குழந்தைக்குப் பெயர் வைத்தேன்!
சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துப்
புரட்சி செய்தேன்!
--------------------------------------------------
இன்று என்னிடம் வந்த ஒரு இளம் தம்பதி
தங்களின் பெண் குழந்தைக்கு ஒரு நல்ல
பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.
எனக்கு டக்கென்று ஆ ராசா நினைவுக்கு
வந்தார். திராவிடப் புரட்சியாளர் ஆயிற்றே அவர்!
அவர் தம்முடைய மகளுக்கு மயூரி என்று
பெயர் சூட்டியிருந்தது எனக்கு
நினைவு வந்தது.
மயூரி அழகிய சமஸ்கிருதப் பெயர்.
திராவிடப் புரட்சியாளர்களின் இல்லங்களில்
வைக்கப்படும் பெயர்.
எனவே அந்தப் பெயரையே, என்னிடம் வந்த
பேரூரின் குழந்தைக்கு வைக்க முடிவு
செய்து, மயூரி என்று பெயரிட்டேன்.
முன்னதாக பூங்கொடி என்றோ மலர்விழி என்றோ
தமிழில் பெயரிடலாம் என நினைத்திருந்தேன்.
ஆனால் அப்படிப் பெயர் வைப்பதெல்லாம் பத்தாம்
பசலித்தனம் என்று இந்த நாட்டுக்கே உணரித்தி
விட்டாரே புரட்சியாளர் அண்ணன் ஆ ராசா.
சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதுதான் புரட்சி
என்பதுதானே திராவிடத்தின் மொழிக்கொள்கை!
அதைத்தானே ஆ ராசா பின்பற்றுகிறார்!
அண்ணன் ஆ ராசா வாழ்க!
சமஸ்கிருதத்தில் பெயர் வைப்போம்!
தமிழை ஒழிப்போம்!
*********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக