திங்கள், 4 ஜூலை, 2022

சூரியனில் இருந்து பூமி வெகுதூரம் தள்ளி 
இருக்கும் நாள் இன்று ஜூலை 4, 2022.
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
சூரியனில் இருந்து பூமி மிகவும் அதிகமான 
தொலைவில் இருக்கும் நாள் 2022 ஜூலை 4.
எவ்வளவு தொலைவில் இருக்கும்?
152,098,455 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.
அதாவது 15 கோடியே 20 லட்சம் கிமீ தொலைவு!

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 
மாறிக்கொண்டே இருக்கும். ஏன் என்றால் 
பூமி நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை. 
அது சூரியனைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
எனவே தூரம் மாறிக் கொண்டே இருக்கும்.

வானியலில் AU என்று ஒரு யூனிட் உண்டு.
AU = Astronomical Unit. 
1 AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள 
தூரம் ஆகும் (MEAN DISTANCE). அதாவது 
15 கோடி கிலோமீட்டர் ஆகும்.

இன்றைய நாளில் (2022 ஜூலை 04) சூரியனில் இருந்து 
பூமி அதிகபட்சத் தொலைவில் இருக்கிறது என்பதை 
வானியலில் aphelion position என்று சொல்லுவார்கள்.
apogee என்றால் பூமியில் இருந்து அதிகத் தொலைவு 
என்று பொருள். aphelion என்றால் சூரியனில் இருந்து 
அதிகத் தொலைவு என்று பொருள்.

அப்படியானால் குறைந்த தொலைவு என்ற ஒன்று 
இருக்க வேண்டும் அல்லவா? ஆம், இருக்கிறது.
அது perihelion position எனப்படும். 
      
இந்த ஆண்டு 2022 ஜனவரி 4ஆம் நாள் பூமியானது 
சூரியனில் இருந்து மிகவும் குறைவான தூரத்தில் 
இருந்தது. அதாவது சூரியனுக்கு மிக நெருக்கமாக 
இருந்தது. அப்போது சூரியனுக்கும் பூமிக்குமான  
தூரம் 147,105,052 கிலோமீட்டர் ஆகும்.

பூமிக்கும் சூரியனுக்குமான சராசரி தூரம் 
mean distance =  1 AU = 15 கோடி கிமீ.
Aphelion = 152,098,455 கிமீ.
Perihelion = 147,105,052 கிமீ.

இந்த இடத்தில் நான் உருவாக்கிய நல்ல தமிழ்ச் 
சொற்களை அறிந்து கொள்ளுங்கள். அவற்றைப் 
பயன்படுத்துங்கள்.

Aphelion  =  சூரியச்சேய்மை. 
Perihelion =  சூரிய அண்மை. 
Apogee = புவிச்சேய்மை. 
Perigee = புவி அண்மை. 

சேய்மை என்றால் தொலைவு என்றும் 
அண்மை என்றால் நெருக்கம் என்றும் பொருள்.
சேய்மை = far. 
அண்மை = near.   

"சேய்மை அண்மையில் உயிர்க்கொரு 
துணையெனச் சிறந்த
வாய்மையால் அறந்தூய்மையாம்"  
என்னும் செய்யுளை அறிந்ததுண்டா?
அரிச்சந்திர புராணத்துச் செய்யுளா இது?
அல்லது வேறு எதுவுமா?

இச்செய்யுளை நான் என்னுடைய 13ஆம் வயதில் 
அறிந்தேன். அந்தச் செய்யுளில் இருந்துதான் 
புவிச்சேய்மை, புவிஅண்மை என்ற சொற்களை 
உருவாக்கினேன். அறிவியலோடு தமிழ் 
இலக்கியங்களையம்  கற்றால் அல்லாமல் 
யாராலும் நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்க இயலாது.

இவ்வாறு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 
தூரம் சேய்மையிலும் அண்மையிலும் மாறிக் 
கொண்டே இருக்கிறது? 
 
அதற்கு இதுதான் காரணம்! பூமி சூரியனை ஓர் 
நீள்வட்டப் பாதையில் (elliptical orbit) சுற்றுவதுதான்
காரணம்!

பூமி சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது 
என்பதை என்னால் எல்லாம் எளிதாக ஏற்றுக் 
கொள்ள முடிந்ததே இல்லை. ஏன்? Very poor eccentricity.
கெப்ளரும்தான் ஏற்றுக் கொண்டாரா, இல்லையே!
ஆனால் circular என்று கணக்கிட்டால் ஏகப்பட்ட 
பிழைகள் வந்து சேரவே, very poor eccentricity என்றாலும் 
அது ellipseதான் என்று முடிவுக்கு வந்தார்.

சரி, வாசகர்களுக்கு ஒரு கேள்வி!
பூமியானது சூரியனைச் சுற்றும் அந்த 
நீள்வட்டப் பாதையின், அதாவது அந்த நீள்வட்டத்தின் 
மையப் பிறழ்வு ((eccentricity) என்ன? வாசகர்கள் 
கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இன்று (ஜூலை 4, 2022) யாரும் வீரவநல்லூருக்குச் 
செல்ல வேண்டாம். இசக்கிமுத்து அண்ணாச்சி 
கடுங்கோபத்தில் இருக்கிறார். வீரவநல்லூர் 
பஸ் ஸ்டாண்டில் பஸ் வந்து இறங்கி, உங்களின் 
காலடி வீரவநல்லூர் மண்ணில் பட்டதுமே,
eccentricity பற்றி இசக்கிமுத்து அண்ணாச்சி கேள்வி 
கேட்பார். உங்களால் பதில் சொல்ல முடியாமல் 
போனால் உங்களின் முதுகுத் தொலியை உரித்து 
விடுவார் இசக்கிமுத்து அண்ணாச்சி.
*******************************************  
  
 
 
 

ஞாயிறு, 3 ஜூலை, 2022

 தோழர்கள் மருதையனும் கார்முகிலும்

நக்சல்பாரிகளா?
SOC, TNML குழுக்கள் நக்சல்பாரி அமைப்புகள் அல்ல!
------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்.
---------------------------------------------------------------------------------
இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக
நக்சல்பாரி விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சி
நிகழ்ந்தது. தொடர்ந்து திருத்தல்வாதத்தை எதிர்த்த
போராட்டத்தின் ஊடாக புரட்சிகரமான கம்யூனிஸ்ட்
கட்சி கட்டப் பட்டது.
1969 ஏப்ரல் 22 அன்று, லெனின் பிறந்த நாளன்று, CPI (ML)
கட்சி உதயமானது. மகத்தான புரட்சியாளர் தோழர்
சாரு மஜூம்தார் கட்சியின் முதல் பொதுச்செயலாளர்
ஆனார். ஐந்து பேர் (அல்லது ஏழு பேர்) கொண்ட மத்தியக்
கமிட்டியை அமைத்தார் சாரு மஜூம்தார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மார்க்சிய
லெனினியக் கட்சியின் வீச்சு இருந்தது. சாரு
மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று, நாடெங்கும்
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்
படிப்பைத் துறந்து புரட்சியை நோக்கி வந்தனர்.
மகாத்மா காந்திக்குப் பிறகு, வேறு எந்தத்
தலைவருக்கும் இல்லாதபடி, சாரு மஜூம்தாரின்
அறைகூவலுக்கு மட்டுமே மக்களிடம் மரியாதை
இருந்தது. இதையெல்லாம் கண்ட பீகிங் வானொலி
சாருவை புரட்சியின் சுடரொளி என்று பாராட்டியது.
ஜங்கல் சந்தால் உள்ளிட்ட உள்ளூர்த் தலைவர்களையும்
கனு சன்யால் போன்றோரையும் உள்ளடக்கியே கட்சி
கட்டி இருந்தார் சாரு மஜூம்தார். தாம் உயிரோடு
இருக்கும்போது பீகாரைச் சேர்ந்த சத்திய நாராயண்
சிங்கை மட்டும் மத்தியக் கமிட்டியை விட்டும் கட்சியை
விட்டும் நீக்கினார். மற்றப்படி ஸ்தாபனப் பிரச்சினைகள்
எதுவும் இல்லாமல் கட்சியின் செயல்பாடு சுமுகமாகவே
இருந்தது. இதனால் கொடிய சுரண்டல் நிகழும் பீஹார்
தெலுங்கானா போன்ற இடங்களில் கட்சியால் வறிய
விவசாயிகளை அணிதிரட்ட முடிந்தது. அறுவடையைக்
கைப்பற்ற முடிந்தது. இந்த ஆரம்ப கால வெற்றிகள்
கட்சி மற்றும் அணிகளின் உணர்வு மட்டத்தை உயர்த்தின.
அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியால்
இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அடக்குமுறையை ஏவினார். கொல்கொத்தாவில் ஒரு
மறைவிடத்தில் இருந்த சாரு மஜூம்தார் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில்
அவர் இறந்து விட்டார் அல்லது கொல்லப் பட்டு விட்டார்.
ஆக ஜூலை 1972ல் சாரு இறந்து விடுகிறார்.
1969 ஏப்ரலில் கட்சி தொடங்கப்பட்டது.
1972 ஜூலையில் பொதுச்செயலாளர் சாரு
இறந்து விடுகிறார். ஆக, மூன்றாண்டுகள் மட்டுமே
சாரு கட்சிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தினார்.
1969ல் கட்சி தொடங்கியதை அடுத்து, கட்சித் திட்டத்தை,
அதாவது இந்தியப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை
கட்சி உருவாக்கியது. 1970ல் உருவாக்கப்பட்ட இந்த
வேலைத்திட்டம் 70 வேலைத்திட்டம் என்று அழைக்கப்
படுகிறது. பல்வேறு மா-லெ கட்சிகள் இத்திட்டத்தையே
இன்றுவரை எவ்வித மாற்றமும் இன்றிச் செயல்படுத்தி
வருகின்றன.
1) இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளிய வர்க்கம்
2) இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரம் இல்லை
3) நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும்
இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு
4) புரட்சிக்குப் புறநிலைமைகள் கனிந்த ஒரு
சமூகம் இந்தியச் சமூகம் .
5) வர்க்க எதிரிகளைப் படுகொலை செய்யும் அழித்தொழிப்பே
(annihilation of class enemies) வர்க்கப் போராட்டத்தின்
உயர்ந்த வடிவம்
மேற்கூறியவையே கட்சியின் நடைமுறையாக இருந்தன.
இந்தியப் புரட்சி என்பது சீனப்புரட்சியின் மறுபதிப்பே என்ற சிந்தனை கட்சி மொத்தத்திலும் ஆதிக்கம் செலுத்தியது.
"சீனத்தின் தலைவர் நமது தலைவர்
சீனத்தின் பாதை நமது பாதை"
என்னும் செயல்தந்திர முழக்கம் கட்சியையும்
அணிகளையும் பிடித்தாட்டியது. இவை அனைத்துக்கும்
தலைவர் என்ற முறையிலும் உணர்வுபூர்வமாகவும்
சாரு மஜூம்தாரே பொறுப்பாவார். அவரும் அதை
மறுக்கவில்லை.
சாரு உயிருடன் இருந்தபோதே, கட்சி தொடங்கிய
குறுகிய காலத்திலேயே, 70 வேலைத்திட்டம் வகுக்கப்பட்ட
உடனேயே, அழித்தொழிப்புக்கு எதிராகவும் மக்கள் திரள்
பாதை வேண்டும் என்றும் கட்சியில் குரல்கள் ஒலிக்கத்
தொடங்கி இருந்தன. நாடு முழுவதும் மக்கள் திரள்
பாதையைக் கோரி, சிந்திக்கும் திறனுள்ள
முன்னணிகளின் குரல்கள் மெலிதாகவும் வன்மையாகவும்
கேட்க ஆரம்பித்தன. தமிழ்நாட்டிலும் மக்கள் திரள்
பாதைக்கான ஆதரவு மிகவும் வலிமையுடன் இருந்தது.
மக்கள் திரள் பாதையைக் கோரிய சத்ய நாராயண்
சிங்கை சாரு மஜூம்தார் கட்சியை விட்டு நீக்கினார்.
இதன் மூலம் நாடு முழுவதும் ஒரு தற்காலிகமான
நீர்க்குமிழித் தன்மை வாய்ந்த ஸ்தாபன அமைதியை
ஏற்படுத்தினார்.
எனினும் கோட்பாட்டுப் போராட்டம் (theoretical struggle) என்ற
வகையில் மக்கள்திரள் பாதைக்கான தரப்பு தொடர்ந்து
தன்னை முன்நிறுத்திக் கொண்டே இருந்தது. சாருவின்
மறைவுக்குப் பின்னால், மக்கள்திரள் பாதையை
வலியுறுத்தியோர் தனியாகப் பிரிந்து சென்றனர்;
தனிக்கட்சி கண்டனர்.
தமிழ்நாட்டில் அப்போதெல்லாம், அதாவது 1970களில்
கட்சிக்கு மாநிலக் கமிட்டியே இருந்தது. நன்கு கவனிக்கவும்:
மாநில அமைப்புக் கமிட்டி அல்ல; மாநிலக் கமிட்டியே.
வலுவான மத்தியக் கமிட்டி இருந்ததால், அதன் அங்கமாக
வலுவான மாநிலக் கமிட்டியும் இருந்தது. மாநிலக்
கமிட்டியின் உட்பிரிவாக பிராந்தியக் கமிட்டிகள் ருந்தன.
மக்கள் திரள் பாதையைக் கோரியும், அழித்தொழிப்பை
மறுத்தும் மேற்குப் பிராந்தியக் கமிட்டி வலுவாகவும்
வெளிப்படையாகவும் குரல் கொடுத்தது. கோவை, ஈரோடு,
திருப்பூர், சேலம் உள்ளிட்ட ஊர்கள் அடங்கியது மேற்குப்
பிராந்தியம். கட்சித் தலைமை மேற்குப் பிராந்தியக்
கமிட்டியின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்தது.
எனவே மேற்குப் பிராந்தியக் கமிட்டி முழுவதுமே
கட்சியை விட்டு விலகி, தனி அமைப்புக் கண்டனர்.
அந்த அமைப்புதான் மாநில அமைப்புக் கமிட்டி ஆகும்.
(SOC State Organising Committee).
மாநில அமைப்புக் கமிட்டிக்கு நக்சல்பாரிப் பாரம்பரியமோ
அல்லது அழித்தொழிப்புப் பாரம்பரியமோ கிடையாது.
அவர்களை நக்சல்பாரிகள் என்று அழைப்பதில் பொருள்
கிடையாது. ஒன்றுபட்ட கட்சியில் இருந்தபோதும், சாருவின்
தலைமையை ஏற்றுக் கொண்டு அதற்கு விசுவாசமாக
இருந்தனர் என்று சொல்ல இயலாது.
மற்றக் கட்சிகளின்
அணிகளில் பலர் மீதும் அழித்தொழிப்பு வழக்குகள்
இன்றும் நிலுவையில் இருக்கும்போது, மாநில அமைப்புக்
கமிட்டியின் அணிகள் மீதோ தலைவர்கள் மீதோ
அழித்தொழிப்பு சார்ந்த வழக்குகள் எவையும் கிடையாது.
தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள்
மூவர். தோழர்கள் அப்பு, ஏ எம் கே, புலவர் கலியபெருமாள்
ஆகிய மூவருமே அவர்கள். இவர்களில் தோழர் அப்புவை
போலீஸ் சுட்டுக் கொன்று விட்டது. தோழர்கள் ஏ எம் கே,
புலவர் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
தமிழ்நாட்டில் ஏ எம் கே தலைமையிலான அன்றைய
மக்கள் யுத்தக் குழுவும் (இன்றைய போல்ஷ்விக்கின்
முந்தைய பெயர்), வினோத் மிஸ்ரா தலைமையிலான
லிபரேஷன் குழுவுமே அழித்தொழிப்பை ஒரு போராட்ட
வடிவமாக மேற்கொண்டனர். மக்கள் யுத்தக் குழுவில்
இருந்து விலகி, பின்னாளில் தனிநபர் பயங்கரவாதியாகச்
சீரழிந்து போன தமிழரசனும் தம் பங்குக்கு நிறைய
அழித்தொழிப்புகளைச் செய்து இருக்கிறார். ஏனைய
குழுக்கள் எவையும் அழித்தொழிப்பில் ஈடுபடவோ அதை
ஏற்கவோ இல்லை. தோழர்கள் ஏ எம் கே மற்றும் புலவர் மீது அழித்தொழிப்பு
வழக்குகள் இருந்தன. பின்னர் விடுவிக்கப் பட்டனர்.
மேற்குப் பிராந்தியக் கமிட்டியே மாநில அமைப்புக்
கமிட்டியாக அவதாரம் எடுத்தது என்று பார்த்தோம்.
மாநில அமைப்புக் கமிட்டி ஒற்றுமையாக நீடிக்கவில்லை.
மிக விரைவிலேயே பிளவு பட்டது. தமிழ்நாடு அமைப்புக்
கமிட்டி (TNOC) புதிதாக தோழர் கார்முகில் தலைமையில்
உதயமானது. ஆக SOC, TNOC இரண்டும் 1980களில்
போட்டுக் கொண்ட ரோஷமான ஆங்கிலக் குத்துச்
சண்டை ஹாலிவுட் படமாகும் தகுதி பெற்றது. இரு
தரப்பினரும் பத்திரிகைகள் நடத்தினர். புரட்சியை
நடத்த முடியாது எனவே பத்திரிகைகளை நடத்துவோம்
என்று தீர்மானித்து இரு தரப்பினரும் பத்திரிகைகளை
நடத்தினர்.
இந்தியச் சமூகம் புரட்சிக்கான புறநிலைமைகள்
கனிந்த சமூகம் அல்ல என்பதும், புரட்சியை ஆதரித்து
மக்களிடம் பிரச்சாரம் செய்வதே இன்றையக்
காலக்கட்டத்தில் கட்சியின் கடமை என்பதும்தான்
SOC, TNOC ஆகிய இருவரின் நிலைபாடாக இருந்தது.
கோட்டயத்தில் இருந்து MASS LINE என்ற ஆங்கிலப்
பத்திரிகையை தோழர் வேணு கொண்டு வந்தார்.
வேணுவின் MASS LINE பாதையே இவர்களின் பாதை!
எனவே :"70ன் பத்தாண்டுகளை விடுதலையின்
பத்தாண்டுகளாக ஆக்குவோம்" என்ற சாருவின்
(The decade of seventies will be the decade of liberation)
முழக்கத்தை அவர்கள் எள்ளி நகையாடினர்.
"வர்க்க எதிரியைக் கொன்று அந்த ரத்தத்தில் கை
நனைக்காதவன் கம்யூனிஸ்ட்டே அல்ல" என்ற சாருவின்
முழக்கத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. எனவே SOC, TNOC
ஆகிய இரு அமைப்புகளும் நக்சல்பாரி பாரம்பரியத்தையோ
அழித்தொழிப்புப் பாரம்பரியத்தையோ கொண்டிருக்கவில்லை
என்பது மிகப்பெரிதும் கவனம் கொள்ளத் தக்கது.
இதன் பொருள் நக்சல்பாரிப் பாரம்பரியத்திற்கு இவ்விரு
கட்சிகளும் உரிமை கோர முடியாது என்பதே. அவர்கள்
உரிமை கோரினால் அது மோசடி ஆகும். நக்சல்பாரிப்
பாரம்பரியும் உடைய யார் எவரும் இவர்களின் போலியான
உரிமை கோரலை ஏற்க இயலாது.
எனவே SOC, TNOC (தற்போதைய பெயர் TNML) ஆகிய இரு
அமைப்புகளுமே நக்சல்பாரி அமைப்புகள் அல்ல என்ற
உண்மை இங்கு நிரூபிக்கப் படுகிறது.
*****************************************

 திரவ உந்துவிசை ராக்கெட்டை உருவாக்கிய

விஞ்ஞானி நம்பி நாராயணன்.
____________________________________
சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு இந்திய விண்வெளித் துறை வளர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகளின் கடின உழைப்பு உள்ளது. குறிப்பாக, திரவ உந்துவிசை ராக்கெட் என்ஜினை (Liquid Propulsion Engine) வடிவமைத்த அற்புதமான விஞ்ஞானி ஒருவரது பங்களிப்பு முக்கியமானது. அவர்தான், ராக்கெட் பொறியாளரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான எஸ்.நம்பிநாராயணன். இந்தியாவின் கிரையோஜெனிக் என்ஜின் வடிவமைப்பிலும் நம்பியின் பங்களிப்பு முக்கியமானது.
ஆனால், போற்றிப் புகழ வேண்டிய அவருக்கு நமது மத்திய, மாநில அரசுகள் இழைத்த அநீதி, என்றும் தீராத களங்கமாகவே இருக்கும். பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை விற்க முயன்றதாக அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டு, அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அந்தக் குற்றச்சாட்டின் பின்புலத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. தீவிர விசாரணைக்குப் பிறகு, உளவுக் குற்றச்சாட்டுகளிலிருந்து மத்தியப் புலனாய்வு அமைப்பாலும், உச்ச நீதிமன்றத்தாலும் அவர் விடுவிக்கப்பட்டபோதும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி இன்னமும் தீரவில்லை. நம்பி மீதான தவறான நடவடிக்கையால் இந்தியாவின் கிரையோஜெனிக் தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் பல ஆண்டுகள் தள்ளிப்போனது. இப்போதும்கூட தன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியவர்களை எதிர்த்து தனியொருவராக அவர் போராடிக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரத்துக்கு முந்தைய திருவாங்கூர் சம்ஸ்தானத்தில், நாகர்கோவிலில் 1942-இல் பிறந்தார் நம்பிநாராயணன். அங்குள்ள டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் (1958) பள்ளிக் கல்வியை முடித்த அவர், மதுரை, தியாராஜர் பொறியியல் கல்லூரியில் பயின்றார் (1965).
1966-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) பொறியாளராக இணைந்தார். அப்போது திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் அப்துல் கலாம் ராக்கெட் வடிவமைப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார். அந்தக் குழுவில், கலாம் வ்ழிகாட்டலில் நம்பி நாராயணன் பணிபுரிந்தார்.
நம்பி பணியில் சேர்ந்த புதிதில், இஸ்ரோ தலைவராக இருந்த விக்ரம் சாராபாய் அங்கு திடீர் வருகை புரிந்தார். அங்கு சுறுசுறுப்பாகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நம்பியைப் பார்த்த அவர், “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவருக்கு வந்திருப்பது இஸ்ரோ தலைவர் என்று தெரியாது. உடனே நம்பி, “முதலில் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். முதல் சந்திப்பே மோதலில் துவங்கினாலும், நம்பியிடம் இருந்த துணிவும் துறை சார்ந்த அறிவும் சாராபாய்க்கு மிகவும் பிடித்துப் போனது. அவரை, இஸ்ரோ செலவில் அமெரிக்கா அனுப்பி ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து படிக்க வைத்தார் சாராபாய்.
அமெரிக்கா சென்று திரும்பிய நம்பி, கலாமுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போது கலாம், திட எரிபொருள் ராக்கெட் தயாரிப்பு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுவந்தார். ஆனால், நமது எதிர்காலத் திட்டங்களுக்கு திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டே தேவை என்று கூறிய நம்பி, அதை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார். 1970-களில் அவரது முயற்சி வெற்றி பெற்றது; நாட்டின் முதல் திரவ உந்துவிசை ராக்கெட் என்ஜின் 600 கி.கி. எடையுடன் தயாரானது.
1971-இல் விக்ரம் சாராபாய் மறைவை அடுத்து, இஸ்ரோ தலைவரான சதீஷ் தவானும், யு.ஆர்.ராவும், நம்பிநாராயணன் மீது நம்பிக்கை வைத்து திரவ ராக்கெட் வடிவமைப்பில் அவரை உற்சாகப்படுத்தினர். அவரது தலைமையில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஃபிரான்ஸ் சென்று பயிற்சி பெற்று வந்தது. அக்குழுவினரின் தொடர் முயற்சியால், ஃபிரான்ஸ் நாட்டு உதவியுடன், திரவ ராக்கெட் என்ஜினின் மேம்பட்ட வடிவான ‘விகாஸ்’ (Vikas) உருவானது. விக்ரம் அம்பாலால் சாராபாய் நினைவாக அந்த என்ஜினுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அதுவே, இந்தியாவின் விண்வெளி சாதனைகளை நனவாக்க உதவிய ராக்கெட் இயந்திரம். துருவ செயற்கைக்கோள் ஏவுகலனிலும் (பி.எஸ்.எல்.வி.) சந்திரயானிலும், புவி இடைநிலை செயற்கைக்கோள் ஏவுகலனின் (ஜி.எஸ்.எல்.வி.) இரண்டாவது, நான்காவது நிலைகளிலும் ராக்கெட்டை இயக்குவது விகாஸ் என்ஜின்தான்.
கிரையோஜெனிக் தொழில்நுட்பம்:
ஆயினும் அதிக தொலைவுக்கு (36,000 கிமீ உயரம்) ராக்கெட்களை அனுப்ப வேண்டுமானால், குளிர்விக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலமாக இயக்கப்படும் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் (Cryogenics) தேவைப்பட்டது. இதனை அமெரிக்கா, ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே கொண்டிருந்தன. இஸ்ரோ விஞ்ஞானிகளின் வேண்டுகோளை ஏற்று, அதனைப் பெற நமது அரசு முயன்று வந்தது. அமெரிக்கா இதனை இந்தியாவுக்குத் தர மறுத்தது. அதையடுத்து, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான கிளாவ்கோஸ்மோஸ் (Glavkosmos) உடன் இஸ்ரோ (Indian Space Research Organisation – ISRO) 1992-இல் ஓர் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ரூ. 235 கோடிக்கு கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை அளிக்க ரஷ்ய அரசு சம்மதித்தது.
ஆனால், உலக அளவில் வல்லரசு நாடுகளால் திணிக்கப்பட்ட- ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை (MTCR) காரணம் காட்டி, ரஷ்யாவை அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் மிரட்டினார். அதையடுத்து அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டின் அந்த ஒப்பந்தத்தை 1993-இல் ரத்து செய்தார்.
ஆனால் இஸ்ரோ மனம் தளரவில்லை. ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தில் சிறு திருத்தம் செய்தது இஸ்ரோ. அதன்படி, கிரையோஜினிக் தொழில்நுட்பத்துக்குப் பதிலாக 4 கிரையோஜெனிக் ராக்கெட்களை இந்தியாவின் கெல்டெக் நிறுவனம் (KELTEC) தயாரிக்க உதவுவதாக ஒப்பந்தம் மாற்றப்பட்டு அதே ஆண்டு கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் பின்னணியில், அப்போதைய இஸ்ரோ தலைவர் யு.ஆர்.ராவ், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் துணை அமைப்பான திரவ உந்துவிசை மைய இயக்குநர் டாக்டர் ஏ.இ.முத்துநாயகம் ஆகியோர் இருந்தனர். அதற்காக விஞ்ஞானிகள் எஸ்.நம்பிநாராயணன், டி.சசிகுமரன் ஆகியோர் ரஷ்யா சென்று வந்தனர். அதன் அடிப்படையில் திருவனந்தபுரம்- வலியமாலாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இந்தியக் குழுவினர் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
அப்போதுதான், 1994 அக்டோபரில் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த நிகழ்வுகள் நடந்தன. மாலத்தீவைச் சேர்ந்த உளவாளிகளான மரியம் ரஷீதா, பௌஸியா ஹாஸன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ராக்கெட் வரைபடங்கள் இருந்தன. அவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிநாராயணனும் சசிகுமரனும் அளித்ததாக கேரள காவல் துறை குற்றம் சாட்டியது. பாகிஸ்தானுக்கு மாலத்தீவு உளவாளிகள் வாயிலாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நம்பியும் சசிகுமரனும் கைது செய்யப்பட்டனர். அந்நிகழ்வு இஸ்ரோவை அதிர வைத்தது.
விசாரணைக் காலத்தில் இரு விஞ்ஞானிகளும் கடும் சித்ரவதைக்கு உள்ளாயினர். ஊடகங்களோ என்ன நடக்கிறது என்றே தெரியாமல், இரு விஞ்ஞானிகள் மீதும் புழுதி வாரித் தூற்றின. மாநில அரசின் வசமிருந்து மத்திய உளவுத் துறை வசம் (Intelligence Buraeu) இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டபின், சித்ரவதை மேலும் அதிகமானது. அதில் நம்பிநாராயணன் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.
சிறையில் சுமார் 50 நாட்கள் விசாரணை நடந்த பின்னரே, இவ்வழக்கு மோசடியாகப் புனையப்பட்டது என்ற உண்மை வெளிப்படத் துவங்கியது. விசாரணைக் காலத்தில், இவ்வழக்கில் யு.ஆர்.ராவையும். முத்துநாயகத்தையும் சேர்ப்பதற்காக கட்டாய வாக்குமூலம் அளிக்குமாறு நம்பிநாராயணன் நிர்பந்தப்படுத்தப்பட்டார். ஆனால், அவர் அதற்கு இணங்கவில்லை. அந்த சித்ரவதைகளுக்குக் காரணமாக இருந்தவர்கள், அப்போதைய கேரள காவல்துறை அதிகாரி ஷிபி மாத்யூஸ், ஐ.பி. தலைவர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் என்பது பிற்பாடு தெரியவந்தது.
பிறகு இவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத் துறை (CBI), இரு விஞ்ஞானிகள் மீதான உளவுக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று 1996 மே மாதம் அறிவித்தது. இந்த வழக்கில் இருந்து இரு விஞ்ஞானிகளையும் உச்ச நீதிமன்றம் 1998-இல் விடுவித்தது.
அதையடுத்து மீண்டும் இஸ்ரோவின் அலுவலகப் பிரிவில் பணியாற்ற இரு விஞ்ஞானிகளும் அனுமதிக்கப்பட்டபோதும், முந்தைய ராக்கெட் ஆராய்ச்சிப் பிரிவில் அவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. 2001-இல் நம்பிநாராயணன் ஓய்வு பெற்றார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த கொடுமைக்காக நீதிமன்றத்தில் அவர் தனது யுத்தத்தை நடத்தி வருகிறார்.
இந்த மோசடி வழக்கே, இந்தியாவின் கிரையோஜெனிக் ஆராய்ச்சியை தாமதப்படுத்த வெளிநாட்டு உளவு அமைப்புகள் செய்த சதிதான். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அதனால், அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு விஞ்ஞானிகளும் அவதூறின் எல்லைக்கே கொண்டு செல்லப்பட்டனர். அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கனே, அரசு சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ தலையிடாது என்று ஒதுங்கிக் கொண்டார்.
ஆயினும் நம்பியின் குழுவுக்கு ஆரம்பத்தில் தலைமை தாங்கியவரான அப்துல் கலாம், “அனைத்துக்கும் மேலாக இறைவனின் நீதிமன்றம் உள்ளது. அங்கு யாரும் பொய் பேச முடியாது” என்று கூறி நம்பிக்கு ஆறுதல் அளித்தார். “வெறும் நான்கு வரைபடங்களைக் கொண்டு ராக்கெட் தயாரித்து விடலாம் என்று சிலர் நினைப்பதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது” என்றும், விசாரணைக் காலத்தில் அவர் வேதனை தெரிவித்தார்.
தற்போது காலச் சக்கரம் உருண்டோடி, நியாயம் எதுவெனக் காட்டி இருக்கிறது. உண்மையை உரைத்த கலாம் ஜனாதிபதி ஆனார். நம்பிக்கு ஆதரவு காட்டத் தவறிய கஸ்தூரிரங்கன், ஆன்ட்ரிக்ஸ்- தேவா ஒப்பந்தம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். நம்பியை சித்ரவதை செய்த காவல் துறை அதிகாரிகள் வேறு சில புகார்களால் களங்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், நம்பியின் வேதனை தீரவில்லை. தன்மீதான பொய்யான குற்றச்சாட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் (2000-க்குள்) இந்தியா பெற்றிருக்க வேண்டிய கிரையோஜெனிக் தொழில்நுட்பம் 2015 வரை தள்ளிப்போய்விட்டதே என்பதுதான் அவரது ஆதங்கம்.
2015-இல்தான் இந்தியா கிரையோஜெனிக் ராக்கெட் (CE20) தயாரிப்பில் வெற்றி அடைந்தது. ஆனால், அதனை வெளிநாட்டுக்கு விற்க முயன்றதாகத்தான் நம்பி உள்ளிட்டோர் மீது 1994-இல் குற்றம் சாட்டப்பட்டது.
நம்பியின் மான நஷ்ட வழக்கை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், தவறான வழக்கால் நம்பிக்கு நேரிட்ட இழப்புகளுக்காக ஒரு கோடி ரூபாயை கேரள அரசு இழப்பீட்டாகத் தர 2001-இல் உத்தரவிட்டது. கேரள உயர் நீதிமன்றமும் ரூ. 10 லட்சம் வழங்குமாறு 2012-இல் உத்தரவிட்டது. ஆயினும் அவருக்கு அந்த நிவாரணம்கூட வழங்கப்படவில்லை. அதுதொடர்பாக நம்பியின் நீதிகான போராட்டம் தொடர்கிறது.
இப்போதும்கூட, தனக்கு நேர்ந்த அவலத்துக்காக இந்தியாவை அவர் விமர்சிக்கவில்லை. இதுபோன்ற தவறு எதிர்காலத்தில் யாருக்கும் நிகழக் கூடாது என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
எது எப்படியோ, விண்வெளிப் பயணத்தில் இந்தியா சாதனை படைக்க்க் காரணமான விஞ்ஞானி நம்பிநாராயணன், அதற்கான எந்த கௌரவமும் பெறாமல், திருவனந்தபுரத்தில் வாடுகிறார். வருங்காலத்திலேனும் நமது அரசு அவருக்கு உரிய கௌரவத்தை அளிப்பதுதான், அவருக்கு இழைப்பட்ட அநீதிக்கு சற்றேனும் மருந்தாக அமையும்.
-வ.மு.முரளி
-தினமணி இளைஞர்மணி (29.08.2017)
____________________________________
பிறகு நடந்தவை...
1. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷண் 2019 ஜனவரியில் வழங்கப்பட்டது. விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை கௌரவிப்பதை தனது அரசு பெருமையாகக் கருதுகிறது - என்றார் பிரதமர் மோடி.
2. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, கேரள அரசு (முதல்வர் பினராயி விஜயன்) கடந்த ஆண்டு விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு ரூ. 1.3 கோடி நஷ்ட ஈட்டை வழங்கியது.
3. விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை பொய் வழக்கில் சிக்கவைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர் மீது குற்றச்சதி வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2021 ஏப்ரலில் உத்தரவிட்டது.
4, விஞ்ஞானி நம்பி அவர்களை சித்ரவதை செய்த ஐ.பி. அதிகாரி ஸ்ரீகுமார், குஜராத் கலவரம் தொடர்பான சதி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார்.
5. இவரது வாழ்க்கை வரலாறு நடிகர் மாதவனின் இயக்கத்தில் அவரே நம்பி நாராயணனாக நடிக்க 'ராக்கெட்ரி' என்ற திரைப்படமாக அண்மையில் வெளிவந்துள்ளது. இப்படம் அனைவரது மனசாட்சியையும் உலுக்குவதாக இருக்கிறது. நீங்களும் இப்படத்தை அவசியம் பாருங்கள்.
8

சனி, 2 ஜூலை, 2022

 ஊழல் பணத்தில் பசிபிக் 

சமுத்திரத்தில் உள்ள இயற்கை எழில் 

கொஞ்சும் செஷல்ஸ் தீவுகளில் நிறையத் 

தீவுகளை வாங்கிப் போட்ட ஊழல் 

பெருச்சாளிக்கு தமிழ் கசக்கத்தான் 

செய்யும். குப்பனும் சுப்பனும் தமிழில் 

பெயர் வைக்கும்போது, கோடானு 

கோடீஸ்வரன் அதே தமிழில் 

பெயர் வைப்பானா? சமஸ்கிருதத்தில் 

பெயர் வைத்தால் அல்லவா கெளரவம்!


  


குழந்தைக்குப் பெயர் வைத்தேன்!
சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துப் 
புரட்சி செய்தேன்!
--------------------------------------------------
இன்று என்னிடம் வந்த ஒரு இளம் தம்பதி 
தங்களின் பெண் குழந்தைக்கு ஒரு நல்ல 
பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

எனக்கு டக்கென்று ஆ ராசா நினைவுக்கு 
வந்தார். திராவிடப் புரட்சியாளர் ஆயிற்றே அவர்!
அவர் தம்முடைய மகளுக்கு மயூரி என்று 
பெயர் சூட்டியிருந்தது எனக்கு 
நினைவு வந்தது.

மயூரி அழகிய சமஸ்கிருதப் பெயர்.
திராவிடப் புரட்சியாளர்களின் இல்லங்களில்
வைக்கப்படும் பெயர்.

எனவே அந்தப் பெயரையே, என்னிடம் வந்த 
பேரூரின் குழந்தைக்கு வைக்க முடிவு 
செய்து, மயூரி என்று பெயரிட்டேன்.

முன்னதாக பூங்கொடி என்றோ மலர்விழி என்றோ 
தமிழில் பெயரிடலாம் என நினைத்திருந்தேன். 
ஆனால் அப்படிப் பெயர் வைப்பதெல்லாம் பத்தாம் 
பசலித்தனம் என்று இந்த நாட்டுக்கே உணரித்தி 
விட்டாரே புரட்சியாளர் அண்ணன் ஆ ராசா.

சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதுதான் புரட்சி 
என்பதுதானே திராவிடத்தின் மொழிக்கொள்கை!
அதைத்தானே ஆ ராசா பின்பற்றுகிறார்!

அண்ணன் ஆ ராசா வாழ்க!
சமஸ்கிருதத்தில் பெயர் வைப்போம்!
தமிழை ஒழிப்போம்!
*********************************************



    


 

 


 திரு.சலீம் கான் (நடிகர் சல்மான் கானின் தந்தை) ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்:

2002 குஜராத் கலவரத்தை விட கொடிய கொடிய மும்பை கலவரத்தின் போது மகாராஷ்டிர முதல்வர் யார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா?
உ.பி.யின் முதல்வரின் பெயர் யாருக்காவது நினைவிருக்கிறதா? காங்கிரஸ் ஆட்சியில் மல்லியானா மற்றும் மீரட் கலவரங்கள் நடந்ததா அல்லது பாகல்பூர் அல்லது ஜாம்ஷெட்பூர் கலவரங்கள் நடந்ததா?
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் நூற்றுக்கணக்கான கலவரங்கள் யாருடைய பொறுப்பில் நடந்தன என்று குஜராத்தின் முந்தைய முதல்வர்களின் பெயர்களைக் கேட்கிறோமா?
1984 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது டெல்லியின் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்தவர் யார் என்பது யாருக்காவது நினைவிருக்கிறதா?
2002 கலவரத்தின் போது அனைத்து கொலைகளையும் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தியது போல் நரேந்திர மோடியை எப்படி பிசாசு அவதாரம் என்று குறிப்பிட்டார்?
கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தின் விவசாய வளர்ச்சி 10-11% என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றவர் 2002 கலவரம் என்கிறார்!
ஆசியாவின் மிகப்பெரிய சோலார் ஆலையை உருவாக்கினார் என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்!
இந்தியா முழுவதிலும் உள்ள 18,000 கிராமங்களுக்கு 24*7 மற்றும் 365 நாட்கள் மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்!
2011 ஆம் ஆண்டு உலக வங்கியின் அறிக்கை குஜராத் சாலைகள் சர்வதேச தரத்திற்கு சமமானது என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றவர் 2002 கலவரம் என்கிறார்!
18,000 கிராமங்களிலும் அதிவேக வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவையைப் பெற்ற நாட்டிலேயே முதல் மாநிலம் குஜராத் என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்!
ஃபோர்ப்ஸ் இதழ் அகமதாபாத்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், உலகில் 3வது நகரமாகவும் மதிப்பிட்டுள்ளது என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றொன்று 2002 கலவரங்கள் என்கிறார்!
குஜராத் சுற்றுலா முன்னெப்போதையும் விட வேகமாக வளர்ந்து வருகிறது என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்!
மத்திய அரசின் தொழிலாளர் பணியகத்தின் அறிக்கையின்படி, நாட்டிலேயே குஜராத்தில் வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதாக ஒருவர் கூறும்போது, ​​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்!
ஏறக்குறைய அனைத்து சர்வே கருத்துக்கணிப்புகளிலும் தற்போதைய இந்தியத் தலைவராக நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​மற்றவர் 2002 கலவரம் என்கிறார்!
2003-2013 குஜராத் வரலாற்றில் 10 வருடங்கள் மட்டுமே முற்றிலும் கலவரம் இல்லாதவை என்று ஒருவர் கூறும்போது, ​​மற்றவர் 2002 கலவரங்கள் என்கிறார்!
ஆனால், காங்கிரஸிலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலும் நடந்த கலவரங்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டும்போது:
1947 வங்காளம் (பிரிவினைக் கலவரம்)...9000 - 10,000 (ஸ்கோர்கள் காணவில்லை) இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1967 ராஞ்சி ...200 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1969 அகமதாபாத்...512 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1970 பிவண்டி...80 செத்து...காங்கிரஸ் ஆட்சி.
1979 ஜாம்ஷெட்பூர்...125 பேர் இறந்தனர்...சிபிஐஎம் ஆட்சி
(பொதுவுடைமைக்கட்சி)
1980 மொராதாபாத்...2,000 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1983 நெல்லை அசாம் ...5,000 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1984 சீக்கிய எதிர்ப்பு டெல்லி...2,733 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1984 பிவாண்டி...146 இறந்தது...காங்கிரஸ் ஆட்சி.
1985 குஜராத் ...300 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1986 அகமதாபாத்...59 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1987 மீரட் ...81 இறந்தது ...காங்கிரஸ் ஆட்சி.
1989 பாகல்பூர்...1,070 பேர் இறந்தனர்...காங்கிரஸ் ஆட்சி.
1990 ஹைதராபாத் ...300 பிளஸ் டெட்...காங்கிரஸ் ஆட்சி.
1992 மும்பை ...900 முதல் 2000 வரை இறந்தது ...காங்கிரஸ் ஆட்சி.
1992 சூரத் ...175 இறந்தது...காங்கிரஸ் ஆட்சி.
அவர்கள் முற்றிலும் காது கேளாதவர்களாக மாறுகிறார்கள்... ஏனென்றால் அவர்களிடம் பதில் இல்லை.
காங்கிரசு போலிகளின் அரசு.
இந்திய இளைஞர்கள் கூறுகிறார்கள்: "நாங்கள் 2002 இல் ஆர்வம் காட்டவில்லை, 2022 இல் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்".
ஹிந்து மீடியா 🔥🔥🔥
1

ஜனாதிபதி தேர்தல்:
திரௌபதி முர்முவை ஆதரிக்கும் கட்சிகள்!
முர்முவின் வெற்றி உறுதியாகவில்லை, ஏன்?
------------------------------------------------------------------
1) பாஜக 
2) சிரோன்மணி அகாலிதளம் 
3) நித்திஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்
4) பிஜு ஜனதா தளம் (ஒரிசா)
5) YSR காங்கிரஸ் (ஆந்திரா)
6) மாயாவதியின் பகுஜன் சமாஜ்
7) அதிமுக
8) அப்னா தளம் சோனேலால் (உபி)
9) சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே)
10) குடியரசுக் கட்சி (அத்வாலே)
11) அசாம் கண பரிஷத்
12) மிசோ தேசிய முன்னணி 
13) பாட்டாளி மக்கள் கட்சி
14) தமிழ் மாநில காங்கிரஸ் ( ஜி கே வாசன்)
15) ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி
16) லோக் ஜனசக்தி கட்சி (பாஸ்வான்)
17) ராஜ் தாக்கரேவின் MNS
18) மஹாராஷ்டிரவாடி கோமண்டக் கட்சி
19) போடோலாந்து மக்கள் முன்னணி 
20) நாகா மக்கள் முன்னணி.

மேலும் பல சிறு சிறு கட்சிகள் பழங்குடி இன 
வேட்பாளர் முர்முவை ஆதரிக்கின்றன.
கமெண்ட் பகுதியில் கொடுக்கப்பட்ட ஆங்கிலச் 
செய்திகளை வாசிக்கவும். முழு விவரம் அறிந்து 
கொள்ளவும்.

முர்முவின் வெற்றி உறுதியாகவில்லை!
-------------------------------------------------------------
இருந்தபோதிலும் திரௌபதி முர்முவின் வெற்றி 
உறுதியாகவில்லை என்று அரசியல் நோக்கர்கள் 
கருதுகிறார்கள். மூன்று முக்கிய கட்சிகள் இதுவரை 
முர்முவை ஆதரிக்கவில்லை. அவர்கள் முர்முவை 
ஆதரித்தால் மட்டுமே, அவர் வெற்றி பெற முடியும்.

அந்த மூன்று கட்சிகளும் எவை எவை? அவை
தமிழ்நாட்டில் உள்ள மூன்று கட்சிகள்தான்.
1) நடிகர் கமல ஹாசனின் மக்கள் நீதி மய்யம்
2) நடிகர் விஜயகாந்தின் தேமுதிக 
3) நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சி.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை மற்றும் 
மாநில சட்டப்பேரவைகளில் இக்கட்சிகளுக்கு
தலா பூஜ்யம் இடமே உள்ளது. என்றபோதிலும் 
எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஜானதிபதியாக 
முடியாது என்கிறாராம் நடிகர் சீமான்.
************************************************ ஜனாதி