின் அமைப்பு வலிமை குறித்து 
இந்துத்துவ எதிர்ப்பாளர்களுக்கு உணர்த்தும் பொருட்டு 
திருமாவளவன் அவர்கள் கூறியது இது. வெறும் 
குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கித் தனத்தை மட்டும் 
வைத்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்கொள்ள 
இயலாது என்பதை வலியுறுத்தும் பொருட்டுக் கூறியது 
இது. இடதுசாரி மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு இயக்கங்களில் 
எத்தனை பேர் திருமணமே செய்து கொள்ளாமல் 
முழுநேர ஊழியர்களாக வேலை செய்கிறார்கள்? 
********************************************************     
காரல் மார்க்ஸ் 

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கனி இருப்பக் காய் கவரும் 
போலி முற்போக்குகள்!
--------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------- \
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் 
சட்டம் ( ANTI SUPERSTITION LAW ) இருக்கிறது.
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை 
ஏமாற்றி மோசடி செய்யும் போலிகளுக்கு அங்கு 
ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை 
உண்டு.

Maharashtra Prevention and Eradication of Human Sacrifice 
and other inhuman, Evil and Aghori Practices and 
Black Magic Act 2013 என்று அச்சட்டத்துக்குப் பெயர்.
26 ஆகஸ்ட் 2013 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது 
இச்சட்டம்.

பிற்போக்குச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட
பகுத்தறிவுப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் 
(1945-2013) அவர்களின் தளராத முயற்சியால் இச்சட்டம் 
பிறந்தது,அவர் தம் உயிரைத் தந்து இச்சட்டம் உருவாகக் 
காரணமாக இருந்தார்.

முதலில் இச்சட்டம் ஓர் அவசரச் சட்டமாக ( ordinance )
கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
பொருளாதாரம், அரசியல், சட்டம்-ஒழுங்கு முதலிய 
துறைகளில் அவசரச் சட்டம் கொண்டு வரப்படுவது 
இயல்பானதே. ஆனால், மக்களின் பண்பாடு சார்ந்த 
இச்சட்டம், அவசரச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டது 
என்பதில் இருந்து இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து 
கொள்ள முடியும்.

மராட்டிய மாநிலம் இந்துத்துவத்தின் கோட்டை. ஆர்.எஸ்.எஸ்.சின் 
தாயகம் இங்கு நாக்பூரில்தான் உள்ளது. பாஜகவும் சிவசேனையும் 
இம்மாநிலத்தில் மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சிகள். இங்குள்ள 
காங்கிரசும், சரத் பவாரின் கட்சியும் நாத்திகக் கட்சிகளோ 
பகுத்தறிவு இயக்கங்களோ அல்ல. அப்படி இருந்தும் இந்த 
மாநிலத்தில் "மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்" கொண்டுவரப் 
பட்டு இருக்கிறது. 

என்ன காரணம்? எப்படி இச்சட்டத்தை இங்கு கொண்டு வர 
முடிந்தது? இன்றைய முதல்வர் பாஜகவின் பட்நாவிஸ் 
அன்று  எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதுதான் 
இச்சட்டமே வந்தது. பாஜகவும் சிவசேனையும் எதிர்த்து 
நின்று இருந்தால் இச்சட்டம் வந்தே இருக்க முடியாது.

இந்துத்துவ மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமா?
கள்ளிச் செடியில் கற்பூர வாழைக்குலையா? வியக்கிறார்கள் 
மெய்யான பகுத்தறிவாளர்கள்!

என்ன அதிசயம்? எப்படி நடந்தது? வியக்கிறார்கள்!
காரணத்தை அலசி ஆராய்ந்தால் ஒன்று புலப் படுகிறது.
மராட்டியத்தில் போலிகள் இல்லை.

ஆம், ஆம், ஆம்! போலி முற்போக்குகள் அங்கு இல்லை.
இதனால்தான் அங்கு இச்சட்டம் கொண்டு வர முடிந்தது.
மராட்டிய மண் போலிகளை ஏற்பதில்லை.

இப்படி ஒரு சட்டத்தைத் தமிழ்நாட்டில் கொண்டு வருவது 
பற்றி, கனவிலாவது நினைக்க முடியுமா? போலி முற்போக்குகள் 
விட்டு விடுவார்களா?

ஆர்.எஸ்.எஸ்சும் பாஜகவும் தமிழ் மண்ணில் ஒரு 
சோமாலியாக் குழந்தையாகவே இருக்கின்றன.இங்கு 
இந்துத்துவ சக்திகளுக்கு எவ்வித வேர்ப்பிடிப்பும் 
கிடையாது. தற்போது இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 
ஸ்ரீரங்கம் ஒரு 'தெய்வீக' ஸ்தலம். என்றாலும், கடந்த 
2011 தேர்தலில் பாஜக இங்கு பெற்ற வாக்குகள் வெறும் 
இரண்டாயிரம்தான். 

ஆக, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட, 
இந்துத்துவ சக்திகள் வலுக்குன்றி இருக்கும் மாநிலமான 
தமிழ்நாட்டில் ஏன் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் 
கொண்டு வர முடியவில்லை?,

ஒரு நாளும் கொண்டு வர முடியாது. ஏனெனில், தமிழன் 
சினிமா மோகம் பிடித்தவன்.கூத்தாடிகளுக்கு அடிமையாகிப் 
போனவன்.கொத்தடிமைத்தனம் சிந்தையில் உறைந்தவன்.

உலகிலேயே, போலி முற்போக்குகள் நிறைந்த பூமி 
தமிழ்நாடுதான். ஆபாச எழுத்தாளன் பின்னால் போவான் 
இந்தப் போலி முற்போக்கு. கிறிஸ்துவப் பிரச்சாரம் 
என்ற பெயரில் மூடநம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வான் 
ஒரு அதிகாரி. அவன் பின்னால் போவான் இந்தப் 
போலி முற்போக்கு.கனி இருப்பக் காய் கவர்வான் 
இந்தப் போலி முற்போக்கு!

பிற்போக்கு ஆர்.எஸ்.எஸ்.ஐ விட அபாயகரமான 
போலி முற்போக்குகளை ஒழித்துக் கட்டாமல் 
தமிழ்நாடு ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது!

*****************************************************************