அரங்கின்றி வட்டாடும் தற்குறித்தனமும்
இசை பற்றிய அறியாமையும்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமெனில்
அதைப்பற்றிய அறிவு வேண்டும்.இது அடிப்படை
நியாயம். ஆனால் தமிழ்நாட்டில் இந்த
நியாயமெல்லாம் எடுபடாது.
இன்று நேற்றல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பும் இதே இழிந்த நிலைமை தமிழ்நாட்டில்
இருந்திருக்கிறது. அதை வள்ளுவர் கண்டிக்கிறார்.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
என்று சவுக்கடி கொடுக்கிறார் வள்ளுவர்.
அண்மையில் இளையராஜா ஒரு விஷயத்தைக்
கூறினார். ஏனைய மொழிகளை விட அதிகமாக
இந்தி இசைக்கு ஏற்றது என்றார். இளையராஜா
இதைச் சொல்லுவதற்கு முன்பே பல்வேறு
இசையமைப்பாளர்களும் பாடகர்களும்
இந்த உண்மையைக் கூறியுள்ளனர்.
கே ஜே யேசுதாஸ் மியூசிக் அகாடமியில் 1980களில்
ஒரு கூட்டத்தில் இதைக் கூறக் கேட்டவன் நான்.
வேதா என்று ஒரு இசையமைப்பாளர் இருந்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு இசையமைப்பவர்.
அவர் அப்போது வந்து கொண்டிருந்த பேசும்படம்
என்ற பத்திரிகையில் இந்தி, உருது போன்ற
மொழிகள் இசைக்கு மிகவும் ஏற்றவை என்று
கூறியிருந்தார்.
உருது மொழியும் இந்தியும் மிகப்பெரிதும்
பொதுத்தன்மைகள் நிறைந்தவை. உருது மொழியின்
கஜல் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஏதாவது ஒரு கஜல் பாடலை என்றாவது கேட்டு
இருக்கிறீர்களா? அதன் சுகானுபவத்தில் திளைத்து
இருக்கிறீர்களா? இல்லை.
ஹரிஹரன் என்நும் பிரபல பாடகரை உங்களில்
பலர் அறிந்திருக்கக் கூடும். (டெலிபோன் மணி போல்
சிரிப்பவன் இவளா). அவர் ஆரம்பத்தில் கஜல்
பாடகராக இருந்தவர்.
உலக அளவிலும் கிரேக்கம் இசைக்கு ஏற்ற மொழி
என்று கூறப்படுகிறது. ஒரு மொழியானது இசைக்கு
ஏற்ற மொழியாக இருப்பது அம்மொழியின்
பண்புகளில் ஒன்று. இசை என்பது பல்வேறு
permutations, combinationsல் அமைகிற இதம் தரும்
ஓசை. எத்தனை permutationsல் ஓசைகள்
வந்தாலும் அவற்றுக்கு இடமளித்து இனிய ஓசையை
வழங்குவது மொழியின் பண்பு.
இந்தி இசைக்கு மிகவும் ஏற்றது என்பதன் பொருள்
என்ன? கணக்கற்ற permutationsல் வரும் ஓசைகளை
அனுமதித்து இசைத்தன்மை நிறைந்த ஓசையாக
மாற்றித் தருவதில் இந்தி மொழி முன்னணியில்
இருக்கிறது என்பதுதான். இத்தகைய பண்பு
ஓர் மொழிக்கு இருக்கும்; இன்னொரு மொழிக்கு
இருக்காது. இதெல்லாம் அந்தந்த மொழியின்
தனித்தன்மை.
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்றார்
பாரதியார். இசைக்கு ஏற்றதாக தெலுங்கு
இருப்பதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
முகபத் என்ற இந்திச் சொல்லுக்கு காதல் என்று
பொருள். எப்படியெல்லாம் நீட்டினாலும்
மடக்கினாலும் சுருக்கினாலும் இச்சொல்
இசைக்குப் பொருந்தி வருகிறது. ஆனால்
முகபத்துக்கு இணையான காதல் என்ற சொல்
அவ்வாறு இழுத்த இழுப்புக்கெல்லாம் வராது.
ஏன்? தமிழ் ஒரு phonetic language. அதுவும் கறாரான
ஒரு phonetic language. எனவே இசை எங்கெல்லாம்
இழுக்கிறதோ அங்கெல்லாம் தமிழ் போகாது.
இது தமிழின் பண்பு.
Phonetic language என்றால் என்ன? In Tamil, what we
write we speak and what we speak we write. தமிழில்
மௌன ஒலிகள் மிக மிக்க குறைவு.
உங்களுக்கு இந்தி தெரிந்திருந்தால், கலம், கமல்,
ஆத்மி, ஒளரத் என்றெல்லாம் எழுதிப் பாருங்கள்.
எழுதுவது ஒன்றாகவும் வாசிப்பது ஒன்றாகவும்
இருப்பதை உணருங்கள். இந்தி ஒரு phonetic
language அல்ல. அது இந்தியின் பண்பு.
எனவே பல்வேறு மொழிகளை ஆராயும்போது,
சில மொழிகள் (இந்தி, உருது, தெலுங்கு,பாரசீகம்,
கிரேக்கம்) ஆகியவை இசைக்கு ஏற்ற
மொழிகளாகவும், சில மொழிகள் இசைக்கு
அவ்வளவாகப் பொருத்தமற்றவை ஆகவும்
(தமிழ், மலையாளம், ஆங்கிலம்) இருப்பதை
அறிவுடையோர் உணரலாம். இவை அந்தந்த
மொழியின் பண்புகள்.
எனவேதான் இந்தி இசைக்கு மிகவும்
பொருத்தமானது என்ற இசைத்துறை சார்ந்த
பலரும் அறிந்த உண்மையை இளையராஜா
அண்மையில் கூறியுள்ளார். ஆனால் மூளை
முழுவதும் சாதிச்சீழ் நிரம்பி வழியும்
இழிஞர்கள் இளையராஜாவை அடிக்கத் தொடை
தட்டிக் கொண்டு வருகிறார்கள். அது அவர்களின்
குற்றம் அல்ல; அவர்களின் மூளையை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கும் சாதிக்காழ்ப்பின் குற்றம் ஆகும்.
இவர்களில் யாருக்காவது இந்தி தெரியுமா?
தமிழே சரியாகத் தெரியாத இவர்கள் இந்திக்கு
எங்கே போவார்கள்? இவர்களுக்கு இசை
குறித்த அறிவு எள்முனையேனும் இருக்குமா?
இருக்காது.
இந்தி பற்றிய இளையராஜாவின் கருத்தின் மீது
விவாதம் செய்ய வேண்டுமெனில், இந்தி
தெரிந்திருக்க வேண்டுமல்லவா? பெரிய
பாடகராகஇல்லாவிடினும் இசையின் அடிப்படைகள்
குறித்த ஒரு எளிய புரிதலாவது இருக்க வேண்டும்
அல்லவா?
ஆனால் இந்தியாவும் தெரியாத, இசையும் தெரியாத
புழுத்த தற்குறிகள் அல்லவா இளையராஜாவை
அவரின் சாதியைச் சொல்லித் திட்டிக் கொண்டு
வெறியோடு அவரை அடிக்க வருகிறார்கள்?
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
Signaling communicationல் signal என்றும் noise என்றும்
இரண்டு உண்டு. Noise என்பது undesirable signal.
SNR எனப்படும் Signal to Noise Ratio என்பது
ஒரு முக்கியமான parameter. SNR குறித்த அளவில்
இல்லாமல் போனால், சர்க்யூட்டில் NOISEதான்
இருக்குமே தவிர SIGNAL இருக்காது.
இங்கு SOUND பற்றியும் ACQUOSTICS பற்றியும்
BEATS பற்றியும் தெரிந்திருப்பது நல்லது.
மார்ஸ் சவுண்டரைப் பயன்படுத்திய
சிக்னலிங்கின்போது RHYTHEMIC BEATS
எல்லோருக்கும் வந்து விடாது. ஏன்? அது
அப்படித்தான்; இங்கு விளக்க இயலாது. அது
போலத்தான் ஒரு மொழி இசைக்கு ஏற்றதாகவும்
இன்னொரு மொழி இசைக்கு
உடன்பாடற்றதாகவும் இருக்கும். இதைப் புரிந்து
கொள்ள இயலாத அறியாமை ஒழிக்கப்
பட வேண்டும்.
***************************************************
இசைக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக