தாலியறுத்த தமிழ் மொழிபெயர்ப்பு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
அண்மையில் நடந்து முடிந்த TNPSC தேர்வின்
கேள்வித்தாளில் ஒரு கேள்வியை இங்கு
கொடுத்துள்ளேன்; பாருங்கள்.
இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பற்றிய
ஒரு கேள்வி.
அரசமைப்புச் சட்டத்தின் எந்த ARTICLE
கல்வி உரிமையை வழங்குகிறது? இதுதான் கேள்வி.
இங்கு ARTICLE என்பது ஷரத்து என்று
காலங்காலமாக மொழிபெயர்க்கப் பட்டு
வருகிறது. பொது அறிவுக்காக நான் CONSTITUTION
பற்றிப் படித்த 1970 முதற்கொண்டு இன்று வரை
ARTICLE என்றால் ஷரத்து என்று பொருள்.
ஆனால் TNPSCயின் தமிழ் மொழிபெயர்ப்பைப்
பாருங்கள். ARTICLE என்பதை கட்டுரை என்று
மொழிபெயர்த்து இருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட
படத்தைப் பாருங்கள்.
தமிழ் மொழிபெயர்ப்பு இந்த லட்சணத்தில்தான்
இருக்கிறது. இதை விடத் தாலி அறுந்த நிலையில்தான்
தமிழ் மீடியம் இருக்கிறது.
இவ்வளவு ஈனத்தனமான மொழிபெயர்ப்பால்
தமிழ் மீடியத்தைத் தேர்ந்தெடுக்கும்
மாணவர்களுக்கே நஷ்டம்.
கணிகைக்குப் பிறந்த பயல்களே,
Article of the constitution என்பதை
அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து என்று
மொழிபெயர்க்காமல்,
அரசமைப்புச் சட்டத்தின் கட்டுரை என்று
மொழிபெயர்த்த நீங்கள் உயிரோடு
இருக்கத் தேவையில்லை.
இதனால்தான்,
The English version is final and binding என்று
TNPSC கூறுகிறதோ!
மாணவர்களுக்கு அறிவுரை!
------------------------------------------
தமிழ் மீடியம் என்று தேர்வு செய்வதை
முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.
உங்களுக்கு ஓரளவேனும் ஆங்கிலம்
தெரியுமெனில், OBJECTIVE TYPE தேர்வுக்கு
அது போதும். நீங்கள் ஆங்கில மீடியத்தை
தேர்ந்தெடுங்கள்.
மாணவர்களே, பெற்றோர்களே,
போலியாகத் தனித்தமிழ் பேசும் கயவர்களின்
பேச்சைக் கேட்டு மோசம் போய் விடாதீர்கள்.
தமிழ் மீடியத்தைக் கக்கூஸில் எறிந்து விட்டு
ஆங்கில மீடியத்தை தேர்ந்தெடுங்கள்.
தமிழ் மீடியத்தை நம்பி உங்கள் வேலையைக்
கெடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையைத்
தொலைத்து விடாதீர்கள்.
கடந்த 50 ஆண்டு காலமாக அகாடமிக் சார்ந்து
இயங்கி வருபவன் நான். இந்தத் துறையில்
அறிவும் அனுபவமும் பெற்றவன் நான்.
நீங்கள் என் பேச்சைக் கேளுங்கள்.
கண்ட நாய்களின் பேச்சைக் கேட்டால்
உங்களுக்கு வேலை கிடைக்காது.
---------------------------------------------------------------
படத்துக்கு நன்றி:
ராஜபூபதி ரேடியன் அவர்கள்
தலைவர், ரேடியன் இன்ஸ்டிடியூட்.
------------------------------------------------------------
பின்குறிப்பு:
நீங்கள் PHYSICS படித்தவரா?
MOMENT OF THE FORCE என்றால் என்ன என்று
தெரியும் அல்லவா! இதை எப்படி மொழிபெயர்ப்பது?
"விசையின் தருணங்கள்" என்று
மொழிபெயர்த்தவர்களை நான் அறிவேன்.
********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக