சனி, 9 ஜூலை, 2022

சசக நிசபானி சாசா
சச சமக நிசபானி சாசா 
நிச சபப பாபாப பாதபமா 
மம கமக  கமநிப கரி சநி
--------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------
ஒரு இழவும் தெரியாத குட்டி முதலாளித்துவம் 
ஆழமான அறிவு தேவைப்படும் விஷயங்களில் கூட 
மானங் கெட்ட தனமாக நடந்து கொண்டு தனது 
அறியாமையை வெளிப்படுத்தும்.

"எனக்கு இது தெரியும்; எனக்கு இது தெரியாது" 
என்று நேர்மையுடன் ஒப்புக்கொள்கிற பண்பு 
குட்டி முதலாளித்துவத்திற்கு கிடையாது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு. மூடப்படாத 
ஒரு ஆழ்துளைக் கிணற்றில் ஒரு சிறுவன்
விழுந்து விட்டான். இதையொட்டி 24x365
விவாதத்தை தொடர்ந்து சில நாட்களாக 
டிவிக்கள் நடத்திக் கொண்டிருந்தன.

அன்று மீட்புக் குழுவானது நிலத்தடிப் பாறைகளைத் 
தோண்டி எடுத்துக் கொண்டு இருந்தது. எனவே 
அன்று பாறைகள் பற்றிய விவாதம். அப்போது 
புதிய தலைமுறை டிவி விவாதத்துக்கு என்னை 
அழைத்தது. 

நிலத்தடிப் பாறைகள் என்பது Geology subject.
நான் Geology பட்டதாரி அல்ல. எனவே 
விவாதத்துக்குச் செல்ல நான் விரும்பவில்லை என்று 
நெறியாளரிடம் தெரிவித்து விட்டேன். அவர் geology 
படித்தவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டார்.

எனது நண்பரும் மாநிலக் கல்லூரியின் முன்னாள் 
முதல்வருமான Geology பேராசிரியரின் மொபைல் 
எண்ணைக் கொடுத்தேன். இதுதான் ஒரு 
நியாயவான் செய்யக் கூடியது. அதைவிட்டு 
எந்த subjectஆக இருந்தாலும் நான் பேசுவேன் 
என்று பேசித் தன் அறியாமையை வெளிப்படுத்துவது 
இழிந்த குட்டி முதலாளியப் பண்பு.

இந்தி மொழி இசைக்கு ஏற்றது; நளினமானது 
என்ற ஒரு subjectல் விவாதம் நிகழ்ந்தால் 
அதில் பங்கேற்க விரும்பும் ஒருவருக்கு  

ஒன்று.... குறைந்தபட்ச அளவுக்கேனும் இந்தி 
தெரிந்திருக்க வேண்டும்      
இரண்டு.... குறைந்தபட்ச இசையறிவும் குறைந்தபட்ச
 பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இசை பற்றி ஒரு மயிரும் தெரியாதவன்,  
இசை பற்றிய அறிவு ஒரு இழவும் இல்லாதவன், 
இசைப் பயிற்சியே பெற்றிராதவன், தன்னைப் 
பெருத்த மேதாவியாக வரித்துக் கொண்டு தனது 
அறியாமையை வெளிப்படுத்தி வருகிறான்.
இது இந்தியாவில் எங்கும் இல்லாமல் தமிழ்நாட்டில் 
மட்டும் காணப்படும் இழிவு. நிற்க.

குட்டி முதலாளித்துவ அன்பர்களே,
உங்களுக்கு ஓர் எளிய கேள்வி!
இக்கட்டுரையின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்களின் 
ஒரு குறிப்பிட்ட permutationதான்  அது.
அந்த ஏழு நாட்கள் என்னும் பாக்யராஜ் அம்பிகா 
நடித்த படத்தில் வரும் கவிதை அரங்கேறும் 
நேரம்  என்று தொடங்கும் பாட்டுத்தான் இது.

யூடியூபில் இந்தப் பாட்டு கொட்டிக் கிடக்கிறது.
அதைத் தேடி எடுங்கள். கேளுங்கள். பாட்டின் 
தொடக்கத்தில் வரும் அந்த ஸ்வரங்களின் 
permutationஐக் கேளுங்கள். ஒன்றிரண்டு முறை 
கேட்ட பின்பு, அதை நீங்கள் திரும்பிச் 
சொல்ல வேண்டும். பாட்டைக் கேட்டுக் கொண்டே 
சொல்லலாம். 

உங்களால் முடியுமா? உங்களில் பலரால்,
உங்களில் 99.999999999999999999999999999999999 சதவீதம் 
பேரால் அது இயலாது. அந்த அளவுதான் 
இருக்கிறது உங்களின் இசையறிவு. இந்த 
லட்சணத்தில் இளையராஜாவை சாதிய 
வன்மத்துடன் திட்டுவதை விட்டு விடுங்கள்.
உங்கள் மீது atrocities act, pcr act போன்ற சட்டங்களில் 
வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுத் தரலாம்.
இளையராஜா அதை அனுமதிக்க மாட்டார் 
என்பதாலாயே அதை யாரும் செய்யவில்லை.
---------------------------------------------------------

பின்குறிப்பு::

1999-2004ல் பாஜக-திமுக கூட்டணி ஆட்சியின்போது
இந்தியப் பல்கலைகளில் ஜோசியம் ஒரு பட்டப் 
படிப்பாகக் கொண்டு வரப்பட்டது. முரளி மனோகர் 
ஜோஷியும் ஜோசியப் பித்தர் மஞ்சத் துண்டு 
கருணாநிதியும் கூட்டுச் சேர்ந்து கொண்டு வந்த 
ஜோசியப் படிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இதற்காக நான் கரடியாகக் கத்திக் கொண்டு
இருக்கிறேன். போலி முற்போக்குகளும் 
திராவிடக் கணிகைக்குப் பிறந்த பயல்களும் 
வாயில்  எதையடா அடைத்துக் கொண்டு 
இருக்கிறீர்கள்?
*********************************
    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக