செவ்வாய், 12 ஜூலை, 2022

நியூட்டனும் ஈர்ப்பு விசையும்!
------------------------------------------------
தோட்டத்தில் உள்ள சிமெண்டு பெஞ்சில்
உட்கார்ந்து இருக்கிறார் நியூட்டன். சுற்றிலும் 
ஆப்பிள் மரங்கள். ஒரு மரத்தில் இருந்து 
ஆப்பிள் கீழே தரையில் விழுகிறது  இதை 
நியூட்டன் பார்க்கிறார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் மரத்தில் 
இருந்து விழுகிற ஆப்பிள்கள் கீழே தரையை 
நோக்கி வருவதையும் தரையில் விழுவதையும் 
நியூட்டன் பார்க்கிறார்.

ஏன் ஆப்பிள்கள் கீழ் நோக்கியே வருகின்றன?
ஏன் மேல்நோக்கிப் போகவில்லை என்று 
சிந்திக்கிறார் நியூட்டன். அதன் காரணத்தை அறிய
முயல்கிறார். அறிந்தும் விடுகிறார். அதுதான் 
நியூட்டனின் ஈர்ப்பு விசைக் கோட்பாடு.

இந்தக்கதை பொய்யில்லை. இது பொய் என்று 
வலிந்து கூறுவதால் என்ன பயன்? அது பொய்
என்று எவராலும் இன்று நிரூபிக்க இயலாது.

சரி, இந்தக் கதை பொய் என்றே வைத்துக் 
கொள்ளுவோம். அதனால் யாருக்கு என்ன லாபம்?
யாருக்கு என்ன நட்டம்? இதெல்லாம்  non issue. எனவே 
ஆப்பிள் கீழே விழுந்த கதை குறித்து அதிகமாகவோ 
குறைவாகவோ யாரும் அலட்டிக் கொள்ள வேண்டாம்.

இதற்கு மேல் இந்தக் கட்டுரையைப் படிக்க 
வேண்டுமெனில் படிப்பவர்களுக்கு நியூட்டனின் 
ஈர்ப்பு விசைக் கோட்பாடு தெரிந்திருக்க வேண்டும். 
அப்படித் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி   
விடலாம். தெரியாதவர்கள் வெளியேறி விடலாம்.

நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாடு இப்படிக்
கூறுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த 
இரண்டு பொருட்களும் ஒன்றையொன்று 
ஒரு விசையுடன் ஈர்க்கின்றன. இந்த விசையே 
ஈர்ப்பு விசையாகும். இது இவ்விரு பொருட்களின் 
நிறையையும் (mass), அப்பொருட்களுக்கு 
இடையிலான தூரத்தையும் பொறுத்தது.

Gravitational Force = GMm/r^2. 
இங்கு G = Gravitational constant.
உரிய புத்தகங்களைப்  படித்து மேல் விளக்கம் 
பெறுங்கள். 

ஆக ஈர்ப்பு விசை இருக்கிறது என்று சொன்ன 
நியூட்டன் அத்தோடு நிற்காமல் அந்த விசையை 
அளந்தும் காட்டி உள்ளார். இது சிறப்புக்குரிய 
விஷயம் அல்லவா!

பின்னர் வந்த ஐன்ஸ்டைன் ஈர்ப்பு குறித்த 
நியூட்டனின் பார்வையில் இருந்து வேறுபட்ட 
புதிய பார்வையை முன்வைக்கிறார். அது 
பற்றி அடுத்துப் பார்ப்போம். 
---------------------------------------------------------     
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக