ஞாயிறு, 10 ஜூலை, 2022

எழுதிய பாட்டுக்கு மெட்டுப் போட்டது
கண்ணதாசன் காலம்!
போட்ட மெட்டுக்கு பாட்டு எழுதுவது 
இளையராஜாவின் காலம்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------
இசையமைப்பதற்கு தமிழை விட இந்தி ஏற்றது. அது 
நளினம் மிக்கது என்கிறார் இளையராஜா.

இளையராஜா என்ன சொன்னார் என்று முதலில் 
புரிந்து கொள்ள வேண்டும். அவர் சொன்னதற்கு 
என்ன பொருள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சினிமாவுக்கு இன்று எப்படி இசையமைக்கப் 
படுகிறது? இசையமைப்பாளர் ஆர்மோனியப் 
பெட்டியில் ஒரு டியூனைப் (மெட்டை) போடுகிறார்.
அதற்கு ஏற்ற வரிகளை கவிஞர் எழுதுகிறார்.
இன்று மெட்டுக்குத்தான் பாட்டு.

1960களில் நிலைமை அப்படி இல்லை. அப்போதெல்லாம் 
பாட்டுக்குத்தான் மெட்டு. 

"காலங்களில் அவள் வசந்தம் 
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி 
மலர்களிலே அவள் மல்லிகை"    
என்று கவிஞர் எழுதிய பாட்டுக்குத்தான் 
எம் எஸ் விசுவநாதன் மெட்டுப்போட்டார்.

ஆர்மோனியப் பெட்டி, அதில் போடும் டியூன்,
தத்தகாரங்களுக்கு ஏற்ற சொற்கள், சொற்களுக்கு 
ஏற்ற இசை என்று பரஸ்பரம் ஒரு ஒத்திசைவைப் 
பேணிக்கொண்டபடிதான் ஒரு சினிமாப் பாட்டு
பிறக்கிறது.அனுதினமும் சினிமா 
இசையமைப்பாளர்கள் இந்த PROCESSல்தான்  
தொழிற்படுகிறார்கள்.    

பல்வேறு மொழிகளிலும் சேர்த்து காலங்காலமாக  
பல்லாயிரக் கணக்கான பாடல்களுக்கு இசை 
அமைத்த அனுபவத்தில் கிடைத்த பட்டறிவை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழிப்படுத்தினார் 
இளையராஜா. 

இது இளையராஜாவின் சொந்தக் கருத்து மட்டுமல்ல.
எல்லா இசையமைப்பாளர்கள், பாடகர்களின் 
ஏகோபித்த கருத்து.

ஆர்மோனியப் பெட்டியுடன் பெரிதும் ஒத்துப் போவது 
இந்தியே தவிர தமிழ் அல்ல. இதுதான் இளையராஜா 
சொன்னது. இது சரியா தப்பா என்று சரிபார்க்க 
எங்கு போக வேண்டும்?

ஆர்மோனியப் பெட்டியிடம்தான் போக வேண்டும்.
ஆர்மோனியம் இழுத்த இழுப்புக்கெல்லாம் 
இந்திச் சொற்கள் போகும். ஆனால் தமிழ்ச் 
சொற்கள் போகாது.

ஏன்? அது தமிழின் பண்பு. தமிழ் ஒரு PHONETIC 
language. அதாவது சொல்வதை அப்படியே 
தமிழில் எழுதி விடலாம். ஸ்பெல்லிங் பிரச்சினை 
தமிழில் கிடையாது. எனவே தமிழ் கறாரான 
ஒரு மொழி. ஆனால் இந்தி அப்படி அல்ல.
அது மிகவும் flexible. இதைத்தான் நளினம் என்று 
சொன்னார் இளையராஜா.

தமிழ் என்பது அரிசி மாவு. (ஈர மாவைச் 
சொல்கிறேன்; batter). ஒரு அளவுக்குத்தான் 
இழுக்க முடியும். இந்தி என்பது மைதா மாவு.
இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும். அதாவது 
more and more accommodative.

இதைத்தான் இளையராஜா சொன்னார். இது 
அவருடைய கருத்து மட்டும் அல்ல. 
இசையமைப்பாளர்கள் அனைவரின் ஏகோபித்த 
கருத்தும் அதுதான்.

இந்தியா தமிழா எது இசைக்கு உகந்தது என்பதை 
ஆர்மோனியப் பெட்டியில் தேட வேண்டும்.
அப்படித் தேடினால் இளையராஜா கூறியது 
முழு உண்மை (absolute truth) என்று தெரியவரும்.
--------------------------------------------------------------------
இத்துடன் இளையராஜா குறித்த இசை சார்ந்த 
கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன.
*****************************************  
பின்குறிப்பு:
இது ஒரு அகாடமிக் சர்ச்சை. எனவே இதை 
எல்லோரும் விவாதிக்க இயலாது. துறை சார்ந்த 
வல்லுநர்கள் விவாதித்து முடிவு காண வேண்டிய 
விஷயம். 

இது அரசியல் சர்ச்சை அல்ல.
ஆனால் துரதிருஷ்ட வசமாக திராவிடக் 
கசடுகள் தங்களின் தற்குறித்தனத்துக்குப் 
பொருத்தமாக இதை அரசியல் சர்ச்சையாக மாற்றிக் 
கொண்டு சமூக விரோதச் செயல்களைச் 
செய்கிறார்கள்.     
---------------------------------------------------------------

 
         
 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக