தன்னைக் கடத்தியவனை
அடையாளம் காட்டிய பெண்!
---------------------------------------------
மப்டி முகம்மது சையது தெரியுமா?
காஷ்மீர் முதல்வராக இருந்தவர்.
மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர்.
இவருடைய மகள்தான் ருபையா சையது.
இவருடைய இன்னொரு மகள்தான் மெஹபூபா.
காஷ்மீர் முதல்வராக இருந்தவர்.
1989ஆம் ஆண்டு. இன்றைக்கு 33 ஆண்டுக்கு முன்பு.
ருபையா கடத்தப் பட்டார்.இஸ்லாமிய
பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார்.
பின்னர் ஏகப்பட்ட விலைகொடுத்து பெருத்த
நஷ்டத்துடன் இந்திய அரசு ருபையாவை மீட்டது.
அந்தக் கடத்தல் வழக்கு இன்னும் நடந்து
கொண்டிருக்கிறது. இந்திய நீதித்துறையின்
ஊறுகாயப் பானையில் 1989 முதல் கடந்த
33 ஆண்டுகளாக ஊறிக் கொண்டிருக்கும்
இந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்து
கொண்டிருக்கிறது.
ருபையா தமிழ்நாட்டில்தான் இவ்வளவு காலமாகத்
தங்கி வருகிறார். பாதுகாப்புக் காரணங்களை
முன்னிட்டு அவர் தமிழ்நாட்டில் தங்கி உள்ளார்.
இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் சென்று
தமது சாட்சியத்தைப் பதிவு செய்தார் ருபையா.
அத்தோடு தம்மைக் கடத்தியவர்களை
அடையாளம் காட்டினார் ருப்பையா.
யாசின் மாலிக் மற்றும் மூவரை தன்னைக்
கடத்தியவர்களாக அடையாளம் காட்டினார்
ருபையா.
யாசின் மாலிக் யார் என்று தெரியுமா? அண்மையில்
இவன் பெயர் செய்திகளில் அடிபட்டதே! நினைவு
இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள்.
--------------------------------------------------------------
தகவல்: TheTimes of India, Chennai dtd 16ஜூலை 2022, page 10.
----------------------------------------------------------------------------------
ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியிடம்
பணம் வாங்கிய கயவர்கள்!
-------------------------------------------------------------
காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி
யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
விதிக்கப் பட்டுள்ளது. அவன் நீதிமன்றத்தில்
தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
அவன் மீதான குற்றம் பயங்கரவாதச்
செயல்களுக்கு பணம் கொடுத்தது. அதாவது
terror funding. இக்குற்றம் நிரூபிக்கப்
பட்டுள்ளது.
யாசின் மாலிக்கைக் கூட்டி வந்து தமிழ்நாட்டில்
கூட்டம் போட்டான் அடிமுட்டாள் சீமான்.
Terror funding குற்றவாளியான யாசின் மாலிக்
யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்
என்று CBI/NIA விசாரிக்கும்போது அவன்
உண்மையைக் கக்கி விடுவான்.
அப்போது அவனிடம் எச்சில் காசு வாங்கிய
பயல்கள் ஜெயிலுக்குப் போக வேண்டியது
வரும். தப்ப முடியாது.
ஆயில் தண்டனை பெற்று, சிறையில் கம்பி
எண்ணிக் கொண்டு இருக்கிறான். தனது
குற்றத்தை எல்லாம் ஒப்புக் கொண்டான் அவன்
அவன் CONFESSION கொடுக்கிறான்.
யாராக இருந்தாலும் சரி, அவனிடம் எச்சில்
காசு வாங்கியவன் CBIஇடம் மாட்டுவான்.
குறைந்தது பத்தாண்டு சிறை தண்டனை
கிடைக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். .
------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக